07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 16, 2014

அன்பின் பூ - ஏழாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்


காதல், நட்பு, கணவன் மனைவி  சகோதரம்  எந்த உறவாக இருந்தாலும்  புரிதல் இல்லையென்றாலோ, நம்பிக்கை இல்லையென்றாலோ, ஈகோ இருந்தாலோ ஆட்டம் கண்டுவிடும். வாழ்நாள் முழுவதும் உடன் வரவேண்டிய உறவு இதனால் சந்தேகம் எனும் தீப்பொறியை கிளப்பி அதில் தன்னையும் பொசுக்கி தன்னை நேசித்தவரையும் பஸ்பமாக்கிவிடும். நரகத்தின் குழியில் செல்லத்தான் உறவு இத்தனைப்பாடுப்பட்டு வளர்க்கிறோமா?  சந்தேகத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாவது இருவரோடு முடிவதில்லை.

பிரச்சனை கணவன் மனைவி இருவருக்கும் என்றால் பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமல்லாது எந்த பாவமும் செய்யாத இவர்களுக்கு குழந்தைகளாக பிறந்த ஒரே காரணத்துக்காக இவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தாய் தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறார்கள். எல்லாவற்றையுமே சரி செய்ய நாம் ஒன்றும் மெஜிஷியன் கிடையாது. ஆனால் சரியாக்க முயற்சிக்கலாம்.

நட்பில் பிரச்சனை வருவதால் பாதிக்கப்படுவது பிரச்சனைக்குள்ளான இருவர் மட்டுமல்லாது இவர்களுடன் இருக்கும் மற்ற நண்பர்களும் தான். நீ ஏண்டா அவனோட பேசினே? நான் தான் அவனை ஒதுக்கி வெச்சிருக்கேன்னு தெரியும்ல? இருதலைக்கொள்ளி எறும்பாய் படும் அவஸ்தை உடன் இருப்போர்களுக்கு ஏற்படுகிறது.

அதேபோல் மாமியார் மருமகள் பிரச்சனையில் மத்தளத்துக்கு இருப்பக்கமும் அடி என்பது போல மிதிபடுவது  மகனாகவும் கணவனாகவும் டபுள் ரோல் செய்யும் ஆண். இப்படி எல்லாம் ஏற்படாமல் தடுக்க நம்மால் இயலாது என்றாலும் பிரச்சனையின் காரணகர்த்தாவாக நாம் இருக்கவேண்டாம்.

கல்யாணம் செய்துக்கொண்டு ஒரு பெண் வீட்டுக்கு வந்தால்  எங்கே நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என்ற எண்ணத்திலேயே மாமியார் மிரள ஆரம்பிக்கும்போது அங்கே மருமகள் செய்யும் எந்த ஒரு செயலையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கவைக்கும். பெண் தன்னைச்சார்ந்த எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி புது இடத்தில் நட்டச்செடி போல் பற்றிக்கொண்டு வளர சமயம் பிடிக்கலாம் அதுவரை பொறுமையாக வீட்டுக்கு வரும் மஹாலக்‌ஷ்மி மருமகளாக அல்லாது மகளாக நினைத்து அணைத்துக்கொண்டு போனால் கண்டிப்பாக பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு.

அதே போல் திருமணம் செய்துக்கொண்டு புருஷனின் வீட்டில் அடி எடுத்து வைக்கும் பெண் அங்கே இருப்பது மாமியார் மாமனார் என்று நினைக்காமல் தோழமையான அன்பை தர முன்வரவேண்டும். பெரியவர்கள் எது சொன்னாலும் நம் நன்மைக்குத் தான் என்ற நம்பிக்கை வரவேண்டும். தன்னைப்பெற்ற அம்மா அப்பா உரிமையோடு திட்டினால் பொறுமையாக கேட்டுக்கொள்ளும் பெண் அதுவே மாமியார் மாமனார் திட்டினாலோ அறிவுரைச்சொன்னாலோ என்னவோ தன்னை குற்றக்கூண்டில் நிற்க வைத்தது போல் நினைக்காது அம்மாவைப்போல அப்பாவைப்போல நினைத்து அனுசரித்துச்சென்றால் நல்லப்பெயர் எடுப்பது மாமனார் மாமியாரிடம் மட்டுமல்ல தாலிக்கட்டிக்கொண்டு வந்த கணவனிடமும் தான்.

மாலை வேலை விட்டு வரும் கணவன் எந்த மூடில் வருகிறார் என்று தெரியாமல் ரெடியாக சொல்ல புகார்களோடு காத்திருக்காமல் வந்த புருஷனை உட்காரவைத்து குடிக்க காபி கொடுத்து பின் சாவகாசமாக அமைதியான மனநிலையோடு பேசினால் ஆபிசு டென்ஷனோடு வரும் கணவன் கூட செருப்போடு ஆபிசு பிரச்சனைகளையும் கழட்டி வெச்சுட்டு வீட்டுக்குள் வருவான் என்பது உறுதி.
இப்ப திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களில் பலருக்கு சமையலே தெரிவதில்லை. அதனால் ஜங்க் ஃபுட்டும், பீட்சாவும் ஹோட்டலும் என்று காசை கரியாக்குவது மட்டுமல்லாது வயிற்றுக்கும் கேடு வாங்கிக்கொள்கிறோம் என்பதே உண்மை.  கணவன் மனதில் இடம் பிடிக்க எளிமையான வழி வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டு இனிமையான வார்த்தைகளைப்பேசி வாழ்க்கையை அற்புதமாக்கலாம்.

அதே போல் திருமணம் செய்துக்கொண்ட ஆணும் தன்னை நம்பி வரும் பெண்ணை அன்போடு அவள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டி உதாரணத்துக்கு சமைத்து கொண்டு வந்து கொடுக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால்  அதைப்பற்றி சொல்லி மனம் வருந்த வைக்காமல்  உன் கைப்பட்டால் எல்லாமே இரண்டு மடங்கு சுவை கூடிப்போவதென்னவோ உண்மை தான். அதற்காக உப்பு இரண்டு மடங்கு போட்டால்  எப்படிம்மா என்று சிரித்துக்கொண்டு அமைதியாக சொன்னால் தன் தவற்றை உணர்ந்து  அடுத்த முறை சமைக்கும்போது உப்பு மட்டுமல்ல செய்யும் எந்த ஒரு சின்ன வேலையைக்கூட கவனமாக செய்ய முற்படுவாள் மனைவி.

பிள்ளைகளை  பெற்றோரில் அம்மா கண்டிக்கும்போது அப்பா உட்புகாமல் அப்பா கண்டிக்கும்போது அம்மா உட்புகாமல் இருக்கவேண்டும். ஆனால் அதுவே வீட்டுக்க் நண்பர்கள் உறவினர் யாரேனும் வரும்போது அவர்கள் எதிரே பிள்ளைகளை கண்டிப்பது பிள்ளைகளை வருத்தமுறச்செய்யும்.  பலர் முன்னிலையில்  பிள்ளைகள் செய்த நற்செயலை பாராட்டிச்சொல்லுங்கள். நல்லவிஷயங்களை பாசிட்டிவாக எடுத்துச்சொல்லுங்கள்.  ஆனால் கண்டிக்கும்போது தவற்றை திருத்த முற்படுவது  தனியே இருக்கட்டும். மனம் கவர் பதிவர்களின் பதிவை பார்ப்போமா?

அருமையான போட்டி ஒன்றை நடத்தி பரிசுகள் அறிவித்து படைப்புகளையும் வெளியுட்டள்ளது இந்த வலைப்பூ. பரிசுப்பெற்றோருக்கும் பங்குப்பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகள்.

குழந்தையின் மன்றாட்டை ரொம்ப அழகா கவிதையில் எழுதி இருக்காங்க.

வலைப்பதிவர் தம்பதிகள் திரு மது கஸ்தூரி ரங்கன், திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் இருவரையும் சந்தித்ததை மிக அருமையா பகிர்ந்திருக்கிறார்.

தன்னுடைய முதல் கணிணி அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இலவச யோகாவின் பயனை அழகாக பகிர்ந்திருக்கிறார்.

தெரியாத விஷயங்கள் பகிர்ந்து உதவுகிறார் நமக்கு.

கணிணி இல்லையா கால்நடை தான் அப்படின்னு சொல்றாங்க.

மருந்தில்லா மருத்துவம் பற்றி ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க.

பரமரகசியம் ஒரு அற்புதமான தொடர் எழுதுகிறார்.

புத்தகங்கள் படிப்பது எத்தனை சுவாரஸ்யமான பொழுதுப்போக்கு என்று சொல்கிறார்.

கண்ணனை நேசிக்காதவரும் உண்டோ? காணமலே கண்ணன் மேல் கொண்ட காதலை அருமையா சொல்லி இருக்கார்.

எளிய வரிகளில் எதார்த்தமான கதைகளை சொல்வார் இவர்.

எல்லோரும் ஏற்கனவே படிச்சது போல் இருந்தாலும் மீண்டும் படிச்சுப்பார்த்தால் மனம் நெகிழ்வதை தடுக்க இயலாது.

பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி வாழ்வில் ஒரு ஸ்ரீராகம்னு சொல்லி ஒரு பதிவு போட்டிருக்காங்க.

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும்னு சொல்றார்.

கற்பனையா என் கவிதை என்று கேட்கிறார் கவிதையில்.

முத்த யட்சன் தலைப்பில் சுவாரசியமான கவிதை ஒன்று இங்கே.

சிவலயனை அடக்கப்போகிறவர் யார்னு கேட்கிறார்.

தன்னம்பிக்கை இருந்தால் தரணியை ஆளலாம் என்கிறார்.

அனிமேஷன் பற்றி ரொம்ப அருமையான தொடர் எழுதி இருக்கார்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதனால் என்னாகும் என்று சொல்லி இருக்கார்.

வாழும் வரை போராடச்சொல்கிறார் அருமையான கவிதை வரிகளில்.

எழுத்தாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது எப்படின்னு எழுதி இருக்கார்.

சாருநிவேதிதா வட்டம் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதையை பகிர்ந்திருக்கிறார் இங்கே.

அறமே கொல்லும் என்று சொல்கிறார் கவிதை வடிவில்.

வலியோடு கலையும் கனவுப்பற்றி கவிதையில் சொல்லி இருக்கிறார்.

அறிவியல் பகிர்வு அசத்தலான தொடர் இந்த வலைப்பூவில்.எத்தனையோ ஜாம்பவான்கள் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிநடைப்போடும் வலைச்சரத்தில் 3000 - வது பதிவு பதிய வாய்ப்பளித்த வலைச்சரக்குழுவுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள். இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பெருகி வலைச்சரம் வெற்றியின் பாதையில் சென்றிட மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். எல்லோரின் உழைப்பும் ஒற்றுமையும் தனித்தன்மையும் ஊக்குவிப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். 

7 நாட்களும் என் உடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும்…
என் பேரை இரண்டாம் முறை பரிந்துரைத்த கோபு அண்ணாவிற்கும்

கோபு அண்ணா பரிந்துரை செய்த நபர் கண்டிப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை நல்லமுறையில் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்த சீனா அண்ணாவுக்கும்

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததுமே பிளாக்கில் எழுதியே பல நாட்கள் மாதங்கள் வருடங்கள் ஆன நிலையில் எப்படி என்று விழி பிதுங்கி திண்டுக்கல் தனபால் சாரிடம் உதவிக்கேட்டதும்  உடனே லிங்க் அனுப்பி என்னை நிதானமாக்கியது மட்டுமல்லாது  நான் 7 நாட்களும் அறிமுகப்படுத்திய நண்பர்களின் வலைப்பூவுக்கு சென்று தகவல் தெரிவித்த தனபாலன் சாருக்கும்

இடைவிடாமல் 7 நாட்களும் கருத்து எழுதி என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கும்
எல்லோருக்கும்  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…

அடுத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றுக்கொள்ளும் நண்பருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

34 comments:

 1. வணக்கம்

  குடும்ப உறவை முதன்மைப்படுத்தி சிறப்பான கருத்தாடலுடன்.. இன்று சில வலைப்பூக்களை அறிமுகம் செய்துள்ளிர்கள்....பல வேலைகளுக்கு மத்தியில் எடுத்த காரியத்தை ஒரு வார காலமும் மிகச்சிறப்பாக செய்து முடித்தமைக்கு மிக்க நன்றி...

  நீங்கள்தான் வலைச்சரப் பொறுப்பு எடுத்துள்ளீர்கள் என்ற தகவலை எனக்கு எனது அண்ணா (தனபாலன்) அவர்கள் உங்களின் வலைத்தளத்தின் இணைப்பை பொறுப்பேற்ற அன்று தனியாக எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்....என்பார்வைக்கு.....
  அப்போதுதான் உங்களின் வலைப்பக்கம் வந்தேன்.... இனி உங்களின் வலைப்பக்கம் சந்திக்கலாம்..

  சென்று வருகிறேன் பதிவின் பக்கம்... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன். தனபால் சாருக்கும் அன்பு நன்றிகள்.

   Delete
 2. குடும்ப உறவு என்றில்லாமல் எந்த உறவு என்றாலும், அதில் புரிதல் இல்லாமல், சந்தேகம் என்ற நச்சு பரவினால் அந்த உறவு முரிந்துதான் போகும்! என்னதான் அது ஒட்டு போடப்பட்டாலும், அந்த ஒட்டலில் சில விரிசல்கள் இருக்கத்தான் செய்யும், மறுபடியும் சிறு தட்டு தட்டினாலே உடைந்து விடும் என்ற அளவில்!

  மிக நன்றாக இருக்கிறது பதிவு!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மையே சார். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

   Delete
 3. காதல், நட்பு, கணவன் மனைவி சகோதரம் எந்த உறவாக இருந்தாலும் புரிதல் இல்லையென்றாலோ, நம்பிக்கை இல்லையென்றாலோ, ஈகோ இருந்தாலோ ஆட்டம் கண்டுவிடும்.//

  அருமையாக சொன்னீர்கள்.
  புரிதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை இருந்தால் எல்லா உறவிலும் விரிசல் ஏற்படாது.
  அன்பால் அனைத்தையும் வெல்லலாம்.

  உங்கள் அன்பின் பூ பகிர்வுகள் அனைத்தும் மிக அருமை.
  உங்கள் பணி சிறப்பாக இருந்தது.
  திண்டுக்கல் தனபாலன், ரூப்ன் இருவரும் மிக வேகமாய் அனைவருக்கும் வாழ்த்துக்களும், செய்திகளும் சொல்வார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  மீண்டும் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மேம். என்னுடைய நன்றிகளும் ரூபனுக்கும் தன்பால் சாருக்கும்.

   Delete
 4. இளங் காலைப்பொழுதில் - நல்ல சிந்தனைகளும் இளம் தலைமுறைக்கு இனிய கருத்துரைகளும்!.. நல்லதொரு தொகுப்பு.. வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.

   Delete
 5. வெற்றிநடைப்போடும் வலைச்சரத்தில் 3000 - வது பதிவு
  சுகந்தம் வீசும்
  மலர்களாக மலரச்செய்தமைக்கு
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

   Delete
 6. இன்றும் பல அருமையான கருத்துகளோடு, மனம் கவரும் பல தளங்களை அறிமுகம் செய்து, சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  priyadontics Deepapriya, RAJASEKARAN M - இவர்களின் தளங்கள் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபால் சார்.

   Delete
 7. //உன் கைப்பட்டால் எல்லாமே இரண்டு மடங்கு சுவை கூடிப்போவதென்னவோ உண்மை தான். அதற்காக உப்பு இரண்டு மடங்கு போட்டால் எப்படிம்மா என்று சிரித்துக்கொண்டு அமைதியாக சொன்னால் தன் தவற்றை உணர்ந்து அடுத்த முறை சமைக்கும்போது உப்பு மட்டுமல்ல செய்யும் எந்த ஒரு சின்ன வேலையைக்கூட கவனமாக செய்ய முற்படுவாள் மனைவி.//

  ஆஹா, பாராட்டி உப்பிட்டவரை உள்ளவும் நினைப்போமே, மறப்போமா ! ;)))))

  எதுவும் மஞ்சு சொன்னால் அதன் சுவையே தனிதான். இரட்டிப்புச்சுவை தான்.


  >>>>>

  ReplyDelete
 8. அப்பா அம்மாவுடன் உள்ள தொந்திப்பிள்ளையாரும், யசோதா மடியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனும், காதிலே பூ வைத்துள்ள பாப்பாவும், குட்டிக்குழந்தையை முகர்ந்து பார்த்து முத்தமிடும் அன்னையும் ..... படத்தேர்வுகள் அருமை மஞ்சு.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

   Delete
 9. //என் பேரை இரண்டாம் முறை பரிந்துரைத்த கோபு அண்ணாவிற்கும்

  கோபு அண்ணா பரிந்துரை செய்த நபர் கண்டிப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை நல்லமுறையில் செய்து முடிப்பார் ....//

  ஆஹா .... என் தலையில் மிகப்பெரிய ஐஸ் கட்டியாக வைத்து ஜில்லிட்டுப்போக வைத்துள்ள மஞ்சூஊஊஊஊஊஊஊ வுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்க வாழ்கவே ! ;))))))))))))))))))

  அன்புடன் கோபு அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..

   Delete
 10. என்னையும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி!பிடியுங்கள் ஒரு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்!ஹி ஹி.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி.

   Delete
 11. மிக அருமையான முன்னுரை! இன்றைய இளம் தம்பதியினருக்கு மிகவும் பயனளிக்கும்! இன்று அறிமுகம் ஆகிய தளங்கள் பல எனக்கு புதியது! சென்று பார்க்கிறேன்! சிறப்பாக ஒரு வாரகாலம் பணியாற்றியமைக்கு வாழ்த்துக்கள்! வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.

   Delete
 12. அருமையாகவும் எளிதாகவும் குடும்பச் சிக்கல்களை தீர்க்கும் அறிவுரைகளை வழ்ங்கியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. உங்கள் பணியைச் செவ்வனே செய்தீர்கள்.! நன்றி! மீண்டும் வருக!

  ReplyDelete
 14. இன்றும் குடும்பம் பற்றிய அருமையான கருத்துடன் பலரை அறிமுகம் செய்தீர்கள்.வாழ்த்துக்கள் இனிமையான இந்தவாரப்பணிக்கு.

  ReplyDelete
 15. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அறிமுகம் செய்யப்பட்ட மற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ! :)

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜி

   Delete
 16. அழகான அறிமுகங்களுடன் வலைச்சரப் பணி நிறைவு.
  சகோதரி மஞ்சுபாஷினிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்

   Delete
 17. சகோதரிக்கு வணக்கம்
  எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள். தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைந்தமைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா பாண்டியன்.

   Delete
 18. Thanks for the intro Manjubashini akka!

  ReplyDelete
 19. thank u so much dear manju bashini mam... thanks for those nice words of introduction.... and i have also come to know of few other versatile blogs... thanks a lot...

  ReplyDelete
 20. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 21. மிக்க மகிழ்ச்சி, உங்களது பரிந்துரைக்கு நன்றி, உங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது