07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 6, 2014

வலைச்சரத்தில் கவிப்பூக்கள் 2

 வலைச்சரத்தில் கவிப்பூக்கள் 2



   ஆறுகள் போலத்தான் கற்பனையும்!
   பெருக்கெடுத்தோடும்வெள்ளமாய் பாய்ந்தோடும் சிலசமயம்!
   பெரிதும் வறண்டு விடும் சிலசமயம்!
   ஊற்றுக்கள் போலத்தான் கற்பனையும்!
   வறண்டாலும் மீண்டும் ஊற்றெடுத்துவிடும்!
   நாற்றுக்கள் போலத்தான் கற்பனையும்! விதைத்ததும்
   உருவாக்க உரமிட வேண்டும்!
  கர்ப்பம் தரிக்கும் காலத்தையும் கற்பனை ஊற்றெடுக்கும்
  நேரத்தையும்  கணக்கிட முடியாது!
  கனவிலும் உதிக்கும் கரு! கர்ப்பம் போலத்தான் கற்பனையும்!
  பேணாவிட்டால் சில சமயம் கலைந்துபோகும்!
  பிள்ளை வளர்ப்பு போலத்தான் கற்பனை வளர்ப்பும்!
  சரியாக வளர்க்க வில்லை என்றால் படைப்பு பாழாகும்!
  கற்பனை வேர்பிடித்தபின் வார்த்தை நீர் ஊற்றி
  ஏட்டில் வடித்தெடுக்கிறான் எழுத்தாளச் சிற்பி!

   கவிதை ஊற்றெடுத்து கவிபாடும் கவிதைத் தளங்களை இனி காண்போம்!



1.தூரிகைச்சிதறல்- தளத்தில் கவி காயத்ரி படைக்கும் கவிதைகள் அழகானவை கோலம் போட்டிருக்கிறார் இங்கே ரசியுங்கள்
    
 2. சீனிகவிதைகள் என்ற தளத்தில் நண்பர்  சீனி கவிதைகளும் கதைகளும் எழுதிவருகிறார். புத்தகங்களை கவிதையாக தருவது அவர் சிறப்பு இதோ இதைப்படியுங்கள் மூன்றாம் சேரமன்னன்
    
 3. காவியக்கவி –என்ற தளத்தில் இனியா.வின் இந்தக்கவிதையை ரசியுங்கள் மாதவம் செய்திடல் வேண்டும்
    4. தென்றல்- என்ற தளத்தில் எழுதி வருகிறார் கீதா.அவரது இந்த கவிதையை ரசியுங்கள்அதீத இரக்கம்
  
 5. என்னுயிரே-  என்ற தளத்தில்சீராளன்.எழுதும் கவிதைகள் உருகவைக்கும் இதோ சாம்பிளுக்கு ஒன்று உயிர் உருகும் வேளையிலே!
   6வானம் வெளித்தபின்னும்- என்ற தளத்தில் எழுதி வரும் ஹேமா.வை அறியாதார் சிலரே! அவரது கவிதைகள் கனமானவை! இதோ ஒன்று படைத்தவனும் படைத்தவனும்

 7.ரஞ்சித்மோ கவிதைகள்! தளத்தில் ரஞ்சித் படைத்த இந்த கவிதையில் எத்தனை ரசனை! நான் ஒரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டேன்!
 8.வசந்த மண்டபம்- தளத்தில் எழுதிவரும்  மகேந்திரன் இலக்கியவாசனை மிக்கவர் இவரின் இந்த படைப்பை வாசியுங்கள் தன்னிறைவே தகைவாய்!

 9.பெண் என்னும் புதுமை- தளத்தில் எழுதிவரும் கோவை சரளா புத்தகங்களும் வெளியிட்டு உள்ளார் பெண்ணுரிமைப் போராளி இவரது கவிதைகளில் பெண்ணுரிமைகருத்துக்கள் ஓங்கி ஒலிக்கும் ஆனந்த விகடனில் வெளியான இவரது கவிதையை படியுங்கள் விகடனில் வெளியான கவிதை  இவர் எழுதிவரும் கவிதைத்தொடர் இது! உள்ளத்தின் ஓசை! 

10.தென்றல்- என்னும் தளத்தில் சசிகலா அவர்கள் எழுதும் கிராமியக் கவிதைகள் பிரசித்தம்! அமைதியானவர் பதிவர்சந்திப்பில் இவரோடு பேச நினைத்தும் முடியவில்லை! இவரது கவிதை நூல் ஒன்றை இலவசமாக எனக்கு அனுப்பினார் நன்றிக்கடன்பட்டுள்ளேன் இவருக்கு இவரது கிராமியக்கவிதை ஒன்று கிராமிய மணம் கமழும் கவிதை   இந்தக் கவிதையை படித்து சர்க்கரையில் இனிப்பிருக்குதா சொல்லுங்கள்! சர்க்கரையில் இனிப்பெதற்கு  

11.தமிழ்க்கவிதைகளின் தங்கச்சுரங்கம் தளத்தில் எழுதும் ஸ்ரவாணி அவர்களின் இந்தக் கவிதையை ரசியுங்கள் இயற்கையின் கச்சேரி!  இயற்கையின் கச்சேரி இதையும் படியுங்கள் காதலாட்டம்  

12.இளையநிலா- தளத்தில் எழுதிவரும் சகோதரி இளமதியின் இந்தப்படைப்பை ரசியுங்கள் கைவினைத்தொழிலும் இவருக்கு கைவந்த கலை! விரைந்திடுக! 

13.கவரிமானின் கற்பனை காவியம்- தளத்தில் எழுதி வரும் ஹிஷாலியின் ஹைக்கூக்கள் சிறப்பு! இதோ ஒன்று! ஹைக்கூக்கள் 

14.அம்பாளடியாள் வலைத்தளம் சகோதரி அம்பாளடியாள் கவிதைகள் பாடல்கள் என சிறப்பாக படைத்துவருபவர் இவரது இந்த கவிதையை ரசியுங்கள் இளமையில் வறுமை கொடிது   காதல்சுவை மிளிரும் பாடல் இது!வஞ்சர மீனே    15.ஆதிராபக்கங்கள் தளத்தில் ஆதிரா முல்லையின் கவிதைகள் வியக்கவைக்கும்! மோனாலிசாவுக்கு மீசை வைக்கிறார்   இங்கே 

16.இந்திராவின் கிறுக்கல்கள் தளத்தில் எழுதிவரும் இந்திராவின் இந்த கவிதை உங்களுக்கு பிடிக்கும்! இங்கு l

17.இரவின் புன்னகை தளத்தில்வெற்றிவேல் காதல்கவிதைகளை வடிக்கிறார் உதிரும் நான்  சரித்திர நாவலும் படைக்கிறார் வானவல்லி 

18.கரைசேரா அலை அரசன் தமிழ்த்தோட்டத்தில் அறிமுகமானவர்! இவரது காதல்கவிதைகள் பிரசித்தம்! இதோ ஒன்று!   இங்கே விருது வாங்கிய இவர் படைப்பு   ஊர்ப்பேச்சு

19.கவியாழி கண்ணதாசன் கவியாழி என்ற தளத்தில் சிறப்பான கவிதைகள் நிதமும் தந்துகொண்டிருக்கிறார். ஒன்றை படியுங்களேன்!   மனிதம் மனதிலே இருந்தால்   

20.காரஞ்சன் சிந்தனைகள் சேஷாத்ரியின் கவிதைகள் சிறப்பானவை! இதைப்படியுங்கள்! மழைக்காலப்பார்வை  

21. நண்டு@ நொரண்டு தளத்தில் அரசியல் களத்தோடு கவிதை களத்திலும் இருக்கும் நண்பரின் கவிதை டைரிகள்   டைரிகள்

22.நிகழ்காலம் தளத்தில் பல்சுவை எழுதும் சகோதரி எழிலின் இந்த கவிதை அருமையிலும் அருமை! இருப்பு 

23.புலவர்கவிதைகள் தளத்திலெழுதும் இவருக்கு தள்ளாத வயதிலும் எழுத்தார்வம்   விடவில்லை! மரபுக்கவிதைகள் வடிக்கும் புலவர் ஐயா இராமானுசம் அவர்களின் இந்த படைப்பை வாசியுங்கள்! போதுமென்ற மனம் 

24.வவ்வையூரான் இராஜமுகுந்தன் அவர்களின்ஹைக்கூக்கள்   இனிமையானவை!  

25.ஜெ கவிதைகள் தளத்தில் சகோதரி ஜெயசரஸ்வதியின் இந்தக்கவிதை   படியுங்கள் 

26.ஏ.பி தினேஷ்குமார்- தமிழ்க்கவிதைகள் தளத்தில் எழுதிவருகிறார் இவரது கவிதைகளில் காதல் வழிந்தோடும் உதாரணத்திற்கு ஒன்று!  இங்கே  

27.அருணா செல்வமே வலைப்பூவில் சகோதரி அருணாவின் கவிதை ரசியுங்கள்!ரசியுங்கள்  

28.கி.பாரதிதாசன் தனது தளத்தில் தமிழனை விழித்தெழச்சொல்லுகிறார் இங்கே 

29.நாடி கவிதைகள் நாராயணன் எழுதிய இதை  வாசியுங்கள்!  

30.என் இதயம் பேசுகிறது தளத்தில் எஸ்தர்சபி எழுதிய இந்தக்கவிதையை ரசியுங்கள்ரசியுங்கள்!  

31ஆயிஷா பாருக் என்னும் தளத்தில் எழுதிவரும் ஆயிஷாவின் இந்த திருநங்கை தாலாட்டை வாசியுங்கள் திருநங்கை தாலாட்டு 

32.கவிதை வீதி சௌந்தர் எங்க மாவட்டத்துக்காரர் இவரது இந்த கவிதையை ரசியுங்கள்! இப்படியும் பெண்ணா?  என்று ஆச்சர்யப்படுகிறார் இவர்  

33.ஹைக்கூ கவிதைகள் தளத்தில் எழுதிவரும் கா.நா. கல்யாணசுந்தரம் அவர்களின் ஹைக்கூக்களை இங்கு ரசியுங்கள் ஹைக்கூக்கள்

34.குட்லக் அஞ்சனா-என்ற பல்சுவை தளத்தில் பல பதிவுகள் ஆனந்த் ஆர்எழுதியுள்ள ஹைக்கூக்களை ரசியுங்கள்

35.எண்ணங்கள் அழகானால் தளத்தில் எழுதிவரும் நம்பிக்கை பாண்டியன் ஹைக்கூக்கள்  ரசிக்க வைக்கிறது

36.குகன் பக்கங்கள்- தளத்தில் எழுதிவரும் எழுத்தாளர் கவிஞர் குகன் மிக நீண்டகாலமாய் பதிவுலகில் சஞ்சரிப்பவர் சமீபத்தில் எதுவும் எழுதவில்லையெனினும் இவரது இந்தகுறுங்கவிதைகளை வாசியுங்கள்

37.சிவகுமாரன் கவிதைகள்- எழுதிவரும் சிவகுமார் இப்பொழுது எழுதுவது இல்லை! இதைவாசியுங்கள்!


38 குருசந்திரன் தளத்தில் எழுதிவரும் குருசந்திரன் வாலி போல சந்தக்கவிதைகள் எழுத முயல்கிறார் வரவும் செய்கிறது இவரது சந்தகவிதையை விட இது எனக்குப் பிடித்தது

39 ஆவிப்பா எழுதி கலக்கிய கோவை ஆவியின் இந்த நிலாப்பாவை  படித்துப்பாருங்கள்!



 40. ரவி உதயன் தளத்தில் அருமையான கவிதைகளை படைத்துவரும் இவரின் இந்தக் கவிதை உங்களை நிச்சயம் கவரும் 


எண்ணற்ற கவிஞர்கள் வலையினிலே! முதல்பாடில் சில மீன்கள் சிக்கின! இரண்டாம் பாடில்  பாடு அதிகம்! உழைத்து தொகுத்தேன்! நிறைய தளங்கள் என்பதால் அறிமுகத்தை சுருக்கி தளங்களின் இணைப்பை கொடுத்துள்ளேன்! படியுங்கள் ரசியுங்கள் அந்த தளங்களுக்குச் சென்று ஊக்கப்படுத்துங்கள்! வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகிறார்கள்! பதிவுகள் குறைந்து வருகிறது! இந்த நிலையில் ஊக்கம் மட்டுமே நிறைய வலைப்பூக்களை வாழ வைக்கும்! ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே! நாளை மதியத்தில் சந்திப்போம் இன்னுமொரு தொகுப்புடனே! நன்றி!

31 comments:

  1. nalla pathiukal.ennaium inaithamaikku nandri sir

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரர்
    தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க எனது வாழ்த்துகள். பகிர்ந்த அனைத்து பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரா..!
    வலைச்சர ஆசிரியர் பதவி ஏற்றமைக்கும், பணி சிறக்கவும் என் உளம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....!. அனைத்து பதிவர்களும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
    என்னையும் இதில் இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. நிறையப்பேரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...
    பலர் நான் விரும்பிப் படிக்கும் கவிஞர்கள்...
    மற்றவர்களைப் படிக்க வேண்டும்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. sirappaana arimukangal ! anaivarukkum vaazhthukkal .ungalukku en nandri kalantha vaazhthukkal sakotharaa.

    ReplyDelete
  6. சகோ!
    ஜாம்பவான்கள் மத்தியில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  7. கவித்தோட்டத்தில் பல மலர்கள் சிறப்பான தொகுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் . தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

    ReplyDelete
  8. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிய கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அனைத்தும் தொடரும் தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அனைவருமே தெரிந்தவர்கள்தான் வலைசரம் மூலம் ஆனாலும் மீண்டும் அவர்களை வாசிக்க ஒரு சந்தர்பத்தை உருவாக்கி தந்தமைக்கும் நீண்ட அறிமுக பட்டியலை கொடுத்தமைக்கும் ,என்னையும் என் தளத்தையும் அதில் இணைத்தமைக்கும் நன்றி தளிர் சுரேஷ்

    ReplyDelete
  11. கவிதை மழை!! சிலர் புதியவர்..
    வாழ்த்துகள் சுரேஷ்!

    ReplyDelete
  12. கரைசேரா அலை அரசன் அவர்களின் இணைப்பை மட்டும் மாற்ற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டி.டி சார்! லிங்க் கொடுக்கும்போது எப்படியோ மாறிவிட்டு இருந்தது. தற்சமயம் மாற்றி விட்டேன்! நன்றி!

      Delete
  13. தங்களது இரு நாள் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்தபின் கவிதைகளை இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. கதைகள், புதினங்கள் போன்றவற்றைப் படிப்பதிலுள்ள ஆர்வம் எனக்கு கவிதை படிப்பதில் இருந்ததில்லை. ஆனால் தங்களது பதிவு என்னை கவிதைகளிலும் ஒரு ஈர்ப்பை உண்டாக்கிவிட்டது. நன்றி.

    ReplyDelete
  14. எனது மற்றொரு வலைப்பூவிலிருந்தும் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி என் வாசிப்பில் கவிதைகளும் அடங்கும்.

    ReplyDelete
  15. உங்கள் உழைப்பு அசர வைத்தது.....

    எத்தனை கவிதைத் தளங்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
  16. தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க எனது வாழ்த்துகள். பகிர்ந்த அனைத்து பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும்...என்னையும் என் தளத்தையும் அதில் இணைத்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வருகை தந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி! இன்னும் சில கவிப்பூக்கள் இந்த பதிவில் விடுபட்டுவிட்டது. வாய்ப்பு கிட்டின் பின்னர் அவர்களை பகிர்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  18. இணையம் பக்கம் சரிவர வருவதில்லை ஆதலால் தங்களின் வலைச்சரப்பணியை காண இயலவில்லை மன்னிக்கவும். தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

    ReplyDelete
  19. என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  20. இத்தனை பேரின் கவிதைகளையும் வாசிக்கிறீர்களா.மகிழ்ச்சி.உங்களுக்கும் மற்றும் அறிமுகப்படுத்திய அத்தனை கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.என்னையும் நினைவூட்டியமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் சுரேஷ் !

    ReplyDelete
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. எனது வலைதளத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோ ... சிறு பாராட்டுகளும் நிறைய எழுத தூண்டும் ...!!!

    மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ....!!!

    ReplyDelete
  23. அனைத்து கவிஞர்களுக்கு இடையில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  24. இன்றைய கவித்துவமான வலைப்பூக்கள் அறிமுகங்கள் அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள். பட்டியலில் அடியேனையும் இணைத்ததற்கு
    என் மகிழ்வான நன்றிகள். வலைச்சர அறிமுகத்தை என் தளத்திற்கு வந்து
    முரசு அறிவித்த சகோஸ் DD & ரூபன் அவர்களுக்கும் இனிய தோழி
    இனியாவிற்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும். ஆன்மீக அறிமுகங்கள்
    எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் தளிர்.

    ReplyDelete
  25. கவியரசுகள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  26. ஆவிப்பாவின் அறிமுகத்துக்கு வாழ்த்துகள் நண்பா.. புத்தக வெளியீட்டு வேளையில் இப்போதுதான் வர முடிந்தது.

    ReplyDelete
  27. வணக்கம் தளிர் சுரேஷ்

    என்வலையின் இன்கவிகள் எல்லோர்க்கும் போய்ச்சேரும்
    உன்னினிய அன்பில் உருக்கொண்டே - என்கரங்கள்
    கன்னித் தமிழினிக்க காதல் ரசம்கொட்ட
    இன்னும் எழுதும் இனித்து !

    அறிமுக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  28. ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் சகோதரர். தளிர் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். எமது வலைப்பூவின் அறிமுகத்திற்கு மகிழ்ச்சி..அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். எழுத்து மழைகள் அனைவரது மனப்பூமியை குளிர்விக்கட்டும்..:) _/\_

    ReplyDelete
  29. பரிந்துரைத்த ஒவ்வொரு தளமும் அருமை ...!!!

    நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் ஒரு தரம் ஒவ்வொரு வலைதளத்தையும் முழுதாக வாசிக்க முயலுகிறேன் ஆசையும் கூட ...!!!

    இனிதே இப்பணி தொடர ஒவ்வொரு ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
  30. தளிர் சுரேஷ்க்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது