07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 1, 2014

டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்.-பாகம் -2

சென்ற பதிவின் தொடர்ச்சி... 

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...( முதல் பாகம்)

6.கோவை  சரளா.. 

தமிழ்த் திரையுலகில்  நகைச்சுவை நடிகைகள் மிகக்குறைவு.ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா.வேறு எவரும் போட்டிக்கு இல்லாததால் தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதில் சிறந்த நகைச்சுவை நடிகை என்ற பிரிவையே எடுத்துவிட்டார்கள். பின்ன.. இவர் ஒருவர் மட்டுமே அந்த விருதை வாங்கிக்கொண்டிருக்க முடியுமா...?   

முந்தானை முடிச்சில் அறிமுகம். பிறகு சிறு சிறு வேடங்கள். எஸ்.எஸ்.சந்திரன்- செந்தில் இணை கலக்கிய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தார். அதன் பிறகு இவருக்கு சுக்கிர திசை. செந்தில்- கோவை சரளா ஜோடியுடன் கவுண்டர்  இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க, 80-90 களில்  புகுந்து விளையாடியதுதான் இந்த ஜோடி. பிறகு வைகைப்புயலுடன் அடுத்த இன்னிங்க்ஸ். இந்த ஜோடி இருந்தாலே போதும். படம் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்த காலகட்டமும் உண்டு.

ஆரம்பத்தில் கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்த இந்த 'சின்ன ஆச்சி' , பிற்பாடு தன் குரலமைப்பை மாற்றிக்கொண்டார்.. பிரியாணியைக் கூட "ப்ப்பிர்ர்ரியாணி..." என்று தான் சொல்லுவார். கமலுடன் ஜோடி சேர்ந்தது பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்.

இவரது புகழ்பெற்ற வசனங்கள் சில...

’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’, ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’, ' ஹி..ஹி..நானா யோச்சிச்சேன்..'.. 

5.செந்தில்

தமிழ் சினிமாவில் எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் முதல் இன்னிங்க்ஸ், இரண்டா- வது இன்னிங்க்ஸ் என்ற காலகட்டங்கள் இருக்கும். ஆனால் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் செந்தில். லாரல்- ஹார்டி போல் புகழ்பெற்ற comedy duo -வை தமிழ்ச் சினிமாவில் சாத்தியப்படுத்தியது கவுண்டமணியும் செந்திலும். இவர் "அண்ணே...." என்க, பதிலுக்கு கவுண்டர்,"என்னடா..நாயே.."என்பதில் தொடங்கி எல்லா விலங்குகளின் பெயரை இழுத்துத் திட்டும்போது தமிழ் ரசிகர்கள் பூரித்துப்(!) போவார்கள். எந்த ஈகோவும் இல்லாமல் கவுண்டருடன் இணைத்து இவர் கலக்கிய காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம். 


4.விவேக்..சின்னக் கலைவாணர்... சனங்களின் கலைஞன் இப்படிப்பட்ட அடைமொழிகளை விரும்பிப் போட்டுக்கொள்வார். ஹீரோவுக்கு இணையாக 'பன்ச்' அடிப்பவர். சில நேரங்களில் ஹீரோவையே ஓவர் டேக் செய்வார். சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் தனது நகைச்சுவையில் நக்கலடித்து,சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். அதே நேரத்தில், நகைச்சுவையில் இரட்டை அர்த்த வசனங்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இன்னும் கமலுடன் இணையாதது மட்டும் இவருக்கிருக்கும் ஒரே குறை.

இவரது புகழ்பெற்ற வசனங்களில் சில... 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' , 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்', 'கோபால்.. கோபால்..', 'நான் எஸ்.ஐ-யா இருக்கேன்..', ' உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா..' 'அட பனியன் போட்ட சனியன்களா...', 'நீங்க வெறும் தாஸா..இல்ல லாடு லபக்கு தாஸா...' , நான் தான் அப்பவே சொன்னேனடா..', ' சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கே..', ' சிவா நீ எங்கேடா இருக்க..' இப்படி நீளும்.....
 
3.ஜனகராஜ்..

கதாநாயக ஆசையோடு திரையுலகில் நுழைந்து நகைச்சுவை நடிகரானவர். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. தனித்தன்மையான குரலமைப்பு உடையவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளின் செல்லப்பிள்ளை. 80 களில் கவுண்டமணிக்கு கடும் சவாலாக விளங்கியவர். 80-90 களில் தனி காமெடியா அல்லது கதானாகனோடு இணைந்த பாத்திரமா எதுவென்றாலும்  முன்னணி நடிகர்களின் முதல் தேர்வு ஜனகராஜ்தான்.  இணையத்தில் மனைவி 'தங்கமணி' ஆனது இவரால்தான்..

பாட்சாவில் ரஜினியுடனும், நாயகனில் கமலுடனும் குணச்சித்திர வேடங்களில் நடித்தது இவரது நடிப்புப் பயணத்தில் மைல்கல்.

இவரது புகழ் பெற்ற சில வசனங்கள்.."என்னமோ போடா மாதவா.."  'தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா'.." ” நோ தங்கமணி எஞ்சாய்”.. வேற சில இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

2.கவுண்டமணி...

'கோயமுத்தூர் குசும்பு' என்கிற சொல்லாடல் கவுண்டரால்தான் வந்திருக்கவேண்டும். கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சினிமாவில் வாய் ஓயாமல் பேசியே மக்களை கொள்ளை கொண்ட கவுண்டமணி, சிறு வயதில் பேசவே மாட்டாராம். ஒரு வார இதழுக்கு அவரது அக்கா அளித்துள்ள பேட்டியில் இப்படி கூறியுள்ளார்.

"இப்பதான் சினிமாவுலதான் இவ்ளோ வாய் பேசுறான். சின்ன வயசுல பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாதான் பேசுவான். சின்ன வயசுல எப்ப பாத்தாலும் பள்ளிக்கூடம் போகாம நாடகம் பாத்துட்டே சுத்திட்டு இருப்பான். பதினஞ்சு வயசுலயே "நாடகத்துல நடிக்க போறேன்" அப்படின்னு அவன் அடம பிடிச்சதால நான்தான் அவன கொண்டு போய் சென்னைல விட்டுட்டு வந்தேன். பின்னாடி பாய்ஸ் நாடக கம்பனியில சேர்ந்து அப்றமா எம்.ஆர்.ஆர்.வாசு, ஒ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடிச்சு அப்ரமாதான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளிலயே அவன் முகம் தெரிய ஆரம்பிச்சது"

மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் போன்ற சிகரம் தொட்ட இயக்குனர்களின் முதல் படத்தில் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாதான் காமெடி பாத்திரம் ஏற்றிருப்பார். தமிழ் சினிமாவில் 'நாள் சம்பளம்' என்கிற புதிய அத்தியாத்தை அறிமுகப்படுத்தியது கவுண்டர்தான். கவுண்டமணி -செந்தில் ஜோடி போல் இன்னொன்று இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என்கிறார்கள்.

கவுண்டரின் புகழ்பெற்ற வசனங்களில் சில... “பத்த வெச்சுட்டியே பரட்டை” ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ , ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’, ‘நான் ரொம்ப பிஸி’, ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்’,‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை’, ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’... இப்படி சொல்லிகொண்டே போகலாம்..


1.வடிவேலு :

மண்மணம் மாறாத தனித்துவமான மதுரைத்தமிழ் தான் வைகைப்புயலில் பலம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, இரட்டை அர்த்த வசனமில்லாமல் , பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன் இந்த இரண்டாம் புலிகேசி. பல படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவரது நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். எந்தப்புள்ளியில் கவுண்டரை வடிவேல் முந்துகிறார் என்று பார்ப்போம்.

நாகேஷுக்குப் பிறகு உடல் அசைவு, முகபாவனை கலந்த நகைச்சுவை வடிவேலுக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது. அதனால்தான் கருப்பு நாகேஷ் என்று இயக்குனர் இமயத்தின் மோதிரக்கையால் குட்டுவாங்கினார். சந்திரபாபுக்குப் பிறகு நல்ல குரல்வளம் உடைய சிரிப்பு நடிகர். நாகேஷுக்குப் பிறகு கதாநாயகனாக இமாலய வெற்றி கண்ட ஒரே காமெடி நடிகர். ( திண்டுக்கல் சாரதி எல்லாம் வெற்றிப்படம் என்று சொல்லாதீங்க). நடனத்தில் கூட தனி ஸ்டைல். சூப்பர் நடிகர்களுக்கெல்லாம் 'பன்ச் டயலாக்' வைக்க ரூம் போட்டு யோசிக்கும் சூழலில், இவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் 'பன்ச்' ஆக பரிணாமம் காண்கிறது. வைகைப்புயலில் 'பன்ச்' மட்டும் இல்லை என்றால் தமிழ்கூறும் பேஸ்புக் மற்றும் டிவீட்டர் உலகத்திற்கு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

கவுண்டரின் ஹைடெசிபல் காட்டுக்கத்தலும்,சகட்டுமேனிக்கு உதைக்கும் வன்முறையும் குழந்தைகளை பயமுறுத்தும் காட்சியமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகளையும் வசீகரித்திருக்கிறது வடிவேலின் குரல். என் மூன்று வயது மகனுக்கு நடிகர்களில் வடிவேலு மட்டும்தான் தெரியும். தொலைக்காட்சியில் வடிவேல் தோன்றினாலே "அய்... வடிவ்வ்வேலு.." என்று உற்சாகமாகிறான். சமகாலத் தமிழ் சினிமாவில் வடிவேலு விட்டுச்சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. அதை யாராலும் நிரப்ப முடியாது...

 உங்களின் அடுத்த இன்னிங்க்ஸ்-க்காக காத்திருக்கிறோம் ...   

-----------------------((((((((((()))))))))))))))))-------------------

டுத்து எனக்குப் பிடித்தப் பதிவுகள்... ( புதிய பதிவர்கள் எங்க தேடினாலும் கிடைக்க மாட்டேங்குறாங்கப்பா.. கடல்லே இல்லையாம்..)

1. உள்ளூர் சினிமாவுக்கும் உலக சினிமாவுக்கும் எப்படி ஹாரி  வித்தியாசம் சொல்கிறார் பாருங்கள். மிகவும் ரசித்த பதிவு.  உள்ளூர் சினிமா, உலக சினிமா டாப் 10 வித்தியாசங்கள்

---------------X--------------

2. மெட்ராஸ்பவன் சிவாவின் சினிமா விமர்சங்களை விரும்பிப் படிப்பேன்..நல்ல நகைச்சுவையாக எழுதக்கூடியவர் என்பது பதிவுலகம் அறிந்ததுதான். வெடி விமர்சனம்  அதில் கிளாஸ்...!

 ---------------X--------------

3. எழுதி மூன்று வருடங்கள் ஆகிறது.. ஆனால் பிட்டு நகைச்சுவைகள் நிறைய இருக்கிறது.. படித்து சிரித்துவிட்டு வாருங்கள் . இளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்

 ---------------X--------------

4. மதுரைத் தமிழன் செய்யும் அதகளம் தாங்க முடியவில்லை..மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?

 ---------------X--------------

5. எங்கள் மண்ணின் மைந்தன். சிங்கையில் நான் சந்திக்க நினைத்தப் பதிவர்களில் பட்டாபட்டியும் , வெளியூர்க்காரனும்  முக்கியமானவர்கள். பட்டா நம்மிடம் இல்லை. வெளியூர்க்காரன் ஏனோ பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். எல்லா பதிவுகளும் பிடிக்கும்.. எதைச்சொல்ல...? 

கையப்புடிச்சு இழுத்தியா..? - பேஸ்புக் போராளிகள் சங்கம்..!

 பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...!

நேரம் கிடைத்தால் எல்லா பதிவுகளையும் படித்துப் பாருங்க..

 ---------------X--------------

6. அதிரடிக்காரன் முத்துசிவா..  என்னைக் கவர்ந்த பதிவுலக எழுதாளுமைகளில் இவரும் ஒருவர். மடைதிறந்த வெள்ளம் போல நகைச்சுவைகள் இவர் பதிவுகில் பாயும்.. அதில் நான் வெகுவாக ரசித்தது.

வைரமுத்து BLOG எழுதுறத பத்தி என்ன சொல்றாருண்ணா.

 இவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...


கவுண்டர் டனார்.. கேப்டன் பனார் 

 ---------------X--------------

7. காமெடி கும்மி. நம்ம ஆளுகதான்... நல்ல தொடக்கம். பின் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று புரியாமல் விழிக்கிறேன்.

 வெறியான சங்க முதுகெலும்பு.... 

 சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ...

 ---------------X--------------

8. கும்மாச்சியின்  அனைத்துப் பதிவுகளும் நவரசமானவை.. நகைச்சுவையான நிறைய பதிவுகள் இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்க.

காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++

 ---------------X--------------

9. வார இதழ்களில் வந்த நகைச்சுவைகளை தொகுத்து எழுதுகிறார்கள்... காப்பி பேஸ்ட் நமக்கு எதுக்கு..? சிரிக்க வச்சா போதுமே..

 ---------------X--------------

10. கலகலப்பாக எழுதுவதற்கு நம்ம அருவா மனோவை விட்டா வேற யாரு....?

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

 ---------------X--------------

 மீண்டும் சந்திப்போம்...

வழக்கம்போல பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்..

அன்புடன்...


மணிமாறன் ..

 

23 comments:

 1. அன்பின் மணிமாறன்..
  நகைச்சுவை ததும்பும் பதிவுகளின் அணிவகுப்பு.. அருமை!..
  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. முதல் கருத்துக்கு மிக்க நன்றி சார்

   Delete
  2. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

   Delete
 2. நகைசுவை நிரம்பிய பதிவுகளின் தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி மேடம்

   Delete
 3. என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...! என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...! என் பொண்டாட்டி உண்மையிலே ஊருக்கு போயிட்டா...! - ஜனகராஜ்.... ஹா... ஹா...

  ரசிக்க... சிரிக்க வைக்கும் தொகுப்பிற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி DD

   Delete
 4. என் தளம் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி திரு. துரை.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி சிவா . சட்டை என்னவோ துரை சாரோடதுதான் .ஆனா மாப்ள நானாக்கும் :-))

   Delete
 5. கலக்கும் நகைச்சுவையாளர்களின் நல் தொகுப்பு...
  தொரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி சார் .

   Delete
 6. ஆஹா சூப்பர் நகைச்சுவை தொகுப்பு

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி சார் .

   Delete
 7. டாப் 10 நகைச்சுவை நாயகர்கள் பற்றிய தங்கள் விளக்கங்களோடு, நகைச்சுவையாய் எழுதும் பதிவர்களின் அறிமுகம் - வெகு பொருத்தம் சார். அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றிகள் சார்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி சார் .

   Delete
 8. தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி மனோ.

   Delete
 9. என்னை தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மணிமாறன் அவர்களுக்கும் அந்த அறிமுக செய்தியை எனக்கு தெரியப்படுத்திய துரை செல்வராஜு மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள். நான் கிறுக்குவதை நகைச்சுவை உணர்வுடன் எடுத்து படித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் இதன் மூலம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்


  வாழ்க வளமுடன் த.ம 4

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 10. ///புதிய பதிவர்கள் எங்க தேடினாலும் கிடைக்க மாட்டேங்குறாங்கப்பா.. கடல்லே இல்லையாம்.///

  இருந்தும் கடலில் விழுந்து முத்து குளிப்பது போல குளித்து புதியபதிவாளரான என்னையும் ( 5 க்கும் மேல் பதிவு போட்டவர்கள்தான் பழைய பதிவர்கள் அதனால் நான் இன்னும் புதுப்பதிவர்தான் )கண்டுபிடித்த உங்கள் திறமையை கண்டு ஆச்சிரியப்படுகிறேன்


  ஒரு வேளை நான் 5 வருடத்திற்கும் மேல் தாண்டிவிட்டால் அப்போதும் நான் புதுபதிவர்தான் எப்படி என்றால் அப்போது புதுபதிவருக்கான கால அளவான 5 வருடத்தை 10 வருடமாக மாற்றிவிட வேண்டியதுதான் ஒது ரொம்ப சிம்பிள் ஹீ.ஹீ

  ReplyDelete
  Replies

  1. உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...! ஹா.. ஹா... எங்க போனாலும் திண்டுக்கல்லார் துண்டை போட்டு வைத்திருக்கிறார்.

   Delete

 11. என் தளம் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி திரு. துரை.

  ReplyDelete
 12. நகைச்சுவை நடிகர்கள் டாப் டென்.... ரசித்தேன்.

  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது