பெருமைமிகு பெண் பதிவர்கள்
பெண்களை கிண்டல் செய்து சிலர் எழுதினாலும் பெண்கள் இல்லாத சமுதாயத்தை நினைத்துகூட பார்க்கமுடியாது. தாயாய் , மனைவியாய் , சகோதரியாய் , தோழியாய் எப்படியாவது ஒருவகையில் யாராவது ஒரு பெண் நம் வாழ்க்கையில் இருப்பார்கள் . நம் முனேற்றதிர்க்கு காரணமாகவும் இருப்பார்கள் (வீழ்ச்சிக்கு கூட ..). எல்லா நிலையிலும் சரிசமமாக பெண்கள் இருக்கும் இந்த உலகில் வலைபதிவில் மட்டும் இல்லாமலா?. தங்களது அருமையான பதிவுகளால் இந்த சமுதாயத்தில் தனியிடம் பிடித்த சில பெண் பதிவர்கள் பற்றி பார்ப்போம் .
என்னில் உணர்ந்தவை :
காயத்ரி தேவி என்னும் பதிவர் "எதிர்கால தேவைகள் தவிர்த்து நான் எப்பொழுதும் நானாகவே இருக்க
விரும்புகிறேன்... எனது தேவைகள் என் உள்ளங்கையில் அடங்கி விடுகின்றன...
அன்பு, இது ஒன்றே பிறர் என்னிடமும் நான் பிறரிடமும் எதிர்பார்க்கும்
தேவைகள்" என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் .
இவரின் சில பதிவுகள் :
ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல...
எண்ண தூரிகை :
meera blossom என்ற சகோதரியின் வலைத்தளம்இது .இவர்தன்னைபற்றிசொல்லும்போது "ஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள். "என்கிறார் .
இவரின் சில பதிவுகள் :
இயற்கை தந்த அற்புத பானம்... பதநீர்.
என் வீட்டு தேவதை
மகிழ்நிறை :
Mythily kasthuri rengan என்னும்சகோதரின்வலைத்தளம்இது . இங்குகவிதைகள் ,கட்டுரைகள்எனஅனைத்தும்உள்ளதுபடித்துபாருங்கள்.
இவரின் சில பதிவுகள் :
வீட்டுப்பாடம் எனும் சக்கர வியூகம்
வரலாறு முக்கியம் பாஸ்! II
கீத மஞ்சரி :
கீதா மஞ்சரி என்ற பெயரில் எழுதிவரும் தோழியின் வலைபூ இது . அருமையான எழுத்து நடையில் பல கட்டுரைகள் வாசிக்க கிடைகிறது . நீங்களும் போய் பாருங்கள் .
இவரின் சில பதிவுகள் :






