07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மஞ்சு பாஷினி. Show all posts
Showing posts with label மஞ்சு பாஷினி. Show all posts

Sunday, February 16, 2014

அன்பின் பூ - ஏழாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்


காதல், நட்பு, கணவன் மனைவி  சகோதரம்  எந்த உறவாக இருந்தாலும்  புரிதல் இல்லையென்றாலோ, நம்பிக்கை இல்லையென்றாலோ, ஈகோ இருந்தாலோ ஆட்டம் கண்டுவிடும். வாழ்நாள் முழுவதும் உடன் வரவேண்டிய உறவு இதனால் சந்தேகம் எனும் தீப்பொறியை கிளப்பி அதில் தன்னையும் பொசுக்கி தன்னை நேசித்தவரையும் பஸ்பமாக்கிவிடும். நரகத்தின் குழியில் செல்லத்தான் உறவு இத்தனைப்பாடுப்பட்டு வளர்க்கிறோமா?  சந்தேகத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாவது இருவரோடு முடிவதில்லை.

பிரச்சனை கணவன் மனைவி இருவருக்கும் என்றால் பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமல்லாது எந்த பாவமும் செய்யாத இவர்களுக்கு குழந்தைகளாக பிறந்த ஒரே காரணத்துக்காக இவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தாய் தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறார்கள். எல்லாவற்றையுமே சரி செய்ய நாம் ஒன்றும் மெஜிஷியன் கிடையாது. ஆனால் சரியாக்க முயற்சிக்கலாம்.

நட்பில் பிரச்சனை வருவதால் பாதிக்கப்படுவது பிரச்சனைக்குள்ளான இருவர் மட்டுமல்லாது இவர்களுடன் இருக்கும் மற்ற நண்பர்களும் தான். நீ ஏண்டா அவனோட பேசினே? நான் தான் அவனை ஒதுக்கி வெச்சிருக்கேன்னு தெரியும்ல? இருதலைக்கொள்ளி எறும்பாய் படும் அவஸ்தை உடன் இருப்போர்களுக்கு ஏற்படுகிறது.

அதேபோல் மாமியார் மருமகள் பிரச்சனையில் மத்தளத்துக்கு இருப்பக்கமும் அடி என்பது போல மிதிபடுவது  மகனாகவும் கணவனாகவும் டபுள் ரோல் செய்யும் ஆண். இப்படி எல்லாம் ஏற்படாமல் தடுக்க நம்மால் இயலாது என்றாலும் பிரச்சனையின் காரணகர்த்தாவாக நாம் இருக்கவேண்டாம்.

கல்யாணம் செய்துக்கொண்டு ஒரு பெண் வீட்டுக்கு வந்தால்  எங்கே நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என்ற எண்ணத்திலேயே மாமியார் மிரள ஆரம்பிக்கும்போது அங்கே மருமகள் செய்யும் எந்த ஒரு செயலையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கவைக்கும். பெண் தன்னைச்சார்ந்த எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி புது இடத்தில் நட்டச்செடி போல் பற்றிக்கொண்டு வளர சமயம் பிடிக்கலாம் அதுவரை பொறுமையாக வீட்டுக்கு வரும் மஹாலக்‌ஷ்மி மருமகளாக அல்லாது மகளாக நினைத்து அணைத்துக்கொண்டு போனால் கண்டிப்பாக பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு.

அதே போல் திருமணம் செய்துக்கொண்டு புருஷனின் வீட்டில் அடி எடுத்து வைக்கும் பெண் அங்கே இருப்பது மாமியார் மாமனார் என்று நினைக்காமல் தோழமையான அன்பை தர முன்வரவேண்டும். பெரியவர்கள் எது சொன்னாலும் நம் நன்மைக்குத் தான் என்ற நம்பிக்கை வரவேண்டும். தன்னைப்பெற்ற அம்மா அப்பா உரிமையோடு திட்டினால் பொறுமையாக கேட்டுக்கொள்ளும் பெண் அதுவே மாமியார் மாமனார் திட்டினாலோ அறிவுரைச்சொன்னாலோ என்னவோ தன்னை குற்றக்கூண்டில் நிற்க வைத்தது போல் நினைக்காது அம்மாவைப்போல அப்பாவைப்போல நினைத்து அனுசரித்துச்சென்றால் நல்லப்பெயர் எடுப்பது மாமனார் மாமியாரிடம் மட்டுமல்ல தாலிக்கட்டிக்கொண்டு வந்த கணவனிடமும் தான்.

மாலை வேலை விட்டு வரும் கணவன் எந்த மூடில் வருகிறார் என்று தெரியாமல் ரெடியாக சொல்ல புகார்களோடு காத்திருக்காமல் வந்த புருஷனை உட்காரவைத்து குடிக்க காபி கொடுத்து பின் சாவகாசமாக அமைதியான மனநிலையோடு பேசினால் ஆபிசு டென்ஷனோடு வரும் கணவன் கூட செருப்போடு ஆபிசு பிரச்சனைகளையும் கழட்டி வெச்சுட்டு வீட்டுக்குள் வருவான் என்பது உறுதி.
இப்ப திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களில் பலருக்கு சமையலே தெரிவதில்லை. அதனால் ஜங்க் ஃபுட்டும், பீட்சாவும் ஹோட்டலும் என்று காசை கரியாக்குவது மட்டுமல்லாது வயிற்றுக்கும் கேடு வாங்கிக்கொள்கிறோம் என்பதே உண்மை.  கணவன் மனதில் இடம் பிடிக்க எளிமையான வழி வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டு இனிமையான வார்த்தைகளைப்பேசி வாழ்க்கையை அற்புதமாக்கலாம்.

அதே போல் திருமணம் செய்துக்கொண்ட ஆணும் தன்னை நம்பி வரும் பெண்ணை அன்போடு அவள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டி உதாரணத்துக்கு சமைத்து கொண்டு வந்து கொடுக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால்  அதைப்பற்றி சொல்லி மனம் வருந்த வைக்காமல்  உன் கைப்பட்டால் எல்லாமே இரண்டு மடங்கு சுவை கூடிப்போவதென்னவோ உண்மை தான். அதற்காக உப்பு இரண்டு மடங்கு போட்டால்  எப்படிம்மா என்று சிரித்துக்கொண்டு அமைதியாக சொன்னால் தன் தவற்றை உணர்ந்து  அடுத்த முறை சமைக்கும்போது உப்பு மட்டுமல்ல செய்யும் எந்த ஒரு சின்ன வேலையைக்கூட கவனமாக செய்ய முற்படுவாள் மனைவி.

பிள்ளைகளை  பெற்றோரில் அம்மா கண்டிக்கும்போது அப்பா உட்புகாமல் அப்பா கண்டிக்கும்போது அம்மா உட்புகாமல் இருக்கவேண்டும். ஆனால் அதுவே வீட்டுக்க் நண்பர்கள் உறவினர் யாரேனும் வரும்போது அவர்கள் எதிரே பிள்ளைகளை கண்டிப்பது பிள்ளைகளை வருத்தமுறச்செய்யும்.  பலர் முன்னிலையில்  பிள்ளைகள் செய்த நற்செயலை பாராட்டிச்சொல்லுங்கள். நல்லவிஷயங்களை பாசிட்டிவாக எடுத்துச்சொல்லுங்கள்.  ஆனால் கண்டிக்கும்போது தவற்றை திருத்த முற்படுவது  தனியே இருக்கட்டும்.



 மனம் கவர் பதிவர்களின் பதிவை பார்ப்போமா?

அருமையான போட்டி ஒன்றை நடத்தி பரிசுகள் அறிவித்து படைப்புகளையும் வெளியுட்டள்ளது இந்த வலைப்பூ. பரிசுப்பெற்றோருக்கும் பங்குப்பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகள்.

குழந்தையின் மன்றாட்டை ரொம்ப அழகா கவிதையில் எழுதி இருக்காங்க.

வலைப்பதிவர் தம்பதிகள் திரு மது கஸ்தூரி ரங்கன், திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் இருவரையும் சந்தித்ததை மிக அருமையா பகிர்ந்திருக்கிறார்.

தன்னுடைய முதல் கணிணி அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இலவச யோகாவின் பயனை அழகாக பகிர்ந்திருக்கிறார்.

தெரியாத விஷயங்கள் பகிர்ந்து உதவுகிறார் நமக்கு.

கணிணி இல்லையா கால்நடை தான் அப்படின்னு சொல்றாங்க.

மருந்தில்லா மருத்துவம் பற்றி ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க.

பரமரகசியம் ஒரு அற்புதமான தொடர் எழுதுகிறார்.

புத்தகங்கள் படிப்பது எத்தனை சுவாரஸ்யமான பொழுதுப்போக்கு என்று சொல்கிறார்.

கண்ணனை நேசிக்காதவரும் உண்டோ? காணமலே கண்ணன் மேல் கொண்ட காதலை அருமையா சொல்லி இருக்கார்.

எளிய வரிகளில் எதார்த்தமான கதைகளை சொல்வார் இவர்.

எல்லோரும் ஏற்கனவே படிச்சது போல் இருந்தாலும் மீண்டும் படிச்சுப்பார்த்தால் மனம் நெகிழ்வதை தடுக்க இயலாது.

பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி வாழ்வில் ஒரு ஸ்ரீராகம்னு சொல்லி ஒரு பதிவு போட்டிருக்காங்க.

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும்னு சொல்றார்.

கற்பனையா என் கவிதை என்று கேட்கிறார் கவிதையில்.

முத்த யட்சன் தலைப்பில் சுவாரசியமான கவிதை ஒன்று இங்கே.

சிவலயனை அடக்கப்போகிறவர் யார்னு கேட்கிறார்.

தன்னம்பிக்கை இருந்தால் தரணியை ஆளலாம் என்கிறார்.

அனிமேஷன் பற்றி ரொம்ப அருமையான தொடர் எழுதி இருக்கார்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதனால் என்னாகும் என்று சொல்லி இருக்கார்.

வாழும் வரை போராடச்சொல்கிறார் அருமையான கவிதை வரிகளில்.

எழுத்தாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது எப்படின்னு எழுதி இருக்கார்.

சாருநிவேதிதா வட்டம் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதையை பகிர்ந்திருக்கிறார் இங்கே.

அறமே கொல்லும் என்று சொல்கிறார் கவிதை வடிவில்.

வலியோடு கலையும் கனவுப்பற்றி கவிதையில் சொல்லி இருக்கிறார்.

அறிவியல் பகிர்வு அசத்தலான தொடர் இந்த வலைப்பூவில்.



எத்தனையோ ஜாம்பவான்கள் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிநடைப்போடும் வலைச்சரத்தில் 3000 - வது பதிவு பதிய வாய்ப்பளித்த வலைச்சரக்குழுவுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள். இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பெருகி வலைச்சரம் வெற்றியின் பாதையில் சென்றிட மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். எல்லோரின் உழைப்பும் ஒற்றுமையும் தனித்தன்மையும் ஊக்குவிப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். 

7 நாட்களும் என் உடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும்…
என் பேரை இரண்டாம் முறை பரிந்துரைத்த கோபு அண்ணாவிற்கும்

கோபு அண்ணா பரிந்துரை செய்த நபர் கண்டிப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை நல்லமுறையில் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்த சீனா அண்ணாவுக்கும்

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததுமே பிளாக்கில் எழுதியே பல நாட்கள் மாதங்கள் வருடங்கள் ஆன நிலையில் எப்படி என்று விழி பிதுங்கி திண்டுக்கல் தனபால் சாரிடம் உதவிக்கேட்டதும்  உடனே லிங்க் அனுப்பி என்னை நிதானமாக்கியது மட்டுமல்லாது  நான் 7 நாட்களும் அறிமுகப்படுத்திய நண்பர்களின் வலைப்பூவுக்கு சென்று தகவல் தெரிவித்த தனபாலன் சாருக்கும்

இடைவிடாமல் 7 நாட்களும் கருத்து எழுதி என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கும்
எல்லோருக்கும்  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…

அடுத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றுக்கொள்ளும் நண்பருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.









மேலும் வாசிக்க...

Saturday, February 15, 2014

அன்பின் பூ - ஆறாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
இப்பவும் ராத்திரி குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்கவைக்கும் பழக்கம் எங்காவது இருக்கிறதா?  ஆமாம் என்றால் அந்த குழந்தை கண்டிப்பாக சிறு வயதில் இருந்தே க்ரியேட்டிவிட்டியோடு நல்ல பண்புகளும் புத்திக்கூர்மையுமாக வளரும் என்பது கியாரண்டி. அப்படின்னா கதைக்கேட்காத பிள்ளைகள் எல்லாம் கெட்டுப்போகும் பிள்ளைகளா என்று கேட்கக்கூடாது. பிள்ளைகள் சிறுவயதில் நாம் சொல்லும் கதைகளை விஷனாக்கி கண்முன் ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு ராஜா ராணி டைனோசர்  இப்படி நாம் சொல்லும் கதைகளின் கதாப்பாத்திரத்தை கண்முன் கொண்டு வந்து களிக்கும். கதையின் முடிவில் நாம் சொல்லும் மாரல் ஆஃப் த ஸ்டோரி கண்டிப்பாக குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்கும். நல்ல பண்புகள் சொன்னால் புரிந்துக்கொள்ள வயதில் இல்லாத குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுகிறோம்? அமுதுடனா? இல்லை நல்ல கதைகளுடன். நாம் நல்ல கதைச்சொல்லியாக இருந்தால் பிள்ளைகள் அதைவைத்து இன்னும் அட்வான்ஸ்டாக செயல்படும் புத்திக்கூர்மையை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட வெளியே விட்டால் குழந்தைகள் அழுக்காக வரும் என்று விளையாட விடுவதில்லை ஒருசில பெற்றோர் குழந்தைகளை. விளையாடினால் குழந்தைகளுக்கு மெமரி பவர் அதிகரிப்பதாக நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதோடு மட்டுமல்ல. தோழமை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படும். அதை விட்டு வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு கம்ப்யூட்டர், ஐபோட் லேப்டாப் முன்பு குழந்தைகள் கேம்ஸ் ஆடிக்கொண்டு வளர்ந்தால் மூளை மழுங்கித்தான் போகும் குழந்தைகளுக்கு.



இன்றைக்கு ஒரு சிலரை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பார்ப்போமா?


1. வே.நடனசபாபதி
அனுபவங்கள் இங்கே பதிவாகி அருவிகள் படங்களாகி இருக்கிறது.

2. சீனி கவிதைகள்
சீனி கவிதைகள் இங்கு சீரிய பதிவுகள் ஆனது.

3. அருணாசெல்வம்
காதல் திருநாளில் இவர் எழுதிய அழகு கவிதை.

4. நிஜாம் பக்கம்
மாறிவரும் உணவுவகையையும் மடிந்துவரும் ஆரோக்கியம் பற்றி எழுதி இருக்கிறார்.

5. அதிரா
அதிராவின் கைவண்ணம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய வலைப்பூ.

6. சென்னைப்பித்தன்
நான் பேச நினைப்பதெல்லாம் என்று சொல்லி முகமூடி வாழ்க்கைப்பற்றி எழுதி இருக்கிறார்.

7. கவிதை வீதி
இவர் படும் அவஸ்தையை ரொம்ப அழகா கவிதையா எழுதி இருக்கார்.

8. நிலாமகள்
செவிப்பறை கவிதையின் வரிகள் உரத்த உரைக்கும் உண்மை.

9. தமிழ் மயில்
பிரபல எழுத்தாளர் இந்துமதியின் எழுத்துப்பயிற்சிப்பற்றி ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க.

10. சமையல் அட்டகாசம்
சமையல் கலாட்டா என்று பெயருக்கு மட்டுமல்ல உள் நுழைந்துப்பார்த்தால் கலாட்டாவே தான். ஆனால் இனிய கலாட்டா.

11.  ஸ்ரவாணி
மார்கழிக்கோலங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ள வைக்கிறது.

12. இமாவின் உலகம்  , அறுசுவை  
நம்மை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் தன் உலகிற்கே.

13. வீடு திரும்பல்
ரசனையான சினிமா விமர்சனம் எழுதி இருக்கார்.

14. ராதாஸ் கிச்சன்
சமையல் பக்குவமும், மருத்துவமும் , வீட்டுக்குறிப்புகளும் பொக்கிஷமாய் இருக்கிறது இங்கே.

15. கோவை டு தில்லி
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்க புரிதல்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொன்ன கருத்துகள் தங்க மங்கை இதழில் வெளி வந்திருக்கிறது. அன்பு வாழ்த்துகள் ஆதி வெங்கட்.

16. சிவகுமாரன் கவிதைகள்
சொல்லாடல் நிறைந்த அழகிய கவிதைகளுடனான வலைப்பூ.

17. தமிழ்வாசி
மெக்கானிக்கல் துறையினருக்கான பயனுள்ள தொடர்.

18. முனைவர் குணசீலன்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்கிறார்.

19.  நீரோடை
துரோகியாகும் தோழமைகள் பற்றிய அருமையான கவிதை ஒன்று.

20.  வானவில் மனிதன்
தத்த்தி அப்டின்னு அழுத்திச்சொல்லி ஒரு கதை எழுதி இருக்கார்.

21. மகிழம்பூச்சரம்
மீனாட்சியின் பிரியாவிடை ப்ரியங்களை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.

22. மாயவரம் குரு
மஹா பெரியவாளுக்கு ஒரு கவிதை.

23. காகிதப்பூக்கள்
வாழ்த்து அட்டைகள் எல்லாமே இவரின் கைவண்ணம்.

24. சங்கவி
பேயும் நண்பர்களும் பற்றி அருமையா எழுதி இருக்கிறார்.

25. ஹரணி பக்கங்கள்
அலைகிற மனதைப்பற்றி கவிதை இயற்றி இருக்கிறார்.

26. ராஜப்பாட்டை
இந்த பகிர்வை படித்தால் மனம் உருகும் உண்மை.

27. கோவை நேரம்
மாஹி புதுச்சேரி பற்றிய ஒரு புதுப்பார்வை.



இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்கள் சேர்க்கட்டும். அன்பு நன்றிகள்.

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களோடு சந்திப்போம்.







மேலும் வாசிக்க...

Wednesday, February 12, 2014

அன்பின் பூ - மூன்றாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்..

” உன் கூட படிக்கிற மாறன் நல்லா தானே படிக்கிறான் வகுப்புல முதல் மார்க் வாங்கறான். அவன் நல்லா படிக்கும்போது உனக்கு மட்டும் படிக்காம புத்தி எங்க போகுது? படிப்புல மட்டும் பாரு கல்லுளி மங்கன் மாதிரியே. எப்பப்பார்த்தாலும் டிவி டிவி டிவி” இது மாதிரி நிறைய வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பா கிட்ட டோஸ் வாங்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.  குழந்தைகளை டிவி பார்க்காதே என்று சொல்லும் நாம் தொலைக்காட்சியில் வரும் தொடர் ஒன்று கூட விடாமல் பார்க்கிறோம். நம் பக்கத்தில் படிக்க உட்காரும் குழந்தைகளின் கவனம் நாம் பார்க்கும் தொடரிலேயே இருக்கும். 

அப்புறம் எப்படி குழந்தைகள் மட்டும் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வரனும்னு நாம் எதிர்ப்பார்க்க முடியும்? அதேப்போல் எல்லாக்குழந்தைகளின் பெற்றோரும் ஆசைப்படும் ஒரே விஷயம் நம்மக்குழந்தை க்ளாஸ் ஃபர்ஸ்ட் வரும்னு. இப்படி பிள்ளையை கட்டாயப்படுத்தி படிக்கவைப்பதை விட பிள்ளைகள் அவர்களே படிப்பை விரும்பி படிக்கும்படியாக நாம் அவர்களுக்கு வழிக்காட்டிவிட்டாலே போதும். மாலை நேரம் விளையாட என்று ஒரு மணி நேரம் விட்டால் குழந்தைகள் நன்றாக ஓடி ஆடி விளையாடும். உடலுக்கும் வலு சேர்க்கும். புத்திக்கூர்மையும் அதிகமாகும். நினைவுத்திறனும் கூடும். 

அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பி உட்காரவைத்து சத்தமாக படிக்கச்சொன்னால் உச்சரிப்பு நன்றாக வரும். தூக்கம் கண்ணு சொக்குமே புள்ளைக்கு அப்டின்னு நீங்க சொல்றது புரியுது. அதுக்கென்ன செய்யலாம்? இரவு 9 மணிக்கே பிள்ளைகளை படுக்க வைக்கவேண்டும். முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை தானே? வயதில் பெரியவர்களைக்கண்டால் உடனே அவர்கள் கால் தொட்டு நமஸ்காரம் செய்யச்சொல்லி என் பிள்ளைகளை பழக்கினேன் சிறுவயதில் இப்போதோ யார் வந்தாலும் இல்லையென்றால் நாங்க யார் வீட்டுக்கு சென்றாலும் என் பிள்ளைகள் தவறாமல் செய்கிறதுகள். பிள்ளைகளை  அன்பும் பண்பும் நிறைந்தவர்களாக உருவாக்க நாம் தான் பாடுபடவேண்டும்.


என் மனம் கவர் பதிவர்கள் பதிவுகள் சிலவற்றை இன்று பார்ப்போமா?

முதன் முதல் வலைப்பூவில் கருத்து எழுதத் தொடங்கியதே ரமணி சார் வலைப்பூவில் தான். எளிய வரிகளில் ஆழ்ந்த கருத்துடன் பதியும் கவிதைகளின் சொந்தக்காரர்.

சுறுசுறுப்பும் நகைச்சுவையும் சோம்பலின்மையும் நேரம் தவறாமையும்  இவர் இடும் ஒவ்வொரு பதிவில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். தொடர்ச்சியாக 5 பதிவுகள் இட்டுவிட்டால் சோம்பலோ அயற்சியோ ஏற்பட்டு ஒருப்பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வேலை கவனிக்க போய்விடுவேன். ஆனால் கோபு அண்ணாவின் ஒவ்வொரு பதிவும் அவரின் உழைப்பைச்சொல்லுகிறது.  திடிர்னு ஒரு ஃப்ளையிங் விசிட் கொடுத்தபோதும்  கொஞ்சம் கூட சிரிப்பு மாறாமல் அன்புடன் குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் பேசினர்.

எழுத்துகளில் அனுபவம் ஒளிரும். இவர் எழுத்துகளில் பலமுறை நான் அமிழ்ந்து மீண்டதுண்டு. அட இந்தப்பிள்ளை எழுதுற பதிவெல்லாம் அற்புதமா இருக்குப்பா. ஆமாம் அற்புதமான பதிவுகளின் சொந்தக்காரர். எளிமையின் மறு உருவம். புன்னகைப்பூ பூத்துக்கொண்டே இருக்கும் இவர் முகத்தில். இவரின் ஜ்வல்யா பதிவுகள் செம்ம க்யூட்..

என்னை பிரமிக்கவைத்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர் இவர். ஒன்றும் தெரியாதுன்னு சொல்வார். நம்பிடவே கூடாது. அசத்தலா எழுதி வாசிப்போரை வியக்கவைக்கும் வித்தகர். 

தனக்கு மிகவும் பிடிச்சதெல்லாம் தேடி தேடி அழகாய் பொக்கிஷம் போல் சேமித்து வைப்பார். வயசென்னன்னு மட்டும் கேட்ராதீங்க? சரி ரகசியமா வெச்சுக்கோங்க. இவர் வயசு 10 தான். ஆமாம் இவரோட போன்ல பேசும்போது உற்சாகமா பேசிக்கொண்டே இருப்பார். நிறைய விஷயங்களை பகிர்வார். அத்தனையும் ரசனையான பதிவுகளாக இருக்கும்.

சளைக்காமல் அருமையான நாடகங்களை பதிவுகளை பகிர்வாய் தந்தவர். என்றோ எழுதிய எழுத்துகளை இன்றுவரை நினைவுக்கூர்ந்து பதிவுகளால் வியக்கவைத்தவர்.

நகைச்சுவையாய் பதிவுகள் பகிர்வதில் வல்லவர். அதரகளம் பண்ணுவார்.

உலக விஷயங்களை நம்மிடம் சுவையாக ரசிக்கும்படி பகிர்வார். அதில் பிரத்யேகமாக ஃப்ரூட் சாலட் எனக்கு மிகவும் பிடித்த பகிர்வு. செல்லுமிடத்தில் எல்லாம் பயணத்தை படங்களுடன் இணைத்து எழுதுவார். நாமும் உடன் பயணிப்பது போன்றதொரு உணர்வு இருக்கும் இவர் பதிவுகள் படிக்கும்போது. அசத்தலான புகைப்படங்கள் எடுப்பதில் வல்லவர். இன்னும் நேரில் சந்திக்கவில்லை.

தித்திக்கும் தமிழில் இனிமையான கவிதைகள், சமூக சிந்தனை கவிதைகள் என்று அசத்தும் அப்பாவின் வலைப்பூ.. உடல்நலம் சரி இல்லை என்றாலும் பதிவுகள் பதிவதில் என்றும் தொய்வு இருந்ததே இல்லை.

உலக நடப்புகளை அவர்களுக்கே உரிய ரசனை எழுத்தில் பகிர்வார்கள். எனக்கு இதில் மிகவும் பிடித்த பகுதி பாசிட்டிவ் செய்திகள்.

அரிய விஷயங்களை அறியத்தரும் எழுத்துகளின் வலைப்பூவுக்கு சொந்தக்காரர் இவர். கணித மேதை இராமானுஜம் தொடர் பதிவு இவருடையது படிக்கும்போது நேரில் நிகழ்வுகள் எல்லாமே பார்த்த உணர்வு.

இனிய தமிழ் மணக்கும் பதிவுகள் நிறைந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரர். 

கேட்டால் உதவி செய்வோரை நல்லவர் என்கிறோம். கேட்காமல் உதவிடும் நல்ல உள்ளத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தனபாலன் என்று வைப்போமா? மென்மையான குரலுக்கும் எல்லோருக்கும் பயன் தரும் பதிவுகளையும் பகிர்வதோடு மட்டும் நின்றுவிடாமல்  வலைச்சரத்தில் யார் ஆசிரியராக பொறுப்பேற்று அறிமுகப்படுத்தினாலும் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களின் தளத்திற்கு சென்று “ தங்கள் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லி லிங்கும் தருவார் “ மேன்மையான உதவி இது. எதையும் எதிர்ப்பாராமல் செய்யும் சேவை இது. நிறைவான அன்பு நன்றிகள் தனபாலன் உங்கள் சேவை என்றும் தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும்பா..

குட்டி குட்டியான எளிய கவிதைகள் மூலம் அருமையான மெசெஜ் சொல்வார். டி என் பி எஸ் சி வகுப்புத்தேர்வுக்கான பயனுள்ள பதிவுகளை தந்தவர். அருமையான பதிவு எங்கிருந்தாலும் அதைத் தேடி எடுத்து பகிர்வார். உதவும் மனப்பான்மைக்கொண்டு நல்ல மனம் கொண்டவர். குட்டித் தேவதையின் சாம்ராஜ்ஜியத்தில் இவரும் ஒரு அங்கம். இவரின் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு நான் கொடுத்திருக்கும் லிங்க்.

கவிதையிலேயே அழகு தோரணம் கட்டும் கலைஞன் தம்பி மகேந்திரன். வசந்த மண்டபம் உள் நுழைந்தால் கருத்துகள் சொல்லும் பல கவிதைகள் அங்கு காணலாம்.

முகநூலில் இவருடைய ரெண்டு வரில உலக விஷயங்கள் அடக்கும் வித்தையை ரசிப்பேன் நான். அவர் தானா இவர்னு போய் பார்த்தேன் இவர் தளத்தை. என்னை ஏமாற்றவில்லை.

எழுத்துகள் இவர் பதிவில் வீறுநடை போடுவதை நான் பார்த்திருக்கிறேன். யாருக்காகவும் எதற்காகவும் தன் எழுத்துகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காத மனம் விரும்பிய வலைப்பூவுக்கு சொந்தக்காரர்.

இவர் என்னை விட வயசுல மூத்தவராய் போயிட்டார். இல்லன்னா நான் இவரை சொல்ற வார்த்தை என்னவா இருக்கும் தெரியுமா? சேட்டக்காரப்பைய. இவர் அருகே அமர்ந்து இவர் பேசினதை இப்பவும் நினைச்சுப்பார்த்தால் அத்தனை எனர்ஜடிக்கா பேசுற மனுஷர். இடைவிடாம சிரிக்க வெச்சுட்டே இருப்பார் இவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தால். நானும் அப்டித்தான். அதே சமயம் இவரிடம் தயிர் சாதம் கொடுத்து சாப்பிடுங்கன்னு சொன்னால் அதையே ரசனையான பதிவாக்கி போட்ருவார் அசகாய சூரர். இவர் வலைப்பூவுக்கு சென்றால் வெளிவரவே மனசு வராது. எப்பப்பா மீண்டும் சந்திப்போம் நாம்? அப்பவும் தயிர்சாதம் தான்.. டீலா??

19.  மின்னல் வரிகள்
க்ளாஸ்ல உட்காரவெச்சு பாடம் சொல்லிக்கொடுத்தா சமர்த்தா உட்கார்ந்துண்டு படிக்கிற மாதிரியே இருக்கும் நேர்ல பார்த்தா. பதிவு எழுதும்போது பார்க்கணுமே உலக ஞானம் அத்தனை அருமையா வரிகளில் தென்படும். கணேஷா என்று அன்புடன் நான் அழைக்கும் என் அன்புச்சகோதரன்.

குறும்பும் நையாண்டி நக்கலுமாக இவர் பதிவுகள்  மனம் ரசிக்க வைக்கும் கண்டிப்பாக 

21.  நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை
குழந்தையின் மழலைமொழியில் நம்மை பெயர் சொல்லி அழைப்பதில் இருக்கும் சுகத்தை என்ன ஒரு அழகா சொல்லி இருக்கார் பாருங்க தோழர் இரா எட்வின்

நிதான வாசிப்பு ஒரு கலை என்று சொல்கிறார் ஐயா டாக்டர் ஜம்புலிங்கம் அவர்கள். படிச்சு பாருங்களேன்.

பூதத்திடம் புடிச்சுக்கொடுத்துருவேன்னு ஒரு பதிவு எழுதி இருக்கும் இவரை கண்டிப்பா நீங்க யாருமே மறந்திருக்கமாட்டீங்க.  நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்திய தளிர் சுரேஷ் தான்பா இவர்.

இவர் பதிவில் நான் எடுத்ததுமே முதலில் பார்ப்பது சாப்பாட்டுக்கடை. ஊருக்கு போகும்போது இவர் சொன்ன இடங்களில் போய் சாப்பிடவேண்டும் என்று நினைப்பதுண்டு. அதே போல் இவருடைய பதிவில் நான் ரசித்து வாசிப்பது விமர்சனம். 

பிள்ளைகளின் திறமையை வெளிக்கொணர்ந்து அதைப்பாராட்டி ஊக்கப்படுத்தும் தளம் இது. திண்டுக்கல் தனபாலன் சார் சொல்லித்தான் இந்த தளம் எனக்கு தெரிய வந்தது.

வை.கோ அண்ணா பதிவுகள் மூலம் தான் இவர் வலைப்பூவுக்கு முதன் முதல் வருகைத் தந்தேன். மிக அருமையான விஷயங்களை எளிமையாக எடுத்துச்சொல்வதில் வல்லவர்.

நையாண்டிக்குன்றாமல் பதிவுகளில் கருத்து சொல்லி நகைச்சுவையோடு எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர் மதுரைத்தமிழன். தன் எழுத்துகளை யாருக்காகவும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளாதவர். வாழை இலைப்பற்றிய ஒரு பதிவு நான் இவர் வலைப்பூவில் படித்து இவர் எழுத்துகள் விருப்பமானது எனக்கு.

மீண்டும் நாளை சந்திக்கும்வரை அனைவருக்கும் அன்பு நன்றிகள்.

மேலும் வாசிக்க...

Tuesday, February 11, 2014

அன்பின் பூ - இரண்டாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்..


இயந்திர வாழ்வில் எழுந்தோமா குளித்தோமா வேலைக்கு ஓடினோமா மாலை வீட்டுக்கு வந்தோமா டிவி ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சேனல்களை மாற்றிக்கொண்டே மணியாகிவிட்டதா சாப்பிட்டு படு… என்று ஓடிக்கொண்டிருக்கும் இதில் இருந்து விடுப்பட்டு நம்மை நாமே ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள, நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள, ஆங்காங்கே காணும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடிப்பது போல் மனதில் பதிய… மனதில் பதிந்ததை எழுத்தாகவோ கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ… இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டு, நமக்கு பிடிச்ச சமையலை செய்து சாப்பிட்டு, குழந்தைகள் படிப்பை அருகிருந்து கவனித்து, வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் வாய்க்கு சுவையான பலகாரங்களை செய்துக்கொடுத்து அவர்கள் பேசும்போது உட்கார்ந்து கேட்டு… இப்படி நிறைய நிறைய….. அவசர வாழ்வில் இதை எல்லாம் இழக்கிறோமா? இல்லை என்று தான் சொல்வேன். எப்டின்னு கேட்கிறீங்களாப்பா? வலைப்பூவில் அசத்தலான பதிவுகள் போட்டு வாசகர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் என்மனம் கவர் பதிவுகளைப் படித்துப்பார்த்ததால் தான் இப்படி சொல்கிறேன்.


இன்றைய பதிவர்களின் பதிவுகளை பார்ப்போமா?


           1.      கண்ணன் வருவான்  
கண்ணனைப்பற்றி மனமுருகி பல வருடங்களாக அன்புத்தோழி கீதா எழுதும் தொடர் படிக்க படிக்க இனிமை.

ஆன்மீகப்பயணத்தில் பல்லாயிரம் மைல்கள் கடந்த அன்புத்தோழியின் இந்த வலைப்பூ எல்லோரையுமே கோயிலுக்குள் கர்ப்பக்கிரஹத்தினுள் அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைக்கும் அற்புதமான வலைப்பூ.

கதை, கவிதை, கட்டுரை, சமையல் என்று அசத்தும் அன்புத்தோழி தேனம்மை லட்சுமணனின் வலைப்பூவில் எப்போதும் ருசிகரமான தகவல்களுடன் இருக்கும்.

அழகுத்தமிழில் மனதை கொள்ளைக்கொள்ளும் கவிதைகள் எத்தனை எழுதினாலும் அதை வாசிக்கும்போது அலுப்பதே இல்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் பிரமிப்பில் இருந்து மீள சமயம் எடுக்கும் எனக்கு.. அத்தனை அழகான கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.

முத்துப்பல்வரிசை புன்னகையரசி அநன்யாவின் பதிவுகள் எது படித்தாலும் கண்டிப்பா சிரிச்சுட்டே இருக்கலாம். அத்தனை க்யூட் பதிவுகளின் சொந்தக்காரி… இவர் எழுதிய மை மதர் தெரெசாவின் பைக் மெமரீஸ் ஒரு துளி.

மனதில் தோன்றும் நேர்மையான சிந்தனைகளை தைரியமாக முன்வைக்கும் அற்புதமான பெண் ஆயீஷாஃபாரூக் என் அன்புச்சகோதரி. இவரின் கவிதைகளில் மன உணர்வுகள் தத்ரூபமாக இருக்கும்.

7.          சந்திரகௌரி
இனிய தமிழில் கதைகளாலும் கவிதைகளாலும் மனம் கொள்ளைக்கொண்ட எழுத்துகளின் சொந்தக்காரர் என் அன்புத்தோழி.

எந்த ஒரு நிகழ்வினையும் சுவாரஸ்யமாக சொல்லிச்செல்லும் அன்புத்தோழியின் எழுத்துகள் நிறைந்த வலைப்பூ.

குறைவில்லாத நிறைவான பதிவுகளைப்பகிரும் வலைப்பூக்கு சொந்தக்காரர். அமைதியான எளிமையான அன்பு மனம் கொண்டவர்.

ரசனையான பதிவுகளின் சொந்தக்காரர் மனோ ஸ்வாமிநாதன் அவர்கள். இவர்களின் வரைதலும், சமையல் கலையும் எனக்கு மிகவும் விருப்பமானவை. இவரின் வலைப்பூ கதைகளால், நிகழ்வுகளால், சமையல்கலையால் நிறைந்து இருக்கும் எப்போதும்.

1.      தாய்மையின் கருணையுடன் குறும்புகளுடன் புகைப்படத்தில் மலரும் நினைவுகளுடன் சோலையாக இருக்கும் வல்லிம்மாவின் வலைப்பூவை நான் பார்க்கும்போதெல்லாம், என் மனதுக்கு மிக்க நெருக்கமானவர் வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்படும் எனக்கு.

      சொக்கவைக்கும் தமிழால் வசப்படுத்தி வரிகளை அனாயசமாக பாட்டெடுத்து முத்தாய் பாடும் முத்தழகி அம்பாளடியாளின் வலைப்பூ முழுக்க இனிமையான சந்தம் அமைத்த பாடல் வரிகளால் நிறைந்திருக்கும். எனக்கும் ஒருமுறை அசத்தலாய் பாடியும் காண்பித்தார் என் அன்புச்சகோதரி தொலைப்பேசியில்.

சுவையான சமையல் மட்டுமல்ல, ஒரு விஷயம் எடுத்தால் அதில் ஆழ்ந்து அதைப்பற்றிய விவரங்களும் விரிவாகத்தருவதில் வல்லவர் இவர். இவர் வலைப்பூவில் பார்த்தாலே தெரியும்.
   
வீசும் தென்றலில் வருடும் கவிதைகளாய் இருக்கும் சசியின் வலைப்பூவில். பழகும் தன்மையில் இனிமை. அமைதியான எளிமை. எழுதும் கவிதைகளைப்போலவே புன்னகையின் பூ... எனக்காக தயிர்சாதம் சாப்பிட்ட தங்கக்கட்டி.

1.      கற்பனை வளத்துடன் நிகழ்வையும் கலந்து எளிமையான வரிகளில் சொல்லி நகைச்சுவையிலும் அசத்தும் இவர் மிடில் கிளாஸ் மாதவி.
  
மழலைக்கவிதையிலும் இலக்கணத்திலும் கருத்துகளிலும் கட்டுரையிலும் அசத்தும் இவர் மனதுக்கு வயது 16 தான். இனிமையான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.

கலகலப்பான எழுத்துகளின் ஆளுமையில் குழந்தைக்கவிதையின் இனிமையில் தாலாட்டில் இப்படி பலவித கவிதைகளுக்கு சொந்தக்காரர் என் இனிய அன்புத்தோழி கீதா.

கருத்தும் இனிமையும் கொண்ட எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். எளிமையானவர். இன்முகம் கொண்டவர். 

குட்டி குட்டி நிகழ்வுகளைக்கூட ரசனையாக சொல்லும் இயல்பான எழுத்துகளுக்கு சொந்தமானவர் அப்பாவி தங்கமணி. ஒரே ஒரு முறை இவர் வீட்டில் இட்லி மிளகாப்பொடி போட்டு சாப்பிடனும். அனன்யா என்னிக்கோ சொன்னதுப்பா…

வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் அதோடு வீட்டை மாத்திப்பார்னு சொல்லும்போதே தெரிகிறது இதில் இருக்கும் அவஸ்தைகள் எத்தனைன்னு. ரீசண்டா நாங்களும் அனுபவப்பட்டுட்டோமுல்ல.

இவர் பதிவுகளுக்கு நான் என்றும் ரசிகை. நேர்ல பார்த்தபோது அமைதியாக அன்பு மனதுடன் எங்களிடம் பேசியது இன்றும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை கண்டிப்பா அதிக நேரம் உங்க வீட்டில் இருப்போம்பா..

வாயில் நீர் வரவைக்கும் அருமையான சமையல் பதிவுகளை பகிர்ந்து அசத்துவார் இவர்.

தொலைப்பேசியில் பேசினாலோ அல்லது நேரில் பார்த்தாலோ இடைவிடாமல் சிரிக்கவைக்கும் அன்புத்தோழி ராஜியின் பதிவுகள் சொல்லும் கருத்து ஏராளம். அத்தனையும் பயனுள்ளது.

   பதிவுகளில் மேன்மை, ஒன்றுமே தெரியாது என்றுச்சொல்லி எத்தனையோ கருத்துகளைச்சொன்ன பதிவு. இப்படி நிறைய பதிவுகள் இவருடையது சொல்லிட்டே போகலாம். இவரை நேரில் பார்க்கமுடியாமல் மிஸ் பண்ணிட்டாலும் போனில் பேசிக்கிட்டோமே நாங்க ரெண்டுப்பேருமே.

எழுத்துகளின் தோரணங்களில் நம்மை வலைப்பூவுக்குள் அழைக்கும் அன்பின் எழுத்துகளுக்கு சொந்தமானவர் இவர்.

ஆன்மீகம் என்றாலும் ஏதாவது நிகழ்வென்றாலும் அனுபவம் என்றாலும் எழுத்துகளால் கட்டிப்போட்டுடும் அசாத்திய பதிவுகளுக்கு சொந்தக்காரர்.

27.  ராஜலக்‌ஷ்மி பரமசிவம்
எதைச்சொன்னாலும் அதை எல்லோரும் ரசிக்கும்படி சொல்வதில் வித்தகர். அன்பின் மறு உருவம். இவர் பதிவுகளே இதற்கு சாட்சி.
   

    நாளை மீண்டும் சந்திப்போம் நண்பர்களே. அன்பு நன்றிகள்.

    



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது