07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 21, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் கீதா மதிவாணன்  .

இவரது  வலைத்தளம்   :  கீத மஞ்சரி  : http://geethamanjari.blogspot.com  .   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து   முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  

 இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 080
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 094
பெற்ற மறுமொழிகள்                            : 295
பெற்ற வாக்குகள்                                   : 041
வருகை தந்தவர்கள்                              : 1530

கீதா மதிவாணன் - ஆஸ்திரேலிய உயிரினங்கள், குழந்தை நல்ம் சார்ந்த பதிவுகள், பெண்மை வாழ்க, உள்ளத்து உள்ளது கவிதை, தமிழன் எனக்கோர் இடமுண்டு, சென்றிடுவோர் எட்டுத் திக்கும் , இணையவழி நூலகங்கள், பற்றிய பதிவுகள் எனப் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   


கீதா  மதிவாணன் இவ்வாசிரியப் பொறுப்பினை 
மூன்றாம் முறையாக ஏற்றிருக்கிறார்,

இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி
 வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் துளசிதரன் தில்லை அகத்து - கீதாவுடன் சேர்ந்து இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் பெயர் துளசிதரன்.  பாலக்காட்டில் CFDVHSS எனும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகின்றார். இவரது தோழி கீதா.  அவர் இருப்பது சென்னை. 

இவர்களதுவலைத்தளம் thillaiakathuchronicles.   ஆரம்பித்து ஒருவருடம், நான்கு மாதங்களே ஆகின்றது.  இவர்கள் இருவரும் சேர்ந்து, கலந்தாலோசித்துதான் இவர்கள் வலைத்தளத்தில் எழுதுகின்றார்கள்..  தனித்தனியாக எழுதும் இடுகைகளையும் கூட, ஒருவருக்கொருவர் திருத்தம் செய்து, விவாதித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து, இருவரும் சம்மதம் தெரிவித்த பின்னரே வெளியிடுகின்றனர்.   

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  துளசிதரன் தில்லைஅகத்து மற்றும் கீதாவினை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்  

நல்வாழ்த்துகள் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா 

நட்புடன் சீனா

30 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. என்மீது நம்பிக்கை வைத்து மூன்றாம் முறையாக வலைச்சரப் பணியை அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சீனா ஐயா. என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்துதங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். நாளை முதல் பொறுப்பேற்க இருக்கும் துளசிதரன் அவர்களையும் கீதா அவர்களையும் இனிதே வரவேற்கிறேன்.

  ReplyDelete
 3. கீதா அக்கா உங்க பணி அருமையானது!! அட! கீதா அக்கா பணியை தோழி கீதா மற்றும் சகோ துளசி என்று என் இனிய சகாஸ் இடம் ஒப்படைக்கிறார்கள்:)))
  வருக சகாஸ்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி மைதிலி ...வாங்கப்பா....ஸ்பாடா ஒரே பரபரப்பா இருக்குதுங்க இங்க....கீதா புனாவுல இப்ப இருக்காங்களா....எங்களுக்குச் சென்னைதானே பதிவேற்றம் செய்ய தலைமையகம்.....ஸோ கொஞ்சம் அப்படியும் இப்படியுமா....இருக்குதுங்க....பார்ப்போம் ....நாளை......நன்றி சகோதரி!

   Delete
  2. எங்க இருந்தாலும் நீங்க கலக்குவீங்க சகாஸ்!! come on lets rock!!!

   Delete
 4. மிக்க நன்றி அன்பின் சீனா ஐயா, நாளை முதல் ஏற்கப் போகும் பொறுப்பை நாங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற ஒரு சிறு பதட்டம் இருக்கத்தான் செய்கின்றது, இது முதல் முறை என்பதால்! தங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் கூடி உள்ளது! தங்கள் ஆசியுடன் நாளைய தினத்தை ஆரம்பிக்கின்றோம் ஐயா!

  சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களுக்கு எங்கள் நன்றி!

  ReplyDelete
 5. சென்ற வாரம் வலைச்சரம் ஆசிரியை பணியை சிறப்புறச் செய்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி! நாளை முதல் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் துளசிதரன் மற்றும் கீதா இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
  த.ம.1

  ReplyDelete
 6. மூன்றாம் முறையாகப் பொறுப்பேற்று, வலைச்சர ஆசிரியர் பணியினை திறம்படக் கையாண்டு, பணியினை நிறைவாக நிறைவேற்றி நம்மிடமிருந்து இன்று பிரியாவிடை பெற்றுச்செல்லும் ‘கீதமஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  நாளைமுதல் புதிதாகப் பொறுப்பேற்கப்போகும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் நம் இனிய வாழ்த்துகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 7. அன்பின் துளசிதரன் - த.ம் : 2

  ReplyDelete
 8. வணக்கம்
  துளசி -அண்ணா
  கீதா-சகோதரி

  இந்தவாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பாக வரும் இருவரையும் அன்போடு வருக வருக வென்று அழைக்கிறோம்...சிறப்பாக அமைய... எனது வாழ்த்துக்கள்...


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி!

   துளசிதரன், கீதா

   Delete
 9. இந்த வார ஆசிரியர் கீதமஞ்சரி மிகச் சிறப்பாய் பணியாற்றி இருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.

  அட வரும் வாரமும் நமது நண்பர்களா.... வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. ஆம்! நண்பரே! முதல் தடவையாகப் பொறுப்பு!

   மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு!

   Delete
 10. சிறப்பாகப் பணியாற்றிய கீதமஞ்சரி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  இந்த வாரம் பணியேற்க வரும் துளசிதரன் மற்றும் கீதா அவர்களுக்கு நல்வரவு!..
  வாழ்க நலம்...

  ReplyDelete
 11. எமது இனிய நண்பர் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா அவர்களுக்கு நல்வரவு, ஸுவாகத்தம், சுஸ்வாகத், ஸுவாகதம், மபுஹாய், ஆயிபோவன், மரஹபா, வெல்கம், இருவருக்கும் அபுதாபி அப்பாவி கில்லர்ஜியின் வந்தனங்கள்... இந்தவாரம் தங்களிடமிருந்து நிறைய பொக்கிஷங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி ரொம்ப எதிர்பாக்காதீங்க! நாங்க இப்ப சோதனை எலிகள் எங்களுக்குள்ளேயே! புதிய முதல் பொறுப்பு! பார்ப்போம் நாளை!

   Delete
 12. திரு. துளசிதரன் மற்றும் திருமதி. கீதா
  இருவரும் வழங்க இருக்கும் வலைச்சரத்தை ஆவலுடன் வரவேற்கிறேன்.

  ReplyDelete
 13. நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்

  நல்வாழ்த்துகள் துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா

  ReplyDelete
 14. சென்ற வார ஆசிரியருக்கும்... இந்த வார ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! வாழ்த்துக்களுக்கு!

   Delete
 15. சிறப்பாக பணிமுடித்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கும்...
  சிரமேற்று பணியாற்ற வந்திருக்கும் ஐயா.துளசிதரன் மற்றும் சகோதரி.கீதா
  அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! தங்கள் எல்லோரது வாழ்த்துக்களுடனும் நாங்கள் இந்த வார ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம்!

   Delete
 16. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் துளசிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்த சகோதரி கீதமஞ்சுரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  இந்த வார இரட்டை ஆஸ்ரீயர்கள் துளசி சார் மற்றும் சகோதரி கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது