07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 11, 2013

2519.அறிமுகத்திற்கே அறிமுகம்

நம்ம பதிவுலக அறிமுகங்களுக்கு முன் இந்த உலகிற்கே அறிமுகம் ஆகும் ஒரு குழந்தையின் வீடியோவுடன் தொடங்குவோமா 

பொயட் நட்சத்திரா
 பல அருமையான கவிதைகளை அடுக்கி வைத்து வருகிறார்.இங்கே போயி பார்த்து ரசித்து சொல்லுங்கள் நான் சரியா இல்லை தவறா என்று ....சிக்கன வாழ்விற்கான குறிப்புகள்

இன்றைய உலகில் சிக்கனமாக வாழ்வதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, சிக்கன வாழ்விற்கான பல்வேறு குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் இங்கே காண கிடைகிறது ...

காகித பூ

குரங்கின் கைப் பூமாலை  என்று சொல்லி ரொம்ப புதுசா தொடங்கி இருக்கிறார்  இரண்டு கவிதைகளும் பூக்களாக தான் இருக்கிறது பூமாலைக்காக காத்திருக்கிறோம் நண்பரே ..நீங்களும் போயி பாருங்களேன் கடல் பயணங்கள்

இங்கே நண்பர் சுரேஷ் குமார் தனக்கு பிடித்தவை பற்றி நம்மிடம் சொல்லி நண்பராக விருப்பம் தெரிவிக்கிறார் ! நட்பு பாராட்ட ஆவல் உள்ளதா பயணக் கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்குமா அப்ப இவர் உங்கள் நண்பரே ....VELKR.BLOGSPOT.COM 
இங்கே நண்பர் முத்தரசு ஒரு அராஜகமே பண்ணுறார் படங்களும் கானொளிகளும் அதற்க்கான விளக்கங்களும் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு ... அதில் எனக்கு பிடித்தவை


மாத்துராங்கலாமா...கவியாழி 

இங்கே அருமையான கவிதைகள் படிக்க ரசிக்க இருக்குதுங்க. ஒருமுறை படித்து பாருங்கள் நீங்கள் அதன் தரத்தை விவரிக்க என்னை போலவே வார்த்தையன்றி தவிப்பிர்கள் ...அதில் 


 என்ற தலைப்பில் நண்பர்  பிறைநேசன்  இப்ப தான் எழுத தொடங்கி இருக்கிறார் .முதல் பதிவே ரொம்ப வித்தியாசமான கசப்பான உண்மையை சொல்லி இருக்கார் அது

அம்மாவின் மறுபக்கம்


இந்த வலைபூவிற்கு செல்வதற்கும் இமயமலை ஏறுவதற்கும் என்ன சம்பந்தம்  நண்பர் ரூபனின் எழுத்து படைப்புகளுக்கு சென்று பாருங்கள் தெரியும். நல்ல கவிதைகள் பல இங்கே இருக்கு ...மேலும் அவரிடம் பேசும் பாக்கியமும் கிடைத்தது இலங்கை தமிழ் கேட்பதற்கே மாதவம் செய்ய வேண்டும். இந்த இலங்கை தமிழை காக்கவும் கூட ..........
பூந்தளிர் என்னும் வலைப்பூவில் சகோதரி சிவகாமி அவர்கள், கேளடி பெண்ணே ,தேங்காய் பால் பாயசம் செய்து குழந்தை வளர்ப்போம் என்கிறார் ...
மிகவும் புதியவர் மூன்று பதிவுகளும் முத்துக்கள் தொடருங்கள் சகோ நாங்களும் உங்கள் பின் வருகிறோம்

அறிமுகம் 

இது தாங்க நம்ம தலைப்பு செய்தி ! இது பல்சுவை தகவல்கள் தரும் ஒரு வலைத்தளம்.பல புதிய தகவல்கள் தருகிறது இந்த தளம் சென்று பாருங்கள் !வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும் போது மீள் பதிவுகள் மட்டும் தானா புதுசா ஏதும் இல்லையா என்று நண்பர்கள்,ரசிகர்கள் facebook,twitter ,ஈமெயில் ,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்பார்கள் என்று எண்ணினேன் .ஆனால் அப்படி ஒன்னும் நடக்கவில்லை எனவே நானாகவே புதிய முயற்சி ஒன்று செய்து இருக்கிறேன் இன்று ..ஹி ஹி நான் மிகவும் ரசித்து கேட்ட ஹிந்தி பாடல் ஒன்றுக்கு தமிழ் வார்த்தைகள் கொடுத்து பார்த்து இருக்கிறேன்
என்னுடன் பாட தயாரா வாங்க பாடுவோம் ..........

இசை ஆர்வமுண்டோ ?வாங்க நீங்களும் பாடலாம் !

இன்று இந்த பக்கத்தில் கண்டு ரசித்த ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தது நம்ம அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரின் ஓவியங்களை அனுமதியின்றி உரிமையுடன் பகிர்ந்து பெருமை கொள்கிறேன் நன்றி ஐயா !

அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............43 comments:

 1. இன்று வித்தியாசமான பல்சுவை பதிவுகள்தான்.

  ReplyDelete
 2. இடையிடையே இணைத்துள்ள படங்களும் கலகலப்பாகயிருக்கின்றன.

  ReplyDelete
 3. வணக்கம்
  ரியாஸ்(அண்ணா)


  இன்று ஒவ்வொரு பதிவாளர்கள் பற்றிய அறிமுகங்கள் மிக நன்றாக உள்ளதுஎன்னுடைய வலைபூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றியண்ணா,

  அத்தோடு இன்று அறிமுகம் கண்ட அனைத்து உள்ளங்களுக்கு நன்றி,
  தொடருகிறேன் பதிவுகளை,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. வணக்கம்
  ரியாஸ்(அண்ணா)

  தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்துள்ளேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. தொலைபேசி வரை சொன்னீங்க, அலைபேசியை விட்டிட்டீங்களே?

  ReplyDelete
 6. ஓவியர் வை.கோ. ஐயாவுக்கு என் இனிய பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. //பிடித்துப் போனது யாரை//

  //போனது//

  ஏன் போக வேண்டும்? பிடித்து 'இருக்கலாம்'. எனவே,
  "பிடித்தது யாரை" என வைத்துக் கொள்வோம்.

  ReplyDelete
 8. இந்த உலக்குக்கே அறிமுகம் ஆகும் ஒரு குழந்தையின் வீடியோ ..அருமை..பாராட்டுக்கள்...

  ReplyDelete
 9. வை.கோ ஐயாவின் ஓவியம் அருமை! சகலாகலா வல்லவராச்சே..!
  இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்களில் சிறப்பு நானும் சென்றிருக்கிறேன். ஓவியம் அழகு.

  ReplyDelete
 11. ரியாஸ் சார் ரொம்ப ரொம்ப நன்றி. நான் வலைப்பூ ஆரம்பித்தே 10 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்று தேடிக்கொண்டே இருக்கிறேன். நன்றிகள். ஒவ்வொரு பதிவருக்கும் வலைச்சர அறிமுகம் எவ்வளவு உற்சாக கொடுக்கும் என்பதை இப்போது என்னால் உணற முடிகிறது. நன்றிகள்

  ReplyDelete
 12. தாங்கள் என்னையும், எனது வலைபூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ! இதன் மூலம் உங்களையும், உங்கள் பதிவை படித்தால் இன்னும் சிலரையும் இன்று நண்பர்களாக பெற்றேன் ! பதிவு தொடர வாழ்த்துக்கள்....... இன்றிலிருந்து தங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ...

  நண்பர் நிஜாமுதீன் அவர்களே நீங்கள் குறிப்பிட்ட தவறுகளை சரிசெய்துவிட்டேன் ...

  பொயட் நட்சத்திர என்ற தளம் இன்று ஏனோ வேலை செய்யவில்லை ...

  மீண்டும் வருகிறேன் ,,,,,,,,,,

  ReplyDelete
 14. என்னுடைய பதிவைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி... உங்களுடைய பதிவு என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

  ReplyDelete
 15. வலைச்சர ஆசிரியர் + என் அன்பு நண்பர் ரியாஸ் அஹமது அவர்களே!

  வணக்கம்.

  இன்று அமாவாசை. அதனால் என் வருகையில் மிகவும் தாமதம்.

  அமாவாசைக்கும் அப்துல் காதர் ஆகிய எனக்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்காவிட்டாலும் நான் சொல்லத்தான் போகிறேன்.

  சற்றே இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன். ஜாக்கிரதை ! ;)

  அன்புடன்

  VGK

  >>>>>

  ReplyDelete
 16. நான் நேற்று தங்கள் தளத்தில் தங்களின் படைப்புக்குக் கொடுத்திருந்த பல பின்னூட்டங்களில் எனக்கு மிகவும் நெருக்கமான முகமதிய நண்பர்கள் சிலரைப்பற்றி எழுதியிருந்தேன். ஞாபகம் உள்ளது அல்லவா?

  அதில் மிக முக்கியமான சஃபியுல்லா என்பவரைப்பற்றி எழுத மறந்து விட்டேன்.

  இவர் என்னிடம் மிகவும் பிரியமானவர். சிவப்பாக ஜோரா பளிச்சினு எப்போதும் சுத்தமாக இருப்பார். என்னுடனேயே நான் பணியாற்றிய அக்கவுண்ட்ஸ் + ஃபைனான்ஸ் பிரிவிலேயே வேறு ஒரு செக்‌ஷன் அதிகாரியாக இருந்தார்.

  தினமும் பகல் உணவு கேண்டீனில் முடித்துக்கொண்டு என்னுடைய ஏ.ஸி. அறைக்கு வருவார்.

  என் ஏ.ஸி. ரூமின் ஜில்லாப்புக்காகவே வருவார். அமைதியாக அமர்ந்திருப்பார். நடுநடுவே என்னிடம் கொஞ்சம் உரையாடுவார். என் கதைகளை விரும்பி வாங்கிப்படிப்பார். பாராட்டுவார்.

  முக்கியமாக அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாம் பிறை சந்திர தரிஸனம் எந்தத்தேதியில் எந்தக்கிழமையில் வருகிறது என்பதை என்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்வார்.

  நான் என்னிடம் வீட்டில் ஒன்றும் ஆபீஸில் ஒன்றுமாக இவரைப் போன்றவர்களுக்காகவே பஞ்சாங்கம் எப்போதும் இரண்டு வைத்திருப்பேன்.

  இந்த மூன்றாம் பிறை ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல என் நண்பர் சஃபியுல்லா போன்ற முஸ்லீம்களுக்கும் தேவைப்படுகிறது பாருங்கள்! ;)

  நீங்கள் எல்லோருமே எப்போதுமே பிறையையும், நட்சத்திரங்களையும் வழிபடுபவர்கள் தானே. சந்தோஷம் ;)

  அமாவாசையின் நாழிகையை வைத்தல்லவோ இந்த மூன்றாம் பிறை என்பதனை நாம் கண்டு மகிழ முடிகிறது.

  அதனால் தான் சொல்கிறேன். அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் நிச்சயமாகச் சம்பந்தம் உண்டு தான்.

  OK தானே நணபரே?

  >>>>

  ReplyDelete
 17. இன்றைய வலைச்சரத்தின் தலைப்பான “அறிமுகத்திற்கே அறிமுகம்” என்பது சிறப்பாக உள்ளது.

  [”ற்” க்குப்பிறகு போட்டுள்ள
  “க்” தேவையில்லை]

  இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  >>>>>>>>

  ReplyDelete
 18. //ஒரு குழந்தையின் வீடியோவுடன் தொடங்குவோமா //

  அழகான அருமையான துவக்கம்.

  காணொளி சூப்பரோ சூப்பர்.

  பிறந்த புத்தம் புதிய குழந்தைகளும், புதிதாக பனங்காயைப்பிளந்து எடுக்கும் குட்டியூண்டு இளம் நொங்குகளும் ஒன்று தான்.

  கவனமாக ஆடாமல் அசங்காமல் சிந்தாமல் சிதறாமல் புண்படாமல் மிகவும் சிரத்தையாக வெளியே எடுத்து, மூக்கில் ஜலம் போகாமல் குளிப்பாட்டி, அவைகளைக் கையாள வேண்டும்.

  புதிதாகப்பறித்து வந்த தேறிய வேர்கடலையை உடைத்தால் உள்ளே ஒரு ரோஸ் கலரில் பருப்பு இருக்கும் அல்லவா.

  அதே போன்ற நிறத்தில் ரோஜாக்குவியலாக காட்சி தரும், இதுபோல புத்தம் புதியதாகத் தோன்றிய பச்சிளம் குழந்தைகள்.

  பின் கழுத்தும் தலைக்கும் நடுவே நம் இடது உள்ளங்கையை விரித்து வைத்து அழகாக, கழுத்து சுளுக்கிவிடாமல் தூக்கி மகிழ வேண்டும்.

  எனக்கு இதில் நிறைய அனுபவம் உண்டு.

  >>>>>>>

  ReplyDelete
 19. //இன்று இந்த பக்கத்தில் கண்டு ரசித்த ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தது நம்ம அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.//

  ஆஹா, எங்கு வரைந்தார் எதற்காக வரைந்தார் என்று "LINK" கொடுத்திருந்தால் அல்லவா அனைவருக்கும் புரியக்கூடும்.

  சரி பரவாயில்லை. அதை விடுங்கோ.

  //அவரின் ஓவியங்களை அனுமதியின்றி உரிமையுடன் பகிர்ந்து பெருமை கொள்கிறேன். நன்றி ஐயா//

  அடடா, அப்படியா?

  இங்கு என்னிடம் இருந்த நான் வரைந்திருந்த ஓவியங்களைக் காணோமே எனத் தேடிக்கொண்டிருந்தேன்.

  உங்களுக்கு என் அனுமதி தேவையில்லை தான்.

  உரிமை எடுத்துக்கொண்டு பகிர்ந்துள்ளதில் எனக்கும் பெருமையாகவே உள்ளது.

  நன்றியோ நன்றிகள்.

  /இப்போது இடைவேளை/

  மீண்டும் வருவேன். ஜாக்கிரதை. ;)

  >>>>>>> !

  ReplyDelete
 20. தங்களின் பதிவில் எனக்கும் வாய்ப்பளித்து மரியாதை செய்தமைக்கு நன்றிகள் .கடந்த இரண்டு நாளா எனது மடிக்கணினி மக்கர் பண்ணியதால் உங்களுக்கு நன்றி உடனே சொல்ல முடியவில்லை

  ReplyDelete
 21. //மிகவும் ரசித்து கேட்ட ஹிந்தி பாடல் ஒன்றுக்கு தமிழ் வார்த்தைகள் கொடுத்து பார்த்து இருக்கிறேன்.

  என்னுடன் பாட தயாரா வாங்க பாடுவோம் ..........

  இசை ஆர்வமுண்டோ?
  வாங்க நீங்களும் பாடலாம்!//

  தங்களின் வலைத்தளத்திற்குச் சென்று மிகவும் ரஸித்தேன். காணொளியில் வரும் காதல் காட்சிகள் அருமை. அதற்குத்தகுந்தாற்போல தாங்கள், தமிழில் பாடல் எழுதியுள்ளது அதைவிட அருமை.

  இன்று அங்கு தங்களுக்கு ஆறு ஆஸ்கார் விருதுகள் நான் அளித்துள்ளேன். அது தவிர செண்டம் மார்க் அளித்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்றும் அறிவித்துள்ளேன்.

  தங்களின் கன்னி முயற்சியிலேயே காதலில் வென்று விட்டீர்கள்.

  இயற்றிய பாடலின் காதல் வரிகளைத் தான் சொல்கிறேன். ;)))))

  அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 22. //NIZAMUDEEN said...
  ஓவியர் வை.கோ. ஐயாவுக்கு என் இனிய பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி, நண்பரே!

  அன்புடன்,
  VGK

  ReplyDelete
 23. //உஷா அன்பரசு said...
  வை.கோ ஐயாவின் ஓவியம் அருமை! சகலாகலா வல்லவராச்சே..!//

  வாங்கோ திருமதி. உஷா டீச்சர்.
  வணக்கம் டீச்சர். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

  நான் இன்று ரொம்பவும் பிஸி டீச்சர்.
  நல்லவேளையாக நீங்கள் மெயில் மூலம் தகவல் கொடுத்தீங்கோ.

  டீச்சரே சொல்லிட்டாங்களே, உடனே போகாட்டி, காதைத்திருகி, பெஞ்சுமேலே ஏற்றி, பிரம்படி கொடுத்துடுவாங்களேன்னு, பயந்துபோய் ஓடியாந்தேன்.

  தாங்கள் போகச்சொன்ன இன்னொரு இடத்துக்கு இனிமேல் தான் நேரம் கிடைக்கும் போது போகணும். கோச்சுக்காதீங்க டீச்சர்.

  தங்கள் பிரியமுள்ள
  மாணவன் கோபு

  ReplyDelete
 24. //Sasi Kala said...
  இன்றைய அறிமுகங்களில் சிறப்பு நானும் சென்றிருக்கிறேன். ஓவியம் அழகு.//

  தென்றலாக வருகை தந்து அழகாக பாராட்டியுள்ள கவிதாயினி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 25. நன்றி நண்பா
  என்ைன உங்கள் பாணியில் அறிமுகம் ெசய்ததற்க்கு

  ReplyDelete
 26. குழந்ைத ெதாடக்கம் அருைம

  பல்சுைவ பதிவுகள் பகிரவுக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 27. attn:


  நன்றி என்ற சொல்லே உள்ளத்து உணர்வை சொல்லமுடியாமல் இயலாமையில் தவிக்குது ..என்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ள ஒரு பதிவர் சொல்லி இருந்தார் ... அந்த வார்த்தைகளை என்னால் முழுமையாக உணரவும் மதிக்கவும் முடிகிறது ..உங்கள் வாழ்த்துக்களால் நானும் அதே நிலையில் இருப்பதால் ..
  கோடான கோடி நன்றிகள் MR.vgk ஐயா

  ஐயா மேலும் நீங்கள் கூறிய பிழையை சரிசெய்துவிட்டேன் .....
  படங்களை பகிர்ந்தது என் பாக்கியம் அல்லவா ,அதற்கும் லிங்க் கொடுத்து இருக்கிறேன் உங்கள் பெயரை தொட்டாலே அண்டாக்க கசம் சொல்லாமலே காலங்களில் அவள் ஓவியம் என்ற பக்கம் திறந்துவிடும் ஹ ஹா ஹா .............
  ஆறு ஆஸ்கார் ,100/100 ஸ்டேட் பிரஸ்ட் நூறு ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா ...இந்த அன்பும் வாழ்த்தும் என்றும் நிலைத்து இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராதிக்குறேன் ..............

  ReplyDelete
 28. ஐயா ஒரு சிறிய அல்ல பெரிய திருத்தம் ஐயா இஸ்லாமியர்கள் பிறையை நட்சத்திரங்களை வணங்கமாடர்கள் ...உருவமற்ற ஒரே ஏக இறைவன் மட்டுமே தொழுது வருகிறார்கள் .......
  அப்ப உங்க நண்பர் எதற்கு பிறையை பற்றி கேட்டார் ....

  இஸ்லாமிய மாதங்கள் நிலவின் பிறையை அடிப்படையாக கொண்டது எனவே அவர் நோன்பு நோர்க்கவோ அல்லது இறைவனிடம் ஏதும் சிறப்பு பிராத்தனைகள் செய்யவோ உகந்த நாளை கண்டுகொள்ள உங்களிடம் பிறையை பற்றி தவறாமல் கேட்டு இருக்கலாம் .. நன்றி ஐயா ......

  ReplyDelete
 29. இன்றைய அறிமுகங்களுக்கும் மீண்டும் நன்றிகள்,கருத்திட்ட அனைவருக்கும் மீண்டும் மீண்டும் ஆயிரம் கோடி நன்றிகள் ...

  ReplyDelete
 30. வை.கோ. ஐயா அவர்களுக்கு,

  ரியாஸ் அஹமது
  ஒரு விளக்கம் அளித்தார். மற்றொன்று:

  இஸ்லாம் என்பது மார்க்கம். அதன் வழி நடப்பவர் முஸ்லிம்.
  //முகமதிய நண்பர்// என்ற வார்த்தையில் வரும் 'முகமதிய' என்பதற்கு மாற்றாக 'முஸ்லிம்' என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 31. ரியாஸ் அஹமது said...
  //ஐயா ஒரு சிறிய அல்ல பெரிய திருத்தம் ஐயா இஸ்லாமியர்கள் பிறையை நட்சத்திரங்களை வணங்கமாட்டார்கள் ... உருவமற்ற ஒரே ஏக இறைவன் மட்டுமே தொழுது வருகிறார்கள் .......//

  அப்படியா, OK விளக்கத்திற்கு நன்றி, நண்பரே.

  //அப்ப உங்க நண்பர் எதற்கு பிறையை பற்றி கேட்டார்? //

  தெரியவில்லை. ஒவ்வொரு மாதங்களிலும் இதை என்னிடம் கட்டாயமாக வந்து கேட்டு குறித்துக் கொண்டு செல்வார்.

  //இஸ்லாமிய மாதங்கள் நிலவின் பிறையை அடிப்படையாக கொண்டது எனவே அவர் நோன்பு நோர்க்கவோ அல்லது இறைவனிடம் ஏதும் சிறப்பு பிராத்தனைகள் செய்யவோ உகந்த நாளை கண்டுகொள்ள உங்களிடம் பிறையை பற்றி தவறாமல் கேட்டு இருக்கலாம் .. நன்றி ஐயா ..//

  இருக்கலாம் நண்பரே.

  நான் பணி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளும், அவர் பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகளும் ஆகிவிட்டன.

  இருவரும் திருச்சி தான் என்றாலும் இப்போது நாங்கள் அதிகமாக சந்திக்க முடியவில்லை. அலைபேசி எண்ணும் தற்சமயம் என்னிடம் இல்லை.

  நிச்சயமாக அவரிடம் இதுபற்றி எப்படியாவது கேட்டு தங்களுக்கு மெயில் மூலம் என்றாவது ஒரு நாள் தெரிவிக்கிறேன்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 32. //NIZAMUDEEN said...
  வை.கோ. ஐயா அவர்களுக்கு,

  ரியாஸ் அஹமது
  ஒரு விளக்கம் அளித்தார். மற்றொன்று:

  இஸ்லாம் என்பது மார்க்கம்.

  அதன் வழி நடப்பவர் முஸ்லிம்.

  //முகமதிய நண்பர்// என்ற வார்த்தையில் வரும் 'முகமதிய' என்பதற்கு மாற்றாக 'முஸ்லிம்' என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

  MUSLIMS என்பது ஆங்கில வார்த்தை என்றும் அதற்கான சரியான தமிழ் வார்த்தை ‘முகமதியர்கள்” என்றும் நான் நினைத்து தான் அப்படி எழுதியிருந்தேன்.

  இனி தாங்கள் சொல்வது போல ’முஸ்லிம்’ என்றே குறிப்பிடுவேன்.
  NOTED YOUR INSTRUCTION, Please.

  நான் எழுதியுள்ள ’முகமதிய நண்பர்கள்’ என்ற வார்த்தைகளில் ஏதேனும் தங்களுக்கு தவறோ வருத்தமோ இருக்குமானால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 33. அருமையான அறிமுகங்கள் ... பலரை தொடர ஆரம்பித்து விட்டேன் நன்றி

  ReplyDelete
 34. அருமையான அறிமுகங்கள் ... பலரை தொடர ஆரம்பித்து விட்டேன் நன்றி

  ReplyDelete
 35. இன்றைய பகிர்வுகள் அருமை. திரு,வை. கோபாலகிருஷ்ணன் சார் வரைந்த ஓவியங்களை பகிர்ந்து கொண்டது மேலும் சிறப்பு.
  வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 36. நண்பர்திரு.ரியாஸ் அவர்களுக்கு வணக்கம்,எனது பதிவிற்கு அங்கீகாரம் கொடுத்ததற்கும்,ஆதரவு கொடுத்ததற்கும் என் உள்ளம் கனிந்த நன்றி சகோ

  ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் என்னுடைய பெயரை வேல்குமார் என்பதற்கு பதிலாக வேல்முருகன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்,அதனை மற்றம் செய்தல் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 37. நண்பர்திரு.ரியாஸ் அவர்களுக்கு வணக்கம்,எனது பதிவிற்கு அங்கீகாரம் கொடுத்ததற்கும்,ஆதரவு கொடுத்ததற்கும் என் உள்ளம் கனிந்த நன்றி சகோ

  ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் என்னுடைய பெயரை வேல்குமார் என்பதற்கு பதிலாக வேல்முருகன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்,அதனை மற்றம் செய்தல் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 38. //கோமதி அரசு said...
  இன்றைய பகிர்வுகள் அருமை.

  திரு,வை. கோபாலகிருஷ்ணன் சார் வரைந்த ஓவியங்களை பகிர்ந்து கொண்டது மேலும் சிறப்பு.//

  வாருங்கள் திருமதி. கோமதி அரசு மேடம்.

  தங்களின் சிறப்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ஒரு மிகச்சிறந்த ஓவியரின் மனைவியாகிய தங்கள் வாயால், இதைக் கேட்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 39. Vel Kumar said...
  நண்பர்திரு.ரியாஸ் அவர்களுக்கு வணக்கம்,எனது பதிவிற்கு அங்கீகாரம் கொடுத்ததற்கும்,ஆதரவு கொடுத்ததற்கும் என் உள்ளம் கனிந்த நன்றி சகோ

  ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் என்னுடைய பெயரை வேல்குமார் என்பதற்கு பதிலாக வேல்முருகன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்,அதனை மற்றம் செய்தல் நன்றாக இருக்கும்.
  ----------------
  நன்றி சகோ மாற்றி விட்டேன் .....நன்றி

  ReplyDelete
 40. மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 41. உங்களது வருகையும் பாராட்டும் என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது
  நன்றி நண்பரே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது