07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 8, 2014

நட் “ பூக்கள்” நண்பர்களும் தொடர்பவர்களும்!

நட்”பூக்கள்!”

அற்ற நீர்க்குளத்து அறுநீர்ப்பறவைகள் போலல்லநட்பு!
  உற்ற துணையாய் உடன்வருவதே உண்மைநட்பு! வரலாற்றில் இடம்பெற்றது பிசிராந்தையார்-   கோப்பெருஞ்சோழன் நட்பு!
 ஔவை- அதியமான் நட்பு தமிழ்வளர்த்தது!
துரியோதணன் – கர்ணன் நட்பு கடன் தீர்த்தது!
  உடன்பிறப்பில்லா பிறப்புக்கள் இருக்கலாம்! உலகிலே!
  உயிராய் வரும் நட்பில்லா பிறப்பேது!
 அன்னை தந்தை, ஆசிரியர் கற்பிக்காததையும்
   ஆருயிர் நண்பன் கற்றுத்தருவான்!
 நண்பன் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பது நட்பல்ல!
 தவறானால் திருத்தம் சொல்வதும் திருத்துவதும் நட்பு!
நட்பில்லா வாழ்க்கை உப்பில்லா சமையல் போல!
உன் நண்பனை பார்த்தால் உன் குணம் தெரியும்- பழமொழி!
 அன்று அக்கம்பக்கத்தோடு நட்பு! அது வளர்ந்து
 மேலூர்- கீழூரோடு நட்பு! பின் பேனா நட்பு!
இன்றோ இணைய வெளி! உலகம் எங்கும் உள்ளவரோடு
நன்றாய் பழக நட்பு பூக்கிறது!
இன்று என் நண்பர்களின் வலைப்பூக்களில் இருந்து
வலைச்சரம் வாசம் வீசப்போகிறது!


இணைய வெளியில் நுழைந்ததும் தட்டுத்தடுமாறி பதிவுகள் போட்டதும் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர் மேலையூர் ராஜா. அவரது வலைப்பூவில் எனக்குப்பிடித்த சில ப்ளஸ் டூவிற்கு அடுத்து என்ன படிக்கலாம்?  இதையும் படித்துப்பாருங்கள் ராஜிவ் கொலைவழக்கு!

பின்னூட்ட புலி என்ற பட்டத்தோடு அறிமுகமானவர் திண்டுக்கல் தனபாலன். அழகான பாடல்களோடு இவர் எழுதும் பதிவுகள். அதில் மிளிரும் தொழில்நுட்பம் என்னை அசத்தும். இவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை நெய்யா இருந்தா ஊத்துவியா? துன்பம் வந்தாலும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்  என்று சொல்கிறார்


மூங்கில் காற்றில் கீதமிசைத்து நம்மை மகிழ்விக்கிறார் டி.என் முரளிதரன். கவிதை, நகைச்சுவை, அறிவியல் என ஆல்ரவுண்டர் பதிவர். என் முகப்பு பக்கத்தை வடிவமைத்தவரும் இவரே ! கந்தா! என்ற இவரது நண்பரை பற்றிய பதிவு இந்த பதிவுக்கு பொருந்திவருகிறது


திடம்கொண்டு போராடும் சீனு! இவரின் சிறுகதைகளும் நாடோடி எக்ஸ்பிரஸும் என்னை கவர்ந்தவை! பதிவர் சந்திப்பில் சில நொடிகள் பேசினோம்! மறக்கமுடியா சந்திப்பு அது. இவரின் பதிவுகள்  டீம் டின்னரில் கலந்து கொண்டது   ரயில் பயண அனுபவம் இவரது வார்த்தைகளில் நிரம்பி வழிகிறது!

மின்னல் வரிகளில் மின்னும் பாலகணேஷ் ஐயா! இவர் 2012ல் எனக்கு பெரிதும் ஊக்கம் கொடுத்தவர். தொடர்ந்து வந்துகொண்டிருந்தார் தளத்திற்கு. இப்போது என்ன கோபமோ தெரியவில்லை! இவரது  மார்ஜியானா வை படியுங்கள்!

ஸ்கூல்பையன் சரவணன்! பதிவர் சந்திப்பில் கிடைத்த நண்பர்! ஊக்கம் தரும் அன்பர். இவரது .தாத்தா! பற்றிய நினைவுகள் நம்மை துயரத்தில் ஆழ்த்தும்
   
 கோவை நேரம் ஜீவா அவர்கள் என்னுடைய மனைவியின் ஊர்க்காரர். பதிவர் சந்திப்பில் ரமணி ஐயாவிற்கு அடுத்தபடி இவரோடுதான் நிறைய நேரம் செலவிட்டேன்! இவரது பயணக்கட்டுரைகளும் படங்களும் சிறப்பு.   சர்பத் குடியுங்கள் இவரோடு சேர்ந்து! 

குடந்தையூர் சரவணன்! இவரிடம் பழகியது கொஞ்சம் நேரம்தான்!எளிமையான மனிதர் இவரது அரசியல்ல இதெல்லாம் சாதரணம்பா!  படித்துப்பாருங்கள்! சென்னையில் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டத்தை சுவைபட கூறியுள்ளார்

செங்கோவி! இவரது முருக வேட்டை தொடரின் தீவிர ரசிகன் நான்! நேரில் பார்க்கவில்லை! பார்க்க நினைக்கும் நண்பர் திரை விமர்சனங்களை சிறப்பாக எழுதுவார். நகைச்சுவை உணர்வு பொங்கும் இவரது பதிவுகளில் இதோ வீரம் ஜில்லாவான கதை!

வீடுதிரும்பல் மோகன்குமார்! இவரின் பதிவுள் எல்லாமே என்னைக் கவரும்!  தமிழ் மணத்தில் முதலிடத்தில் நீண்ட நாள் இருந்தவர் தினம் ஒரு பதிவு எழுதியவர் பயணக்கட்டுரைகள், டிவித்தொடர், சாமான்ய மனிதர்களின் சந்திப்பு, சட்ட ஆலோசனை எனபல தகவல்களை அறிந்து கொள்ள முடியும் இவரது இந்த  இணையப்பித்து ரசியுங்கள்!
  
நான் சந்திக்க துடிக்கும் இன்னொரு நபர் வெளிநாட்டில் வசிக்கும் இவரது பலபதிவுகள் என்னை கவர்ந்தது நாஞ்சில் மனோ!  நாம் அறியாத அசோகரின் முகம்!  பல தகவல்களை தருகிறது!

அரசியல் பதிவுகள் எழுதுவதில் கில்லாடி! இவரது பதிவுகள் எல்லா அரசியல்வாதிகளையுமே நக்கலடிக்கும் தாக்கும் முகநூலில் இப்போது பிஸியாக இருப்பவர் பதிவர் சந்திப்பில் இவரோடு ஒரு கைக்குலுக்கல் செய்து கொண்டதில் மகிழ்ச்சி!  பேய்க்கதை!  படித்துப்பாருங்கள்!


வரலாற்றுச்சுவடுகள்! இப்போழுது எழுதுவதை நிறுத்திவிட்டது ஏன் என்று தெரியவில்லை! முன்பெல்லாம் நாள்தோறும் பின்னூட்டத்தில் வந்து உற்சாகப்படுத்துவார் இவரது  ப்ளாஸ்டிக் தவிர்ப்போம்! படியுங்கள்!

சதிஸ் சங்கவி! இவரது பல பதிவுகள் கவர்ந்தன!   தினமும் சாலையில் ஈர்க்கும் குரல்  நம்மை என்னவோ செய்யும்!

கே.ஆர்.பி செந்தில்! இவரின் பல பதிவுகள் வியக்கவைக்கும்! பதிவர் சந்திப்பில் இவரோடு பேசியது மகிழ்ச்சி!  மரணம்  என்னும் இவரது சிறுகதையை வாசியுங்கள்

பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெய்! இவரையும் பதிவர் சந்திப்பில் சந்தித்தேன்! இவரது    கிராமத்து விளையாட்டுக்கள்  படித்துப்பாருங்கள்!

தேவியர் இல்லம் ஜோதிஜி! இவரையும் பதிவர் சந்திப்பில் சந்தித்தேன்! ஊக்கம் தரும் நண்பர் நம் கனவுகளின் நாயகன்!  பதிவில் தமிழ்மணம் உருவான வரலாறை சுவைபட கூறுகிறார் 


கும்மாச்சி! இனிய நண்பர்! சந்திக்க விரும்புவர்களில் ஒருவர்! இவரது கலக்கல் காக்டெயில் எனது பேவரிட்!  ஊடகங்களின் வெறியாட்டம்!
என்ற பதிவில் ஊடகங்கள் வரம்பு மீறுவதை வன்மையாக கண்டித்துள்ளார்.

அ. பாண்டியன் அரும்புகள் மலரட்டும் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார். சமீபகாலமாக இவர் பதிவுகளை வாசித்துவருகிறேன்! இவர் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சி! சினிமா சார்ந்த விமர்சனம்! படித்துப்பாருங்கள்!

இனியவை கூறல், இனிய ஓவியா என்ற இருதளங்களில் எழுதும் நண்பர் கலாகுமரன் ஆழ்ந்த அறிவாற்றல் மிக்கவர் என்பது பதிவுகளில் தெரியும் இவரது இந்த ஆராய்ச்சியை படியுங்கள்! ங என்ற எழுத்தை பற்றி விரிவாக அலசுகிறது கட்டுரை!

கிராமத்து கருவாச்சி தளத்தில் எழுதும் கலை தமிழ்த்தோட்டம் தளத்தில் அறிமுகமானவர் அங்கு நான் எழுதிய ஹைக்கூக்களை முதல் ஆளாய் பாராட்டியவர் இவரது இந்தப்பதிவை  கோனார்க் சூரியன் கோவில்!படியுங்கள்!

கரந்தை ஜெயக்குமார் கணித ஆசிரியரான இவர் எழுதும் பதிவுகளில் விளையாடும் தமிழ் வியக்க வைக்கும். என்னுடைய பதிவுகளை தினமும் படித்து கருத்திட்டு ஊக்கமளிப்பவர் இவரது இந்த படைப்பை  வாசியுங்கள்!

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற தளத்தில் நண்பர் குட்டனின் பதிவுகள் நவரசம் கலந்தவை! அவரது இந்தப்பதிவு!  சிரிக்க வைக்கும்!

ஜாக்கி சேகரின் எழுத்துக்கள் அப்படியே வசீகரிக்கும் சினிமா சொந்த அனுபவங்கள் என்று கலந்து எழுதுகிறார் இதைப்படியுங்கள்!  குறையொன்றுமில்லை!
சிட்டுக்குருவி தளத்தில் எழுதும் விமலனின் கதைகள்,கவிதைகள் வித்தியாசமானவை! சிதறல்! என்ற கவிதை நம்மை சிந்திக்க வைக்கும்.

நான் பேச நினைப்பதெல்லாம் தளத்தில் எழுதி வரும் சென்னைப்பித்தன் ஐயாவின் இந்த பசியை படியுங்கள்! நடுநிசிப்பசி!

வை கோபாலகிருஷ்ணன் சிறுகதை விமர்சனப்போட்டி நடத்துகிறார் காஞ்சி சங்கராச்சாரியார் குறித்த இவரது பதிவுகள் சிறப்பு இவரது சிறுகதை  ஜாங்கிரி  சமையல் செய்பவர்களை கொஞ்சமாவது மதித்து நடத்தவேண்டும் அவர்களும் மனிதர்கள்தான் என்று உணர்த்துகிறது

ஆரூர் மூனா செந்தில் திரை விமர்சனம் உடனுக்குடன் எழுதுவார் இவரது இந்த காதலியை சந்தியுங்கள்!  என் கிராமத்துக் காதலி!

தேன் மதுரத்தமிழ் தளத்தில் எழுதும் சகோதரி கிரேஸ் இலக்கியங்களை சுவைபட பகிர்வார் இவரது  ஐங்குறுநூறு  பாடல் விளக்கம் ரசியுங்கள்.

உண்மையானவன் தளத்தில் எழுதிவரும் சொக்கன் சுப்ரமணியன் தலைவா பட அனுபவங்களை ரசியுங்கள்!  தலைவா! பட அனுபவம்

பரிதி முத்துராசன் அவர்கள் முதலில் ஹைக்கூக்கள் கவிதைகள் என்று எழுதிக்கொண்டிருந்தார். இப்போது சினிமா பதிவுகளில் கலக்கிவருகிறார். இவரது போட்டோக்களில் மேஜிக் செய்கிறார்  கோச்சடையான்   பதிவை படித்துப்பாருங்கள்!

வெங்கட நாகராஜ் டெல்லியிலும் திருவரங்கத்திலிருந்தும் பதிவுகள் எழுதுகிறார் இவரது சமிபத்திய பதிவு கட்டில் சப்ஜி!  அவசரத்தில் வார்த்தைகளை மாற்றி பேசி குழம்பிப் போவதோடு மற்றவரையும் குழப்புவோம்! அதை இதில் ரசியுங்கள்!

புதுவை சந்திர ஹரி குமுதம், விகடன் எனபிரபல பத்திரிக்கையில் பிஸியாக எழுதியவர் இவரது வலைப்பூவில் முன்பு பத்திரிக்கையில் எழுதியதை பகிர்கிறார் குட்டிக்கதை!

எங்கள் ப்ளாக்கில் நான் தொடரும் வலைப்பூ கவுதமன், ஸ்ரீராம் கலக்குகிறார்கள் இதோ பாருங்கள்!  ராங்க் கால்!  ராங்க் கால் வந்தால் எப்படி சமாளிக்கலாம்? நகைச்சுவையோடு கற்றுத்தருகிறார்

வேர்களைத் தேடி என்ற தளத்தில் முனைவர் குணசீலன்  எழுதிய இந்த பதிவு நிறையா வாழ்க்கை! புறநானூற்று தகவல்களுடன் சமீப வாழ்க்கையையும் அலசுகிறது.

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் என்ற தளத்தில் ரூபன் கவிதைகள் எழுதிவருவதோடு புதிய படைப்பாளிகளையும் ஊக்குவித்து வருகிறார். கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்திவருகிறார். இவரது இந்த கவிதை  சுனாமி நினைவுகளை சோக காட்சியாய் விவரிக்கிறது!

கனவு மெய்ப்பட வேண்டும் தளத்தில் எழுதும் ரூபக் ராம்  தேன் மிட்டாய்  என்ற தலைப்பில் பல்சுவை அனுபவங்களை பகிர்கிறார்இவர்கள் மட்டும் எனது நண்பர்கள் அல்ல! நான் தொடரும் அனைத்து வலைப்பூ எழுத்தாளர்களும் நண்பர்களே! கிடைத்த வாய்ப்பில் இவர்களை அறிமுகப்படுத்த முடிந்தது அவ்வளவே!

என்னால் முடிந்த அளவு நிறைய வலைப்பக்கங்களை அறிமுகம் செய்துள்ளேன்! சென்று பாருங்கள்! பிடித்த வலைப்பூக்களின் வாசம் நுகருங்கள்! ஊக்கப்படுத்துங்கள்!

மீண்டும் நாளை சந்திப்போம்! நன்றி!


31 comments:

 1. நண்பரே! நீங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பூக்கள் எண்ணிக்கையில் நிறைய ...அவைகள் உங்களின் பரவலான வாசிப்பையும் நேசிப்பையும் பிரதிபலிக்கின்றன .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தங்களின் இனிய அறிமுகம் - அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
  தமிழ் தோட்டத்தில் தொடங்கிய நட்பு தொடர்வதில் மிக்க மகிழ்வைத் தருகின்றது சகோ!

  தங்களின் வலைச்சர பணி மிகவும் சிறப்பாக இருக்கின்றது! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 3. உங்கள் ஒவ்வொரு வலைச்சரப் பதிவிலும் முன்னுரை மிக அருமை!
  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. மிக்க நன்றி தலைவரே, தங்களை சந்தித்தபோது நிறைய விசயங்களை பேச முடியவில்லை. மீண்டும் ஒரு முறை உங்களை சந்திக்கும்போது பேசுவோம்,

  அன்பு,
  கே.ஆர்.பி.செந்தில்

  ReplyDelete
 5. எனது தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி... + புதுவை சந்திரஹரி அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  தம்பி ரூபன் அவர்களின் தள (பதிவின்) இணைப்பை சிறிது மாற்ற வேண்டும்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டிடி! ரூபனின் இணைப்பு வேலை செய்கிறதே? என்ன மாற்றவேண்டும்?

   Delete
 6. எங்கள் ப்ளாக் பற்றிக் குறிப்பிட்டதற்கு, எங்கள் நன்றி.

  ReplyDelete
 7. அதிகமான எண்ணிக்கையில் வலைப்பூ பதிவுகளைப் படித்து இவ்வாறு பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்துவருவதை இந்த ஒழுங்கு உணர்த்துகிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. வணக்கம்

  சொல்ல முடியாத அளவுக்கு மிக கூடிய வலைப்பூக்களை இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளிர்கள் பாராட்டுக்கள்... அத்தோடு என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்துள்ளிர்கள்... மிக்க நன்றி... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... எல்லாவலைப்பூக்களும் நான் செல்லும் தளங்கள்தான்...

  தங்களுக்குரிய பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளிர்கள் மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்.
  வலைப்பூ நம் வழி நட்பு தொடரட்டும்.......

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. வணக்கம்

  இன்றுஎன்னுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தகவல் வழங்கிய எனது அண்ணா (தனபாலன்) அவர்களுக்கு....எனது நன்றிகள்..

  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. ஏராளமான வலைப்போக்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
  பதிவும் எழுதி கொண்டு இவ்வளவு வலைப் பூக்களை படிப்பது ஆச்சர்யம்தான்
  எனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 11. என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே....

  ReplyDelete
 12. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சுரேஷ்!

  ReplyDelete
 13. நன்றி சுரேஷ்..நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்.

  ReplyDelete
 14. அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமைசாலிகள்...அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வளவு பேர்களையும் பொறுமையுடன் அறிமுப்படுத்தி இருக்கீங்க சுரேஷ்... really great

  ReplyDelete
 15. அன்பு சகோதரருக்கு வணக்கம்
  //அ. பாண்டியன் அரும்புகள் மலரட்டும் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார். சமீபகாலமாக இவர் பதிவுகளை வாசித்துவருகிறேன்! இவர் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சி! சினிமா சார்ந்த விமர்சனம்! படித்துப்பாருங்கள்!// தங்களைப் போன்ற படைப்பாளிகளின் நட்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்வேன். எனக்கும் மிக்க மகிழ்ச்சி. வலைச்சர அறிமுகத்திற்கு சிறப்பு நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் சகோதரர்.

  ReplyDelete
 16. இரண்டு மூன்று தினங்களாக வலைப்பக்கம் வரவில்லை, அறிமுகத் தகவல் அளித்த நண்பர் டி.டி க்கு நன்றி

  ReplyDelete
 17. பலரும் அறிந்த பதிவாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.கிராமத்துக்கருவாச்சி கலை இணையத்துக்கு வரமுடியாத தூரத்தில் களப்பணி அவரின் அறிமுகத்துக்கு கலையின் சார்பில் தனிமரம் அண்ணாவின் நன்றிகள் சுரேஸ் அண்ணாச்சி. தொடர்வோம்.

  ReplyDelete
 18. ரொம்ப நன்றி....சுரேஷ்....

  ReplyDelete
 19. அனைவருக்கும் நன்றிகள்! பணி என்னை துரத்துகிறது! மாலையில் சந்திப்போம்! நன்றி!

  ReplyDelete
 20. ஏராளமான வலைப் பதிவர்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.
  என்னையும்தான்
  நன்றி நண்பரே
  தொடருங்கள், தொடர்ந்து வருகிறேன்

  ReplyDelete
 21. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே... படித்துக்கொண்டிருப்பதால் எழுதுவதை தற்போது தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன், விரைவில் வலையுகத்திர்க்கு திரும்புவேன்.!

  தங்கள் அன்பிற்கு நன்றி!

  ReplyDelete
 22. //வை கோபாலகிருஷ்ணன் சிறுகதை விமர்சனப்போட்டி நடத்துகிறார் ...................................................................................................................//

  எனது வலைத்தளத்தினைப்பற்றி குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க நன்றி.

  தகவல் அறிவித்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 23. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

  ReplyDelete
 24. எனது வலை தளத்தை பற்றி குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சுரேஷ்

  ReplyDelete
 25. என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சுரேஷ்.இது எனக்கு ஒரு மகிழ்ச்சியான வாரம்தான்!

  ReplyDelete
 26. சபாஷ் பாபு ...இல்லை இல்லை .. சபாஷ் ,சுரேஷ் பாபு !
  த ம 9

  ReplyDelete
 27. "//உண்மையானவன் தளத்தில் எழுதிவரும் சொக்கன் சுப்ரமணியன் தலைவா பட அனுபவங்களை ரசியுங்கள்! தலைவா! பட அனுபவம்//"

  என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சுரேஷ்.
  இவ்வளவு வலைப்பூக்களையும் தொடர்ந்துக்கொண்டும் தங்களின் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருவதை நினைக்கும்போதும் மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.  ReplyDelete
 28. அடாடா... நான்கு தினங்களாக வெளியூர்ப் பயணம் அமைந்துவிட்டதால் தாமதமாகத்தான் கவனித்தேன். என்னைப் பற்றிய தங்களின் மகிழ்வு தந்த அறிமுகத்திற்கு மனம் நிறைய நன்றி சுரேஷ்! வாழ்க்கையானது என்னை பல திசைகளிலும் பந்தாகத் தூக்கியெறிந்து வேடிக்கை பார்ப்பதால் முன்போல அதிகம் நேரம் இணையத்தில் செலவிட முடிவதில்லை என்பதுதான் நிஜம். மற்றபடி நண்பர்கள் மேல் எனக்கு என்றும் கோபம் வராதுப்பா. இப்படி நிறைய விஷயங்களைப் படிக்காமல் விடுவதால் நான் இழப்பதுதான் நிறைய. சரிதானே...!

  ReplyDelete
 29. என்னையும் இவ்வார வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ். இந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 30. என்னை நினைவுகூர்ந்ததற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது