07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 18, 2011

செவ்வாய் ஸ்வரம் - "ஸ"Tampuri.jpg


சுய அறிமுகம் முடிஞ்சு தம்புரால ஸ்ருதி சேத்தாச்சு.
தம்புராவில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார ஸ்வரத்தை ஒலிக்கின்றன.தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடும் போது, ஒவ்வொரு ஸ்வரமும் அதன் தானத்தில் வருகின்றதா என்பதை பாடுபவர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுபவர் பாடி நிறுத்தியிருக்கும் நேரத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள அனுபவத்தை உண்டாக்குகின்றது.


இன்றைய ஸ்வரமான "ஸ" இசையின் ஏழு ஸ்வரங்களுள் முதன்மையானது ஆகும்.

1. ஷட்ஜம்- மற்ற ஆறு ஸ்வரங்கள் பிறக்க முன்னோடியாக இருப்பதால் ஷட்ஜம் என்ற பெயர் ஏற்பட்டது. (ஷட் - ஆறு) ஸ்வர எழுத்து "ஸ"


மென்மையான "ஸ" இசையில் முதன்மையிடம் வகிப்பது போல் எழுத்தில் மென்மையான உணர்வுகளைச் சொல்ல கவிதை ஒரு சிறந்த களம்.

இன்று அந்த மென்மையான "ஸ" ஸ்வரத்தை மீட்டுபவர்கள் யாரென பார்க்கலாம்.
மலைச்சாரலாய் வந்து தன் அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கவிதை
ஸ்வரத்தை இனிமையாய் மீட்டுகிறார் ஹரிணிநாதன்.

நீங்க அப்பா செல்லமா இல்லை அம்மா செல்லமா? அல்லது இவங்களைப் போல அம்மா செல்லமான அப்பா செல்லமா? எப்படியா இருந்தாலும் உங்க பாசத்தை முழுமையா அப்பா அம்மா கிட்ட இப்பவே காட்டிடுங்க.ஏன்னா,
இவங்க சொல்றாப்ல சில நாளைகள் அவங்க அருகில் நாம இல்லாம கூட போகலாம்.இதை உணர்வுகள் கலந்து மனம் நெகிழறாப்ல சொல்லிருக்காங்க.


தாய்மையடைவது மட்டும் பெருமையில்லை.அந்த தாய்மை முழுமை அடைஞ்சாத்தான் பெருமைங்கறதையும் அது எவ்விதம் முழுமையடையுதுன்னும் தன் எண்ணச் சிறகுகளை அசைத்து நல்ல கருத்தை பறக்க(பரவ!) விட்டிருக்காங்க சுடர்விழி

வாழ்க்கையின் ஆதார ஸ்ருதியான அன்னையும் பிதாவும் சேர்ந்து நம்மை வழி நடத்தறாங்க.அடுத்ததா வருவது மழலை ஸ்ருதிதான்.குழலினிது யாழ் இனிது தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்னு படிச்சிருக்கோம். ஆனா மக்களோட மழலைச் சொல் மட்டுமில்லை குழந்தைகளோட ஒவ்வொரு அசைவும் ஒரு இனிய ஸ்ருதிதான்னு சொல்றார் கீதா.மழலை கண் பார்த்தால்... போதும்!!!!!

பெண்கள் இப்பலாம் எல்லாத்துலயும் முன்னேறிக்கிட்டு வர்றாங்க.இருந்தாலும் உயிரின் ஆரம்பமான பெண்மைங்கற ஸ்ருதி நல்லா இருந்தாதான் நாடு சுபிட்சமா இருக்கும் இல்லையா? அதனால இவர் பெண்மையை போற்றுவோம் அப்பிடின்னு சொல்றார்

தாய் தந்தை மழலை பெண்மை எல்லா ஸ்ருதியும் இருந்தாலும் வாழ்வின் ஜீவ ஸ்ருதியான தொழில் நல்லா இருக்கறது அவசியமில்லையா? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்னு கவி பாடியிருக்கார்.அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தொழில்தான் நெசவும்.ஆனா மானத்தை மறைக்க பயன்படற அந்த தொழில் இப்ப வசவுத் தொழிலா ஆயிட்டிருக்கு.அதை அரசன் நல்லா சொல்லிருக்காரு

இப்ப எல்லாம் நிறைய பேரு இந்த ஸ்ருதியை மீட்ட தயாரா இல்லை.அதனால
இந்த மாதிரி வயதானவங்க வாழ்க்கை அபஸ்வரமா ஒலிக்குது.அதை நல்ல ஸ்வரமா மீட்ட பாடுபடறார் முனியாண்டி.இனியாவது இந்த மாதிரி வயதானவங்க வாழ்க்கைல எண்ணும் நாட்கள் நல்ல ஸ்வரமா இருக்கட்டும்

நம் வாழ்வு அபஸ்வரமா இல்லாம இருக்கணும்னா நமக்குள்ள இருக்கற எதிரியை வழி அனுப்பி வைக்கணும்னு சொல்றாங்க நம்ம தோழி.

அது மட்டும் இல்லாம நம்ப முகத்தை ரசம் இழந்த முகமா வச்சுக்காம நல்ல
முகபாவங்களோட இருந்தாலே வாழ்க்கை இனிய சங்கீதமா ஒலிக்கும்.இதை
ஜெனோவா தன் கவிதையில் நல்லா காட்டியிருக்கார்.இவர் ஒரு பறவையின் இறகை கூட ஒரு இனிய கவிதையாக்கி பறக்க விட்டிருக்கார்.பறந்தபடியே இருக்கட்டும் இறகுன்னு நம்மையும் காற்றை அனுப்ப சொல்லி கேட்டிருக்கார்.

மனிதர்கள் எந்த உயிர்களுக்கும் இரங்கணும்.அப்படி இருந்து கிடைக்கற சந்தோஷம் கூட நல்ல சங்கீதம்தான்.ஒரு பறவை பயந்துடக் கூடாதேன்னு இவர் தன்னை எவ்வளவு கட்டுப் படுத்திக்கிட்டிருக்கார் பாருங்க.ஒரு பறவைக் கணம் அவருக்கு பறத்தலால் நிரம்பி இருந்தேன்னு சொல்ற அளவு சந்தோஷம் தந்திருக்கு.எழுத்துப்பிழைன்னு பேர் வச்சுக்கிட்டாலும் பிழையில்லாம இனிமையா எழுதறார்

எதையாவது எழுத வேண்டும் அப்டின்னு நினைச்சாலும் பலவித பார்வைகள் கொண்டு நல்லா எழுதி இருக்காருங்கறதால மழைக்கால பயணம் போல் கவிதை ஸ்ருதி நல்லாவே சேர்ந்திருக்கு இவருக்கு.

எதிர்பார்ப்பில்லாமல் வரும் மாசற்ற புன்னகையாய் கவிதை தந்து ஸ்வரங்கள் சேர்த்து நல்ல இசை கேட்கும் உணர்வைத் தந்திருக்கிறார் இந்த சுயம் தேடும் பறவை

கச்சேரில சில சமயம், என்னதான் இழுத்து ஆலாபனை செஞ்சு பாடினாலும் அதை விட துக்கடா தூக்கலா அமைஞ்சுடறது உண்டு.அதைப் போல எவ்வளவுதான் பெரிசா படைப்புக்கள் எழுதினாலும், நறுக்குன்னு நாலு வரில சொல்ற திறமை, அதுவும் நல்லா சொல்ற திறமை ஒரு சிலருக்குத்தான் உண்டு.இவரைப் பாருங்க இதுக்குன்னே 'திகழ்'கிறேன்னு
சொல்றாப்புல தன் வண்ணத்தையும் எண்ணத்தையும் குழைச்சு எதுவும் ,, உங்களால் முடியும்னு பொறுமையா சொல்லித் தரார்.

ஒவ்வொரு ராகத்தை வழங்குவதற்கும் லட்சியம் உண்டு. இறைவனை சென்றடையும் லட்சியம், கவலைகளை மறக்கச்செய்து மன நிம்மதி தரும் லட்சியம், நோய் தீர்த்து வளம் தரும் லட்சியம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு லட்சியம் உண்டு.


ராகங்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. 72 மேளகர்த்தா ராகங்களும் நம் உடலின் 72 முக்கிய நரம்புகள ஆதிக்கம் செய்யும் தன்மை கொண்டவை. ராகத்தின் லட்சணம் மாறாமல் தூய்மையாக இசைக்கும் ஒருவனால் குறிப்பிட்ட நரம்பின் செயல்களை ஆதிக்கம் செய்ய முடியும். மன நிம்மதி மட்டுமின்றி உடல் நலத்திற்கும் ராகங்கள் உதவும்.மாயாமாளவ கௌளை:


இசை பயிலும்போது முதன்முதலில் கற்கும் ராகம் இது. மாசினைத் தவிர்க்கும் ராகம். நம் உடம்பில் இருக்கும் தீய பொருட்களையும் மாசினையும் அகற்றும் ராகம். வைகறை நேரத்தில் இயற்கை வளம் கொண்ட சூழலில் இந்த ராகத்தை இசைத்தால் குரல் வளம் பெருகும்.


ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ....
தம்புராவில் மீட்டிய இன்றைய 'ஸ' ஸ்வரம் கவிதைகளில் மிளிர்ந்து அனைவரின் செவியையும் வந்தடைந்ததா என்பதை இனி தெரிந்து கொள்வோம்

27 comments:

 1. ஸ்வரம் மீட்டியாச்சு!! அமர்க்களமான அறிமுகங்கள். :-)

  ReplyDelete
 2. இசை குறித்து நிறைய தகவல்களுடன் வந்துள்ளது.

  அம்மா குறித்த விக்ரமாதித்யனின் கவிதையொன்று ஞாபகம் வந்தது.

  சும்மா
  சும்மா சும்மா
  சும்மா சும்மா சும்மா
  அம்மாவுக்குப் பிறகு எல்லாமும்.

  நன்றி. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. ஸ்வரம் சேர்த்தாச்சு... இன்றைய அறிமுகங்கள் அருமையாக ஆரம்பித்து விட்டது. ஸ்வரமும் லயமும் சேர்ந்து வாரம் முழுக்க அற்புதமான கச்சேரி கேட்க நாங்கள் தயார்....

  தொடருங்கள்....

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. தம்புரா,இசை பற்றி பல தகவல்கள்,பல அறிமுகங்கள் அருமையா இருக்கு.வாழ்த்துகள் அனைவருக்கும்.

  ReplyDelete
 6. அனைவரையும் ஓய்வு நேரத்தில் சென்று பார்க்கிறேன்

  ReplyDelete
 7. கச்சேரி அருமையாக களைகொட்டத் துவங்கிவிட்ட்டது
  அருமையான முன்னுரை
  அருமையான அறிமுகங்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஷட்ஜம் அழகு.இசையை பற்றிய தகவல்கள் மிக அற்புதம்.அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. மிக அருமையான வித்யாசமான பகிர்வு..:)

  ReplyDelete
 10. கச்சேரி நன்கு களை கட்டியுள்ளது. மிக்க மகிழ்ச்சி.

  அறிமுகம் ஆன அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 11. கச்சேரி பிரமாதமாக ஆரம்பிச்சிருக்கு..
  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அறிமுகங்களும் அருமை, அப்படியே பாட்டுகிளாஸும் எடுக்கறீங்க அதுவும் சூப்பர்.

  பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. அனைத்து அறிமுகங்களுக்கும் அன்பு பாராட்டுக்கள் ..
  உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 14. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ரொம்பவும் அலட்டிக்காத இசைக்கருவியாக தம்பூராவை மிகவும் பிடிக்கும். இன்றைய அறிமுகங்களும் அருமை.

  ReplyDelete
 16. கவிதை அருந்தும் உங்கள் சாதகப் பறவை

  என் வரிகளையும் கொஞ்சம் மீட்டிப் போயிருப்பதில்

  மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  பின்னணி இசையுடன் அதிரும் உங்கள் எழுத்தும்,

  இன்றைய அறிமுகங்களும்,

  இந்த வலைசரத்தில்

  ஒரு மிக நல்ல பாடல்.

  வாழ்த்துக்கள்..

  தொடருங்கள் ...

  ReplyDelete
 17. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வித்தியாசமான கவிதையான அறிமுகம்

  நன்றி

  ReplyDelete
 19. @RVS

  கச்சேரிக்கு முதல் ஆளாக வந்து ரசித்தமைக்கு நன்றி

  @சித்திரவீதிக்காரன்
  கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

  @வெங்கட் நாகராஜ்

  தங்களைப் போன்றோரின் ஊக்கத்தில்
  தொடர்கிறேன்

  @சார்வாகன்

  நன்றி

  @மாதவி

  நன்றி

  @தமிழ்வாசி-prakash

  நன்றி

  @திருமதி பி எஸ் ஸ்ரீதர்

  கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஆச்சி

  @suryajeeva

  நன்றி

  @ரமணி

  கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

  @RAMVI

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @தேனம்மை லக்ஷ்மணன்

  நன்றி

  @வை கோபாலகிருஷ்ணன் சார்

  நன்றி

  @கோவை2தில்லி

  நன்றி

  @புதுகைத் தென்றல்

  நன்றி

  @அரசன்
  நன்றி

  @லக்ஷ்மிமா

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  @சாகம்பரி

  கருத்திற்கு நன்றி

  @கமலேஷ்

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  @கோகுல்
  நன்றி

  @போகன்

  நன்றி

  ReplyDelete
 20. ஆரம்பமே செம களைகட்டுது ....தூள் கிளப்புங்க

  ReplyDelete
 21. தம்புராவில் மீட்டிய இன்றைய 'ஸ' ஸ்வரம் கவிதைகளில் மிளிர்ந்து அனைவரின் செவியையும் வந்தடைந்ததா என்பதை இனி தெரிந்து கொள்வோம்
  ஸ ந்னு சொன்னாலே ஹிந்தோளராகம் காதுலே வந்து சேர்ந்துடும்.Good analysis ofmusic in 360degree angle. Two days mumbai work so late

  ReplyDelete
 22. அறிமுகத்திற்கு நன்றிங்க்

  ReplyDelete
 23. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.


  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 24. @வித்யா சுப்ரமணியம் மேடம்
  நன்றி மேடம்

  @பத்மா
  @தி ரா ச
  @திகழ்
  @kavithai

  நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது