07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 2, 2014

விருந்து சாப்பிடலாம் வாங்க (கண்டிப்பா சமையல்குறிப்பு பற்றி அல்ல ..)

இன்று நாம் பார்க்க போவது பல்சுவை விருந்து படைக்கும் பதிவர்கள் வரிசையில் மூன்றாம் பாகம் . மூன்றாம் பாகம்னு தலைப்பு வைக்க போரடச்சிச்சு அதான் இப்படி தலைப்பு . இவர்களில் சிலர் உங்களுக்குமுன்பே அறிமுகமானவர்களாக இருக்கலாம் ஆனாலும் இவர்கள் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் . கவிதை , கட்டுரை , சினிமா , நகைசுவை , அரசியல் என அனைத்திலும் கொடிகட்டி வரும் இவர்கள்பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள் .அவர்கள் உண்மைகள் :நண்பர் மதுரை தமிழனின் வலைபூ இது . அருமையான சமுக கட்டுரைகள் மட்டும் இன்றி செம ஜாலியான நகைசுவை கட்டுரைகள் வரை அனைத்தும் எழுதும் பதிவர் இவர் . இவரின் பதிவுகள் ஒரு புத்தகம் போன்று அமைப்புடன்இருக்கும் . செம நக்கல் பதிவுகள் இவரின் சிறப்பு .


உங்கள் பார்வைக்கு சில :

விடிவுகாலமே இல்லையா ? 

இது எப்படி இருக்கு ? 


==========================================================================

LIGHT IT UP GIRLS:அன்பு நண்பர் மதுரை தமிழனின் மகள் எழுதும் வலைத்தளம் இது . இதில் பல வகையான உணவு குறிப்புகளை வழங்குகிறார் . என்ன இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கு , அதுதான் வருத்தம் .


உங்கள் பார்வைக்கு சில :

Oatmeal cookies: Oatmeal Crunch

 

Don't Change

  ==========================================================================

மூங்கில் காற்று :

   பிரபலபதிவர் டி .என் . முரளிதரன் அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் வலைபூ இது . மூன்னுருக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனை பதிவர் இவர் . நீங்களும் சென்று இவரின் படைப்புகளை ரசியுங்கள் .

 

 உங்கள் பார்வைக்கு சில :

 

பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2 

 

புரோகிதரே போதும் -சொன்னவர் யார்?

==========================================================================

பழைய பேப்பர் :

நண்பர் விமல் ராஜ் எழுதிவரும் வலைபூ இது . இவர் சென்னையில் பணிபுரிகிறார் . இவர் வலைப்பூவில் சிறுகதைகள் , இவர் ரசித்த , இட்ட டுவிட்டுகள் என அனைத்து வித பதிவுகளும் கிடைகின்றன . வாருங்கள் ரசிக்கலாம் .

உங்கள் பார்வைக்கு சில :

சிறுகதை - கனவு கலைந்தது 

 

எவன் அப்பன் வீட்டு சொத்து ? 

 

==========================================================================

ஊமைக்கனவுகள் :

 

 இந்த வலைதளத்தை எழுதுபவர் பற்றிய விவரங்கள் இல்லை . இவர் யார் தளத்தையும் பின்பற்றவில்லை . ஆனாலும் இவர் பதிவுகள் மிக அருமையாக உள்ளது . கவிதைகள் , கட்டுரைகள் என அனைத்தும் எழுதுகிறார் .

 

உங்கள் பார்வைக்கு சில :

 

வீழும்வரை போதும்!

 

உள்ளங்கவர் களவன்

================================================

  புன்னியவன் :

 

தேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள் என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் . இவரின் எழுத்துநடை மிக அருமையாக உள்ளது .

 

உங்கள் பார்வைக்கு சில :

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13 

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

 

 =============================================

விக்னேஸ்வரனின் வாழ்க்கை பயணம் :


 நண்பர் விக்னேஸ்வரன் எழுதும் வலைபூ இது . அருமையான எழுத்துநடையில் பல வித்தியாசமான கட்டுரைகள் இங்கு உள்ளது . சென்று படித்து பாருங்கள் .

 


19 comments:

 1. இன்று எனக்கு அறிமுகமானவர்களுக்கும், எனக்குத் தெரிந்தவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 2. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
  வாருங்கள் அன்புடன் என்பக்கம்

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

  வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ... கவிதைபோட்டி சிறக்க வாழ்த்துக்கள்

   Delete
 4. என் வலைப்பூவை பகிர்ந்தமைக்கு நன்றி !!!!
  அறிமுகபடுத்தபட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பலர் அறிந்தவர்கள்தான்.....மிக்க நன்றி!

  ReplyDelete
 6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 7. வணக்கம்!

  நம்ராச பாட்டையாா் நல்கும் அறிமுகத்தார்
  செம்பாசம் வீசும் சிறப்பினர்! - அம்மம்மா!
  வாழை இலைபோட்டு வைத்த விருத்துண்டோம்!
  தாழைத் தமிழைத் தாித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. கவிதையாகவே கமெண்டா ?? கலக்கல் அய்யா

   Delete
 8. ஊமைக்கனவுகள், புண்ணியவன், விக்னேஸ்வரன் தளங்களுக்கு சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நண்பர், ஊமைக்கனவுகள் மற்றும் இன்றைய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அய்யா,
  வணக்கம். யாரென்று போலும் என்னை அறியாமல் என் பதிவுகளைப் படித்ததோடு நில்லாமல் இங்குப் பலரும் அறியப் பகிர்ந்த தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. புதியவர்கள் பலரையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ராஜா!!!

  ReplyDelete
 13. எனது தளத்தையும் எனது மகளின் தளத்தையும் அறிமுகப்படுத்தியற்கு நன்றி.தகவல் தந்த ரூபனுக்கு நன்றி எனது மகள் தமிழ் பேசுவாள் ஆனால் எழுத படிக்க தெரியாது தமிழ் எழுத படிக்க வைக்கவில்லை காரணம் எங்களுக்கு நேரமில்லை ஆனால் அதற்கு பதிலாக அவளுக்கு ஹிந்தி படிக்க வைத்துள்ளோம் ஹிந்தியில் எழுத படிக்க பேசினால் புரிந்து கொள்ள தெரியும் ஆனால் பேசுவதில் தயக்கம் .தமிழை படிக்க வைப்பதற்கு பதிலாக ஹிந்தி கற்றுக் கொண்டால் அது அவளுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதால் ஹிந்தி படிக்க வழி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்

  அதனால்தான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறாள்

  ReplyDelete
 14. சிறந்த அறிமுகங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது