நவ காளிதசர்கள்
➦➠ by:
செய்தாலி,
நவ காளிதசர்கள்
கம்பன்
காளிதாசன்
ஷெல்லி
இவர்களின்
வரிகள்
கற்றுக் கொடுத்தது
கவிதையை
பாரதி
காற்று வெளியிடைக் கண்ணம்மா ,-- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-- அமுத
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து
மாற்றும்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் --எனை
வெற்று நினைவின்றித் தேற்றியே -இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!--இந்தக் (காற்று )
நீயென தின்னுயிர் கண்ணம்மா!--எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர்
போயின, போயின துன்பங்கள் --நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன்
வாயினி லேயமு துருதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த்
தீயினி லேவளார் சோதியே!-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று )
என் முண்டாசுக் கவிஞனின் கண்ணாம்மா பாடல், எப்போது வாசித்தாலும் கேட்டாலும் தித்திக்கும் தேன் அமுது
''அந்த''
இந்த
கவிஞர்கள் பேச்சில் வீரியம் குன்றா
சாய மனிதர்கள் சிலர் நாட்டினில்
வெட்கிறேன்
என் பாரதிக்கு நிகர் பாரதியே
மெய்யறிவார்கள்
பாரதியை வாசித்தவர்கள்
எத்தனயோ
கவிஞர்கள்.. கவிதைகள்...
எழுத்து, சொல், நடை
வாசிப்பில் எனை ஆழ்த்திய
தற்கால கவிஞர்
இதோ
காதல் நீர்
கொண்டு வருகிறார்கள்
நம் நவ காளிதர்கள்
கவிதை வீதியில்
காதல் நியாயம் கேட்கிறார்
கவிஞர் சௌந்தர்
மழையாடிய
பொழுதுகளில்
நம்மையும் நனைக்கிறார்
காதல்
நினைவுச் சத்தத்தை
அழகாய் சொல்கிறார் தோழர் அனீஷ்
நாளை
சிரிக்க சிந்திக்க வைக்க
வருகிறார்கள் வலையுலக வல்லவர்கள்




