07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 19, 2014

எங்க ஒத்துமையைப் பார்த்து கண்ணுப்படப் போகுது!!

திகட்ட, திகட்ட சகோதரப் பாசத்தைக் கொட்ட சகோதரர்கள் நிறைஞ்ச இந்த வலை உலகில், பாசத்தைக் காட்ட, உரிமையாய் தவற்றைச் சுட்டிக் காட்ட, செல்லச் சண்டைப் போட, கோவம் காட்ட, கொஞ்ச, கெஞ்சன்னு எக்கச்சக்க சகோதரிகள் கிடைச்சிருப்பது என் அதிர்ஷ்டம். 

எல்லாப் பென் பதிவர்கள்கிட்டயும் ஆண் பதிவர்கள் சட்டுன்னு பேசிடுறாங்க. அதுக்கு காரணம் அன்புதானே தவிர தப்பான எண்ணமில்ல. ஆனா, பெண் பதிவர்கள் அடுத்த பெண்பதிவர்கள்கிட்ட பேசக்கூட ரொம்ப யோசிக்குறோம். காரணம், அது பெண் பதிவர்தானா!?ன்ற சந்தேகம் ஒரு புறம். குடும்பச் சூழல், நேரமின்மை, அதனால எதாவது பிரச்சனை வருமோன்னு கொஞ்சம் தயங்கத்தான் வேண்டிக் கிடக்கு. 

கொஞ்சம் தயங்கிப் பேச ஆரம்பிச்சாச்சுன்னா...., நான் ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

ஒரு இடத்தில் நாலு பெண்கள் சேர்ந்தாலே புரணிப் பேசி, பொறாமைப் பட்டு கலகம் வச்சு சண்டை நடக்கும். ஆனா, இத்தனை பெண்கள் இருந்தாலும் போட்டி, பொறாமை இல்லாம ஒத்துமையா இருக்கோமே!! அதுக்கே ஆண் பதிவர்கள் எங்களுக்கு சுத்திப் போடனும்ப்பா! இனி, என் சகோதரிகள் அறிமுகத்துக்குப் போகலாம்!!

முதன் முதல்ல பெண் பதிவர்கள்ல தென்றல் சசிகலாதான் இணையம் தாண்டி போன்லயும் பேசும் அளவுக்கு நெருக்கம். எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிய தமிழில் கவிதை எழுதுவா. புத்தகம்லாம் வெளியிட்டிருக்காங்க அம்மணி. பதிவர் சந்திப்புன்னா பெண் பதிவர்கள் பாதுகாப்புக்கு அம்மணிதான் பொறுப்பு. ரொம்ப நல்லப் பொண்ணு. சமையல் முதல் பசங்க சேட்டை வரை பகிர்ந்துப்போம்.

பதிவுலக வழக்கப்படி சகோன்னு கூப்பிட்டாலும், உறவு முறையில் அண்ணி(திரு.வெங்கட் நாகராஜ் எனக்கு அண்ணன்னா அவங்க வீட்டம்மா எனக்கு அண்ணிதானே!?) . ஆதி வெங்கட்டைத்தான் சொல்றேன். அவங்க பதிவுல கோலம், சமையல், புத்தக விமர்சனம், கோலம், கிராஃப்ட் கலந்துக் கட்டி அடிக்கும் சகல கலா வல்லி. ஒரு சில பதிவுகளில் அவங்க பதிவாக்கிய ஃபோட்டோக்களைப் பார்த்து, எங்க எனக்குப் போட்டியா வந்துடுவாங்களோன்னு ஜெர்க்காகி நின்னிருக்கேன். 

அவள் விகடன், சினேகிதின்னு ஆயிரம் பெண்கள் பத்திரிக்கை இணையத்திலும், புத்தகமா வந்தாலும் ஒரு பெண்கள் இதழ் எப்படி இருக்கனும்ன்னு நந்தினியின் எதிர் பார்ப்பு.

ஆண்டாள் பாசுரத்துக்கு விளக்கம் சொல்லும் ஷைலஜா அக்காவுக்கு அப்பாவை பத்தி அசைப்போட்டுக்கிட்டே, சிறுகதையும் கூட நல்லா எழுத வரும். கூடவே முகமறியா என் மகளைத் தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல மனசுக்காரங்க.அதுக்காக, இந்த நேரத்துல ஷைலஜா அக்காவுக்கு நன்றி சொல்லிக்குறேன்.

என்னை உரிமையாய் கோவிச்சுக்கவும், கொஞ்சவும், கெஞ்சவும் செய்யும் அம்பாளடியாள்.   கவிதைகள் எழுதுவதில் அக்கா கில்லாடி. எல்லாமே கடவுள்கிட்ட வரம் கேக்குற மாதிரிதான் இருக்கும். இந்த தங்கச்சியைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதச் சொல்லனும். அக்காக்கிட்ட இதுவரை பேசியதில்லை. ஆனா, பேசனும்ன்னு ரொம்ப ஆசை. அம்பாள்தான் மனசு  வைக்கனும்.

வீட்டுல நடந்த சண்டை, பசங்கக்கிட்ட வாங்குன பல்ப், சமையல் குறிப்பு இதெல்லாம் பகிர்ந்துப்போம். ஆனா, வீட்டுல நடந்த ரொமான்ஸ் பத்தி ஆண்கள் அளவுக்கு பெண்கள் பகிர்ந்துக்கிட்டதில்ல. ஆனா, அதையும் சகோதரிகள்கிட்ட ராஜலஷ்மி பரமசிவம் பகிர்ந்துக்கிட்டாங்கன்னா நம் மேல எவ்வளவு நம்பிக்கை!!

கவிதை, சமையல் குறிப்பு, கோலம்ன்னு பகிர்ந்துக்க மட்டுமே நமக்கு இணையம் பயன்படுது. ஆனா, கோவையைச் சேர்ந்த எழில்அக்கா சத்தமில்லாம சமூக சேவைலாம் செய்றங்க. இந்த வருச பதிவர் சந்திப்பை தொகுத்து வழங்கி அசத்தினது எழிலக்காதான். பெரியார் கொளகைகளை பின்பற்றும் குடும்பம் இவங்களுது.

கவிதை, அனுபவக்குறிப்புகள், கங்காரு போன்ற உயிரினங்களைப் பற்றி சொல்வதோடு இல்லாம பாஸ்போர்ட், விசா இல்லாம விமானச் செலவு செய்யாம, கீதமஞ்சரி அக்கா ஆஸ்திரேலியா முழுக்க சுத்திக்காட்டுவாங்க,

சமைக்க மட்டும்தான் தெரியும்ன்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்த மேனகா சாதியா ஸ்ட்ரா பெர்ரி வச்சு அழகா ஒரு பொக்கே தயாரிச்சு இருக்காங்க. எதாவது புதுசா சமைக்கனும்ன்னு நினைச்சா இவங்க வலைப்பூவுக்குதான் போவேன். போன வருசம் பதிவர் சந்திப்புக்கு வந்தவங்க ரொம்ப நாள் பழக்காமானவங்கப் போல அன்பைப் பொழிஞ்சாங்க.

போன பதிவர் சந்திப்பில் கலந்துக்கிட்டுப் பேசி இருக்கோம். ரொம்ப எளிமையானப் பொண்ணு. கவிதையில் கலக்குவதோடு சத்தமில்லாம  சமூக சேவைலாம் செய்யுது. மாமியார் மருமகள் உறவு எப்படிப்பட்டதுன்னு எம்புட்டு அழகா கோவை. மு.சரளா சொல்லுறாங்க.

நம்ம அன்னன், தம்பி, அக்கா, அப்பா, அம்மா, வூட்டுக்காரர், பசங்க பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி பதிவுப் போடுவோம். ஆனா, காயத்ரி தேவி  தன்னோட ஃப்ரெண்ட் தங்கச்சி குழந்தையை வாழ்த்தச் சொல்லி கேட்டிருக்காங்க. தான் மட்டுமில்ல தன்னைச் சார்ந்தவங்களும் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கும் சின்ன தங்கச்சி காயத்ரிக்குப் பாராட்டுகள்.

கவிதை எழுதுறதுக்காக சிலரைப் பிடிக்கும். ஆழமான கருத்துகளுக்காக சிலரைப் பிடிக்கும். ஆனா, மகிழ்நிறைன்ற வலைப்பூப் பேருக்காகவே ஒருத்தரைப் பிடிச்சதுன்னா அது மைதிலி கஸ்தூரி ரங்கனைதான், அதுக்காக, அவங்க எழுத்துப் பிடிக்கலைன்னு அர்த்தமில்ல.

ச்விஸ்ல இருந்து எழுதும் ஹேமாக்கா கவிதைல செமையா கலக்குவாங்க. பெரும்பான்மையான கவிதைல காதல் ரசம் சொட்டும்.

நிறைய கதைகளைப் போறப் போக்கில் எழுதி பதிவிட்டு வரும் விஜயலஷ்மி சுஷில்குமார். பணம், கல்வி, வாடகைத்தாய்ன்னு இவரோட கதைகளின் கருப்பொருள் ரொம்ப வித்தியாசமானது.

பாரம்பரிய இந்திய உணவுகளை சமைக்கவே எனக்கு கை நடுங்குது. ஆனா, இண்டிய உணவுகளோடு அரேபிய உணவுகளையும் சேர்த்து சமைத்து பதிவாப் போடுவாங்க ஆசியா ஓமர். இவங்க ஆங்கிலத்தில் இன்னொரு வலைப்பூ வச்சிருக்காங்க.

தாய்ப்பாலோட அவசியத்தையும், அது எப்படி கொடுப்பதுன்னு எல்லாரும் சொல்வாங்க. ஆனா, எப்படிலாம் தாய்ப்பால் கொடுத்தேன். அது எந்தளவுக்கு தனக்கும் தன் குழந்தைக்கும் பாசத்தைக் கூட்டுச்சுன்னு வீணாதேவி அழகா சொல்றாங்க.

படிக்கும்போது பாட புத்தகம், நோட்டுப் புத்தகத்தில் சினிமாப்பாட்டுலாம் எழுதுற பழக்கம் எனக்கு. சோகமா இருந்தா அதுக்கேத்த வரிகள், ஃப்ரெண்டோட சண்டைன்னா அதுக்கேத்த மாதிரி பாட்டு, லவ் மூட்ல இருந்தா அதுக்குத் தகுந்த வரிகளை எழுது அப்பாக்கிட்ட அடிவாங்கி இருக்கேன். என்னைப் போலவே சாந்தி மாரியப்பன் தனக்குப் பிடிச்ச பாடல்களை வலைப்பூவில் எழுதுறாங்க.

சிறுநீரகக்கல் எப்படி உருவாகுது. அதனால வரும் அவஸ்தைகள், அது வந்தால் என்ன வைத்தியம்ன்னு எனக்குக்கூட புரியுற மாதிரி ரஹிமா பதிவுப் போட்டிருக்காங்க

எல்லாக் குழந்தையும் பெத்தவங்களுக்கு ஒண்ணுதான். ஆனா தங்கச்சி பாப்பா பொறந்ததால தனக்கு மரியாதைப் போய்டுச்சுன்னு பெருசும், மூத்ததைத்தான் புகழ்றாங்க. என்னைக் கண்டுக்கிடறதில்லைன்னு சின்னதும் மனசுல நினைச்சும். ரெண்டாவது பிள்ளைப் பேறின் போது நினைவில் வச்சுக்க வேண்டியதை ஜலீலா கமால் நல்லா சொல்லி இருக்காங்க.

ஊர் உலகத்தையே திணறடிக்கும் ஆள் நான். ஆனா, என் போனுக்கு ஹலோ நான் சூரியன் எஃப்.எம்மிலிருந்து பேசுறோம்ன்னு ஒரு கால் வந்துச்சு. அட, நாம சூரியன் எஃப்.எம்முக்கு போன் போடவே இல்லியேன்னு ஃபோனைக் கட் பண்ணிட்டேன். திரும்பவும் ஃபோன். யாரோ கலாய்க்குறங்கன்னு கட் பண்ணிட்டேன். ஹேய் ராஜி! நான் மஞ்சுபாஷினி பேசுறேன்னு சொல்லி பச்சைப்புள்ளைப் போல பேசுனாங்க. எனக்கு பிடிச்ச பதிவர்களில் மஞ்சுக்கும் ஒரு இடமுண்டு. வாலுன்னு என்னைச் செல்லமா கூப்பிடுவாங்க. அவங்க பையனுக்கு விபத்துல சிக்கி ஒரு ஆபத்துமில்லாம வந்ததை பதிவா போட்டு சோகத்தை குறைச்சுக்கிட்டாங்க.

போனப் பதிவர் சந்திப்புல சந்திச்சுக்கிடோம். அப்பப்ப ஜிடாக்ல பேசிப்போம். ரொம்ப குறும்புக்காரி. அவ பையன் என் பசங்களோடு செம அட்டாச்மெண்ட். ஆனா, இப்பலாம் பதிவுப் போடுறதில்ல. ஏன்னு தெரியல. ஜிடால்க்லயும் ஆள் காணலை. எங்கப் போனே ஆமினா!?

எனக்கு சுமாரா எம்ப்ராய்டரிப் பண்ண வரும்.அதனால, தேடித் தேடிப் பார்ப்பேன். வானதி போட்ட குஷன் கவர் எம்ப்ராய்டரிப் பார்த்து ரொம்ப பொறமைப் பட்டேன். என்ன ஒரு நேர்த்தி!? கலர் காம்பினேஷன்!? ப்பா! சூப்பர்.

மூச்சு வாங்குது. இவங்க மட்டுமில்ல..., இன்னும் பல்வேறு திறமைகளோடு வலைப்பூவில் கலக்கும் பெண்கள் இருக்காங்க. எல்லோரையும் இப்பவே சொல்ல முடியாது. வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்களைப் பற்றி பகிர்ந்துக்குறேன். டெய்லரிங்க் கிளாஸ் போக டைமாச்சு. அதனால, நான் கிளம்புறேன்.

டாட்டா, பை பை, சீ யூ....,

93 comments:

  1. சுத்திப்போடப் போறவங்கலாம் வரிசைல வாங்க!

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் மாலை வரும்போது பூசணிக்கா கொண்டு வருவார்ப்பா ஆனா அது சுத்திப்போடவா இல்ல சாம்பார் வைக்கவான்னு தெரியாது :)

      Delete
    2. மாலை தங்கையைப் பாராட்ட! பூசணிக்காய் திருஷ்டி சுத்திப்போட!

      Delete
  2. காலை வணக்கம்
    சகோதரி...

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... தெரியப்படுத்தி வாழ்த்திட்டு வருகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-



    ReplyDelete
    Replies
    1. சீரிய சேவை ரூபன். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

      Delete
    2. ரூபனோட சேவை பாராட்டப்படவேண்டியது. இன்னும் இன்னொரு சிங்கம் களத்தில் இறங்கலையே! ஏன்!?

      Delete
    3. தம்பி இருக்கும் போது கவலையே இல்லை...

      Delete
    4. வணக்கம்
      சகோதரி

      இன்னும் இன்னொரு சிங்கம் களத்தில் இறங்கலையே! ஏன்!?என்னுடைய தனபாலன்(அண்ணா)
      நான் இரவு பேசிய போது...சிறது .உடநிலை சரி இல்லை அதன் காரணமாக வரவில்லை என்பதை அறியத்தருகிறேன்....

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  3. இவ்ளோ பெண்பதிவர்கள் இருக்காங்களா? எனக்கு நான்கு பேருக்கு மேல யாரையுமே தெரியாதே... மெல்ல ஒன்னு ஒண்ணா படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அந்த நாலு பேரு யாருன்றது தான் இப்ப கேள்வி :)

      Delete
    2. இதெல்லாம் வெளில சொல்வாங்களா மஞ்சுக்கா!!??

      Delete
  4. என் தளத்தைப் பற்றி எழுதி ,என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ராஜி.
    செய்தியை ஓடி வந்து எனக்கு தெரியப்படுத்திய திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜலட்சுமி மேடம்!

      Delete
  5. வாழ்த்துக்கள் ராஜி.இந்த வாரம் தொடர்ந்து அசத்துங்க. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி. தெரியப்படுத்திய ரூபனுக்கம் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா ஓமர். உங்க பேரை சரியா எழுதினேனா!?

      Delete
  6. அன்புக்காலை வணக்கங்கள்பா ராஜி..

    உண்மையேப்பா... பேசத்தொடங்கும் வரை தான் தயக்கமெல்லாம். அதுக்கூட மத்தவங்களுக்கு தான். நம்ம சசி கிட்ட உங்க போன் நம்பர் கேட்டு உங்கக்கிட்ட பேசினப்ப புதுசா யார்கூடவோ பேசும் உணர்வே இல்லைப்பா... நம்ம வீட்டு புள்ள கிட்ட பேசும் உணர்வு தான். ஆனாலும் ஆரம்பிச்சது மட்டும்தான் நான் கலாய்ப்பு.. ஆனால் அதுக்கப்புறம் ஹாஹா ரெண்டே நிமிஷத்துல பல்பு கொடுத்துருச்சே புள்ள எனக்கு :) ஒரே சிரிப்புப்பா இப்ப நினைச்சாலும். அவ்ளோ தூரத்துல இருக்கீங்க. வந்து பார்க்கவும் முடியல. அடுத்த சந்திப்புல கண்டிப்பா சந்திச்சிருவோம் ராஜி சசி மஞ்சு :) வலைதளம் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள் ராஜி. இந்த தகவலை தம்பி ரூபன் வந்து தெரிவித்தமைக்கும் அன்பு நன்றிகள்பா..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா 2014ல சந்திப்போம் மஞ்சுக்கா!

      Delete
  7. வணக்கம்
    அம்பாளடியாள் வலை இணைப்பை சரி செய்யுங்கள்.... ஏன் என்றால் திறந்தால் ஷைலஜா வின் தளம் திறக்கிறது......எல்லாத்தளங்களும் நான் தொடரும் தளங்கள்தான்... பகிர்வுக்கு வாழ்ததுக்கள் சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தவற்றை சுட்டிக்காட்டியதுக்கு நன்றி ரூபன். சரிப் பண்ணிடுறேன்கரண்ட் கட் பிரச்சனை பெருசா இருக்கு. அதான்/

      Delete
  8. அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை அன்புள்ளங்களும் எனக்கு தெரிந்தவரே என்பது கூடுதல் சந்தோஷம்பா..

    இன்னைக்கு த.ம. எண் சரியா நினைவு வெச்சுக்கிட்டேன்பா 2 சமர்த்து தானே நான்? :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சமர்த்து பொண்ணுதான் மஞ்சுக்கா!

      Delete
  9. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

    இன்றைய நாளும் அசத்தலாக சுவாரஸ்யமாக செல்கிறதுப்பா ராஜி. அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சுக்கா!

      Delete
  10. சுத்திப் போடணும் தான்...
    ஆமாம்...எத சுத்தி எதப் போடணும்? ;-)

    ReplyDelete
    Replies
    1. சுத்தியல் எடுத்து உங்கக்கூடலாம் பழகுற என் தலையில் போடனும்.

      Delete
    2. ஹாஹா
      பூவ சுத்தியல் மாதிரி செஞ்சுட்டுவரேன் ... :)

      Delete
  11. ஓஹ்... ராஜி அக்காவா....

    ரூபன் சார் என் ப்ளாக்ல கமென்ட் போட்டதும் அவர் தான் இன்றைய ஆசிரியர் போல ன்னு நினைச்சுட்டே பதிவ வாசிச்சு செம கன்பியூஸ் ஆய்ட்டேன்... ரூபன் சார எப்ப நாம பதிவர் சந்திப்புல பார்த்தோம்,எப்ப ஜீடால்க்ல பேசினோம் ன்னு தலையை பிச்சுக்கிட்டேன். அப்பறம் தான் சுதாரிச்சு கமென்ட்லாம் படிக்க ஆரம்பிச்ச பொறவு தெரியுது...

    தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோ. ரூபன்

    என்னை இன்னும் மறக்காம இருக்குறக்குறதுக்கு நன்றி ராஜி :) பேஸ்புக் ல முழு நேர கடை ஓபன் பண்ணி குப்ப கொட்டிட்டிருக்கேன்... அதான் எங்கும் வர முடியல.. சோ பிசி யு நோ :P
    பசங்கள கேட்டேன்னு சொல்லுங்க.

    என் மகன் பதிவர் சந்திப்பு போட்டோவ பாக்கும் போது உங்கள ஐஸ்க்ரீம் (வாங்கிகொடுத்த) ஆன்டி ன்னு சொல்லுவான்... :)

    தேங்க்யூ டியர்...

    ReplyDelete
    Replies
    1. உன்னை மறந்தாலும், உன் மகனை மறக்க முடியுமா ஆமினா!? ஃபேஸ்புக்லதான் இருக்கியா. முடிஞ்சா அங்க வந்து சநானும் குப்ப கொட்டுறேன்.

      Delete
    2. ஹா ஹா ஹா..... என் மகளும் பதிவர் சந்திப்பில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தாங்களே ராஜி ஆன்ட்டி என்று தான் சொல்வாள்...

      Delete
    3. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து முதல்ல பசங்களை நம் வழிக்குக் கொண்டு வரனும். அப்புறம், அவங்க அப்பா, அம்மா ஓட்டு நமக்குதான்!

      Delete
    4. ராஜி

      எதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு பசங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்துகிட்டு.

      என் பசங்களுக்கு பதிலா எனக்கே வாங்கி தந்துடுங்க. என் வோட்டு உங்களுக்கு.

      Delete
    5. இது நல்ல ஐடியாவா இருக்கே!

      Delete
  12. அண்மையில் இருக்கும் உறவுகளுக்குள் கொஞ்சம் பொறாமை உணர்வு இருந்துதான் தொலைக்கிறது... ஆனால் தொலைவில் உள்ள நட்புகளிடம் மகிழ்ச்சியான நட்பு மட்டுமே வெளிப்படுகிறது... இந்த வகையில் நட்பு பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்...! வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள்........!

    ReplyDelete
    Replies
    1. இந்த நட்பில் எதிர்பார்ப்பு எதுமில்ல உஷா. அதான் வெல்லக்கட்டிப் போல இனிக்குதோ!!

      Delete
  13. நாலு பேர் எனக்குத் தெரியாதவங்க உன் சர்க்கிள்ல... (நந்தினி, மைதிலி கஸ்தூரி ரங்கன், வீணாதேவி, விஜயலட்சுமி சுஷிங்குமார்) சிஷயனை மாதிரி பேர சொல்லாம எஸ்ஸாகிட்டேன்னு சொல்லிர முடியயாதுல்ல... ஹி... ஹி... ஹி...! மாலை தங்கச்சிக்கு, திருஷ்டி சுத்திப் போட மொளகாய் கொண்டு வருவேன். பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போட இல்லம்மா... உன் கையால பூசணி அல்வா செஞ்சு சாப்பிட. ஹா... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. அல்வாதானே!? கிண்டிக் கொடுத்துட்டாப் போச்சு!

      Delete
  14. அசத்தலாக அறிமுகப்படுத்தப்பட்ட
    அனைத்து பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அசத்தலாக அறிமுகப்படுத்தப்பட்ட
    அனைத்து பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அம்மா!

      Delete
  16. இன்றைய அறிமுகங்களில் எனக்கு கொஞ்சம் அறிமுகம்! கொஞ்சம் புதுமுகம்! புதுமுகங்களின் படைப்புக்களை வாசித்துப்பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்! நேத்து கொஞ்சம் பிசி! பதிவை படிக்கலை! அதையும் இப்ப படிச்சு முடிச்சுடறேன்! நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  17. இதில் பலரை ஏற்கனவே தொடர்கிறேன் , புதிதாக உள்ளவர்களை கண்டிப்பாக இன்றுமுதல் தொடர ஆரம்பிக்கிறேன் . புதுமுகங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்ம உறவு முறைக்குள் அவங்களையும் கொண்டு வந்திடுங்க ராஜா!

      Delete
  18. அன்பு ராஜிக்கு வணக்கமும் வாழ்த்தும்.அத்தனை சகோதரிகளையும் ஒருமித்த இடத்தில் கண்ட சந்தோஷம்.நடுவில என் ஃபெரெண்ட் கணேஸ்.ரூபன் அவர்களுக்கும் என் நன்றி.தொடரட்டும் எழுத்துப்பணி !

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தோசப்படுத்டியதில் எனக்கும் மகிழ்ச்சியே ஹேமாக்கா!

      Delete
  19. 3 தளங்கள் புதிது... (சொன்னா நம்பணும்...!) அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இன்னாது!! திண்டுக்கல் தனபாலன் அண்ணாவே போகாத தளமா!? எப்படி இந்த அதிசயம் நடந்துச்சு!?

      Delete
    2. ஆஹா. சாதனை என்றால் இது தான். கலக்கிட்டாங்க ராஜி அக்கா டி.டி அண்ணாவிற்கு தெரியாத தளங்கள்.இது தான் இன்று தலைப்புச்செய்தி!

      Delete
  20. அடடா இத்தனை ஆசைகளையும் மனசுக்குள் வைத்துக்கொண்டு சும்மா
    இருந்தா யாருக்குப் பிள்ள தெரியும் ?..ஓடிப் போய் மஞ்சு பாஷினி அக்காவிடம்
    கேளுங்கள் நான் என் அன்புத் தங்கையுடன் பேசாமல் வேறு யாருடன் பேசப்
    போகிறேன் .இதுக்கெல்லாம் அம்பாள் வரம் கொடுக்கத் தேவையில்லை நானே
    தங்களுடன் முன் வந்து பேசுவேன் .இந்த வலையுலகத்தில் வெறும் புகழைச்
    சம்பாதிக்க மட்டும் இல்ல இந்த மாதிரி அன்பைத் தேடி அலையும் பட்சிகளில்
    நானும் ஒருத்தியே .வலையுலகம் இது எங்கள் குடும்பம் என்பதில் துளியும்
    சந்தேகம் இல்லை .இன்று முதல் தங்களின் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்
    அன்புத் தங்கையே .சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மஞ்சுக்காக்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன். இல்லாட்டி முகநூலில் தொடர்புக் கொள்கிறேன் அக்கா!

      Delete
  21. பெண்களின் பெருமை சொல்லவும் பெரிதே!..
    தொகுப்பு அருமையாக இருக்கின்றது.
    அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  22. மஞ்சு பாஷினி அக்காவிடம் எனது தொடர்பு இலாக்கம் skyp முகவரி உள்ளது ராஜி
    பெற்றுக் கொள்ளுங்கள் .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  23. அருமையான தொகுப்பு. இன்றைய அறிமுகங்களில் என்னையும் சேர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    ஜெர்க் எல்லாம் ஆக வேண்டாம்... நான் உங்க அளவுக்கெல்லாம் வரமாட்டேன் ராஜி..:))

    அண்ணியோ, சகோவோ எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கோங்க... உங்க பாசத்தில் நாங்களும் திளைக்கிறோம்...நன்றி.

    பதிவர்கள் பலர் முகப்புத்தகத்தில் தான் ஒளிஞ்சுகிட்டிருக்காங்க... நாமளும் அங்க போனா தான் சரியா வரும்னு நினைக்கிறேன்....:))

    ஒரு சிலர் புதிதானவர்கள்.... நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

    ReplyDelete
  24. சிலர் புதியவர்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ராஜி அக்காளுக்கு சுத்திப்போட வடை மாலை சுட்டுக்கொட்டு மாலையில் வாரேன் அக்காள் சகிதம் அப்படியே புண்ணியம் தேடி முகநூல்ப்பக்கம் போக :)))

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். வடைமாலை ஆஞ்சினேயருக்குதான் போடுவாங்க.

      Delete
  25. அக்கா உங்க சரளமான நடைக்கு நான் பெரிய விசிறி,
    நீங்க மதுரை தமிழன் சகோ வின் பதிவில் போட்ட கமெண்ட்டை பார்த்துதான் உங்க blog குக்கு வந்தேன். நீங்க இவ்ளோ பெரிய சகோதரிகள் பட்டியலில் என் பெயரை சகோதரி என்று சேர்த்ததுதான் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கச்சிம்மா!(ஒருவேளை அக்காவோ!)

      Delete
  26. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். மகி என் ரெண்டாவது பொண்ணு மூணு வயசாகுது. நிறை பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அவர்களுக்கு பெயர் வைத்ததை ஒரு கவிதையாகவே போட்டிருக்கேன். நன்றி சகோ என்னோடு என் குழந்தைகளையும் பாராட்டியதற்கும்!

    ReplyDelete
    Replies
    1. அழகான தமிழ் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்குறது எனக்குப் பிடிக்கும் மைதிலி. என் பசங்களுக்கு என் வீட்டுக்காரர் வச்சதெல்லாம் வடமாநிலச் சொற்கள் கலந்தது. ஆனா, நான் கூப்பிடுறதெல்லாம் தூயா, இனியா, அப்பு. அதான் உன் பிளாக் பேர்ல மயங்கிட்டேன்

      Delete
  27. ரைட்டு.... இன்னைக்கு உங்க இனமா... சூப்பர்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரகாஷ்

      Delete
  28. அறிமுகப்படுத்தபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அறிமுகத்திற்கு நன்றி அக்கா!!

    தெரியபடுத்திய சகோ ரூபன் அவர்களுக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்குன் நன்றி சாதியா

      Delete
  29. சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  30. வந்தாச்சு முட்டை கேன்சல்.. அவ்வ்வ்வவ்வ்வ்

    அறிமுகங்களான பிரபல அக்க்காங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முட்டை எதுக்கு ஹாரி!?

      Delete
  31. இன்றைய மகளிர் சரம் பூச்சரம்போல் செமை மனம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நுகர வந்த கலையன்பனுக்கு நன்றிகள் பல உரித்தாகுக!

      Delete
  32. வணக்கம் நட்பு வட்டத்திற்கு

    என்னை (என் வலைப்பூவை) அறிமுகப்படுத்திய சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி.

    இதன்மூலம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட சகோ. ரூபன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வணக்கம். நன்றி.

    இந்த தளத்தைப்பற்றி இன்றே அறியமுடிந்தது.

    ஆண் பெண் பேதமின்றி பல துறைகளையும்/ திறனையும் வெளிப்படுத்தும் கதம்பத்தில் இணைய சந்தர்ப்பம் அமைத்து தந்தவர்களுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க விஜி!

      Delete
  33. நிறைய பெண் பதிவர்கள்.
    சிலர் தெரிந்தவர்கள்.
    சிலர் புதிது.
    அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் பார்த்துட்டு வாங்க.

      Delete
  34. பல பதிவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள்தான் என்றாலும் புதியவர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அறிமுகம் கிடைத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேடித் தேடிப் பார்க்குறென் ஆனாலும் புது ஆளுங்க சிக்க மாட்டேங்குறங்க.

      Delete
  35. ஆஹா இந்தவாரம் ராஜி ஆ... ரொம்ப அருமையாக அனைவரையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க ராஜி. இங்கு அறிமுகப்படுத்தியதை எனக்கு தெரிய படுத்திய ரூபனுக்கும் நன்றி.



    //எல்லாக் குழந்தையும் பெத்தவங்களுக்கு ஒண்ணுதான். ஆனா தங்கச்சி பாப்பா பொறந்ததால தனக்கு மரியாதைப் போய்டுச்சுன்னு பெருசும், மூத்ததைத்தான் புகழ்றாங்க. என்னைக் கண்டுக்கிடறதில்லைன்னு சின்னதும் மனசுல நினைச்சும். ரெண்டாவது பிள்ளைப் பேறின் போது நினைவில் வச்சுக்க வேண்டியதை ஜலீலா கமால் நல்லா சொல்லி இருக்காங்க.// ரொம்ப சூப்பராக சொல்லி இருக்கீங்க

    மிக்க நன்றி ராஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா!

      Delete
  36. வலைச்சர ஆசிரியர் பணிக்கு இனிய வாழ்த்துக்கள் ராஜி. தோழியர் வட்டாரத்தில் எனக்கும் இடம் அளித்து கெளரவித்தமைக்கு மிக்க நன்றி. சக தோழியர்க்கு வாழ்த்துக்கள்.

    ராஜி, உங்களுடைய நேர மேலாண்மையும் சுறுசுறுப்பும் எனக்கு மிகவும் பிடித்தவை. ஏராளமான அறிமுகங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதோடு உங்கள் தளத்திலும் பதிவுகளைப் பதிந்து அசத்துகிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா!

      Delete
  37. தாமத வருகைக்கு மன்னிக்கவும் அக்கா. நேற்று வெளியில் சென்று விட்டேன். ஆனாலும் நினைத்தேன் நாம் வலைச்சரம் போகாத நாளில்தான் அக்கா தென்றலின் அறிமுகத்தை எழுதுவாங்க என்று அதே போல் தான் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா. உங்க பாசத்துக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. உன் பாசத்தை இவ்வளவு லேட்டாவாக் காட்டுறது!?

      Delete
  38. நிறைய புதிய அறிமுகங்கள்(எனக்கு) ஒரு நடை போகணும்....

    ReplyDelete
    Replies
    1. ஒரே மூச்சில் பார்த்துட்டு வந்துடுங்க அமுதா!

      Delete
  39. விஜயலட்சுமி சுஷில்குமார், வீணாதேவி, ரஹீமா ஆகியோர் தெரியாதவர்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. அறியாதவர்களை அறிந்துக் கொண்டதுக்கு நன்றி ஸ்பை.

      Delete
  40. ஆஹா! எத்தனை பெண் பதிவர்கள்! அதானே பார்த்தேன் DD இல்லாமலா? இப்ப பாருங்க நீங்க சொன்ன தளத்துக்கு எல்லாம் அவர் போயிருப்பாரு அத்தனை சூப்பர் மேன்ங்க அவரு! ஸாரி...இது பெண்கள் சேவையோ?!!! என்னுடன் தோழியும் உள்ளார் என்னோடு எழுதுவதற்கு.....ஆனால் முன் மொழிய மாட்டேனெங்கின்றார்கள்!

    அருமையான அறிமுகங்கள்! இனிதான் பெண்கள் தளங்களுக்கு முழுமையாகப் போக வேண்டும்!!!

    நன்றி! சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. உங்க தோழிக்கு பதிலாய் நாங்க உங்களை முன் மொழியுறோம்

      Delete
  41. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. உண்மைதான் ராஜி. இங்கே வலையுலகில் எந்த வித இடரும் இல்லாமல் இயல்பாய் பழகும் தோழிகள், அடுத்தவரின் எழுத்தை ரசித்து நேசித்து பாராட்டும் தோழிகள் அமைந்திருப்பதும் இங்கேதான் . அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். என்னையும் தோழிகளுள் ஒருவராய் இணைத்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  44. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    என் துணைவியின் தளத்தினையும் இன்று அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது