வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்பார்கள் . இரண்டுவாரமாக நீங்கள் பட்ட கஷ்டம் , தலைவலி போக தான் இந்த பதிவு . இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் உங்களுக்கு நன்கு பரிசிச்சியமான பதிவர்கலாகதான் இருப்பார்கள் . நகைசுவையாக பதிவுகள் எழுதுவதில் வல்லவர்கள் இவர்கள் . நாமும் இந்த நகைசுவை மழையில் நனையலாம் வாருங்கள் .
ஸ்டார்ட் மியூசிக்
அகில உலக பேமஸ் திரு பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வலைபூ சாரி கல்வெட்டுகள் இது . இவர் எழுதிய பல பதிவுகளை படித்துவிட்டு பலர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் . சிரித்து சிரித்து வயிறு புன்னானதால் தான் வேறு ஏதும் இல்லை . நடிகர் விஜய் இவரை கொலைவெறியில் தேடுவதாக கேள்வி .
டெரர் கும்மி :
இது ரத்த பூமி என சொல்லித்தான் உள்ளே வரவேற்கிறார்கள் . ஆனால் காதில் ரத்தம் வர அளவுக்கும்சிரித்து சிரித்து வயிற்றில் வலி வரவைக்கவும் செய்கிறார்கள் . இப்பலாம் டாக்டர்கள் பேஷண்டுக்கு மாத்திரக்குபதில் இந்த பிளக்கைதான் எழுதிதாறாங்க . படிச்சு சிரிச்சா உடம்பு குனமாகிடும் .
கோமாளி
இது போன்ற வித்தியாசமான பெயரில் எழுதிவரும் நண்பர் செல்வாவின் வலைபூ இது . சிறுகதைகள் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாதவை . மேலே பார்த்த வலை போலவே இவரின் வலையும் காமெடி கதம்பமாகவே இருக்கிறது .
சிரிப்பு போலிஸ் :
-
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) என பெயரை சொல்லிக்கொண்டு அவர் சொல்லும் தத்துவம் ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு
எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும்
கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்.
ங்.......கொய்யால சாவட்டும்....என்பதுதான் .
-
- கர். தூ. இதெல்லாம் ஜோக்கா?
-
- பவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்
ஜோக்காளி :
பதிவர் Bagawanjee Kuduva அவர்களின் வலைத்தளம் இது . இங்கு பெரும்பாலும் நகைசுவை பதிவுகளே உள்ளது . மனது லேசாகி , நன்றாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் இங்கு வரலாம் . செம காமடியான பதிவுகள் இங்கு கிடைக்கும் . வாருங்கள் , சிரியுங்கள் ....
எதோ டாட் காம்
நண்பர் பெஸ்கி அவர்களின் வலைபூ . இங்கு இதுமட்டும்தான் எழுதுவேன் என இல்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன் என தனது அறிமுகத்தில் சொல்கிறார். இவர் நண்பருடன் டிவி வாங்க போன நிகழ்வை அழகான பதிவாக்கி தந்துள்ளார் படித்து ரசியுங்கள் .
சக்கரகட்டி :
முன்பு அதிகமாக எழுதிகொண்டிருந்த அன்பு நண்பர் , இப்பது குறைவாக எழுதுகிறார் . எங்கள் ஊருக்கு அருகே வசித்தாலும் இன்னும் இவரை நேரில் பார்த்ததில்லை . இவரது தளத்தின் தலைப்பு போலவே இவரது பேச்சு இனிமையாக இருக்கும் . இவரது காமெடி பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும் . நீங்களும் சென்று பாருங்கள் .
இன்றுடன் என் பணி (தொல்லை) முடிகிறது . இதுவரை ஆதரவு தந்த கோடானகோடி வாசகர்களுக்கும் , லட்சகணக்கான கமென்ட் போட்ட நண்பர்களுக்கும், வாய்ப்பு தந்த உயர் திரு சீனா அய்யா மற்றும் நண்பர் தமிழ்வாசிக்கும், இந்த பதிவில் அறிமுகபடுத்தபட்ட நண்பர்களுக்கு தகவல் அளித்த அன்பு பதிவர் ரூபன் அவர்களுக்கும்
நன்றி .. நன்றி ... நன்றி ..
MY REACTION
உங்கREACTION
மேலும் வாசிக்க...
சென்ற பதிவின் தொடர்சி இது . சென்ற பதிவில் பார்த்ததுபோலவே இந்த பதிவிலும் பல வித தளங்களில் தங்கள் பதிவுகளை எழுதி பெயர் ஏற்ற அருமையான சில பதிவர்களை பார்க்க போகிறோம் . இவர்கள் அனைவரையும் உங்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வாருங்கள் பதிவிற்கு .செல்லலாம்
கவிதை வானம் :
நண்பர் பருத்தி முத்துராசன் அவர்களின் வலைபூ இது . பல
அருமையான கவிதைகள் , கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது . இதில் நான் ரசித்தது
உங்களுக்காக ...
நிலவை தேடி :
பல ஆன்மிக பதிவுகள் மற்றும் சமுக பதிவுகள் கொண்ட வலைத்தளம் இது . படிக்க படிக்க ஆவலை தூண்டும் எழுத்துநடை இவரின் சிறப்பு .
பிரபஞ்ச வெளியில் :
ஜெயகாந்தன் பழனி என்ற பதிவர் நடத்தும் வலைபூ இது . பக்கி
சம்பந்தபட்ட பல பதிவுகள் இங்கு உள்ளது . இதுவரை நாம் அறியாத பல தகவல்கள்
இங்கு கொட்டிகிடகிறது .
கிறுக்கல்கள் :
ஜாலியான அதே சமயம் அருமையான பதிவுகள் கொண்ட தளம் இது . பாம்பு வீட்டுக்கு வந்தா நாம ஓடுவோம் . இவர் பதிவு தேத்துவார் . என்ன நடந்தது என படித்து பாருங்கள் .
எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்ற பதத்துடன் தனது பக்கத்தை நகைசுவையால் நிரம்ப வைத்துள்ள வலைபூ இது .
கார்த்திக்கின் கிறுக்கல்கள் :
கார்த்திகேயன் லோகநாதன்என்ற நண்பரின் வலைபூ இது கவிதை கட்டுரை என எழுதி தள்ளியுள்ளார் . அனைத்தும் கருத்துபோதிந்த பதிவுகள் ஆகும் . படித்து உங்கள் ஆதரவை சொல்லுங்கள் .
வல்வயூரன் :
ராஜமுந்தன் வல்வயூரன் என்ற நண்பர் நடத்தும் வலை தளம் இது . இதுவும் பல்சுவை வலைத்தளம்தான் . அனைத்தை பற்றியும் எழுதும் அருமையான பதிவர் இவர்.
தமிழ் இலக்கிய மின்வலை :
கவிஞ்சர் பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை வலைபூ . இங்கு தமிழ் புகுந்துவிளையாடுகிறது . கவிதை , தமிழ் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தளம் இது .
தொடுத்தலும் விடுத்தலும்
கவிப்பேரரசு வைரமுத்து
தோழி
பிரியா , எழுத்தை அதிகம் நேசிப்பவள் என தன்னை அறிமுகம் செய்யும் இவர் தனது தளத்தில் பல அருமையான கவிதைகள் எழுதியுள்ளார் .
ஒரு வாரமாக என் தொல்லையை தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி . அவசரபடாதீங்க அடுத்த வாரமும் நான்தான் ...(மாட்டிகிட்டிங்களா !!!!)
மேலும் வாசிக்க...