07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 7, 2014

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற இரு வார காலமாக வலைச்சரத்தின் இரு கரங்களாகச் செயல் பட்ட ராஜ்பாட்டை ராஜா தன் எழுத்துகளால் ஒரு ராஜ பாட்டையே படைத்து விட்டார். புதுமையான கருத்துகளால் புத்துணர்வு ஊட்டும் பதிவுகளை எடுத்துச் சுட்டி ஆர்வமுடன் பதிவுகளை பதிப்பித்துள்ளார். பயனுள்ள கருத்துகளையும் பலபதிவர்களீன் படைப்புகளில் இருந்து படிப்பவர்களுக்கு புதுமை விருந்து படைத்துள்ளார்.

கலை, மென் பொருள், கவிதை, பயனுள்ள செய்தி என்று படைப்புகளுக்கு விளக்கப் படங்கள் இட்டு பதிந்துள்ள கருத்துகள் வழக்கத்தை விடப் புதுமையாய் இருந்தது. தானறிந்ததைப் பிறரும் அறியுமாறு எடுத்துச் சொல்லுதல் என்ற இலக்கணத்தை இலக்கியமாக வடித்துக் காட்டியவர் இந்த ஆசிரியர். ஆம் ! அவரது ஆசிரியப் பணியின் சிறப்பும் இவர் சொல்லாமலே தெரிகிறது !

இவர் எழுதிய பதிவுகள்                         : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 112
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 201
பெற்ற மறுமொழிகள்                            : 333
வருகை தந்தவர்கள்                              : 4238
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 043

நண்பர் ராஜபாட்டை ராஜா வலைச்சரத்தின் நடசத்திரப் பதிவர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.

பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் நண்பரை நன்றியுடன் வழி அனுப்புகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடன் இசைந்துள்ள முனைவர் இரா.குணசீலனை வருக வருக என்று ஆர்வமுடன் வரவேற்கிறோம்.

சிவகங்கைச் சீமையில் பிறந்த அருமை நண்பர் முனைவர் இரா.குணசீலன் அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். வலைப்பதிவுகளில் சங்க இலக்கியத்தை வளர்க்கும் ஆர்வம் கொண்டு வலைப் பதிவுகளில் பல கட்டுரைகளை எழுதி வருபவர். தற்பொழுது கே ஆர் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
தேசியக் கருத்தரங்கு பன்னாட்டுக் கருத்தரங்குகளின் ஆய்வுக் கோவைகளில் தமிழ் மொழி இலக்கியம் இலக்கணம் நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் என்ற தலைப்புகளீல் ஆய்வுகளைப் பதித்தவர். இரு இலக்கிய நூல்களையும் எழுதி உள்ளார். தமிழ் மணம் இணையத் தளத்தின் வலைப் பதிவர்களுக்கான விருதுகளைப் பெற்று பரிசும் பாராட்டும் பெற்றவர். தற்பொழுதும் தமிழ் மொழி வளர்க்கும் ஆர்வத்தில் தமிழ்ப் பதிவுகளை இணையத் தளங்களீல் வழங்கி வருகிறார்..

நல்வாழ்த்துகள் ராஜபாட்டை ராஜா !

நல்வாழ்த்துகள் இரா குணசீலன் !

நட்புடன் சீனா !8 comments:

 1. இரண்டு வாரம் தொடர்ந்து வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக செய்திட்ட ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!

  இந்த வாரம் முதல் வலைச்சரம் தொடுக்க வந்த பேராசிரியர் முனைவர் இரா குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
  த.ம.1

  ReplyDelete
 2. சோதனை மறுமொழி

  ReplyDelete
 3. சிறப்பாக பணி நிறைவு செய்த - ராஜா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
  பணியேற்கும் - இரா குணசீலன் அவர்களுக்கு நல்வரவு!

  ReplyDelete
 4. இரு நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இரண்டு வாரங்கள் செம்மையாகப் பணியாற்றிய ராஜா அவர்களுக்குப் பாராட்டுகள்.

  வரும் வார ஆசிரியர் முனைவர் குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வணக்கம்

  சிறப்பாக பணியை செய்து முடித்த ராஜா ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்
  புதிதாக வருகிற ஆசிரியர் குணசீலன் ஐயா அவர்களை அன்புlன் அழைக்கிறோம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. ராஜபாட்டை - ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்களும்,
  முனைவர் இரா.குணசீலன் வர்களுக்கு நல்வரவும்.

  அன்புடன்
  தேவகோட்டை- கில்லர்ஜி.
  அபுதாபி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது