07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைசரம். Show all posts
Showing posts with label வலைசரம். Show all posts

Sunday, September 7, 2014

சிரிக்கலாம் வாங்க



               வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்பார்கள் . இரண்டுவாரமாக நீங்கள் பட்ட கஷ்டம் , தலைவலி போக தான் இந்த பதிவு . இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் உங்களுக்கு நன்கு பரிசிச்சியமான பதிவர்கலாகதான் இருப்பார்கள் . நகைசுவையாக பதிவுகள் எழுதுவதில் வல்லவர்கள் இவர்கள் . நாமும் இந்த நகைசுவை மழையில் நனையலாம் வாருங்கள் .



ஸ்டார்ட் மியூசிக்

அகில உலக பேமஸ் திரு பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வலைபூ சாரி கல்வெட்டுகள் இது . இவர் எழுதிய பல பதிவுகளை படித்துவிட்டு பலர் மருத்துவமனைக்கு  சென்றுள்ளனர் . சிரித்து சிரித்து வயிறு புன்னானதால் தான் வேறு ஏதும் இல்லை . நடிகர் விஜய் இவரை கொலைவெறியில் தேடுவதாக கேள்வி .

ஜில்லா: ஒரு பின்தங்கிய விமர்சனம்...!

 

பத்து கேள்விகளும், பத்து பதில்களும்.....!

 

டெரர் கும்மி :

 

இது ரத்த பூமி என சொல்லித்தான் உள்ளே வரவேற்கிறார்கள் . ஆனால் காதில் ரத்தம் வர அளவுக்கும்சிரித்து சிரித்து வயிற்றில் வலி வரவைக்கவும் செய்கிறார்கள் . இப்பலாம் டாக்டர்கள் பேஷண்டுக்கு மாத்திரக்குபதில் இந்த பிளக்கைதான் எழுதிதாறாங்க . படிச்சு சிரிச்சா உடம்பு குனமாகிடும் .

ஒரு வேட்டியும் பல காட்சிகளும்..

தங்கலிஷ் சிறுகதைகள் - 01 

போலி(ஸ்) இண்டர்வியூவில் பவர்ஸ்டாரும் பின்னே நடிகர்களும்

 

 கோமாளி 

இது போன்ற வித்தியாசமான பெயரில் எழுதிவரும் நண்பர் செல்வாவின் வலைபூ இது . சிறுகதைகள் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாதவை . மேலே பார்த்த வலை போலவே இவரின் வலையும் காமெடி கதம்பமாகவே இருக்கிறது .

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!

 

இன்னும் ஒரு எலி! 

 

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5) 

 

சிரிப்பு போலிஸ் :

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) என பெயரை சொல்லிக்கொண்டு அவர் சொல்லும் தத்துவம்  ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....என்பதுதான் .
 

கர். தூ. இதெல்லாம் ஜோக்கா?
 
பவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்

 

  ஜோக்காளி :

பதிவர் Bagawanjee Kuduva  அவர்களின் வலைத்தளம் இது . இங்கு பெரும்பாலும் நகைசுவை பதிவுகளே உள்ளது . மனது லேசாகி , நன்றாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் இங்கு வரலாம் . செம காமடியான பதிவுகள் இங்கு கிடைக்கும் . வாருங்கள் , சிரியுங்கள் ....


மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை ! 

 

எதோ டாட் காம் 

நண்பர் பெஸ்கி அவர்களின் வலைபூ . இங்கு இதுமட்டும்தான் எழுதுவேன் என இல்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன் என தனது அறிமுகத்தில் சொல்கிறார். இவர் நண்பருடன் டிவி வாங்க போன நிகழ்வை அழகான பதிவாக்கி தந்துள்ளார் படித்து ரசியுங்கள் .

 

 

டிவி வாங்குவது எப்படி

 

ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை 

 
 

 சக்கரகட்டி :

 முன்பு அதிகமாக எழுதிகொண்டிருந்த அன்பு நண்பர் , இப்பது குறைவாக எழுதுகிறார் . எங்கள் ஊருக்கு அருகே வசித்தாலும் இன்னும் இவரை நேரில் பார்த்ததில்லை . இவரது தளத்தின் தலைப்பு போலவே இவரது பேச்சு இனிமையாக இருக்கும் . இவரது காமெடி பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும் . நீங்களும் சென்று பாருங்கள் .

 

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள் !!! 

 

கபாலி இன்னா சொல்றாருன்னா ? 

 

 இன்றுடன் என் பணி (தொல்லை) முடிகிறது . இதுவரை ஆதரவு தந்த கோடானகோடி வாசகர்களுக்கும் , லட்சகணக்கான கமென்ட் போட்ட நண்பர்களுக்கும், வாய்ப்பு தந்த உயர் திரு சீனா அய்யா மற்றும் நண்பர் தமிழ்வாசிக்கும், இந்த பதிவில் அறிமுகபடுத்தபட்ட நண்பர்களுக்கு தகவல் அளித்த அன்பு பதிவர் ரூபன் அவர்களுக்கும் 

  நன்றி .. நன்றி ... நன்றி ..

 

MY REACTION


உங்கREACTION

 

மேலும் வாசிக்க...

Saturday, September 6, 2014

எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் !!!




இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் பதிவுகளில் நீண்ட காலமாக உள்ளவர்கள் ஆனால் மிக குறைந்த அளவு பதிவுகளே எழுதுபவர்கள் . இவர்களின் சிலர் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . பலர் தெரியாமல் இருக்கவே வாய்ப்பு அதிகம் என எண்ணுகிறேன் . வாருங்கள் அவர்கள் யார் என பார்ப்போம் .



சேம்புலியன் :

அன்பு நண்பர் ரூபக் ராம் அவர்களின் வலைத்தளம் இது . இங்கு பல வகையான சிறுகதைகள் உள்ளது . இங்கு அவர் கேட்ட , ரசித்த நிகழ்வுகளை பதிவாக்கி தருவதாக சொல்கிறார் . வாருங்கள் அப்படி என்னதான் ரசித்தார்னு பார்ப்போம் .





*********************************************************************************
சாகாகல்வி :


உயர்திரு சிவம்ஜோதி அவர்களின் ஆன்மீக வலைபூ இது . வள்ளலாரின் மேல் அதிக ஈடுபாடு கொண்ட இவரின் வலைத்தளம் அவரின் கருத்துகளால் நிரம்பி வழிகிறது . தெய்விக மனம் கமழும் பக்தி பதிவுகள் இங்கு ஏராளாம் . வாருங்கள் பார்ப்போம் .


கண் மருத்துவருக்கு தெரியுமா திருவடி தவம்?

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான் 


*********************************************************************************

சித்த வைத்தியன் :

 டாக்டர் திரு G.சிவராமன் அவர்கள் நடத்தும் வலைபூ இது . சித்த மருத்துவத்தை பற்றி பல அருமையான கட்டுரைகள் உள்ளது .நாடு மருந்து பற்றியும் அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் விரிவாக , தெளிவாக எழுதுகிறார் . 



தொற்றுநோய்-எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க...

 

கடைசியில் வந்தாலும்..கலக்கும் பெருங்காயம்!

*********************************************************************************

தேடல் :

 நண்பர் B.சரவணகுமார் எழுதிவரும் வலைபூ இது .இதுவும் ஒரு ஆன்மிக வலைபூதான் .  மரணத்துக்கு பின் என்ன நடக்கும் என்றும் பல சித்தர்களை பற்றியும்  பல  பதிவுகள் உள்ளது . படித்து பாருங்கள் .


கனக்கம்பட்டி சாமிகள் ஒளிநிலை அடைந்தார்

 

மரணத்திற்கு பின் நடப்பது என்ன? 

*********************************************************************************

நட்சத்திர ஜோதிடம் 

 

   சித்த யோகி சிவதாசன் ரவி என அழைக்கப்படும் நண்பர் ரவி அவர்களின் வலைபூ இது . இது அவரின் ஜோதிடபதிவுகளுக்காக துவங்கபட்டது . ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தொடருங்கள் . மற்றவர்கள் அடுத்த அறிமுகத்திற்கு தாவிவிடுங்கள் .

 

அயனாம்சமும் தசா இருப்பில் வரும் 

குழப்பங்களும் 

 

திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள் 

*********************************************************************************

 மனோவியம் :

பதிவர் மனோகரன் கிருஷ்ணன் என்பர் எழுதிவரும் கவிதைகளின் நந்தவனம் இந்த மனோவியம் என்னும் தளம் . பலவகையான கவிதைகள்இங்கு கானகிடைகிறது . அழகான புகைப்படங்களுடன் கவிதைகள் பார்க்க ரம்மியமாக உள்ளது . போய் பாருங்கள் .

 

காதலற்ற மரணம்

மும்தாஜ் 

*********************************************************************************

சாளரம் :

பதிவர் கார்க்கி பவா அவர்களின் வலைபூ இது . சினிமா , ஆராய்சி கட்டுரை , கவிதைகள் , பிக்ஷன் என அனைத்திலும் முத்திரைபதிக்கும் பதிவுகள் எழுதுவதில் வல்லவர் இவர் . இவரின் எழுத்து நடை மிகவும் அருமையாக இருக்கிறது . நமது நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் பாடல் பற்றி கூட ஒரு பதிவு எழுதியுள்ளார் .

 

 பாஸூ பாஸூ

 

குவாட்டர் 

*********************************************************************************

 கற்போம் வாருங்கள் :

            நண்பர் ஜமால் அவர்களின் வலைத்தளம் இது . கல்வி பற்றிமட்டும் இன்றி விளையாடு , சினிமா , கவிதைகள் , கடுரைகள் , என அனைத்திலும் பதிவுகள் எழுதியுள்ளார் இவர் . இவரும் மிக குறைவாகவே பதிவுகள் எழுதுகிறார் . இன்னும் நிறைய எழுதவேண்டும் என நாம் கோரிக்கை வைப்போம் வாருங்கள் .

 

பள்ளிக்கால கதைகள்

 

அம்மா நீயும் போ போ 

*********************************************************************************

 அமல்ராஜ் :

    இது என் விரல்களுக்கு நான் கொடுக்கும் சுதந்திரம் என தன்னை பற்றி சொல்லும் பதிவர் பிரான்சிஸ் அமல்ராஜ் அவர்களின் தளத்தில் விதவிதமான பதிவுகள் கிடைகிறது . சினிமா விமர்சனம் எழுதும் அதே வேளையில் பெண்களுக்கான சமுக கட்டுரையும் எழுதுகிறார் .

 

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21

 

பெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.

*********************************************************************************

நாடி கவிதைகள் .

இந்த தளத்தை எழுதி வருபவர் நண்பர் நாடி நாராயணன் அவர்கள் . இவரும் மிக குறைவான பதிவுகளைத்தான் எழுதியுள்ளார் . அதில் பெரும்பாலும் கவிதைகள் தான் . நண்பர் நாராயணின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு ....


என்னுடைய அடையாளம் தேடி

 

உலகம் அப்படியே தான் இருக்கிறது 

 

 

மேலும் வாசிக்க...

Friday, September 5, 2014

பதிவுலக ஆசிரியர்கள் (ஆசிரியர் தின சிறப்பு பதிவு )

 

 "கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல ,

யாரிடம் கற்று கொள்கிறோமோ அவர்தான் ஆசிரியர் " என்ற சொல்லுக்கு ஏற்ப வாழும் சில ஆசிரியர்களை பற்றி பார்க்க போகிறோம் . இது ஆசிரியர் தின சிறப்பு வலைசரம் .

 

தளிர் :

 நண்பர் சுரேஷ் அவர்கள் எழுதிவரும் வலைத்தளம் இது . இதில் தமிழ் மொழியை பற்றிய தொடர் மிக அருமையாக இருக்கும் . நமது தமிழ் அறிவை சோதிக்க நிறைய தகவல்கள் இருக்கும் . அவப்போது நகைசுவை பதிவுகளும் , நாடுநடப்பு பற்றிய பதிவுகளும் போடுவார் .கடந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .


 

தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8

 

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 14 

 

===================================

என்றும் இனியவன் :

  அன்பு நண்பர் ராஜா அவர்களின் வலைத்தளம் இது . ராஜான்னு பேர் வைத்தாலே கூடவே கிங் என சேர்த்துகொள்ளும் உலக நீதியின் படி இவரும் தன பெயர் முன் கிங் என சேர்த்துகொண்டார் .  ஐவரும் ஒருஆசிரியர் என்பதில் எனக்கு மிக சந்தோசம் . இவரின் வலைத்தளம் சென்று பாருங்கள் .

?.    ( தலைப்பே இதான் )

எனக்கு சில உலக மகா கவலைகள்

 

  =======================================================

வேடந்தாங்கல் கருண் 

சென்னையில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . இவரின்வலைபூவில் தான் முதலில் இணைந்தேன் . இவர் யார் யாரை தொடர்கிரரோ (பிளோக்கில் மட்டும் ) அவர்களை நானும் தொடர ஆரம்பித்தேன் . இரு வருடங்களுக்கு முன்பு நெல்லையில் சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு . 

உடல் எடை குறைய - எண்ணெய் - கொழுப்பு -சில அலசல்கள் 

 

செல்ஃபி விபரீதங்கள்.....!?

  =======================================================

கவிதை வீதி 

நண்பர் சௌந்தரின் வலைபூ இது . ஊர்காவல்படையில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் இருந்த இவர் பின்பு நல்ல குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர் பணிக்கு மாறிவிட்டார் . சென்னையில் உள்ள அரசு பள்ளியில்ஆசிரியராக பணிபுரிகிறார் . இப்போது இவர் அதிகமாக பதிவுகள் எழுதுவது இல்லை . சமிபத்தில் தான் திருமணம் ஆனது அதான் எழுதவில்லை என நான் சொல்லவில்லை .

யிர்கோளத்தின் யிர்காப்போம்...!

பேருந்து பயணமும்... மனசுக்குள் மலரும் ஆசையும்...!.

 

***************************************************************

 

கடைசியா ஒரு முக்கியமான , நல்ல , நாடுபோற்றும் , இந்த உலகமே வியக்கும் , ஒபாமாவே வாழ்த்து சொன்ன , தமிழகத்தின் விடிவியாழன் (எந்தனை நாளைக்குதான் விடிவெள்ளினு சொல்றது ), உங்கள் மனம் கவர்ந்த பதிவர் ஒருவர் இருக்கிறார் . அவரை பற்றி சொல்ல துவங்கினால் நேரம் பத்தாது ,கூகுளில் இடமும் பத்தாது எனவே கிழே உள்ள லிங்கில் சென்று பார்த்து கொள்ளுங்கள் .

லிங்க்1

லிங்க் 2

லிங்க்3

 

மேலும் வாசிக்க...

Thursday, September 4, 2014

பெருமைமிகு பெண் பதிவர்கள்




பெண்களை கிண்டல் செய்து சிலர் எழுதினாலும் பெண்கள் இல்லாத சமுதாயத்தை நினைத்துகூட பார்க்கமுடியாது. தாயாய் , மனைவியாய் , சகோதரியாய் , தோழியாய் எப்படியாவது ஒருவகையில் யாராவது ஒரு பெண் நம் வாழ்க்கையில் இருப்பார்கள் . நம் முனேற்றதிர்க்கு காரணமாகவும் இருப்பார்கள் (வீழ்ச்சிக்கு கூட ..). எல்லா நிலையிலும் சரிசமமாக பெண்கள்  இருக்கும் இந்த உலகில் வலைபதிவில் மட்டும் இல்லாமலா?. தங்களது அருமையான பதிவுகளால் இந்த சமுதாயத்தில் தனியிடம் பிடித்த சில பெண் பதிவர்கள் பற்றி பார்ப்போம் .


என்னில் உணர்ந்தவை :

காயத்ரி தேவி என்னும் பதிவர் "எதிர்கால தேவைகள் தவிர்த்து நான் எப்பொழுதும் நானாகவே இருக்க விரும்புகிறேன்... எனது தேவைகள் என் உள்ளங்கையில் அடங்கி விடுகின்றன... அன்பு, இது ஒன்றே பிறர் என்னிடமும் நான் பிறரிடமும் எதிர்பார்க்கும் தேவைகள்" என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் .


இவரின் சில பதிவுகள் :

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல... 

 

 எண்ண தூரிகை :

meera blossom  என்ற சகோதரியின் வலைத்தளம்இது .இவர்தன்னைபற்றிசொல்லும்போது "ஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள். "என்கிறார் .

இவரின் சில பதிவுகள் :

 

இயற்கை தந்த அற்புத பானம்... பதநீர்.

 

என் வீட்டு தேவதை   

மகிழ்நிறை :

Mythily kasthuri rengan        என்னும்சகோதரின்வலைத்தளம்இது . இங்குகவிதைகள் ,கட்டுரைகள்எனஅனைத்தும்உள்ளதுபடித்துபாருங்கள்.

 

  இவரின் சில பதிவுகள் :

வீட்டுப்பாடம் எனும் சக்கர வியூகம் 

வரலாறு முக்கியம் பாஸ்! II 

 

 

கீத மஞ்சரி :

கீதா மஞ்சரி என்ற பெயரில் எழுதிவரும் தோழியின் வலைபூ இது . அருமையான எழுத்து நடையில் பல கட்டுரைகள் வாசிக்க கிடைகிறது . நீங்களும் போய் பாருங்கள் .


இவரின் சில பதிவுகள் :




 மாலதி :

தனது பெயரையே தனது தளத்துக்கு சூட்டி பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார் மாலதி அவர்கள் . அவர்களின் படைப்புகளில் சில உங்களுக்காக ...

இவரின் சில பதிவுகள் :

 

உயிரின் ”“ஓர்”“ எழுத்து

மலைகள் சமதளமானது 

 

கனவும் கமலாவும் :

கமலா ஹரிஹரன் என்ற சகோதரியின் வலைத்தளம் இது . அருமையான , சமுக அக்கறையுள்ள பல கட்டுரைகள் , பதிவுகள் இங்கு காண கிடைகிறது .நீங்களும் படித்து ரசியுங்கள் .

 

இவரின் சில பதிவுகள் :

 

நானும், தமிழ் கடவுளும்

 

டைரிக் கிறுக்கல்கள்:

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் வலைபூ இது . இவர்களை பற்றி அறிமுகம் தேவையே இல்லை . பதிவுலகு மட்டும் இன்றி பத்திரிகை உலகிலும் கோடி கட்டி பறக்கும் மிக சிறந்த எழுத்தாளர் இவர் கதை , கவிதை , பெண்கள் பற்றிய கட்டுரை , குழந்தைகள் கட்டுரை என அனைத்துவிதமான துறையினும் புகுந்து விளையாடுபவர் இவர் . 

இவரின் சில பதிவுகள் :

 மஞ்சள் வெளி. 

எதிர்பார்ப்பு 

/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/

கமலகானம் :

 இந்த வலைபூவினை எழுதிவருபவர் சிங்கபூரை சேர்ந்த சகோதரி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் . இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார் . அவை அங்குள்ள பல்கலை கழகங்களில் பாடநூல சேர்க்கபட்டுள்ளது என்பது பதிவர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் .

இவரின் சில பதிவுகள் :

 

கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’

 

நுகத்தடி

 

 

டிஸ்கி : நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் . அவர்களில்    சிலரை மட்டுமே சொல்லியுள்ளேன் . மற்றவர்கள் கொவித்துகொள்ளவேண்டாம் . நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த பெண் பதிவர்களின் பெயர் மற்றும் தள முகவரியை கமெண்ட்இல் தெரிவிக்கலாம் .

மேலும் வாசிக்க...

Wednesday, September 3, 2014

தெரியுமா உங்களுக்கு ?



நண்பர்களே இந்த பதிவர்களை உங்களுக்கு தெரியுமா ? இவர்கள் தங்கள் தளங்களில் பல அருமையான பதிவுகளை எழுதிவருகின்றனர் . இவர்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் , தெரியாமல் இருந்தால் இன்று முதல் இவர்களை தொடருங்கள் . ஒரு நல்ல அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் .



கில்லர்ஜி :


             பூ பறிக்க கோடரி எதற்கு என்ற சொற்பதத்துடன் தனது வலை பூவை வைத்துள்ளார் நண்பர் . இங்கு போட்டிகள் கூட நடத்தபட்டு பரிசுகள் வழங்கபடுகிறது . அனைத்துவிதமான தலைப்புகளிலும் பதிவுகள் இங்கு கொட்டி கிடக்கிறது .


இங்கே போங்க பாஸ் :

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 

 

சுட்டபழம்

=================================== 

தனிமரம் :

பெயர்தான் தனிமரம் ஆனால் இந்த மரத்தில் கிளைகள் (பதிவுகள் ) பல உள்ளது . பல அருமையான பதிவுகள் எழுதியுள்ளார் நண்பர் தனிமரம் . இவரது தாலியுடன் தவிக்கிறேன் தனிமரம் என்னும் தொடர் மிகவும் பிரபலமானது .

 இங்கே போங்க பாஸ் :

 

===================================

 அகசிவப்பு தமிழன் :

 நண்பர் இ .பு .ஞானபிரகாசம் அவர்களின் வலைபூ இது . தமிழ் மேல் காதல் கொண்ட இவர் பல இலக்கிய , சமுக கட்டுரைகள் எழுதியுள்ளார் . தமிழை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய வலைபூ இது என சொல்கிறார் . வாருங்கள் படித்து பார்க்கலாம் .

இங்கே போங்க பாஸ் :

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!

 

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!


=======================================================

ஊர் காவலன் 

நண்பர் N.H. பிரசாத் அவர்களின் வலைபூ இது . சினிமா விமர்சனம்  மற்றும் சினிமா செய்திகள் நிறைய கிடைகிறது இவர் தளத்தில் . சமிபத்தில் M.R.ராதா பற்றி இவர் எழுதிய கட்டுரை மிக அருமையாக உள்ளது . இதோ அது உங்கள் பார்வைக்கு ....

இங்கே போங்க பாஸ் :
 

எம். ஆர். ராதா - 25

  ==============================================

சுடுதண்ணி 

 

சுடுதண்ணி என்ற வித்தியாசமான பெயருடன் பதிவுலகில் கலக்கி வரும்நபர் இவர் . இணையம் வெல்வோம் என்னும் தொடரும் எழுதிவருகிறார் . இவரது ப்ரோபைல் படமே வித்தியாசமாக உள்ளது .


இங்கே போங்க பாஸ் :

இணையம் வெல்வோம் - 19

 

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?


============================================= 

ஒரத்தநாடு கார்த்திக்:

நண்பர் ஒரத்தநாடு கார்த்திக்கின் வலைபூ ஒரு புத்தக பூங்கா என சொல்லலாம் . இங்கு பலவகையான புத்தகங்கள் கிடைகிறது . பல புத்தகங்கள் மின்நூலாகவும் (e-books) சில புத்தகங்கள் scan copy யாகவும் கிடைகிறது . நாம் புத்தகங்களை தேடி அலையவேண்டிய வேலையில்லை . அத்துடன் பல நாளிதழ்கள், வார, மாத இதழ்களும் இங்கு கிடைகிறது .போய் பாருங்கள் .

  இங்கே போங்க பாஸ் :

வட்டியும் முதலும்-மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்கள்.

 

மற்றவை நள்ளிரவு 1.05 க்கு - ராஜேஷ்குமார் நாவல் .   

  ====================================================

 அகாலம் :

 

எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

   இங்கே போங்க பாஸ் :

தி.க.சி. என்னும் இடதுசாரி இலக்கிய விமர்சகர்.

  எனது சிறுகதைத் தொகுப்பு "இனி நான் டைகர் இல்லை" 

 ===================================

 இன்று :

இது வலைப்பூவின் பெயர் . இதை எழுதுபவர் பற்றிய விவரம் இல்லை . சினிமா, அரசியல் , விளையாட்டு என அனைத்து துறைகளைப்பற்றியும் இதில் பதிவுகள் உள்ளது . இதம் வடிவமைப்புதான் கொஞ்சம் கண்ணை வலிக்க செய்கிறது . போய் பாருங்கள் .

இங்கே போங்க பாஸ் :

பயமுறுத்தும் பதிவர்…

நிராகரிக்கப்படும் போது நீங்கள் செய்யவேண்டியது 

 

=========================================================

காரஞ்சன்(சேஷ்)

           இந்த வலைபூ கவிதைகளின் நந்தவனமாக உள்ளது . பலவகையான தலைப்புகளில் பல கவிதைகள் இங்கு உள்ளது . நியாயமாக இவரின் வலைபூ கவிதை வித்தகர்களில் அறிமுகமாகி இருக்கவேண்டும் . நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன் . ஆனாலும் இப்போ அந்த தவறை சரிசெய்துவிட்டேன் . கவிதை பிடிப்பவர்கள் , படிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய தளம் இது .

 இங்கே போங்க பாஸ் :

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான ஓவியக்கவிதை! -காரஞ்சன்(சேஷ்)

 

கயல்-விழி! -காரஞ்சன்(சேஷ்) 

 ==========================================================

 

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

 

இவர் எங்க ஊர்காரர் . கவிதை , கட்டுரைகள் , சிறுகதைகள் என அனைத்திலும் சிறப்பாக நடைபோடும் இவரின் தளம்தான் இது . இவரது பல சிறுகதைகள் பல பரிசுகள் பெற்றுள்ளது . நீங்களும் சென்று பாருங்கள் .

இங்கே போங்க பாஸ் :

தமிழச்(சி)சு ஓவியம்!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு 

 ================================

இங்கே போங்க பாஸ் :

 இணையத்தில் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்!? 

 

===========================================================

கவிசோலை :

  நண்பர் சிவநேசன் அவர்களின் வலைபூ இது . கவிதை , சமுக கட்டுரை என அனைத்தும் உள்ளது . ஆனால் குறைவாக எழுதுவதுதான் குறையாக உள்ளது . நாம் ஊக்கபடுத்தினால் இன்னும் நிறைய எழுதுவார் .

இங்கே போங்க பாஸ் :

 

 தமிழும் தமிழனும்...!

தேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...!

 

 

மேலும் வாசிக்க...

Tuesday, September 2, 2014

விருந்து சாப்பிடலாம் வாங்க (கண்டிப்பா சமையல்குறிப்பு பற்றி அல்ல ..)





இன்று நாம் பார்க்க போவது பல்சுவை விருந்து படைக்கும் பதிவர்கள் வரிசையில் மூன்றாம் பாகம் . மூன்றாம் பாகம்னு தலைப்பு வைக்க போரடச்சிச்சு அதான் இப்படி தலைப்பு . இவர்களில் சிலர் உங்களுக்குமுன்பே அறிமுகமானவர்களாக இருக்கலாம் ஆனாலும் இவர்கள் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் . கவிதை , கட்டுரை , சினிமா , நகைசுவை , அரசியல் என அனைத்திலும் கொடிகட்டி வரும் இவர்கள்பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள் .



அவர்கள் உண்மைகள் :



நண்பர் மதுரை தமிழனின் வலைபூ இது . அருமையான சமுக கட்டுரைகள் மட்டும் இன்றி செம ஜாலியான நகைசுவை கட்டுரைகள் வரை அனைத்தும் எழுதும் பதிவர் இவர் . இவரின் பதிவுகள் ஒரு புத்தகம் போன்று அமைப்புடன்இருக்கும் . செம நக்கல் பதிவுகள் இவரின் சிறப்பு .


உங்கள் பார்வைக்கு சில :

விடிவுகாலமே இல்லையா ? 

இது எப்படி இருக்கு ? 


==========================================================================

LIGHT IT UP GIRLS:



அன்பு நண்பர் மதுரை தமிழனின் மகள் எழுதும் வலைத்தளம் இது . இதில் பல வகையான உணவு குறிப்புகளை வழங்குகிறார் . என்ன இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கு , அதுதான் வருத்தம் .


உங்கள் பார்வைக்கு சில :

Oatmeal cookies: Oatmeal Crunch

 

Don't Change

  ==========================================================================

மூங்கில் காற்று :

   பிரபலபதிவர் டி .என் . முரளிதரன் அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் வலைபூ இது . மூன்னுருக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனை பதிவர் இவர் . நீங்களும் சென்று இவரின் படைப்புகளை ரசியுங்கள் .

 

 உங்கள் பார்வைக்கு சில :

 

பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2 

 

புரோகிதரே போதும் -சொன்னவர் யார்?

==========================================================================

பழைய பேப்பர் :

நண்பர் விமல் ராஜ் எழுதிவரும் வலைபூ இது . இவர் சென்னையில் பணிபுரிகிறார் . இவர் வலைப்பூவில் சிறுகதைகள் , இவர் ரசித்த , இட்ட டுவிட்டுகள் என அனைத்து வித பதிவுகளும் கிடைகின்றன . வாருங்கள் ரசிக்கலாம் .

உங்கள் பார்வைக்கு சில :

சிறுகதை - கனவு கலைந்தது 

 

எவன் அப்பன் வீட்டு சொத்து ? 

 

==========================================================================

ஊமைக்கனவுகள் :

 

 இந்த வலைதளத்தை எழுதுபவர் பற்றிய விவரங்கள் இல்லை . இவர் யார் தளத்தையும் பின்பற்றவில்லை . ஆனாலும் இவர் பதிவுகள் மிக அருமையாக உள்ளது . கவிதைகள் , கட்டுரைகள் என அனைத்தும் எழுதுகிறார் .

 

உங்கள் பார்வைக்கு சில :

 

வீழும்வரை போதும்!

 

உள்ளங்கவர் களவன்

================================================

  புன்னியவன் :

 

தேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள் என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் . இவரின் எழுத்துநடை மிக அருமையாக உள்ளது .

 

உங்கள் பார்வைக்கு சில :

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13 

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

 

 =============================================

விக்னேஸ்வரனின் வாழ்க்கை பயணம் :


 நண்பர் விக்னேஸ்வரன் எழுதும் வலைபூ இது . அருமையான எழுத்துநடையில் பல வித்தியாசமான கட்டுரைகள் இங்கு உள்ளது . சென்று படித்து பாருங்கள் .

 


மேலும் வாசிக்க...

Sunday, August 31, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -2



சென்ற பதிவின் தொடர்சி இது . சென்ற பதிவில் பார்த்ததுபோலவே இந்த பதிவிலும் பல வித தளங்களில் தங்கள் பதிவுகளை எழுதி பெயர் ஏற்ற அருமையான சில பதிவர்களை பார்க்க போகிறோம் .  இவர்கள் அனைவரையும் உங்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வாருங்கள் பதிவிற்கு .செல்லலாம்

கவிதை வானம் :

நண்பர் பருத்தி முத்துராசன் அவர்களின் வலைபூ இது . பல அருமையான கவிதைகள் , கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது . இதில் நான் ரசித்தது உங்களுக்காக ...

 

 மீண்டும் இந்தி திணிப்பு  அவசியமா ?

தேவயாணி கைதில் நடந்தது என்ன ?

 

 

 நிலவை தேடி :

பல ஆன்மிக பதிவுகள் மற்றும் சமுக பதிவுகள் கொண்ட வலைத்தளம் இது . படிக்க படிக்க ஆவலை தூண்டும் எழுத்துநடை இவரின் சிறப்பு .

 

பிரபஞ்ச வெளியில் :

ஜெயகாந்தன் பழனி என்ற பதிவர் நடத்தும் வலைபூ இது . பக்கி சம்பந்தபட்ட பல பதிவுகள் இங்கு உள்ளது . இதுவரை நாம் அறியாத பல தகவல்கள் இங்கு கொட்டிகிடகிறது .

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 17

 

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..! 

 

 

 கிறுக்கல்கள் :

ஜாலியான அதே சமயம் அருமையான பதிவுகள் கொண்ட தளம் இது . பாம்பு வீட்டுக்கு வந்தா நாம ஓடுவோம் . இவர் பதிவு தேத்துவார் . என்ன நடந்தது என படித்து பாருங்கள் .

 

விசுAwesomeமின் துணிக்கைகள்

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்ற பதத்துடன் தனது பக்கத்தை நகைசுவையால் நிரம்ப வைத்துள்ள வலைபூ இது .

 

"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும் 

"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை



கார்த்திக்கின் கிறுக்கல்கள் :


கார்த்திகேயன் லோகநாதன்என்ற நண்பரின் வலைபூ இது கவிதை கட்டுரை என எழுதி தள்ளியுள்ளார் . அனைத்தும் கருத்துபோதிந்த பதிவுகள் ஆகும் . படித்து உங்கள் ஆதரவை சொல்லுங்கள் .


இறுதி வரை 

இந்த கொடுமை தொடரவேண்டுமா?? 

 

 வல்வயூரன் :

ராஜமுந்தன் வல்வயூரன் என்ற நண்பர் நடத்தும் வலை தளம் இது . இதுவும் பல்சுவை வலைத்தளம்தான் . அனைத்தை பற்றியும் எழுதும் அருமையான பதிவர் இவர்.

கனக்கின்ற இதயங்கள்

புலத்து வாழ்க்கை. 

 

 

தமிழ் இலக்கிய மின்வலை :

கவிஞ்சர் பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை  வலைபூ . இங்கு தமிழ் புகுந்துவிளையாடுகிறது . கவிதை , தமிழ் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தளம் இது .

 

  கல்வியே கண்

தொடுத்தலும் விடுத்தலும்


கவிப்பேரரசு வைரமுத்து

 

 

மழைச்சாரல்

 தோழி  பிரியா , எழுத்தை அதிகம் நேசிப்பவள் என தன்னை அறிமுகம் செய்யும் இவர் தனது தளத்தில் பல அருமையான கவிதைகள் எழுதியுள்ளார் .

 நான் இதுவே

நடந்தேறா முயற்சி

 

  ஒரு வாரமாக என் தொல்லையை தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி . அவசரபடாதீங்க அடுத்த வாரமும் நான்தான் ...(மாட்டிகிட்டிங்களா !!!!)

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது