07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, February 2, 2014

இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்) - என் பணி முடியும் நேரமிது..


ந்த நீண்ட பதிவை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி...

ஒரு வார காலமாக வலைச்சரத்தை 'வளவளச்'சரமாக மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இரத்தின சுருக்கமாக பதிவு எழுத வேண்டும் என்றுதான் நினைத்திரு- ந்தேன். ஆனால் ஏனோ முதல் முறை வாய்ப்பு, சரியான திட்டமிடல் இல்லாமை, ஆபிஸின் ஆணி, குடும்பப்பொறுப்புகள் போன்ற சில காரணங்களால் எதிர்பார்த்த அளவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.. சீனா அய்யா இன்னொரு வாய்ப்பு கொடுக்காமலா போய் விடுவார்.. அப்போது கலக்கலாம்..

80 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். குமுதம் அப்போது நம்பர் ஒன் வாரப்பத்திரிக்- கையாக இருந்தது. நிறைய புதிய முயற்சிகள் செய்வார்கள். அதில் ஒரு முயற்சியாக வாரம் ஒருவர் அந்த இதழை தயாரிப்பதாக ஆரம்பித்தார்கள். முதல் இதழை டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தயாரித்ததாக நினைவு. தமிழகத்தின் அனைத்து ஆளுமைகளுக்கும் அப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஒருவரின் தனித்திறமையையும், எண்ணங்க -ளையும் வெளிக்கொணரும் வித்தியாசமான முயற்சி அது.நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு வருடத்தின்  தீபாவளி இதழை குஷ்வந்த் சிங் தயாரித்தார். அதுவரை அவரை யாரென்றே தெரியாது. அதன்பிறகுதான் அவர் எவ்வளவுப் பெரிய இலக்கிய ஆளுமை என்பதைத் தெரிந்து கொண்டேன்...

வலைச்சரமும் அப்படிப்பட்ட பணியைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது. நிறைய பதிவர்களுக்கு விசிட்டிங் கார்டு ஆக இருக்கிறது. இப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

தற்போதெல்லாம் வலைப்பூவில் புதிய பதிவர்கள் எழுத வருவது குறைந்துவிட்டது. அப்படி யாராவது ஒருவரை தேடிக்கண்டுபிடித்தால் , அங்கே " உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது" என்று திண்டுக்கல்லாரின் பின்னூட்டம் இருக்கிறது. நான் பதிவெழுத வந்து ஒரு வருடம் கழித்துத்தான் அதாவது நூறு பதிவுகளுக்கு மேல் எழுதியபிறகுதான் வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்கள்.

பதிவுலகின் பொற்காலம் என்று 2008-2011 ஆம் ஆண்டு மத்தியில் வரை சொல்லலாம். நிறைய பதிவர்கள். அத்தனைப்பேரும் மிகச்சிறந்த, தனித்துவமான, எழுத்தாளுமை உடையவர்கள். ஒவ்வொரு பிரிவுகளிலும் கலக்கினார்கள். நகைச்சுவையான எழுத்துத் திறன் உள்ளவர்கள் குழுவாக சேர்த்து பட்டையைக் கிளப்பினார்கள். பிற்பாடு பேஸ்புக், ட்வீட்டர் களின் தாக்கம், தமிழ்மணத்தோடு ஊடல், சொந்தப் பிரச்சனைகள் என்று சில காரணங்களால் பதிவுலகத்தைவிட்டு விலகியவர்கள் திரும்பவே இல்லை.. நான் பதிவெழுத வந்தது 2011 இறுதியில். ஒருவேளை அதற்கு முன் வந்திருந்தால், சுனாமியில் சிக்கிய படகு போல காணாமற்போயிருப்பேன்..!

போகட்டும்..

ன் ஒருவாரகால வலைச்சர ஆசிரியப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவில் மாதத்திற்கு நான்கைந்து பதிவுகள் எழுதுவேன். அவ்வளவுதான் எழுதமுடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் தினம் ஒரு பதிவுகூட எழுதமுடியும் என்கிற நம்பிக்கை வலைச்சர ஆசிரியப் பொறுப் பேற்ற பிறகுதான் வந்திருக்கிறது.

முதலில் இதுவரை எழுதிய பதிவுகளில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களின் பட்டியல் இது . ( இனி பின்னூட்டமிடுபவர்களை அடுத்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்). முதலில் இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.


இன்னொரு முக்கியமான விசயம்... நான் எழுதிய பதிவுகளில் நண்பர்களின் வலைப் பூவின் லிங்கைக் கொடுத்துவிட்டு அடுத்த வேலைக்கு தயாராகிவிடுவேன். ஆனால், நான் கொடுத்திருந்த லிங்க்-க்கு சென்று அங்கு, "உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது" என்று  பின்னூட்டமிட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தும் அற்புதப்பணியை இருவர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் துரை செல்வராஜூ சார், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி..

 இத்தோடு முடித்துக்கொண்டு எனக்குப் பிடித்த பதிவர்களும் பதிவுகளைக் காணலாம். 

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

சில நாட்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். "முன்பெல்லாம் வேற்று மொழித் திரைப்படங்களை காப்பியடித்து ஒரு தமிழ்ப் படம் எடுக்கப்பட்டால், அது காப்பி என்று தெரிய பத்து வருடங்கள் கூட ஆகும். இப்போதெல்லாம் படம் ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் சொல்லிவிடுகிறார்கள் "

மூடர்கூடம் படத்தை எல்லோரும் ஆஹா.. ஓஹோ.. அற்புதம் என புகழ்ந்து கொண்டிருக்கையில், அடிச்சாரு பாருங்க நம்ம ராஜ் ,  " மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !! ".

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
வெங்கட் நாகராஜ் சார் ..நவரசப் பதிவர்..! எல்லாம் விசயங்களைப் பற்றியும் தெளிவாக, சுவையாக பதிவு போடுவார்  சிவாஜி சிலை..... 

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சகோ ராஜி நான் ஆச்சர்யப்படும் பதிவர்களில் ஒருவர். தினம் எழுதிக்கொண்டிருந்தால் எழுத்தில் ரசனை குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் இவர் பதிவுகள் அனைத்தும் தரத்தில் ஒன்றுக்கொன்று போட்டிப்போடுபவை.. இனி அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் நடக்குமா!? - கேபிள் கலாட்டா   

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சேட்டைக்காரன் சிறந்த பதிவர் என்று நான் எழுதினால் சிவாஜிக்கு நடிக்கத்தெரியும் என்று சொல்வது மாதிரி. சினிமாவுக்கு நடிப்புப் பட்டறை போல இவரது பதிவுகள் புதிதாக பதிவுலகில் நுழைபவர்களுக்கு எழுத்துப் பட்டறை.. எவ்வளவோ இருக்கு.. ஏதாவது ஒன்னை சொல்லியாகனும் இல்லையா...கிட்டாமணியும் ’கிட்நாப்’ மணியும்  (இதைப் படிக்கும்போது உங்களுக்கு மனுஷ்ய புத்திரன் ஞாபகம் வந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல  ..)
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

ரமணி அய்யா அவர்களின் கவிதைகள் கருத்துச்செறிவு மிக்கது. தமிழ்மணத்தில் மகுடம் சூடுகிறது அவரது பதிவுகள். காலம் கடக்க நினைப்பது

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

 கவிஞர் முத்து நிலவன். பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமான பெயர். பட்டிமன்றங்களை கிராமங்களுக்கும் எடுத்துச்சென்ற லியோனி அவர்களின் தளபதிகளில் ஒருவர். செம கேள்வி கேட்கிறாரு பாருங்க..அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாமே?

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

பிரதிபா பிரதி. பேஸ்புக் பிரபலம். ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தரங்க விசயங்களையும் துணிந்து எழுதுவார்.  அதில் ஓன்று ஒரினச்சேர்க்கை...குடும்பத்திற்கு ஒவ்வாத சேர்க்கை......! 


-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

இரண்டு நாட்களுக்கு முன்பு ஷோபா சக்தியின் தங்க ரேகை சிறுகதை வெளிவந்திருக்கிறது. உலகத்தரம் என்று சாரு பாராட்டியிருக்கிறார். அவரது 'கெப்டன்' சிறுகதைக்குப் பிறகு மிகவும் ரசித்துப் படித்தது. என்ன மொழிநடை பாருங்கள்..!!!

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

இணையத்தின்  அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்)

பொதுவாக என் பதிவுகளில் நக்கல் நையாண்டிகள் நிறைய இருக்கும். அதானால் நிறைய இணையப்போராளிகள் பின்னூட்டத்தில் பொங்கோ பொங்கு என்று பொங்கல் கிண்டிவிட்டு போவார்கள். கடைசில பார்த்தால் அதெல்லாம் டம்மி பீசாக இருக்கும். அதை நக்கல் செய்து ஒரு சிறுகதை (மாதிரி) எழுதினேன். நவீனத்துவ போராளி...

இது வலைச்சரம் என்பதால் அரசியல் நையாண்டிகள் இல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். இருந்தாலும் நம்ம  நக்கல் நையாண்டி இல்லாமல் வலைச்சரத்தை நிறைவு செய்வது கொஞ்சம் நெருடலாக இருப்பதால்... சும்மா ஒரு பைனல் 'பன்ச்' . ஏற்கனவே என் வலைப்பூவில் இட்டது. வலைச்சரத்திற்காக சிறு மாற்றங்களுடன்.

சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை  ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க  ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா  போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..

நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால்,  டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.

@ Tweeter..
@ G +
@
@ FACEBOOK...

@ BLOGGER

அம்புட்டுதேன்.. சும்மா நகைச்சுவைக்காக பதிந்தது..

என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ..  மனதில் உறுதி வேண்டும்

உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!

என்றும் அன்புடன் ..

மணிமாறன்.

--------------------THE END-----------------------
மேலும் வாசிக்க...

Saturday, February 1, 2014

டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்.-பாகம் -2

சென்ற பதிவின் தொடர்ச்சி... 

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...( முதல் பாகம்)

6.கோவை  சரளா.. 

தமிழ்த் திரையுலகில்  நகைச்சுவை நடிகைகள் மிகக்குறைவு.ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா.வேறு எவரும் போட்டிக்கு இல்லாததால் தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதில் சிறந்த நகைச்சுவை நடிகை என்ற பிரிவையே எடுத்துவிட்டார்கள். பின்ன.. இவர் ஒருவர் மட்டுமே அந்த விருதை வாங்கிக்கொண்டிருக்க முடியுமா...?   

முந்தானை முடிச்சில் அறிமுகம். பிறகு சிறு சிறு வேடங்கள். எஸ்.எஸ்.சந்திரன்- செந்தில் இணை கலக்கிய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தார். அதன் பிறகு இவருக்கு சுக்கிர திசை. செந்தில்- கோவை சரளா ஜோடியுடன் கவுண்டர்  இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க, 80-90 களில்  புகுந்து விளையாடியதுதான் இந்த ஜோடி. பிறகு வைகைப்புயலுடன் அடுத்த இன்னிங்க்ஸ். இந்த ஜோடி இருந்தாலே போதும். படம் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்த காலகட்டமும் உண்டு.

ஆரம்பத்தில் கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்த இந்த 'சின்ன ஆச்சி' , பிற்பாடு தன் குரலமைப்பை மாற்றிக்கொண்டார்.. பிரியாணியைக் கூட "ப்ப்பிர்ர்ரியாணி..." என்று தான் சொல்லுவார். கமலுடன் ஜோடி சேர்ந்தது பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்.

இவரது புகழ்பெற்ற வசனங்கள் சில...

’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’, ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’, ' ஹி..ஹி..நானா யோச்சிச்சேன்..'.. 

5.செந்தில்

தமிழ் சினிமாவில் எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் முதல் இன்னிங்க்ஸ், இரண்டா- வது இன்னிங்க்ஸ் என்ற காலகட்டங்கள் இருக்கும். ஆனால் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் செந்தில். லாரல்- ஹார்டி போல் புகழ்பெற்ற comedy duo -வை தமிழ்ச் சினிமாவில் சாத்தியப்படுத்தியது கவுண்டமணியும் செந்திலும். இவர் "அண்ணே...." என்க, பதிலுக்கு கவுண்டர்,"என்னடா..நாயே.."என்பதில் தொடங்கி எல்லா விலங்குகளின் பெயரை இழுத்துத் திட்டும்போது தமிழ் ரசிகர்கள் பூரித்துப்(!) போவார்கள். எந்த ஈகோவும் இல்லாமல் கவுண்டருடன் இணைத்து இவர் கலக்கிய காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம். 


4.விவேக்..



சின்னக் கலைவாணர்... சனங்களின் கலைஞன் இப்படிப்பட்ட அடைமொழிகளை விரும்பிப் போட்டுக்கொள்வார். ஹீரோவுக்கு இணையாக 'பன்ச்' அடிப்பவர். சில நேரங்களில் ஹீரோவையே ஓவர் டேக் செய்வார். சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் தனது நகைச்சுவையில் நக்கலடித்து,சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். அதே நேரத்தில், நகைச்சுவையில் இரட்டை அர்த்த வசனங்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இன்னும் கமலுடன் இணையாதது மட்டும் இவருக்கிருக்கும் ஒரே குறை.

இவரது புகழ்பெற்ற வசனங்களில் சில... 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' , 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்', 'கோபால்.. கோபால்..', 'நான் எஸ்.ஐ-யா இருக்கேன்..', ' உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா..' 'அட பனியன் போட்ட சனியன்களா...', 'நீங்க வெறும் தாஸா..இல்ல லாடு லபக்கு தாஸா...' , நான் தான் அப்பவே சொன்னேனடா..', ' சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கே..', ' சிவா நீ எங்கேடா இருக்க..' இப்படி நீளும்.....
 
3.ஜனகராஜ்..

கதாநாயக ஆசையோடு திரையுலகில் நுழைந்து நகைச்சுவை நடிகரானவர். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. தனித்தன்மையான குரலமைப்பு உடையவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளின் செல்லப்பிள்ளை. 80 களில் கவுண்டமணிக்கு கடும் சவாலாக விளங்கியவர். 80-90 களில் தனி காமெடியா அல்லது கதானாகனோடு இணைந்த பாத்திரமா எதுவென்றாலும்  முன்னணி நடிகர்களின் முதல் தேர்வு ஜனகராஜ்தான்.  இணையத்தில் மனைவி 'தங்கமணி' ஆனது இவரால்தான்..

பாட்சாவில் ரஜினியுடனும், நாயகனில் கமலுடனும் குணச்சித்திர வேடங்களில் நடித்தது இவரது நடிப்புப் பயணத்தில் மைல்கல்.

இவரது புகழ் பெற்ற சில வசனங்கள்.."என்னமோ போடா மாதவா.."  'தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா'.." ” நோ தங்கமணி எஞ்சாய்”.. வேற சில இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

2.கவுண்டமணி...

'கோயமுத்தூர் குசும்பு' என்கிற சொல்லாடல் கவுண்டரால்தான் வந்திருக்கவேண்டும். கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சினிமாவில் வாய் ஓயாமல் பேசியே மக்களை கொள்ளை கொண்ட கவுண்டமணி, சிறு வயதில் பேசவே மாட்டாராம். ஒரு வார இதழுக்கு அவரது அக்கா அளித்துள்ள பேட்டியில் இப்படி கூறியுள்ளார்.

"இப்பதான் சினிமாவுலதான் இவ்ளோ வாய் பேசுறான். சின்ன வயசுல பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாதான் பேசுவான். சின்ன வயசுல எப்ப பாத்தாலும் பள்ளிக்கூடம் போகாம நாடகம் பாத்துட்டே சுத்திட்டு இருப்பான். பதினஞ்சு வயசுலயே "நாடகத்துல நடிக்க போறேன்" அப்படின்னு அவன் அடம பிடிச்சதால நான்தான் அவன கொண்டு போய் சென்னைல விட்டுட்டு வந்தேன். பின்னாடி பாய்ஸ் நாடக கம்பனியில சேர்ந்து அப்றமா எம்.ஆர்.ஆர்.வாசு, ஒ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடிச்சு அப்ரமாதான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளிலயே அவன் முகம் தெரிய ஆரம்பிச்சது"

மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் போன்ற சிகரம் தொட்ட இயக்குனர்களின் முதல் படத்தில் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாதான் காமெடி பாத்திரம் ஏற்றிருப்பார். தமிழ் சினிமாவில் 'நாள் சம்பளம்' என்கிற புதிய அத்தியாத்தை அறிமுகப்படுத்தியது கவுண்டர்தான். கவுண்டமணி -செந்தில் ஜோடி போல் இன்னொன்று இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என்கிறார்கள்.

கவுண்டரின் புகழ்பெற்ற வசனங்களில் சில... “பத்த வெச்சுட்டியே பரட்டை” ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ , ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’, ‘நான் ரொம்ப பிஸி’, ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்’,‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை’, ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’... இப்படி சொல்லிகொண்டே போகலாம்..


1.வடிவேலு :

மண்மணம் மாறாத தனித்துவமான மதுரைத்தமிழ் தான் வைகைப்புயலில் பலம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, இரட்டை அர்த்த வசனமில்லாமல் , பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன் இந்த இரண்டாம் புலிகேசி. பல படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவரது நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். எந்தப்புள்ளியில் கவுண்டரை வடிவேல் முந்துகிறார் என்று பார்ப்போம்.

நாகேஷுக்குப் பிறகு உடல் அசைவு, முகபாவனை கலந்த நகைச்சுவை வடிவேலுக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது. அதனால்தான் கருப்பு நாகேஷ் என்று இயக்குனர் இமயத்தின் மோதிரக்கையால் குட்டுவாங்கினார். சந்திரபாபுக்குப் பிறகு நல்ல குரல்வளம் உடைய சிரிப்பு நடிகர். நாகேஷுக்குப் பிறகு கதாநாயகனாக இமாலய வெற்றி கண்ட ஒரே காமெடி நடிகர். ( திண்டுக்கல் சாரதி எல்லாம் வெற்றிப்படம் என்று சொல்லாதீங்க). நடனத்தில் கூட தனி ஸ்டைல். சூப்பர் நடிகர்களுக்கெல்லாம் 'பன்ச் டயலாக்' வைக்க ரூம் போட்டு யோசிக்கும் சூழலில், இவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் 'பன்ச்' ஆக பரிணாமம் காண்கிறது. வைகைப்புயலில் 'பன்ச்' மட்டும் இல்லை என்றால் தமிழ்கூறும் பேஸ்புக் மற்றும் டிவீட்டர் உலகத்திற்கு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

கவுண்டரின் ஹைடெசிபல் காட்டுக்கத்தலும்,சகட்டுமேனிக்கு உதைக்கும் வன்முறையும் குழந்தைகளை பயமுறுத்தும் காட்சியமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகளையும் வசீகரித்திருக்கிறது வடிவேலின் குரல். என் மூன்று வயது மகனுக்கு நடிகர்களில் வடிவேலு மட்டும்தான் தெரியும். தொலைக்காட்சியில் வடிவேல் தோன்றினாலே "அய்... வடிவ்வ்வேலு.." என்று உற்சாகமாகிறான். சமகாலத் தமிழ் சினிமாவில் வடிவேலு விட்டுச்சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. அதை யாராலும் நிரப்ப முடியாது...

 உங்களின் அடுத்த இன்னிங்க்ஸ்-க்காக காத்திருக்கிறோம் ...   

-----------------------((((((((((()))))))))))))))))-------------------

டுத்து எனக்குப் பிடித்தப் பதிவுகள்... ( புதிய பதிவர்கள் எங்க தேடினாலும் கிடைக்க மாட்டேங்குறாங்கப்பா.. கடல்லே இல்லையாம்..)

1. உள்ளூர் சினிமாவுக்கும் உலக சினிமாவுக்கும் எப்படி ஹாரி  வித்தியாசம் சொல்கிறார் பாருங்கள். மிகவும் ரசித்த பதிவு.  உள்ளூர் சினிமா, உலக சினிமா டாப் 10 வித்தியாசங்கள்

---------------X--------------

2. மெட்ராஸ்பவன் சிவாவின் சினிமா விமர்சங்களை விரும்பிப் படிப்பேன்..நல்ல நகைச்சுவையாக எழுதக்கூடியவர் என்பது பதிவுலகம் அறிந்ததுதான். வெடி விமர்சனம்  அதில் கிளாஸ்...!

 ---------------X--------------

3. எழுதி மூன்று வருடங்கள் ஆகிறது.. ஆனால் பிட்டு நகைச்சுவைகள் நிறைய இருக்கிறது.. படித்து சிரித்துவிட்டு வாருங்கள் . இளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்

 ---------------X--------------

4. மதுரைத் தமிழன் செய்யும் அதகளம் தாங்க முடியவில்லை..மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?

 ---------------X--------------

5. எங்கள் மண்ணின் மைந்தன். சிங்கையில் நான் சந்திக்க நினைத்தப் பதிவர்களில் பட்டாபட்டியும் , வெளியூர்க்காரனும்  முக்கியமானவர்கள். பட்டா நம்மிடம் இல்லை. வெளியூர்க்காரன் ஏனோ பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். எல்லா பதிவுகளும் பிடிக்கும்.. எதைச்சொல்ல...? 

கையப்புடிச்சு இழுத்தியா..? - பேஸ்புக் போராளிகள் சங்கம்..!

 பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...!

நேரம் கிடைத்தால் எல்லா பதிவுகளையும் படித்துப் பாருங்க..

 ---------------X--------------

6. அதிரடிக்காரன் முத்துசிவா..  என்னைக் கவர்ந்த பதிவுலக எழுதாளுமைகளில் இவரும் ஒருவர். மடைதிறந்த வெள்ளம் போல நகைச்சுவைகள் இவர் பதிவுகில் பாயும்.. அதில் நான் வெகுவாக ரசித்தது.

வைரமுத்து BLOG எழுதுறத பத்தி என்ன சொல்றாருண்ணா.

 இவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...


கவுண்டர் டனார்.. கேப்டன் பனார் 

 ---------------X--------------

7. காமெடி கும்மி. நம்ம ஆளுகதான்... நல்ல தொடக்கம். பின் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று புரியாமல் விழிக்கிறேன்.

 வெறியான சங்க முதுகெலும்பு.... 

 சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ...

 ---------------X--------------

8. கும்மாச்சியின்  அனைத்துப் பதிவுகளும் நவரசமானவை.. நகைச்சுவையான நிறைய பதிவுகள் இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்க.

காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++

 ---------------X--------------

9. வார இதழ்களில் வந்த நகைச்சுவைகளை தொகுத்து எழுதுகிறார்கள்... காப்பி பேஸ்ட் நமக்கு எதுக்கு..? சிரிக்க வச்சா போதுமே..

 ---------------X--------------

10. கலகலப்பாக எழுதுவதற்கு நம்ம அருவா மனோவை விட்டா வேற யாரு....?

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

 ---------------X--------------

 மீண்டும் சந்திப்போம்...

வழக்கம்போல பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்..

அன்புடன்...


மணிமாறன் ..

 
மேலும் வாசிக்க...

Friday, January 31, 2014

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...



கைச்சுவை உணர்வு என்பது ஓர் வரம். அது இயல்பிலே வர வேண்டும் . முக்கி முக்கி வரவழைத்தால் அது மொக்கையாகிவிடும். நகைச்சுவைக்கும் மொக்கைக்கும் நூலளவுதான் வித்தியாசம். நான் கூட நகைச்சுவை என்று முயற்சி செய்த நிறைய பதிவுகள் மொக்கையாகி போனபோதுதான் விபரீத முயற்சி என்கிற விஷயம் மண்டைக்குள் உரைக்க ஆரம்பித்தது.

பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை கோமாளிபோல் காட்டுகிறார்கள். ஆனால் ரியல் லைஃப் அதற்கு நேரெதிர். பத்து நண்பர்கள் அல்லது தோழிகள் அல்லது உறவினர்கள் குழுமியிருக்கும் ஓரிடத்தில் எவன் ஜாலியாக, கலகலப்பாக, நகைச்சுவை -யுணர்வுடன் பேசுகிறானோ அவன்தான் அங்கு ஹீரோ. அங்கே புரட்சி, போராட்டம், புண்ணாக்கு என்று பொங்குபவன் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறான்.

சினிமா அறிமுகமாகாத காலக்கட்டங்களில் தெருக்கூத்து நாடகங்கள் மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது.ஒருபுறம் கோவலன் -கண்ணகி,அரிச்சந்திர மயான காண்டம் போன்ற விழிப்புணர்வை விதைக்கும் நாடகங்கள் அரங்கேற்றப் பட்டாலும் மறுபுறம் கரகாட்டம்,குறவன்-குறத்தி போன்ற கிராமிய கலை வடிவங்களும் மக்களை மகிழ்வித்து வந்தது.

அன்றைய எல்லா பொழுதுபோக்கு கலைவடிவங்களிலும் பிரதானமாக ஓர் கதாப்பாத்திரம் இடம்பெறும். அது எல்லோரையும் ரசித்து சிரிக்க வைக்கும் ' பஃபூன் ' கதாப்பாத்திரம். இது பார்வையாளர்களைப் பரவசப் படுத்துவதற்காகவே வலிய திணிக்கப்பட்ட ஒரு உப்பு சப்பில்லாத இடைச்செருகலாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு இதுவே கதையோட்டத்துடன் இணைந்தே பயணிக்கும் அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.சமகாலத்திய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடகம் என்கிற கலைவடிவம் முற்றிலுமாக அழிந்துவிட,S.V.சேகர்,கிரேசிமோகன் நாடகங்கள் மட்டும் இன்னமும் அரங்கம் நிறைய ஓடுகிறது என்றால் நகைச்சுவை என்ற ஒற்றைப் புள்ளியை சுற்றியே அமைக்கும் அவர்களின் நாடகமாக்கத் தந்திரமே இதற்குக் காரணம்.

என் பால்ய பருவங்களில் சித்திரை மாதத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் வருடம் தவறாமல் நடக்கும்.அவர்கள் பேசும் வசனமும் பாடல்களும் புரியாமல் தூக்கத்தில் சொக்கி விழும் தருணத்தில்,திடீரென்று சம்மந்தமில்லாமல் பஃபூன் காட்சி தருவார்.உறக்கத்தில் சொக்கிய அத்தனைப்பேருக்கும் அது உற்சாக டானிக்காக இருக்கும்.தூக்கம் கலைந்த உடன் திரும்பவும் அரிச்சந்திரன் குச்சியோடு சுடுகாட்டுக்கு வந்து சோகப்பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். பிற்பாடு இது திரைப்படங்களாக பரிணாம வளர்ச்சியடைந்த போது நகைச்சுவை கதாப்பாத்திரங்களின் அவசியம் இன்னும் அதிகமாயிற்று. 


பத்மஸ்ரீ கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சினிமாவில், எந்த வேடத்தில் வேண்டுமானாலும் சுலபமாக நடித்து விடலாம்.ஆனால் நகைச்சுவை வேடம் மட்டும் சிரமமானது. அதனால்தான் சென்னையில் கலைவாணருக்கு மட்டும் சிலை அமைத்திருக்கிறார்கள் என்றார். (அப்போது சிவாஜி சிலை கிடையாது)

நாடகங்களில் சோகக் காட்சியைவிட காமெடிக் காட்சி நடிப்பதே கடினம்.காமெடி வசனங்கள் சொல்லும்போது பார்வையாளர்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் மேடையில் எங்களின் உள் மனதில் ஏற்படும் வலி யாருக்கும் தெரியாது என காபி வித் அனு-வில் ஒய்.ஜி.மகேந்திரன் சொன்னதாக நினைவு. 


சமகால தமிழ் சினிமா கூட காமடி நடிகர்களின் முக்கியத்துவத்தை கமர்சியல் ரீதியாக உணர்ந்துள்ளது. முதலில் அவர்களின் கால்சீட்டை உறுதி செய்த பின்புதான் ஹீரோ ஹீரோயினையே புக் செய்கிறார்கள்.

சினிமா வேரூன்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே காமடி நடிகர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் போற்றுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. கலைவாணர் தம்பதிகள், நாகேஷ்,பாலையா,தங்கவேலு, சுருளிராஜன்,V.K.ராமசாமி என அந்தகால கருப்பு வெள்ளையில் கலக்கிய 'லெஜன்ட்ஸ்' ஏராளம்.அவர்களை இங்கே பட்டியல் போட்டு தரம்பிரிக்க மனம் ஒப்பவில்லை...

வண்ணக் காவியங்களில் கலக்கிய காமெடி நடிகர்களை மட்டும் என் ரசனைக்கு ஒப்ப  'டாப் டென்' என வரிசைப் படுத்துகிறேன்... 



10.வெண்ணிற ஆடை மூர்த்தி. 




"பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என்ற ஒற்றையோசையில் குழந்தைளையும் சிரிக்கவைத்துவிடுவார் இந்த வழக்கறிஞர்.  நான்கு தலைமுறை நடிகர்களுடன் கலைத்தொடர்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கில்மா வில்லனாக அறியப்பட்டவர். அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற சில படங்களில் மலையாள பிட்டுப்பட நடிகர்களுக்கே சவால் விட்டவர். பிறகு தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய்க்குலங்கள் மத்தியில் சரிந்திருந்த தன் செல்வாக்கை செங்குத்தாக தூக்கி நிறுத்தப் படாத பாடுபட்டார். ஆனாலும் தன் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் இன்னும் விடாமல் , வேலிமேல வேட்டி விழுந்தாலும் வேட்டி மேல வேலி விழுந்தாலும் டர்ர்ர்ர்ர்ர்னு கிழியப்போவது தன் வேட்டிதான் என்பதை கடைசிவரை உணராமல் இருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள்தான் இவரது பலமும் பலவீனமும். 


9.ஒய்.ஜி .மகேந்திரா..


நடிகர் திலகத்துடன் சுமார் 35 படங்கள் நடித்துள்ளார். ஆரம்பகால ரஜினி படங்களில் நடித்தபோது அவரைவிட பிசியான,அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்திருக்கிறார். S.P. முத்துராமன், ரஜினி கமலை வைத்து இயக்கிய படங்களில் ஒய்.ஜி.மகேந்திரா கட்டாயம் இருந்தாக வேண்டுமென்பதை செண்டிமெண்டாகவே வைத்திருந்திருக்கிறார். பிறகு 80 களில் கவுண்டர், ஜனகராஜ் தலைதூக்கியபோது இவருக்கு கிழிஞ்சது லம்பாடி லுங்கி.  

8. S .S.சந்திரன்..

         
லாரல் & ஹார்டி போன்ற comedy duo நம் தமிழ் சினிமாவில் யோசித்தால் உடனே கவுண்டர்-செந்தில் இணைதான் ஞாபகத்துக்கு வரும். 80 களில் பட்டையக்கிளப்பிய இந்த ஜோடி கவுண்டரின் கதாநாயகக் கனவால் பிரிந்து போனது. பிற்பாடு கவுண்டர் விட்டுச்சென்ற அவ்வெற்றிடத்தை நிரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன்.
வரும் இரட்டை அர்த்த வசனங்களில் ஜொலித்தவர். இந்த இடத்தில் இரட்டை அர்த்தம் என்பது ஆபாசத்தில் அல்ல ,அரசியலில். 80 களில் வெளிவந்த பெரும்பானமையான ராமராஜன் படங்களில் இந்த ஜோடிதான் கலக்கியிருக்கும். தவிரவும் விஜயகாந்த், டி.ராஜேந்தர், ராம நாராயணன், பாண்டியராஜனின் ஆஸ்தான காமெடியன் இவர். மீண்டும் கவுண்டர் தலையெடுத்தபோது இவர் ஓரங்கட்டப்பட்டார்..  

7.சந்தானம்..

வடிவேல் விலகிப்போனதால் இவர் காட்டில் அடைமழை. ஆனாலும் தனக்கென்று ஓர் தனி ஸ்டைல். சமகால ரசிகர்களின் நாடிப்பிடித்து பேஸ்புக், ட்வீட்டரில் ஸ்டைல் காமெடிகளில் வெளுத்து வாங்குகிறார். ஒரு படத்தில் ஜொலித்தால் அடுத்த மூன்று படத்தில் சொதப்புகிறார். டபுள் மீனிங் வசனங்கள் வேலைக்காகாது என்பதை லேட்டாகப் புரிந்திருக்கிறார். " மச்சி காதல்ங்கிறது....." என்று ஹீரோவுக்கே அவ்வப்போது அட்வைஸ் பண்ணி வெறுப்பேற்றுவார். ஆனாலும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்திருக்கிறார் என்றால் இவர் வெறும் அப்பாடக்கர் கிடையாது.  ஏதோ ஓன்று இருக்கிறது இவரிடம்....

பதிவு நீண்டு விட்டதால் இதன் தொடர்ச்சி அடுத்தப் பதிவில்....

----------------------(((((((((((((((((((()))))))))))))))---------------------- 

டுத்ததாக சில நகைச்சுவைப் பதிவுகள்...

காமெடி பதிவுகள் என்றால் பன்னிக்குட்டியை விட்டுவிட்டு சொல்லிவிடமுடியுமா...? இதுவரை நூறுதடவை இந்தப்பதிவைப் படித்திருக்கலாம். எனக்காக 101 வது தடவை படியுங்கள். சமூக விழிப்புணர்வுள்ள நகைச்சுவைப் பதிவு இது. எல்லாம் ஒரு வெளம்பரம்தான்...

Dr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள் என்ற வலைப்பூவில் அனைத்தும்  நகைச்சுவைப்  பதிவுகள் .இவர் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். அனைத்தும் அவரது துறை சம்மந்தமானப் பதிவுகள். வாய்விட்டு சிரிக்கும் பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்கள்  .



நானும் கொஞ்சம் டாக்டர்-நர்ஸ் சம்மந்தப்பட்ட நகைச்சுவைப் பதிவு ஓன்று போட்டேன்... எந்த ஊர் போனாலும் நம்மவர்களை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்...

Chilled Beers.. எல்லோருக்கும் தெரிந்தவர்தான்.. பதிவுகளில் அறிவுஜீவித்தனமும், நகைச்சுவையும் மிகுதியாக இருக்கும். தற்போது பதிவெழுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார் . எப்படி இருந்த அரவிந்தசாமி...

லக்கிலுக்கின் அசத்தல் பதிவு. சின்ன விசயம்தான் . ஆனால் செம சுவாரஸ்ய நடை.. நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

ஜோக்காளி நானெல்லாம் பக்கம் பக்கமா நகைச்சுவைப் பதிவுகள் எழுதினாலும் பெரும்பாலும் மொக்கைதான் வாங்குவேன்.. இவர் என்னடா என்றால் இரண்டு வரியில் ஜோக் சொல்லி கலகலக்க வைக்கிறார். இவரது எல்லா ஜோக்குகளும் கருத்தாழமிக்க நகைச்சுவையுணர்வு கொண்டவை.

வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா..?கட்டவெளக்குமாறு ... இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாத்துட்டு வாங்க... ட்வீட்டர் சிகரங்கள் எல்லாம் இணைந்து ஒரு இணைய இதழை ஆரம்பித்திருக்கிறார்கள். சில மொக்கைகள் இருக்கலாம். ஆனால் மற்றவை எல்லாம் செம..செம..செம...  

மன்னிக்கவும்... நிறைய குறிப்பிடவேண்டியிருக்கிறது. இன்று சில அவசர ஆணிகள் இருந்ததால் பதிவு எழுத தாமதமாகிவிட்டது. இதன் தொடர்ச்சி நாளை வரும். உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி...


திரும்பப் படித்துப் பார்க்கக் கூட நேரமில்லை.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...

மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்...


மணிமாறன்.

மேலும் வாசிக்க...

Thursday, January 30, 2014

கபடி விளையாடலாம் வாங்க...!


சமீபத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய செய்தி ஊடகத்தில் வெளியானபோது மிகுந்த உற்சாகமாக மாகவும் சந்தோசமாகவும்  இருந்தது.

அதுசரி....

"கபடி என்று ஒரு விளையாட்டு இருக்கு தெரியுமா..?"

"எது.. இந்த கில்லி படத்தில விஜய் ஒத்த ஆளா அஞ்சு பேரை தூக்கிகிட்டு வருவாரே அதுவா..? எதுத்தாப்ல உள்ளவன் விரல் இடுக்கில பிலேட வச்சி பாடி கிட்டு வர்றவன கையை கீறி விடுவானே அதானே...?

இன்னும் கொஞ்ச காலத்திற்கு அப்புறம் இப்படித்தான் பேசிப்பாங்க. ஏனெனில் கிராமப்புற மண்ணோடு ஜீவனாக கலந்திருந்த கபடி விளையாட்டு , தன் கடைசி மூச்சுக்காக இழுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சினிமாவின் இப்படித்தான் காட்சிப்படுத்திக் கேவலப்படுத்துகிறார்கள்.

என் பள்ளிப்பருவங்களில் கோடை விடுமுறை விட்டால் போதும். எங்களுக்கு இருக்கிற ஒரே எண்டர்டைன்மெண்ட் கபடிதான். கதிரறுத்து கட்டாந்தரையாக இருக்கும் வயல்வெளிகளை கபடி மைதானமாக்கிவிடுவோம். ஊரில் உள்ள இளவட்டங்கள் எல்லாம் தனித்தனியாக அணிபிரித்து அவர்கள் ஒரு பக்கம் விளையாட, சிறுவர்கள் நாங்களெல்லாம் ஒரு அணிசேர்த்து  விளையாடுவோம்.

அந்தக் காலகட்டத்தில் எல்லா ஊரிலும் கபடி டோர்னமென்ட் நடக்கும். முதல் பரிசு 555.. இரண்டாம் பரிசு 333.. மூன்றாம் பரிசு 222.  இது மாதிரி போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டியிருக்கும். இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும் இந்தப்போட்டிகள் மறுநாள் காலை 9..10..என நீண்டுக்கொண்டே செல்லும்.

அப்போதெல்லாம் ஊரில் திருவிழா, தேரோட்டம், பொங்கல் பண்டிகை என்று எந்த விசேஷமாக இருந்தாலும் ஒரு கபடி போட்டி கட்டாயம் இருக்கும். எங்க ஊரு மிராசுதார் ஒருத்தர் ( வயசானவர்தான் ) இறந்துவிட்டார். அவர் கருமாதியை சிறப்பா கொண்டாட வேண்டும் என்று அன்று கபடிப் போட்டியை நடத்தினாங்க எங்க ஊர் இளவட்டங்க.. அந்த அளவுக்கு கிராமப்புறங்களில் கபடி விளையாட்டு மேல் ஈடுபாட்டோட இருப்பாங்க.

எப்போது இந்த கபடி விளையாட்டின் மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்தது  என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. 90 களின் ஆரம்பத்தில் கிராமப்புரங்களில் நடக்கும் விசேசங்களில் வீடியோ-டெக் எடுத்து விடிய விடிய நான்கு படங்கள் போட ஆரம்பித்தப் பிறகுதான் கபடி மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன்.

தற்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால் முன்பு கபடி மைதானமாக இருந்த இடங்களெல்லாம் தற்போது கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது. பொடிப்பசங்க எல்லாம் கையில பேட்டோட சுத்துறாங்க. கபடிப் போட்டி தற்போது எங்கேயுமே நடப்பதில்லையாம். எங்க ஊர் பசங்க சொன்னாங்க.. கஷ்டமா இருக்கு.

கல்லூரியில் படித்த போது தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கிடையேலான ' TIES ' எனப்படும் போட்டியில் கல்லூரி கபடி அணியை என் தலைமையில் பிரதிநிதித்து அரை இறுதி வரை சென்றிருக்கிறோம். அதன் பிறகு நமக்கும் அந்த' டச்' இல்லாமல் போய்விட்டது.

அது ஒரு கனாக்காலம்..!  போகட்டும்..!

கபடியைப் பற்றி ஒரு சில தகவல்கள் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்..


து தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு. இதன் வயது 4000 வருடங்களுக்கு மேல் என்று கணக்கிடப்படுகிறது. இன்னொரு முக்கியமான தகவல் அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டு கபடி. ஆனால் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று வருகிறது இந்தியா. ஒரு தடவை கூட இந்தியாவை, பங்களாதேஷ் வென்றதில்லை என்பது கூடுதல் தகவல்.

கபடி, தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப் படுகிறது. மொத்தம் 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா அசைக்க முடியாத சாம்பியனாக இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய சாதனை..! ( சும்மா.. கிரிக்கெட்..கிரிக்கெட்.. பீத்திக்காதீங்கப்பா... :-) )

கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை.

கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள். ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல்  நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப  விளையாடப் படுகிறது என்றாலும்  இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .

             கபடி        (kabbadi)             ---------------  இந்தியா ,பாகிஸ்தான்
             ஹடுடு  (hadudu)              ----------------- பங்களாதேஷ்
             டூ-டூ          (do-do)                ----------------- நேபாளம்
             குடு           (guddo)               -----------------  ஸ்ரீ லங்கா
            சடு-குடு   (chado-guddo)   -----------------   மலேசியா
            டெசிப்      (techib)                 ----------------- இந்தோனேசியா

கபடியின்  வகைகள் ;

இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.

     1 . சர்ஜீவ்னி

     2 . காமினி

     3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)


இதில் சர்ஜீவ்னி முறைதான் நம்ம தென்னிந்தியாவில் விளையாடப்படும் முறை. பஞ்சாப் பகுதியில் அமர் முறை விளையாடப்படுகிறது. இந்தியா தொடர்ந்து சாம்பியனாக இருப்பதும் இந்த அமர் முறை கபடியில்தான்.

இதைப்பற்றி ஒரு நீண்ட ஆய்வு செய்து வலைப்பூ ஆரம்பித்த புதிதில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்...

கபடி.... கபடி..... கண்டுபிடி..

ஒலிம்பிக் போட்டியில்  கபடியை சேர்க்கும்படி  நீண்ட காலமாக இந்தியாவிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி சேர்க்கப்பட்டால் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு தங்கம் நிச்சயம். யார் கண்டது... இப்படித்தான் ஹாக்கியில் முதலில் நம்மவர்கள் கலக்கினார்கள். பிறகு நம்மகிட்ட ஹாக்கி கத்துக்கிட்டவன் எல்லாம் இப்ப மெடல் வாங்குகிறான்..நமக்கு ஒரு ஐஸ்கிரீம் கப் கூட கிடைக்க மாட்டேங்கிறது. ஒருவேளை கபடியும் அப்படி ஆகலாம்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------

டுத்து பதிவர்கள் அறிமுகம்...

கவிஞர் மகுடேசுவரன்..  பிரபலமானக் கவிஞர்.நிறைய பேருக்கு தெரிந்த முகம்தான் . சமீபத்தில் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து பேசினார். பேஸ்புக்கில் 'வலி மிகுதல்' தொடர்பாக தொடர் எழுதிவந்தார். மிகவும் ரசித்துப் படித்தப் பதிவு அது. வலைப்பூவில் எழுதும்போது நாம் பெரும்பாலும் சந்திப்பிழைகளில்தான் கோட்டை விடுவோம். இவரது தொடர்களைப் படித்தப் பின்புதான் கொஞ்சம் சந்திப்பிழைகளைத் திருத்திக் கொண்டேன்.

வலிமிகுதல் தொடர்பாக உள்டப்பியில் நான் கேட்ட சில சந்தேகங்களை அவர் தீர்த்து வைத்திருக்கிறார். அவரது தளம் இதுதான் வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு. கண்டிப்பாக வலைப்பூ எழுதுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு. 


சச்சினைப்பற்றி அவர் எழுதிய இன்னொரு பதிவு.  

----------------------((((((((((((((()))))))))))))-----------------

தளிர் சுரேஷ்  இவரும் தமிழ் இலக்கணம் தொடர்பாக ஓர் தொடர் எழுதிவருகிறார். தொடர்ந்து படித்து வருகிறேன்.. இவர் எப்படி தினம் ஒரு பதிவு எழுதிகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதுவும் காப்பி பேஸ்ட் இல்லாமல்..! 


----------------------((((((((((((((()))))))))))))-----------------

தோசைக்கு சீனி வாங்கி சாப்பிட்ட கதை தெரியுமா... நகைச்சுவை மிக நன்றாக வருகிறது இவருக்கு. 
 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

முழுக்க முழுக்க ஆன்மீக வலைப்பூ. மார்கழிப் பனியில் என்ற தொடர் எழுதி வருகிறார். எல்லா தகவல்களும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. 

----------------------((((((((((((((()))))))))))))-----------------

குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் அவசியம்தானா? தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் மகேஷ்..

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

என் பள்ளித்தோழன் பாலாஜி. யார்  ஃபர்ஸ்ட் ரேங்க் என்பதில் எங்களுக்குள் கடுமையானப் போட்டி நடக்கும். 8 வது வரை அவன் 1ST நான் 2ND. எட்டாவது அரையாண்டுத்தேர்வி
ல் நான் 1ST வந்தேன். அதற்குப் பிறகு அந்த இடத்தை நான் தக்க வச்சிகிட்டேன். பள்ளி முடிந்த பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. வலைப்பூ மூலமாகத்தான் திரும்பவும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. "நடிகர்களின் நிஜ முகங்கள் " என்ற தலைப்பில் பரபரப்பாக தொடர் எழுதி வந்தான். யார் மிரட்டினார்களோ(!) தெரியவில்லை. எழுதுவதை நிறுத்திவிட்டான்.

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

ராஜ்ப்ரியன்.எல்லோரும் அறிந்தவர்தான்.   சினிமா நடிகர்-நடிகைளும் பொங்கல் வாழ்த்தும் தேவையா ?  என்று நச் கேள்வி கேட்கிறார் . கோயாபல்ஸ்சான கோபால்சாமி.வைகோவின் போர்வாள்களுக்கு சவால் விடுகிறார்.

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------


அருமைத்தம்பி ஸ்கூல் பையன் -ன் அனைத்துப் பதிவுகளையும் ரசித்துப் படிப்பேன். உணர்வுப்பூர்வமாக எழுதக்கூடியவர். நெஞ்சைப் பிசையும் நெகிழ்ச்சியானப் பதிவுகள் நிறைய எழுதுவார். தாத்தாவின் நினைவு நாளையொட்டி அவர் எழுதிய பதிவு, பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம் எல்லாமே அருமை. குறிப்பாக தன் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வை நகைச்சவை கலந்து சுவைபட எழுதுவார். 


 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

விஜயபாஸ்கர் விஜய் : திரு.சி.சு.செல்லப்பா, திரு.சுந்தர ராமசாமி தொடங்கி இன்றைய சாரு, ஜெமோ வரையான அனைத்து இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைக் கரைத்துக் குடித்தவர். அது இவரது நிலைத்தகவல்களில் பிரதிபலிக்கும். பேஸ்புக்கில் இவர் எழுதும் ஒவ்வொரு விசயமும் அவ்வளவு சுவாரஸ்யம். பெரும்பாலும் இலக்கிய சம்மந்தமான பதிவுகளை எழுதுவார். அந்தரங்க விசயங்களையும் ஆபாசமில்லாமல் எழுதக்கூடியவர். கதை போல ஒன்று.... என்கிற தலைப்பில் குறுங்கதைகளை தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதிவந்தார். அதில் சதமும் அடித்தார். எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். சில கதைகளைப் படித்து அசந்துபோய் அவரது உள்டப்பியில் பாராட்டியிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு மரப்பசு என்ற வலைப்பூவை  ஆரம்பித்து அதிலும் எழுதிவருகிறார். நல்ல எழுத்தாளுமை உள்ளவர்.
                                     ----------------------((((((((((((((()))))))))))))-----------------
 
இன்னும் தொடரும்...

உங்கள் பின்னூட்ட  ஆதரவுக்கு மீண்டும் நன்றி...
 
 
அன்புடன்...
 
மணிமாறன்.                   

மேலும் வாசிக்க...

Thursday, July 11, 2013

உலக அரசியல் பேச்சு !!!

உலக அரசியல் சாதமான விஷயம் இல்லை. ஏறக்குறைய உள்ளூர் அரசியல் போல் ஏமாறுவது மக்கள், ஏமாற்றுவது ஆளும் வர்க்கம் என்று இருந்தாலும், உலக அரசியலில் பாதிப்பு மிக பெரியது. அமெரிக்காவில் டாலர் விலை சரிந்தாலும், இந்திய ஐ.டி. மக்களுக்கு வேலை கோவிந்தா ! டாலர் விலை ஏறினாலும், இந்த ரூபாய் மதிப்புக்கு அரோகரா !!

டாலர் எப்படி தான் போக வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால், டாலரை நம்பி நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியை தான் நம்மை நமாபே கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்று, உலக அரசியல் பேசும் பதிவர்களின் பதிவுகளை தான் நாம் பார்க்க போகிறோம்.

*

'ஆகாயம்' என்ற பெயரில் பதிவு எழுதி வரும் கிருஷ்ணா, அமெரிக்காவின் ப்ரிசம் நிறுவனம் தகவல்களை எப்படி திருடுகிறது என்பது தனது எளிமையான பதிவின் மூலம் விளக்கியிருக்கிறார்.

பயங்கரவாதற்கு எதிராக அரசு போராடுகிறது என்றாலும், அதை இன்னொரு ஆளும் அரசு ஊக்கவித்துக் கொண்டு தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முஹம்மத் ஆஷிக் பதிவு விளக்குகிறது.

“Advanced Working Class” என்ற ஆங்கில பெயரில் வலைப்பூவை வைத்திருந்தாலும், தமிழில் தான் பதிவிடுகிறார்கள். ஏறக்குறைய பெரும்பாலான பதிவுகள் உலக அரசியல் தான் பேசுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்குள் நடக்கும் ஒற்றாடல் பற்றிய இந்த பதிவு அருமையாக விளக்குகிறது.

உலக அரசியல் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள் கலையரசுனுடையது. ஈழ தமிழன். இவர் தனது அனுபவத்தை “அகதி வாழ்க்கை” என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். தமிழர் இனப்படுகொலை என்று மட்டுமில்லாமல், உலகத்தில் மனித உரிமை மீறல் பற்றி தனது வலைப்பதிவில் பதிவு செய்து வருகிறார்.

வெளிகண்ட நாதரின் “பாலக்கரை பாலனின் பால்ய பார்வை” வலைத்தளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பதிவாக இருந்தாலும், இன்னும் உலக அரசியலில் பெரிய மாற்றமில்லாததால் இப்போதும் இந்த காலத்தில் கூட பொருந்தக்குடியதாகவே இருக்கிறது.

சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சாதகமாக, அதுவும் ஒசாமாவின் மரணத்திற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் சொல்கிறார் மோனி.

அ.முத்துகிருஷ்ணனை வலைப்பதிவர் பட்டியலில் சேர்ப்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இனப்படுகொலை, அணு உலை எதிர்ப்பு, மனித உரிமை மீறல்கள்களுக்காக போராடி வரும் போராளி. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில், இவரது இணையதளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைக்கிறேன். இவர் போராடுவதைப் பற்றி எழுதுவதில்லை. நாமும் போராட வேண்டும் என்பதற்காக எழுதுகிறார். குறிப்பாக, மலாலாவை பற்றிய பதிவு எதோ அயல்நாட்டில் நடந்த நிகழ்வு அல்ல. வெவ்வேறு நிறத்தில் நன் நாட்டில் பல சம்பவங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Sunday, January 13, 2013

2521.இறுதியில் ஒரு ரகசியம் சொல்றேன்

தொலைகாட்சியில் சில வினாடிகள் அறிமுகம்,ஆனால் அது தரும் பூரிப்பை பாருங்கள் !
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ! என்னை விட்டுவிட்டு பொங்கல் சாப்பிடும் உங்கள் அனைவருக்கும் இனிப்பான அறிமுகங்கள் இன்றும் (கரும்பு யாரவது அனுப்புங்களேன் ருசிபார்த்து ரொம்ப நாளாச்சு ஹி ஹி )

குருநாதசுந்தரம் கவிதைகள் 

   இது அன்பர் குருநாதசுந்தரம் அவர்களின் தளம். புதுக்கோட்டையை சேர்ந்தவர் நல்ல தரமான கவிதைகள் படைத்தது வருகிறார் . படித்து பாருங்கள் அதில் எனக்கு பிடித்தவை ..




இங்கே நபர் ஷாபி அஹமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை காணொளி தொடராக தந்து வருகிறார் . மிகவும் பயனுள்ள தளம் பார்த்து பயனடைவோம் ....

எண்ணங்கள் ஆயிரம் 
சகோதரி ஆர்.வி.ராஜி அவர்களின் மணம்வீசும் வலைப்பூ இது.இங்கே போடோஷாப் பற்றிய தகவல்களும் கிடைக்கும் கவிதைகளும் கிடைக்கும்.படித்து பாருங்கள் எனக்கு இந்த கவிதைகள் ரொம்ப பிடித்தது ..

சிறந்த ஆயுதம்தானுண்டோ 

இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ 


தமிழ் இசை 

தமிழ் தேனை இசை என்னும் பருக இச்சை என்று சொல்லும் இசைபா குழுவினரான ஓஜஸ் மற்றும் தமிழ் ஆகியோரின் வலைப்பூ இது .இங்கே நல்ல நல்ல பாடல்கள் வரிகளுடன் கேட்டு மகிழலாம் .....

நேர்வழி 
இது சகோதரி ஆஷா பர்வின் அவர்களின் வலைப்பூ பல தலைப்புகளில் காரசாரமாக கதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறார் மிகவும் புதியவர்! படித்து பயன்பெறுவோம் ..........
---------------------------------------------------------------------------------------------------

தந்திரங்கள் எல்லாம் மந்திரங்கள்
ஆனது ஆன்மிகத்தில் !
அருவருப்புகள் எல்லாம்
ராஜதந்திரங்களாம் அரசியலில் !
குப்பைகள் கூட படைப்புகள்
ஆனது கலையில் !
தோட்டத்து பூக்களில் கூட 
மாசுபடிந்து இருக்கையில் 
வலைப்பூக்கள் மட்டும் அழகான
வாசம்வீசும் வாடா மலர்களாவது
வலைசரத்தில் தினமும் தோரனமாவதாலே !

---என்று பாடி என் பணியை இன்றுடன் நிறைவு செய்கிறேன். இந்த 7 நாட்களும் உங்களுடன் நான் மிகவும் ஆத்மார்த்தமாக நடைபோட்டேன். வேலை பளுவுக்கு இடையில் நான் முடிந்த வரையில் புதியவர்களை அறிமுகம் செய்தேன் . குறைகளை மன்னித்து என்னை இந்த 7 நாளும் கவனித்து சிறப்பித்தது போல் தொடர்ந்து ஆதரவு தந்து இங்கே  அறிமுகமானவர்களின் பதுவுகளுக்கும் என் எழுத்துக்கும் சிறகு தந்து என்றும் சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

வலைச்சர ஆசிரியர் சீனா ஐயாவுக்கும் அவரது குழுவினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.ஆசிரியராக மட்டும் இன்று விடைபெறுகிறேன் என்றும் மாணவனாக வலைச்சரத்தில் தொடர்வேன் ...நன்றி நன்றி !

Optimist (இன்முகச்செவியர் ,அனைத்திலும் நன்மையே காண்பவர் ) களின் மனம் எப்படி செயல்படவேண்டும் என்ற ரகசியம் சொல்லும் காணொளி இதோ  உங்களுக்கு நான் விடைபெறும் முன் பரிசாக ............




மேலும் வாசிக்க...

Saturday, January 12, 2013

2520.மீண்டு( ம் ) மீண்டும் வா




இன்றைய வீடியோ பார்த்தீங்களா .. மாடிப்படி ஏற மறந்தவர்களை கூட அதில் மீண்டும் ஏற வைக்க ஒரு சுவாரசியம் தேவைபடுது இல்லையா. அதே போல மிகவும் சிறந்த பதிவுகள் மூலம் நம்மை மகிழ்வித்த பலர் இன்று பிற சமுக வலைதளங்களின்(Facebook,Twitter,Google+ etc) ஆக்கிரமிப்பில் காணமல் போயி விட்டார்கள் . அவர்கள் அழைக்க இன்றைய பதிவை பயன்படுத்த சித்தம் !


டீக்கடை 
என் அருமை சகோதரர் சிராஜுதீன் அவர்களின் தளம். பல அரசியல் தலைப்புகளில் எழுதி வந்தார்.பதிவுகள் நச்சுன்னு இருக்கும் ஆனா இப்ப வீசிக்கொண்டு இருக்கிற நீலம் புயல் காரணமாக(FACEBOOK லோகோ நீலம் தானே ஹி ஹி ) இப்ப அதிகமா எழுதுவதில்லை. ஆனால் இப்போ குட்டி சொர்க்கத்தில் இருந்து டீக்கடையில் சகோதரி ஆமினா டீ மாஸ்டராக கை கோர்க்க நம்ம சிராஜ் அண்ணன் வடை பஜ்ஜி பகிர மீண்டும் சூடு பிடித்துவிட்டது இந்த டீக்கடை .............

மாணவர்களா பலி ஆடுகளா? 

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால் 


ஆ யு த எ ழு த் து 
நண்பர் ராஜகோபாலன் அவர்களின் தளம் இது . இங்கே அவரது அனுபவங்கள் ,ஆதங்கங்கள் ,கவிதைகள் என்று பல பதிவுகளின் மூலம் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இப்போது அதிகம் முகநூளில் மட்டும் எழுதி வருகிறார் . அவர் மீண்டும் பதிவுலகில் வரவேண்டும் என்பது என் ஆசை ..

குழந்தைகள்........ வாழ்வியலின் வண்ணங்கள்


அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???


எண்ணங்களுக்குள் நான் 

இது நண்பர் பாருக் அவர்களின் தளம். இவர் நல்ல வாசிக்கும் பழக்கம் உள்ளவர்.நல்ல தரமான பதிவுகளின் மூலம் மிக குறுகிய காலத்திலேயே விகடன் அறிமுகம் கிடைக்க பெற்றவர். ஆனால் இவரும் இன்று முகநூளில் தான் அதிக நேரம் செலவு செய்கிறார். இவரும் பதிவேன்னும் படிக்கட்டுகளில் ஏற வேண்டும் என்பது என் ஆசை ...




இன்னொரு கதை சொல்லி 
 திருவல்லிக்கேணி கோபால்சாமி விஜயகோபால் அவர்கள் மீண்டும் பதிவு எழுத வந்து இருக்கார் . இவரின் சிறுகதைகளை படிக்க இனி இங்கே போயி  படிக்கலாம் ....

இவர்களை போல் பலர் இன்று நல்ல நல்ல பதிவுகள் மூலம் ஆசைகாட்டி, இன்று பல காரணங்களால் நம்மை மீண்டும் சந்திக்க மறுத்துவருகிறார்கள் ! அவர்கள் அனைவரும் மீண்டும் நம்மோடு இணைய அவர்களுக்கு அன்பு அழைப்புக்கொடுப்போம்  ஈமெயில்,எஸ்.எம்.எஸ் என்று தொடர்புகொண்டு அழைத்து வாருங்களேன் ....ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் என் நண்பர் ஒருவர் மட்டும் அழைக்க முடியாத தூரத்திற்கு போய்விட்டார் அவர் நம்ம மாய உலகம் ராஜேஷ் ..... அவருக்கு என்ன ஆனது எப்படி மரணத்தை தொட்டார் என்று ஏதும் அறியேன் ..அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம்  பிராத்தனை செய்வோம் ........

                   மாய உலகம் ராஜேஷ் கண்ணீர் அஞ்சலி


ஆம் !நண்பர் ரமேஷின் இந்த தளம் வழியே எனக்கு இந்த செய்தி தெரியும்.அன்பு நண்பர் ரமேஷும் பதிவுலகிற்கு மீண்டும் வரவேண்டும் என்பது என் ஆவல் ....

இனி அறிமுகங்கள் .........

கடற்கரை 
இது நண்பர் விஜயனின் வலைத்தளம் இங்கே பல ஆச்சரியமான செய்திகளை தொடராக தந்து வருகிறார் .சென்று பாருங்கள் .ஆச்சரியங்கள் காத்து இருக்கிறது ..

கற்பனைகள் 
இது நண்பர் இளந்தமிழன் அவர்கள் இங்கே கவிதை தோரணமே கட்டி வருகிறார்.சென்று பாருங்கள் கவிதையின் மனமும் மணமும் கம கம என்று இருக்கு .....

நம்பிக்கையுடன் போகிறேன்


பிடித்திருக்கிறது என்கிறார் உங்களுக்கு பிடித்திரிக்கிறதா சென்று பாருங்கள் 



ஒரு பக்க கதைகள் ஓர் ஆயிரம் !!
இது பத்திரிக்கை உலகில் பிரபலமாக பல கதைகள் எழுதி வரும் நண்பர் பசி பரமசிவம் அவர்களின் தளம் .ஒரு பக்க கதைகள் படிக்க இங்கே போகலாம். இவரை பற்றி இங்கே சொல்லியதை நான் பெருமையாக நினைக்கிறேன் ...

சந்தனார் 
இங்கே இலக்கியம்,சினிமா,குறும்படம் உலகம் என பல தலைப்புகளில் பல அரிய தகவல்கள் கிடைகிறது சென்று பார்த்து சொல்லுங்கள் ...

பெண் என்னும் பதுமை 
இது சகோதரி சரளா அவர்களின் வலைபக்கம் . இங்கு நீதி கதைகள் ,கவிதைகள் கட்டுரைகள் என பல பதிவுகள் உங்களுக்கு காத்திருக்கு ....

ரகசிய முத்தம் 

பிரசவம் ( நானும் என் எழுத்தும் )

ஓடியன் 

இது நண்பர் லக்ஸ்மணன் அவர்களின் வலைபூ ..புதியவர் கும்கி என்ற பெயரில் முதல் பதிவே அசத்தல்..மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறோம் நண்பரே ..........

இன்று என் வலைப்பூவில் உள்ள மீள் பதிவை பார்க்கும் முன் அது ஏன் எழுதினேன் என்று சொல்ல விரும்புகிறேன் ..சென்ற வருடம் ஒரு கல்யாணதிற்கு சென்ற போது எனக்கும் என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் நடந்த உரையாடல் இது ...

நான்: நல்ல இருக்கீங்களா அண்ணே ! புது நாடு புது வேலை எல்லாம் எப்படி இருக்கு அண்ணே ?
அவர்:நல்லா  இருக்கேன் !நான் இப்ப என் கம்பனியின் ஜி எம் ஆயிட்டேன் தம்பி !
நான் : ரொம்ப சந்தோசம் அண்ணே பெருமையா இருக்கு !
அவர்:தம்பி எனக்கு இப்ப ஒரு பெரியா ஆலமரம் சிக்கி இருக்கு அதை அப்படியே வேரோட புடுங்கி நம்ம ஊருக்கு கொண்டுபோயி செட்டில் ஆகுற வரைக்கும் ஓயமாட்டேன்ன்னு சொல்லி சிரித்தார் ....

இதை பல பேர் முன்பு சபையில் தான் சொன்னார் ..எனக்கு தூக்கி வாரி போட்டது .. ஒரு மனிதன் முதலாளிக்கு செய்யும் துரோகத்தை கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் சொல்ல முடிகிறதே என்ற என் ஆதங்கம்,கேள்வி அனைத்தும் மனதில் பதிந்தது பின்பு ஒரு நாள் இப்படி கவிதையாக வெளிவந்தது .......அது

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும் 


அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............

இன்று இவ்வளவுதான் மீண்டும் நான் நாளை வருவேன் ....

மேலும் வாசிக்க...

Friday, January 11, 2013

2519.அறிமுகத்திற்கே அறிமுகம்

நம்ம பதிவுலக அறிமுகங்களுக்கு முன் இந்த உலகிற்கே அறிமுகம் ஆகும் ஒரு குழந்தையின் வீடியோவுடன் தொடங்குவோமா 

பொயட் நட்சத்திரா
 பல அருமையான கவிதைகளை அடுக்கி வைத்து வருகிறார்.இங்கே போயி பார்த்து ரசித்து சொல்லுங்கள் நான் சரியா இல்லை தவறா என்று ....



சிக்கன வாழ்விற்கான குறிப்புகள்

இன்றைய உலகில் சிக்கனமாக வாழ்வதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, சிக்கன வாழ்விற்கான பல்வேறு குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் இங்கே காண கிடைகிறது ...





காகித பூ

குரங்கின் கைப் பூமாலை  என்று சொல்லி ரொம்ப புதுசா தொடங்கி இருக்கிறார்  இரண்டு கவிதைகளும் பூக்களாக தான் இருக்கிறது பூமாலைக்காக காத்திருக்கிறோம் நண்பரே ..நீங்களும் போயி பாருங்களேன் 



கடல் பயணங்கள்

இங்கே நண்பர் சுரேஷ் குமார் தனக்கு பிடித்தவை பற்றி நம்மிடம் சொல்லி நண்பராக விருப்பம் தெரிவிக்கிறார் ! நட்பு பாராட்ட ஆவல் உள்ளதா பயணக் கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்குமா அப்ப இவர் உங்கள் நண்பரே ....







VELKR.BLOGSPOT.COM 








இங்கே நண்பர் முத்தரசு ஒரு அராஜகமே பண்ணுறார் படங்களும் கானொளிகளும் அதற்க்கான விளக்கங்களும் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு ... அதில் எனக்கு பிடித்தவை


மாத்துராங்கலாமா...



கவியாழி 

இங்கே அருமையான கவிதைகள் படிக்க ரசிக்க இருக்குதுங்க. ஒருமுறை படித்து பாருங்கள் நீங்கள் அதன் தரத்தை விவரிக்க என்னை போலவே வார்த்தையன்றி தவிப்பிர்கள் ...அதில் 






 என்ற தலைப்பில் நண்பர்  பிறைநேசன்  இப்ப தான் எழுத தொடங்கி இருக்கிறார் .முதல் பதிவே ரொம்ப வித்தியாசமான கசப்பான உண்மையை சொல்லி இருக்கார் அது

அம்மாவின் மறுபக்கம்


இந்த வலைபூவிற்கு செல்வதற்கும் இமயமலை ஏறுவதற்கும் என்ன சம்பந்தம்  நண்பர் ரூபனின் எழுத்து படைப்புகளுக்கு சென்று பாருங்கள் தெரியும். நல்ல கவிதைகள் பல இங்கே இருக்கு ...மேலும் அவரிடம் பேசும் பாக்கியமும் கிடைத்தது இலங்கை தமிழ் கேட்பதற்கே மாதவம் செய்ய வேண்டும். இந்த இலங்கை தமிழை காக்கவும் கூட ..........




பூந்தளிர் என்னும் வலைப்பூவில் சகோதரி சிவகாமி அவர்கள், கேளடி பெண்ணே ,தேங்காய் பால் பாயசம் செய்து குழந்தை வளர்ப்போம் என்கிறார் ...
மிகவும் புதியவர் மூன்று பதிவுகளும் முத்துக்கள் தொடருங்கள் சகோ நாங்களும் உங்கள் பின் வருகிறோம்

அறிமுகம் 

இது தாங்க நம்ம தலைப்பு செய்தி ! இது பல்சுவை தகவல்கள் தரும் ஒரு வலைத்தளம்.பல புதிய தகவல்கள் தருகிறது இந்த தளம் சென்று பாருங்கள் !



வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும் போது மீள் பதிவுகள் மட்டும் தானா புதுசா ஏதும் இல்லையா என்று நண்பர்கள்,ரசிகர்கள் facebook,twitter ,ஈமெயில் ,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்பார்கள் என்று எண்ணினேன் .ஆனால் அப்படி ஒன்னும் நடக்கவில்லை எனவே நானாகவே புதிய முயற்சி ஒன்று செய்து இருக்கிறேன் இன்று ..ஹி ஹி நான் மிகவும் ரசித்து கேட்ட ஹிந்தி பாடல் ஒன்றுக்கு தமிழ் வார்த்தைகள் கொடுத்து பார்த்து இருக்கிறேன்
என்னுடன் பாட தயாரா வாங்க பாடுவோம் ..........

இசை ஆர்வமுண்டோ ?வாங்க நீங்களும் பாடலாம் !

இன்று இந்த பக்கத்தில் கண்டு ரசித்த ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தது நம்ம அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரின் ஓவியங்களை அனுமதியின்றி உரிமையுடன் பகிர்ந்து பெருமை கொள்கிறேன் நன்றி ஐயா !

அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது