07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 9, 2014

மஞ்சுபாஷினி சம்பத் குமார் - தளிர் சுரேஷிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - சா.சுரேஷ் பாபு   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 204
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 283
பெற்ற மறுமொழிகள்                            : 176
வருகை தந்தவர்கள்                              : 1952

சா.சுரேஷ் பாபு  ஆன்மீகத்தில் உள்ள  ஈடு பாடு காரணமாக அனேக  அறிமுகங்களை பெரும்பாலும் ஆன்மீகத்துறையில் இருந்தே எடுத்திருக்கிறார்.  

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

283 பதிவுகள் அறிமுகம் மற்றும் வருகை தந்தவர்கள் 

எண்ணிக்கை 1952 என்பதும்  பிரமிக்க வைக்கிறது. 


சா.சுரேஷ் குமாரினை அவரது   கடும் உழைப்பினைப் 
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி 

அடைகிறோம். 

நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் 
திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் 

இவர்  கதம்ப உணர்வுகள் என்னும் தளத்தில்எழுதி 
வருகிறார். 

இவர் ஏற்கனவே 01.10.2012ல் ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கிறார். அப்பொழுது எழுதிய அறிமுகம் : 

இவருக்கு இவர் தாத்தா அன்புடன் ஆசையுடன் வைத்த பெயர் மஞ்சுபாஷிணி. இவர் குவைத்தில் கணவர், இரண்டு பிள்ளைகள், மற்றும் அம்மாவுடன்  வசிக்கிறர். வேலைக்கு சென்றுக்கொண்டே வீட்டிலும் எல்லோர் தேவைகளையும் பார்த்துக்கொண்டு அவ்வப்போது எழுதுகிறார்.

வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த இவருக்கு 2007 இல் இவரது  தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா - ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து இவரது படைப்புகளைப் பதிவிட கற்றுத் தந்தார்.

கூகுளீல் ஏதோ தேடப் போய் - ஒரு வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத ஆசைப்பட்டு எழுதினார்.. அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக…. 
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார்.. 

அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற இவரது நம்பிக்கையும் பொய்க்கவில்லை.

மஞ்சு பாஷினியினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
நல்வாழ்த்துகள் சா.சுரேஷ் பாபு 

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத்குமார் 

நட்புடன் சீனா 

41 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. அயராது உழைக்கும் சீனா அய்யா போலவே ஒரு வாரத்திற்குள் சுரேஷ் செய்த சாதனை பிரமிக்கக்கூடியதே. வாழ்த்துகள் சுரேஷ். வருக மஞ்சு சுபாஷிணி. நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையே உங்கள் கூற்று. திரு சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களின் லிஸ்ட் பார்த்து பிரமிப்பு எனக்குள். சுரேஷின் உழைப்பு இதில் தெரிகிறது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜோதிஜி.

   Delete
 3. நல் வாழ்த்துகள் சுரேஷ்...!

  மஞ்சு பாஷினியினை வருக வருக என வலைச்சர வருகைக்கு வரவேற்று வாழ்த்துகிறோம் ..!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி. போன வெள்ளிக்கிழமை தனபாலன் சாரும் நானும் பேசும்போது உங்கள் ஆன்மீக பதிவுகளைப்பற்றி நினைவுக்கூர்ந்தோம்பா..

   Delete
 4. நன்றி சீனா ஐயா! காலையில் அவசர பணி வந்தமையால் இன்னும் ஓரிரிரண்டு பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்த முடியாமல் போய்விட்டது. அதில் ஒருவர்தான் நாளை ஆசிரிய பொறுப்பேற்க இருக்கும் திருமதி மஞ்சு சுபாஷிணி அவர்கள்! இன்னொருவர் பதிவுலக ஜாம்பவான் கேபிள் சங்கர் இவர்கள் இரண்டு பேரின் பதிவுகளை படித்து ரசித்து இருக்கிறேன்! பகிர்ந்து கொள்ள முடியாதது வருத்தமே என்ற போதிலும் விடை பெற்ற போது ஒரு நிறைவு கிடைத்தது! வாய்ப்பளித்த தங்களுக்கும் ஆதரவளித்த வாசக அன்பர்களுக்கும் நன்றி! வணக்கம்!

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்னப்பா.. நாம அறிமுகப்படுத்திருவோம் :) உங்க உழைப்பை நான் கண்டு பிரமித்தேன்பா.. அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் சுரேஷ்.

   Delete
 5. சாதனையுடன் விடைபெற்ற சுரேஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

  புதிய ஆசிரியர் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

   Delete
 6. பிரமிக்க வைத்துத் தனது பணியில் இருந்து விடைபெற்றுச் செல்லும்
  அன்புச் சகோதரரிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் இத்
  தருணத்தில் என் மனதிற்கு நெருக்கமான அன்புச் சகோதரி மஞ்சுபாஷினி
  அக்கா அவர்களை இவ்வார ஆசிரியைப் பணி சிறந்து விளங்கிட வருக
  வருக என வரவேற்று மகிழ்கின்றேன் .ஆழ்கடலில் முத்தெடுத்து அழகழகாய்
  கோத்து மகிழ்ந்து வாழ்வளிக்க வா மகளே வலைச்சரம் என்னும் வண்ணச்
  சோலைக்குள் திங்களும் துணையிருக்கும் மங்களகரமாய் உன்றன் பணி
  சிறக்க ! மிக்க நன்றி வருகைக்கு .

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வரவேற்பு ரொம்ப பலமா இருக்கேப்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

   Delete
 7. ஆஹா !

  வலைச்சரத்தில் மீண்டும் [மாட்டியவர்] மஞ்சுவா !!!!!

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

  மஞ்சூஊஊஊஊஊஊ ......... வெல்கம் !

  ஆல் தி பெஸ்ட் ப்பா !!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா :) இருக்கட்டும் இருக்கட்டும்... மாட்டினேனா :)

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

   Delete
 8. வணக்கம்

  ஒருவார காலமும் தனது பணியை சிறப்பாக செய்த சுரேஷ் பாபு அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்த வாரம் பொறுப்பாசிரியராக வருகிற மஞ்சுபாஷிணி. அவர்களை அன்புடன் வலைச்சரப்பணிக்கு வருக வருக வென்று அழைக்கிறோம்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன்

   Delete
 9. இந்த வார வலைச்சர ஆசிரியராகப்
  பொறுப்பேற்கும் மஞ்சு அவர்களுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.

   Delete

 10. வலைச்சரம் பொறுப்பேற்க இரண்டாம் முறை ஆசிரியையாக வந்த சகோதரி திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இளங்கோ சார்.

   Delete
 11. வாங்க... வாங்க... அசத்த மீண்டும் வாங்க சகோதரி...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அசத்தவா? அச்சச்சோ.. அப்டி எல்லாம் எதுவும் இல்லப்பா.. :)

   Delete
 12. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பித்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சுரேஷ்

  ஆசிரியராக பொறுப்பேற்கும் திருமதி மஞ்சு சுபாஷினி சம்பத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சரவணன்.

   Delete
 13. தங்களின் வருகைக்காகவும் பதிவுகள் அறிமுகத்திற்காகவும் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஐயா.. அன்பு வணக்கங்கள்.

   Delete
 14. சிறப்பாக இவ்வாரத்தை நிறைவு செய்தி ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. சபாஷ் பாபு ...இல்லை இல்லை .. சபாஷ் ,சுரேஷ் பாபு !
  திருமதி மஞ்சு 'சபாஷ் 'ஷினி பாராட்டுப் பெற வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா சொல்லாடல் தொடங்கிட்டீங்களாப்பா? :) அன்பு நன்றிகள் பகவான் ஜீ.

   Delete
 16. கொடுத்த பணியைச் சிரமேற்கொண்டு
  செவ்வனே நற்செயலாற்றிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  ==
  புதியதாக பொறுப்பேற்கவிருக்கும் அன்பிற்குரிய சகோதரி
  மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்கிறேன்
  அகமகிழ்வுடன்..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மகேந்திரன்.

   Delete
 17. நண்பர் சுரேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
  அன்பிற்குரிய சகோதரி
  மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.

   Delete
 18. வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் பணி சிறப்பாக தொடங்க வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

   Delete
 19. மஞ்சு பாஷினியினை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம் ..!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜனா...

   Delete
 20. சுரேஷ் குமார் பாராட்டுக்கள், அருமையான உங்கள் வாரத்தினை பார்வையிடுகிறேன்.மஞ்சு பாஷிணிக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

   Delete
 21. அய் என் அக்காவா ? வாங்க வாங்க... சூப்பர்.

  ReplyDelete
 22. சென்ற வார ஆசிரியர் சுரேஷ்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள்....

  இந்த வார ஆசிரியர் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. படிக்க ஆவலுடன்... மஞ்சுபாஷிணி..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது