07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ப்ரியமுடன்...வசந்த். Show all posts
Showing posts with label ப்ரியமுடன்...வசந்த். Show all posts

Sunday, December 13, 2009

பொட்டிய கட்டிக்கிறேன்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..

இதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..

நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கு.அடிக்கடி நானே ஓபன் பண்ணி படிச்சுப்பாத்து ரசிச்சுக்கிறேன்.குட் பிளாக்ஸ்ல கூட வந்துருக்கு அந்த அளவுக்கு என்னோட இடுகைகள் ரசனையா வந்ததுக்கு நீங்கள் அனைவரும் காரணம். இந்த ஒருவார காலமும் தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த எம்மண்ணின் சொந்தம் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுகொள்வது உங்கள் ப்ரியத்துடன்..வசந்த்..

Orkut Myspace Good Bye Scraps, Graphics and Comments


Keep in touch Glitter Graphics and Scraps for Orkut, Myspace, Facebook, Hi5, Tagged

மேலும் வாசிக்க...

Wednesday, December 9, 2009

புதுவரவுகள்...

அனைவருக்கும் வணக்கம்...


ரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடையா மாறிப்போகும் அந்த வகையில் இன்று அறிமுகப்படுத்தும் நண்பர்கள் அனைவரும் வலைச்சரத்துக்கு புத்தம் புது வரவுகள்....இவங்களையும் வாசியுங்கள் உங்களுக்கு பிடிக்கும் அடிக்கடி போய் வாசிப்பீங்க பாருங்க...

சத்ரியன்


மனவிழி எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் இவர் எழுதிய அத்தனையும் கவிதைகளே சிறந்த கவிஞர் . சின்னதாக எழுதினாலும் சிறப்பா எழுதுறார் இவரின் வலைப்பூவிலே தன் மகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் தேர்ந்தெடுத்த அதே இனிய பெயரான சாரலின்பாவை மகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.பார்த்தீர்களா எப்படியெல்லாம் சிறப்பான மனிதர்கள் இருக்கின்றார்கள்,இந்த வலையுலகில்...

இவரின் கவிதைகள்





**************************************************************************************

பின்னோக்கி’



பின்னோக்கி என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.இவர் சிறப்பாக கதைகள் எழுதுகிறார் , கட்டுரைகளும் கவிதைகளும் கூட எழுதுகிறார்.நிஜமாய் நடந்த துப்பறியும் கதைகளும் எழுதி வருகிறார் ஒரே மாதிரியான கதைகள் படித்த நமக்கு இவரின் கதைகள் வித்யாசமாக இருக்கின்றன..கண்டிப்பா படியுங்க பிடிக்கும் உங்களுக்கும்...

இவரின் இடுகைகள்





*************************************************************************************

தமிழுதயம்


தமிழுதயம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இவர் வலையுலகுக்கு மட்டுமே புதிது எழுத்துலகில் நிறைய சிறுகதைகள்,குறுநாவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. அனுபவ,நிகழ்வுகள் பற்றி சிறப்பாக எழுதிவருகிறார் சிறப்பான எழுத்துநடை ஆரம்ப வரிகளில் இருந்து கடைசி வரிவரி வரை நம்மை கட்டியிழுத்துவருகின்றன கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டியவர்..வாசித்து பாருங்க இவருக்கு நான் கியாரண்டி...

இவரோட கைவண்ணங்கள்




*************************************************************************************

நீச்சல் காரன்

இவர் நீச்சல்காரன் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுசா எழுதுனாலும் வித்யாசமான கோணத்திலான எழுத்துக்கள் முதன் முறைப்படிப்பவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும்..சிறப்பாக எழுதிவருகிறார் வாருங்கள் இவரையும் வாழ்த்தி சிறக்கச்செய்வோம்...

இவரின் இடுகைகள்




**************************************************************************************
மச்சான்ஸ்



இவர் ஹைக்கூக்களும்,நகைச்சுவையும் ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களும் சிறப்பாக எழுதி வருகிறார் சிவன் என்ற புனைப்பெயரில்,நன்றாக எழுதுகின்றார் சிறப்பான எதிர்காலமுண்டு...

இவரின் சில இடுகைகள்




**************************************************************************************
நாஞ்சில் பிரதாப்



இவர் நாஞ்சில் எக்ஸ்பிரஸ் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் அனைத்து இடுகைகளும் சிறப்பாக எழுதுகிறார்,நகைச்சுவையாய் எழுதுகின்றார்..நீங்களும் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்...

இவரின் சில இடுகைகள்....




*************************************************************************************

வேல்ஜி

ஜெயப்பேரிகை எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் சிறந்த கவிஞர் ஒரு முறை வாசித்தால் மிகவும் பிடித்துப்போகும் இவரது கவிதைகள்





*************************************************************************************
புதியவர்களின் அறிமுகம் நாளையும் தொடரும்

நன்றி ப்ரியமுடன்...வசந்த்







மேலும் வாசிக்க...

ஏணிகள்...


அனைவருக்கும் வணக்கம்


சும்மா நாம எழுதி பதிவில போட்டுட்டாலும் யாராவது அதை வாசிக்கமாட்டாங்களா யாராவது இதைப்படிச்சு கருத்து சொல்லமாட்டாங்களான்னு இருக்கும்,புதுசா எழுத வர்றவங்களுக்கு.அந்த வகையில் அனைவருக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் நானறிந்த வரைக்கும் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் அறிந்தவர்களே இவர்கள்.இருப்பினும் இவர்களின் இந்த ஊக்கப்படுத்தலுக்காக பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள் எப்பொழுதும் உங்களுடைய இந்த ஊக்கம் கொடுத்தலை நிற்பாட்டிவிடாதீர்கள் அதனால் நல்ல பதிவர்களை இந்த பதிவுலகம் இழக்க கூடும் இன்றைக்கு ஊக்கம் கொடுப்பவர்களைப்பற்றி பார்ப்போம்...அவர்களின் விமர்சனங்களைப்பற்றியும் பார்ப்போமே..



திரு.இராகவன் நைஜீரியா

இவரின் பின்னூட்டம் இல்லாத வலைப்பூக்களே இல்லையென்ற அளவில் புதியவர்கள்,பழையவர்கள் என்றில்லாமல் அனைவரது இடுகைகளையும் ,அவர்கள் நன்றாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர்களை சின்ன வார்த்தையொன்றையாவது சொல்லி கருத்து இட்டு வருவது இவரது வழக்கம்,அதேசமயம் நகைச்சுவையான பின்னூட்டங்களும் போடுகிறார். கும்மி உலக ராசா என்று கூட சொல்லும் அளவிற்க்கு அசராமல் பின்னூட்டங்கள் போடுவதில் இவரை அடித்து கொள்ள ஆளில்லை,நானும் இவரால் ஊக்கப்படுத்தப்பட்டேன்..அதேபோல் இவரது இடுகைகளும் நகைச்சுவையாகவும் இருக்கும்..

இங்கு எல்லாம் இவரின் பின்னூட்டங்களை படித்து ரசித்து சிரித்துவரலாம்



இவரது இடுகையில்



இராகவன் அண்ணா நீங்க என்னைய மறந்தாலும் பரவாயில்லை அடுத்தவர்களை ஊக்கப்படுத்தலை மறந்துடாதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்...

*************************************************************************************

திரு.நட்புடன்...ஜமால்

வலையுலக பிரபலம் இவரது இனிய சிரிப்பான முகத்தைப்போலவே பழகவும் பேசவும் மிகவும் இனிமையானவர் இவர் வலையுலகம் வந்து இட்ட இடுகைகள் குறைவாக இருந்தாலும்? இவர் பெற்ற நண்பர்களின் எண்ணிக்கை கணக்கிடலங்கா இதற்க்கு காரணம் அனைவரிடமும் சகோதர பாசத்துடன் பழகும் பாங்கு ,பதிவுலக வரலாற்றிலே 10000 பின்னூட்டங்கள் வாங்கிய அதிசய மனிதர்..புதியதாக எழுதும் அனைவரையும் மனம் திறந்து பாராட்டுகிறார் நண்பர்களிடமும் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உங்களுக்கு தெரிந்த யாராவது நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்களா என்றும் கேட்பதிலிருந்து அவரின் படிக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.கற்போம் வாருங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவந்தார் பலரின் பொறாமையோ ஏனோ இவரின் வலைப்பூ காணமல் போய்விட்டது போலும் இப்பொழுது அதே பெயரில் புதிய வலைப்பூவில் எழுதி வருகிறார்..இவரின் தக்காளி கவிதைக்கு நான் அடிமை ஏனோ அதற்க்கான தொடுப்பு கொடுக்க இயலவில்லை ஆதலால் இதோ



நன்றி ஜமால் அண்ணா

*************************************************************************************

திரு.S.A.நவாஷுதீன்

மனவிலாசத்துக்கு சொந்தக்காரார்..மனதில் பட்டதை கூறுபவர்
பதிவுலகில் அனைவராலும் அறியப்பட்டவர் அனைத்து பிரபல பதிவர்களின் பதிவுகளிலும்,என்னைப்போன்ற வளரும் பதிவர்களின் பதிவுகளிலும் இவரின் கருத்துரைகளை காணலாம் கவிதைகளை தேடி தேடி வாசிப்பவர் சுவாசிப்பவர் ,இவரொரு கவிஞர் ஆனால் ஏனோ அதிகம் எழுதுவதில்லை நேரமிருந்தாலும். தான் பின் தொடரும் அனைவரையும் வாசித்து கருத்துகளை நியாயமாக கூறுகிறார்.கவிதைகளை நீயா நானா என்று கேட்டு பிரித்து மேய்கிறார் அதன் அர்த்தங்களை..வளர்க நின் வாசிப்புதிறன் நண்பா..நன்றி நவாஸ்

இவரது இடுகைகள்





************************************************************************************

வடலூரான் கலையரசன்

இவரோட அபவுட் மீ படிச்சாலே சிரிப்பு தானா வருமுங்க...
யப்பா சாமீய்ய் இவரு இருக்காரே கொஞ்ச நஞ்ச லொள்ளா பண்றாரு.அப்பா இவரோட இடுகைகளை வாசிச்சுட்டு சிரிக்காம வந்தா உங்களுக்கு ஏதோ ஒரு நோய் இருக்குன்னே சொல்லலாம் அவ்வளவு நகைச்சுவைக்கு சொந்தக்காரர்,இடுகை மட்டுமா ஒவ்வொரு பதிவரின் இடுகைகளிலும் இவர் இடும் பின்னூட்டங்கள் உம்மனா மூஞ்சியை கூட சிரிக்க வைத்துவிடும் அது மட்டுமல்ல தன் இடுகைகளில் பதில் பின்னூட்டம் போடும்போது கூட சிரிக்கவைக்கிறாருங்க அவருடைய அந்த பின்னூட்ட ஸ்டைலே தனி..ஏனோ குறைவாத்தான் எழுதுறார் ஏன்னுதான் தெரியல? அனைத்து பதிவர்களின் இடுகைகளிலும் இவரது பின்னூட்டத்தை ரசிக்க வைக்கிறார்..
வளர்க உன் நகைச்சுவைத்திறன் மாப்பி...

நகைச்சுவைகள்




************************************************************************************

திருமதி.சின்ன அம்மிணி

நான் இப்போதான் இவங்களோட பதிவுகளை வாசிக்கிறேன் நல்ல கதையாசிரியர் இவருக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்காங்க ரொம்ப நாளாவே இவங்களோட பின்னூட்டங்களை பிரபலங்களின் பதிவுகளில் வாசிச்சுருக்கேன் இவங்களும் குறைவா எழுதி நிறைய பின்னூட்டம் இடும் பதிவரே சின்னதா சிரிப்பு ஸ்மைலியோட அனைத்து பதிவுகளையும் வாசிச்சு கருத்து சொல்றாங்க.அதிகாலையில் அனைவருக்கும் இவரது பின்னூட்டமே முதலாவதாய் இருக்கும் ஆஸ்திரேலியாவிலதான் முதல்ல விடிஞ்சுடுமே அதான் நினைக்கிறேன்..நன்றி சின்ன அம்மிணி

இவரின் இடுகைகள்




*************************************************************************************

திரு.அ.மு செய்யது

மழைக்கு ஒதுங்கியவையில் எழுதிவருகிறார் சகோதரர்
பிரபல பதிவர்கள் இருப்பதுபோல் இவர் பிரபல பின்னூட்டகாரர்,கதை எழுதுவதிலும் கெட்டிக்காரர் பார்க்க என்னைப்போன்று சிறு வயதுபோல் தோன்றுகிறது இருப்பினும் இலக்கியம் நிறைய படித்திருப்பார்போலும் அட்டகாசமாய் அனைத்து நல்ல இடுகைகளையும் வாசித்து பிரிச்சு மேய்றாரு அதே இலக்கிய ரசனையோடு..யப்பா எப்பிடி சாமி இப்டில்லாம்,ம்ம் உங்களின் இந்த சிறந்தஇலக்கியத்திறனும், ஊக்குவிப்புத்திறன் பன் மடங்கு வளர்க.. நன்றி செய்யது




**********************************************************************************

திரு.அருண்(வால்பையன்)

வால் பெயரில் இருப்பதுபோலவே செயலிலும் பிரபலப்பதிவர்கள் புதியவர்களை ஏறெடுத்து பார்க்காத இந்த பதிவுலகத்தில் நேற்று வந்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் நினைக்காமல் அனைவருக்கும் பின்னூட்டங்கள் போட்டு அவர்களை ஊக்குவித்து ரியல் பிரபலம் என்று நிரூபிக்கிறார் இந்த தலைக்கணமில்லா நாயகன் இவரின் எழுத்து பற்றி கூற எனக்கு தகுதியில்ல..அவ்வளவு நன்றாக எழுதக்கூடியவர்..எதிர் கவுஜ நாயகன்,பதிவர் சந்திப்புக்களின் தலைவன்...

நன்றி தல

இவரின் இடுகைகளில் இதோ




இவங்கள் அனைவருக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஏணியாகவே இருந்துவிடாதீர்கள் ஏற்றிவிட்டவரை எட்டி மிதிக்கும் உலகமிது கைகொடுத்து அரவணைப்பாய் வாருங்கள்...மீண்டும் உங்கள் அனைவருக்கும் பதிவுலகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்...

மீண்டும் நாளை சந்திக்கும் வரை விடை பெறுவது

ப்ரியமுடன்...வசந்த்

மேலும் வாசிக்க...

Monday, December 7, 2009

நட்சத்திரங்கள்...

அனைவருக்கும் வணக்கம் (அட சல்யூட் எங்கப்பா?)



அமிர்தவர்ஷினி அம்மா

இவங்க மழைன்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இவங்களைப்பத்தி சொல்றதுன்னா சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி...
இவரைப்பற்றி இதற்க்கு முன்னால் பலரும் கூறியிருப்பார்கள் இருந்தாலும் நானும் இவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் இவரின் எழுத்துக்களை தங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.ஆமாங்க எப்பிடியெல்லாம் எழுதுறாங்க இவங்க வட்டாரபேச்சுவழக்கு நடையில் அன்றாட நிகழ்வுகளையும் தன் செல்ல மகளின் சேட்டைகளையும் அழகுகளையும் வாசிக்க வாசிக்க மிகவும் பிடித்து போகிறது.என்னை பொறுத்த மட்டில் இவரின் எழுத்துநடை வலையுலகில் யாரிடமும் இல்லாத ஒன்று.சரிதானுங்களே அ.அ.
(ஆண்டாவா எனக்கு இவங்களை மாதிரி எழுத்துநடையில எழுதுற சக்தி கொடுப்பா...)

இதோ இவர் கைவண்ணங்களில் சில...




***********************************************************************************

விசா

இவர் விசா பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்..
இவர் ஒரு கதாசமுத்திரம் ஆமாங்க ட்விஸ்ட் கதை சொல்வதில் இவருக்கு நிகர் இவரே , விறு விறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லுவதில் கெட்டிக்காரர்.அநாவசியமாக கூட வார்த்தைகள் இருக்காது அத்தனை வார்த்தைகளும் கதையோடு சேர்ந்து நம்மையும் அதனுடன் ஒன்றிப்போய் படிக்கச்செய்துவிடும் .இவரின் கேப்ஸ்யூல் கதைகள் பிரசித்தம்.கதை மட்டுமில்லை சில நேரம் இவர் எழுதும் காமெடி பதிவுகளும் நம்மை வயிறு வலிக்க செய்துவிடும் ஏனோ இவர் அதிகம் வெளியில் தன்னை தானொரு பதிவன் என்று காட்டிக்கொள்வதில்லை.சுய விளம்பரமும் தேடிக்கொள்வதில்லை.(கத்துக்கோடா வசந்து)நீங்கள் அனைவரும் கண்டிப்பா இவரோட கதைகளை வாசிக்க வேண்டும்...
(கண்டிப்பா உங்களை மாதிரி ஒரு நாள் ஒரு கதையாச்சும் எழுதுவேன் விசா)




************************************************************************************


தமிழரசி

இவங்க எழுத்தோசை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க..
வலையுலக கவியரசின்னு கூட சொல்லலாம்,அவ்வளவு கவிதைகள்,அத்தனையும் வாசிக்க வாசிக்க ரசிக்கலாம்,சமுதாய கோபங்களை சத்தமில்லாமல் தன் கவிதைகளில் வெளிப்படுத்துவார்,காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதைகள் எழுதுவதும் கைவந்த கலை இவருக்கு,ஒரு கவிதை மெசின் வைத்திருப்பார் போலும் ஏதாவது கவிதைன்னு இவருக்கிட்ட கேட்டா அடுத்த நிமிசமே கவிதை எழுதி கொடுத்திடுவாங்க.அவ்வளவு கவி ஞானம்.
அன்பானவர் ,பாசமானவர்கூட இவர் எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.

இவரின் கைவண்ணங்கள் இதோ...

ஒரு நண்பரின் திருமண அழைப்பிதழ்க்கு எழுதிய இருமன திருமண ஓலை




************************************************************************************


வானம்பாடிகள் பாலா

இவர் பாமரன் பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்

சமுதாய கோபம் மிக்கவர்,இவரின் கோபத்திற்க்கு அரசியல் வாதிகளின் கோரமுகம் தினமும் கிழிக்கப்படுகிறது இவரது இடுகைகளில்,இந்த வயசுலயும் காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கவிதைகள் எழுதுகிறார் (எப்பிடி நைனா இதெல்லாம்?) இவரது அனுபவப்பகிர்வுகள் படிச்சுட்டு சிரிக்காம வர்றவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்ற அளவில் சிறப்பான நகைச்சுவை இடுகைகளை எழுதி நம் வயிற்றை பதம் பார்க்கிறார்,அன்பானவர் அனைத்து புதியவர்களுக்கும் ஊக்கம் கொடுத்து வருகிறார்..இவரின் நறுக்குன்னு நாலு வார்த்தை இடுகைகளை புத்தகமே போடலாம் அவ்வளவு நறுக்கு தெரிக்கின்றது இவரது இடுகைகளில் மூத்த பதிவர் என்ற பொழுதிலும் இளையவர்களுக்கு இணையாக களத்தில் பட்டாசு வெடிக்கிறார் தினமும்...

இதோ இவரது நறுக்குகள்





************************************************************************************

ராமலக்ஷ்மி மேடம்

இவங்க முத்துச்சரம் என்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இந்த பதிவுலகத்திலயே மிகவும் ரெஸ்பெக்ட்டான ஆளுங்க...மிகுந்து பேசி பார்த்திருக்க வாய்ப்பில்லை.நான் மிகவும் மதிக்கும் பதிவர்
திருநெல்வேலி மண்ணைச்சேர்ந்த இவங்களின் எழுத்துக்களை நான் பதிவுலகம் வந்ததிலிருந்து வாசிச்சுட்டு வர்றேன் கவிதைகள்,சிறுகதைகள் இவரின் தனிச்சிறப்பு,புகைப்படங்களை சுட்டுத்தள்ளுவதிலும் தேர்ந்த நிபுணர் இவரின் இடுகைகளில் நாம் இடும் பின்னூட்டங்களுக்கு அழகாக பொறுமையாக புரியும்படியான விளக்கம் கொடுக்கிறார்.இவரின் பல இடுகைகள் யூத்ஃபுல் விகடனில் வெளிவந்திருக்கிறது தற்பொழுது தேவதை இதழிலும் தொடர் எழுதுகிறார் அதுமட்டுமன்று நிறைய வார மாத இதழ்களில் இவரின் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.வாழ்த்துக்கள் மேடம்...

இவங்களோட இடுகைகள்





*************************************************************************************

கதிர்-ஈரோடு

இவர் கசியும் மவுனம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்
இவரை ஆரம்பத்திலிருந்தே பதிவுலகில் நன்கு தெரியும் நல்ல கவிஞர் தொடர்ச்சியான சமூக நல கவிதைகள் நச்சுன்னு எழுதுவார்.இவரின் சமுதாய நல கட்டுரைகளும்,தற்சமய தேவையான சமுதாய விழிப்புணர்ச்சி கட்டுரைகளள் பசுமரத்தாணிபோல் மனதில் சலனத்தை ஏற்படுத்தி பதிந்து போகின்றன..தொடர்ச்சியா சிக்சர் அடிச்சுட்டு இருக்கார்,(கதிர் சார் இப்படி கட்டுரை எழுதுவது எப்படியென்று எனக்குமட்டும் ரகசியம் சொல்லுங்களேன்)இவரின் இடுகைகளும் தொடர்ச்சியா யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...

இவரின் சில கவன ஈர்ப்பு இடுகைகள்





*************************************************************************************


பா.ராஜாராம்

இவர் கருவேலநிழல் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இல்லையா மக்கா?
இவரைப்பத்தி நான் சொல்லிதெரியணும்ன்ற அவசியம் இல்லை.வலையுலக கவிஞர்களில் முதன்மையா இருக்கிறார் இவரின் எளிமையான கவிதைகள் மனதை பதம் பார்க்கும்.எப்படியெல்லாம் பாசத்தையும், அன்பையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறார் அத்தனைகவிதைகளும் மிகச்சிறப்பானவை,பா.ரா.இதுவரைக்கும் சவுதி மன்னரிடமிருந்து எவ்வளவு பொன் முடிப்பு பரிசாக வென்றிருக்கிறீர்கள்?
இவரின் பின்னூட்டங்களும் பாசமாவே இருக்கு...இப்போ வர்ற டிசம்பர் 11 இவரோட கவிதை தொகுப்பும் புத்தகமா வெளிவருகிறது வாழ்த்துக்கள் பா.ரா.


இதோ இவரின் சில வைரங்கள்





**************************************************************************************

நாளையும் சிறந்த நட்சத்திரங்களுடன் வருகிறேன் நன்றி

ப்ரியமுடன்...வசந்த்

மேலும் வாசிக்க...

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!


எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
- மகா கவி பாரதியார்

பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்

நான் யாருன்னு கேக்குறீங்களா?

எம்பேரு வசந்தகுமார்

ஊரு மதுரப்பக்கம் தேனி-லட்சுமிபுரம்புதுப்பட்டி ஆமாங்க கிராமத்தானுங்க...
(ஆமா உன் மூஞ்சியும் முகரகட்டையும், நீ எழுதுற பதிவுகளையும் கமெண்டுகளையும் பார்த்தாலே தெரியுது நீ கிராமத்தான்னு அங்க யாரோ முறைச்சு பாத்துட்டு சொல்றது கேக்குது...)

இப்போ கத்தார் நாட்டில் கட்டுமான துறையில் மின்னியல் பிரிவில் பணிபுரிகிறேன்...

பிரியமுடன்...வசந்த் என்ற வலைப்பூவில் எழுதி(கிறுக்கிட்டு)வருகிறேன்...
(அப்பிடியொரு வலைப்பூ இருக்கான்னெல்லாம் கேக்கப்புடாது)

வலையுலக வாழ்க்கை சரியா போன டிசம்பர்18 லிருந்துதான் ஆரம்பித்தது... இப்போ இந்த டிசம்பர்ல திரு.சீனா ஐயாவின் ஆசியால் வலைச்சரம் ஆசிரியராவும் ஆயிட்டேன்....
(அதத்தான் எங்களால நம்ப முடியலைன்னு தமிழரசி மேடம் கேக்குறீங்கதானே! )

இதுக்காக என் பெயரை சீனா ஐயாவிடம் பரிந்துரை செய்தது யார்ன்னு தெரியலை அவங்களுக்கும்,சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்...

முதல்ல நான் எழுத்தாளனே கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்கிகிட்டு இருக்கேன்.. மிக நன்றாக எழுதுபவர்கள் போல் இலக்கியம் எல்லாம் படிக்கலை இலக்கணம் கூட சரியா தெரியாதுங்க..ஏதோ என் எண்ணத்தில் தோன்றியதை எழுத்துவடிவில் கொண்டுவந்து உங்களின் பார்வைக்கு வைப்பதுவரை என் வேலை முடிந்தது.. அவ்வளவுதான்... அதுக்கப்புறம் டார் டாராக்குறது எல்லாம் உங்க வேலை...

முதன் முதல்லா அப்பாவி முரு என்னை வலைச்சரத்தில அறிமுகப்படுத்திவச்சு ஆட்டத்தை ஆரம்பிச்சு வச்சாரு எனக்கு பிடித்த என் மேல் உண்மையான பாசம் வைத்திருக்கும் நண்பர்களாலும் அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டேன்..இப்போ நானும் இந்த வலைச்சர ஆசிரியர் ஆவேன்னு நினைச்சு கூட பாக்கலைங்க..(டேய் பொய்யெல்லாம் சொல்லாதன்னு நானே என்னைய கேட்டுக்கிறேன்)

இதுக்கெல்லாம் காரணம் என் இடுகைகளை படிச்சு தொடர்ந்து ஆதரவு தரும் என் நண்பர்களாகிய நீங்கள்தான்... எனக்கு முன்ன என்னோட சீனியர்ஸ் நிறையபேர் ஆசிரியரா பொறுப்பேற்ற வலைச்சரத்தில் நானும் ஆசிரியரா இருக்குறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க...

எனக்கு பதிவுகளை வாசிக்க பிடிக்கும்...என்னை பொறுத்த அளவில் ஒரு பதிவரா இருப்பதை விட ஒரு நல்ல வாசகனா இருக்கவே விரும்புறேன்..இந்த ஒரு வருடத்தில் நான் படித்த பதிவர்கள் எண்ணற்றோர்...அவர்களில் எனக்கு பிடித்த நன்றாக எழுதும் பதிவர்களையும், இன்னும் பதிவுலகத்துக்கு வந்து சில நாட்களே ஆனாலும் சிறப்பாக எழுதும் அனைவரையும் அறிமுகப்படுத்துவதில் எனக்குத்தான் பெருமை...

இப்போ சுயபுராணத்துக்கு போவோமா( வேண்டாம்டா சாமீ அத உன்னோட வலைப்பூவுலதான் பார்த்துட்டு மெர்சலாயிப்போய் இருக்கோமேன்னு நீங்க சொன்னாலும் புதுசா வாசிக்கிறவங்களும் உங்களை மாதிரியே இதப்படிச்சுட்டு மெர்சல் ஆகவேணாமா?)

பொதுவா நான் படங்களை ரசிப்பது உண்டு சினிமா படமில்லப்பா போட்டோபடம் அதில் நகைச்சுவையா இரு இடுகைகள்

அப்புறமா என்னோட இந்த 32 கேள்விகள் 32 நபர்களிடம் படிக்காதவங்க படிச்சுடுங்கப்பா (ஒருத்தரோட 32 கேள்வி பதில்களையே படிக்கமுடியாது இதுல 32 பேரா இப்போ உன்னோட 32 பல்லையும் உடைக்கப்போறேன்னு பிரியாக்கா சொல்றா)

பின்ன மேக கூட்டத்துக்கிட்ட நான் பேசிய மேகமும் நானும்
(ஆமா நீதான் ஆடு,மாடு,கோழி,நாய் எல்லா பாஷையும் படிச்சவனாச்சே மேக பாஷை மட்டும் படிக்காமயா விட்ருப்பன்னு சுசிக்கா கேக்குறா)

தொடர் பதிவா நான் அறிமுகப்படுத்தி பதிவுலகையே வலம் வந்த தேவதையின் வரங்கள்
(அந்த தொடர் பதிவ அனுப்புன மவ ராசன் நீதானான்னு நைனா நற நறன்னு பல்ல கடிக்கிறதான)

பின்பு என்தங்கை பிரியாக்கு நான் எழுதிய சொர்கத்துக்கு ஒரு கடிதம்
(இதுக்கு பதில் கடிதம் எழுதிய தங்கை சந்தியாக்கும் அதை வெளியிட்ட தேவதை இதழுக்கும்,அதை அனுப்பிவைத்த ரம்யாக்காக்கும் நன்றி)

சமையல் விமர்சனம் மாதிரி எழுதிய பிரியாணி - விமர்சனம்
(சினிமா விமர்சனமே படிக்க முடியல இதுல பிரியாணிக்கு வேற விமர்சனமா?ன்னு நவாஸ் சொல்றாரு..)

(மும்தாஜ்தான் கேள்விப்பட்டுருக்கோம் முனிம்மா யாருன்னு கலையரசன் கேட்டாலும் கேப்பான்)

சும்மா கருத்து கந்த சாமி மாதிரி எழுதுன
(நீ திருந்தவே ஆயிரம் கருத்து சொல்லணும் இதுல நீ கருத்து சொல்றியாக்கும்ன்னெல்லாம் கேக்ககூடாது ஆமா..)

பிரபல காதல் கதையாகிப்போன கிட்னாப்
(இந்த இடுகைக்கப்பறம் வர்ற மின்னஞ்சல் ரசிக,ரசிகைகள் தொல்லை தாங்க முடில்லப்பா)

அப்புறமா அப்போ அப்போ கவிதைன்னு கிறுக்குனதுல வந்த ஒரு கிறுக்கல்

இப்போ சொல்லுங்க நான் எழுதுனது எல்லாமே கிறுக்கல்தான...
(போதுண்டாப்பா... உன்னோட சுய புராணத்தை முடிச்சிட்டியாடான்னு பெரு மூச்சு விட்டுட்டீங்கதானே..)நாளைக்கும் அதற்க்கு அடுத்த நாளும் இன்று அளித்த ஆதரவைப்போல் தொடர் ஆதரவளிக்கும் படி கேட்டுக்கிறேன்...
(இன்னைக்கே தாங்க முடியல இன்னும் ஆறு நாளா ஷ்ஷப்பா கண்ணக்கட்டுதே...)

நன்றி நாளைக்கு மீண்டும் சந்திப்போம்...
ப்ரியமுடன்...வசந்த்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது