07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 1, 2013

2வது நாள் - வெளிச்சம் எட்டுத்திக்கும் பரவட்டும்


இந்த 2013 வருட முதல் நாளில் கணேசனிடம் இருந்து தொடங்குபவர்களுக்கு தேவியர் இல்லத்தின் இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் வலிமையான எண்ணங்கள் உங்கள் வாய்ப்புகளை அருகே வரவழைக்கட்டும். 

நான் ஆசாமி தான். 

நம்பிக்கை உள்ளவர்களுக்கு அந்த தொந்தி கணேசனின் அருள் பார்வை கிட்ட என்று தான் சொல்ல வந்தேன்.

வலைபதிவு அனுபவம்

என் எழுத்தை யாரும் படிப்பதில்லை. பாராட்டுவதில்லை, விமர்சனங்கள் கூட அதிகம் வருவதில்லை. நான் போட்டுக் கொள்கின்ற ஓட்டு மட்டுமே. அதுவும் மின் தடையில் வாய்ப்பில்லை என்ற புலம்பும் மக்களா? 

காதை கொஞ்சம் கிட்ட கொண்டு வாங்க.

அங்கீகாரத்தை தேடிக் கொண்டே இருந்தால் நீங்க சவலைப்பிள்ளை என்று அர்த்தம். அது உங்கள் மன உளைச்சலைத் தான் அது அதிகமாக்கும். பெட்டிக்கடையில் போய் சற்று எட்டி நின்று பாருங்கள். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தொங்கிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் நீங்க குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கி விட்டு வேறு எதையும் திரும்பிக் கூட பார்க்காமல் தானே வந்து விடுறீங்க. 

அப்படி என்றால் என்ன? 

எல்லா பத்திரிக்கையும் முதல் வருடத்திற்குள் அவர்கள் லட்சியத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா?

இலவசமாய் கூகுள் அய்யா கொடுத்த இந்த வாய்ப்புக்கே இந்த அட்டகாசம் செய்ய உங்களால் முடிகின்றதென்றால் லட்சக்கணக்கனா முதலீடு போட்டு தமிழ்நாடு முழுக்க பேய் மாதிரி அலையும் பத்திரிக்கை உலகத்தை நினைத்துப் பாருங்க.

எழுதுங்க. எழுதுவது மட்டும் உங்கள் வேலையாக இருக்க வேண்டும். அதற்கு மேலும் உடனடியாக நீங்க கவனிக்கப்பட வேண்டும் என்றால் மட்டும் கீழ்க்கண்ட வேலைகளை தினமும் செய்யவும். பஞ்சாயத்து மேடையில் உட்கார்ந்திருப்பவர்களிடம் நடிகர் வடிவேல் மாதிரி நிற்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

1.   எல்லா பதிவுகளிலும் உங்கள் விமர்சனத்தை எழுதி வைத்து விடுங்க.

2.   நான் உனக்கு ஒட்டு போட்டுவிட்டேன். த.ம. 50 என்பது போல எழுதி வைக்க மறந்து விடாதிங்க.

3.   பகிர்வுக்கு நன்றி என்பதை தனியாக எழுதி வைத்து பல பதிவுகளை ஒரே சமயத்தில் திறந்து கட் அண்ட் பேஸ்ட் போட்டு விட்டால் நேரம் மிச்சம்.

4. பொழைக்கின்ற பொழைப்பை விட்டு விட்டு கணினி முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது வரக்கூடிய தலைவலி முதுகு வலிக்கு மருந்து என்று எடுத்து வைத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

5. அரசியல் பதிவுகளில் சம்மந்தம் இல்லாத விமர்சனத்தை போட்டுவிட்டு வந்தால் உங்கள் புகழ் பிச்சுக்கிட்டு நாறும்.

6.     ஏதாவது ஒரு கட்சி ஆதரவை காட்டி கன்னாபின்னாவென்று தூக்கு தூக்குன்னு தூக்கி எழுதுங்க.

7.  அப்புறம் வலையில் உள்ள லாபி மக்களிடம் கெஞ்சி கூத்தாடி என்னையும் உங்க ஜீப்ல ஏத்திக்கிங்க என்ற சொல்லி அவங்க பின்னாலே போனா நிச்சயம் ஓட்டு அறுவடையை மகசூல் செய்து விடலாம்.

ஒரு வருடம் கழித்து நீங்க என்ன எழுதியிருக்கீங்க என்று பார்த்தால் கக்கூஸ் திறக்காமலேயே வரும் கப்பு வாடை போல கமகம என்று உங்க மூக்கைத் துளைக்கும். 

எழுதுவது என்பது முதலில் உங்களுக்ககாக என்று இருக்கட்டும். அப்புறம் மற்றவர்களைப் பற்றி யோசிக்கலாம். எவரும் படிக்கவில்லையே என்பதால் தடா, பொடா போன்ற சட்டங்கள் நம் மேல் பாயாது என்பதையும் நினைவில் வைத்திருக்கவும். எழுத தேவை முதலில் மனத்திருப்தி அதற்கு பிறகு படிப்படியாக பயிற்சி. நிச்சயம் பார்க்கப்படுவிர்கள். பல சமயம் ரட்சிக்கப்படுவீர்கள்.

முதலில் என் ரசனையை சொல்லி விடுகின்றேன்.  நான் வலைதளத்தில் தொடர்ச்சியாக படித்தே ஆக வேண்டும் என்று முடிந்தவரைக்கும் தொடர்வது என்பது இந்த தளங்கள் தான்.


இது தவிர 4 தமிழ் மீடியா தளம் தொடங்கி தினமணி வரைக்கும். 

என்னைச் சுற்றிலும் உள்ள உலகத்தை இவர்கள் எழுத்தின் மூலம் உள்வாங்கி விடுவதுண்டு. அதற்குப் பிறகு தான் மற்ற வலைதளங்கள். அடிப்படையில் நான் புத்தக ப்ரியன். காரணம் நான் பார்க்கும் சமூகத்திற்கும், நான் வாழும் சமூகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை ஒவ்வொரு நாளும் உள்வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.  கடினமான விசயங்களை உள்வாங்கிக் கொண்டு எனக்கு தகுந்தாற் போல எளிமையான வாழ்க்கையில் அதை பொருத்தி வைத்து விடுகின்றேன்.

எது குறித்தும் எப்போதும் எந்த பயமும், படபடப்பும் எனக்கு வருவதில்லை. இது தவிர மின் அஞ்சல் மூலம் வருகின்ற அத்தனை தளங்களையும் படித்து விடுவதுண்டு. அதற்கு பிறகு தான் மற்ற தளங்களை நேரம் கிடைக்கும் போது ஒரு சுற்று சுற்றி வருவதுண்டு. ஒரு வரி கவர்ந்தால் கூட ஒரு விமர்சனத்தை எழுதி வைத்து விட்டு வந்து விடுவதுண்டு.

அறிமுகம் வவ்வால்.

இவரின் தளத்தை இந்த வருடம் முழுக்க அதிகம் படித்துள்ளேன்.  ஒரு கட்டுரையை இரண்டு மூன்று முறை வந்து படித்து விடுவேன். இன்னமும் படிக்க வேண்டிய கட்டுரைகள் நிறைய உள்ளது.  நான் படிக்கும் எந்த நல்ல தளத்தையும் என் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் பகிரிந்து கொள்வதுண்டு. அது போல ஒரு நண்பருக்கு அனுப்பிய போது அவர் இந்த தளத்தின் முதலாளி கௌபாய் என்றார்.  

எழுத்து  நடை சொல்ல வந்த நோக்கம் தெளிவாக இருந்தாலும் வாசிப்பவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மையை உருவாக்கும் அளவுக்கு ஒரு புரிதல் வேண்டும் என்றார். 

உங்கள் பார்வை தவறு என்றேன். 

காரணம் அவரவர் என்ன நினைப்பாரோ என்று யோசித்துக் கொண்டே ஒருவன் எழுதினால் அதற்குப் பெயர் எழுத்தல்ல. மளிகைச் சாமான் பட்டியல் போலத்தான் இருக்கும் என்றேன். 

இவர் யார் என்றே வலையுலகில் இருக்கும் எவருக்கும் தெரியாது. சென்னையில் உள்ள நண்பர் அண்ணே அவர் எது குறித்தும் பேசுகின்றார். ஆனால் எல்லாவற்றிலும் மிகத்தெளிவாக இருக்கினறார். நாங்களும் முயற்சி செய்கின்றோம். கண்டுபிடிக்க முடியல என்றார். 

பல வலைதளங்களில் இவரின் பின்னூட்டத்தை பார்த்த போது என்ன மனுஷனடா இவர்? இவருக்கு தெரியாத விசயங்கள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்குமா? என்று கூட பல முறை யோசித்து இருக்கின்றேன்.  ஆனால் எதார்த்தவாதி. எவரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. 

எடுத்த விசயங்களில் எந்த சமரசத்தையும் எடுத்துக் கொள்வதில்லை.  நீக்கு போக்கு ம்ஹிம் பேச்சே இல்லை. ஒரே போடு. மண்பானை போல சுக்குநூறாக நொறுங்கி விடும்.

கக்கூஸ் பற்றி எழுதினால் கூட அதில் உள்ள கப்பு வாடையை நீக்கி விட்டு விஞ்ஞானப் பார்வையில் புகுத்தி பிச்சு உதறிவிடுவார்.  ஆனால் பெயருமே ஒரு மாதிரியானது தான்.  சடசடவென்று அந்த இருட்டுக்குள் நம்மை நோக்கி வருவதைப் போல பறந்து வருமே அந்த வவ்வால் தான். ஆனால் நிச்சயம் மன இருள் நீங்கி வெளிச்சம் பரவும்

தேடல் உள்ளவர்கள் தான் வெளிச்சத்தை தேடுவார்கள்.

எழுத தொடங்கிய காலம் 2006  MAY 02

எழுதிய தலைப்புகள் 235
 +++++++++++++++++++++++++++++++++++++

அறிமுகம் தங்கம் பழனி.

இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இருக்கின்றார். குறுகிய காலத்தில் நிறைவான வளர்ச்சியை அடைந்துள்ளார்.  இவரின் தளம் என்பது எனக்கு இந்த ஆண்டில் முக்கியமான தளம்.  

காரணம் இவர் எழுத்துக்கள் மூலம் இயற்கை மருத்துவங்களைப்பற்றி என்னால் அதிகம் வாசிக்க முடிந்தது.  என் அடிப்படை வாழ்க்கையில் அதிகம் மாறுதல்களை கொண்டு வந்து சேர்த்தது.  வலைதளத்தின் மூலம் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளையும் அதிகம் எழுதுகின்றார். 

தொழில் ரீதியாக வலைபதிவுகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் பேச்சுத்திறமையை அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை வேலையில் மட்டுமே என்னால் தொழிலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்களில் கவனம் செலுத்த முடியும். 

மற்ற நேரங்களில் தொடர்பு எல்லைக்கு வெளியே தான். ஆனால் நம்மில் அநேகம் பேர்களுக்கு காலை என்பது தொடங்குவதே எட்டு மணிக்கு என்பதாகத்தான் இருக்கின்றது. ஆனாலும் நாம் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

நம்மைத் தேடி வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எங்கள் ஏற்றுமதி துறையில் நடு இரவு, அதிகாலை, பகல் என்றே எந்த வித்தியாசமும் இல்லை. உலகத்தின் ஒரு பக்கம் இரவு. ஒரு பக்கம் பகல் என்று இருப்பதால் எங்களைப் போன்றவர்களின் வாழ்க்கை 24 மணி நேரமும் அலர்ட் ஆறுமுகமாகத்தான் வாழ வேண்டியிருக்கிறது..  

நான் பார்த்தவரைக்கும் ஆச்சரியப்படுத்தும் எழுத்துத் திறமையை கொண்டு கொண்டவர்களின் பேச்சுத் திறமை குறிப்பிட்டு பாராட்டும் அளவுக்கு இருந்ததே இல்லை. எழுதுவது என்பது உங்கள் திருப்திக்கான விசயம். ஆனால் பேசுவது என்பது தான் உங்கள் வாழ்க்கைகான விசயம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

இன்று மனநலம் உடல்நலம் இரண்டும் நமக்கு அவசியம் தானே.


எழுதிய தலைப்புகள் 375
எழுத தொடங்கிய காலம்  SEP' 2010

19 comments:

 1. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ஜோதிஜி தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரவும் எண்ணியதெல்லாம் ஈடேறவும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !.....

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது போல் வவ்வால் ஒரு விவாத மன்னன்.பலதுறை வல்லுனர்தான். அதேபோல் அது போல "சமரசம் உலாவும் இடமே" சார்வாகனின் பரந்தஅறிவும் விவாதங்களும் என்னை பிரமிக்க வைத்திருக்கின்றன.

  ReplyDelete
 3. புத்தாண்டு முதல் நாளன்று உங்கள் எழுத்துக்களின் மூலம் அறிமுகமானவர்களுக்குப் பாராட்டுக்கள்.
  திரு வவ்வால் எனக்கு புதியவர்.
  திரு தங்கம் பழனி என்னாலும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப் பட்டார். மீண்டும் மீண்டும் அவர் வலைசரத்தில் உலா வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜோதிஜி அவர்களே தங்கள் வலைச்சர பணி இனிதே தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 5. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

  தங்கம்பழனி வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 6. தேடல் உள்ளவர்கள் தான் வெளிச்சத்தை தேடுவார்கள்.

  அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. ஜோதிஜி,

  ஆஹா நமக்கும் ஒரு நல்லபடியான அறிமுகம் கொடுத்திருக்கிங்களே, பெரிய மனசு,பெரிய மனுஷன் தான் என நிறுபித்துவிட்டீர்கள்.

  டெர்ரர்ரா டிரய்லர் ஓட்டவும், ஒரு ரவுண்டு மாத்து விழுமோனு நினைச்சேன், கடைசியில புஸ்ஸுனு போயிடுச்சு ...அவ்வ்வ்!

  நான் எழுதுவதை விட வாசிப்பது தான் அதிகம், ஹி...ஹி அப்படிப்பட்ட ஆளு நாம மட்டும் தான்னு ஒரு மெதப்பு கூட உண்டு(NPK?), இப்பத்தான் தெரியுது ,நமக்குலாம் முன்னாடியே ஒருத்தர் இருக்காருன்னு :-))

  *துப்பறியிற வேலையெல்லாம் செய்து இருக்கீங்க:-))

  கோப்பெரும்ஞ்சோழன் - பிசிறாந்தையார் கதையெல்லாம் நம்பும் மக்கள், வலைப்பதிவில் முகம் காட்டலைனா ,நம்பகத்தன்மை இருக்காதுன்னு நினைக்கிறாங்களே, என்ன கொடுமை சார் இது!

  நல்லவேளை நீங்க அப்படிலாம் இல்லை ,நான் கடைசிவரையில் பிசிறவ்வால் ஆக இருக்கலாம் :-))

  #நல்லதொரு அறிமுகமும்(ஹி...ஹி முகமேயில்லை இதுல அறிமுகம் ஒரு கேடான்னு மக்கள் நினைக்கக்கூடும்) ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் அனேககோடி நமஷ்காரங்களும்,நன்றியும்!

  எட்டுத்திக்கிற்கும் ஒளியும்(மீஒலியும்) பரவ மகிழ்வான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  # அலைப்பேசி,கணினி என சில, தங்கம் பழனியின் பதிவுகளும் படித்துள்ளேன்,வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  -------------

  முரளிதரன்,

  நல்ல வேளை விவாதா மன்னன் என்று சொன்னீர்கள் நன்றி!

  #ரஞ்சனி நாராயணன் மேடம் எனது பதிவுகளில் சிலவற்றுக்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்,மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்(ஒரு வேளை வேறு ஒருவரோ),நன்றி!
  -------------

  ஜோதிஜி,

  அறிமுகத்திற்கு முன்னால் உள்ளால் பொது முன்னுரையில் ஒரு பதிவில் சொல்ல வேண்டிய அளவுக்கு சமாச்சாரம் இருக்கு.

  புதிய பதிவர்கள் மற்றும் பிராபல்யம்ம் ஆக துடிப்பவர்களுக்கு அவசியமான ஒன்று.

  அந்த ஏழு பாயிண்டும் ,தமிழ்மணத்தில் பிராபல்யமாக துடிப்பவர்களுக்கு கோனார் நோட்ஸ் :-))

  ReplyDelete
 8. வவ்வால் பார்வை பற்றிய உங்கள் பார்வை மிகவும் சரியே!

  // இவர் யார் என்றே வலையுலகில் இருக்கும் எவருக்கும் தெரியாது. சென்னையில் உள்ள நண்பர் அண்ணே அவர் எது குறித்தும் பேசுகின்றார். ஆனால் எல்லாவற்றிலும் மிகத்தெளிவாக இருக்கினறார். நாங்களும் முயற்சி செய்கின்றோம். கண்டுபிடிக்க முடியல என்றார். //

  இந்த வவ்வால் திடீரென்று வருவார். உடனே மறைவார். நிறைய விஷயங்கள் பற்றி விவரமாகவும் புள்ளி விவரங்களுடனும் எழுதும் இவரை பாராட்டாமல் இருக்க முடியாது.

  // பல வலைதளங்களில் இவரின் பின்னூட்டத்தை பார்த்த போது என்ன மனுஷனடா இவர்? இவருக்கு தெரியாத விசயங்கள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்குமா? என்று கூட பல முறை யோசித்து இருக்கின்றேன். ஆனால் எதார்த்தவாதி. எவரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. //

  நான் வலையுலகில் நுழைந்த சமயம் என்னை உற்சாகப்படுத்தி எழுதியவர் இந்த வவ்வால்..

  ReplyDelete
 9. வணக்கம்
  ஜோதிஜி

  இன்று 2ம் நாள் நல்ல அறிமுகத்துடன் ஆரம்பமாகியுள்ளது ஒரு படைப்பாளி எப்படிப்பட்ட படைப்புகளை படைக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லிவிட்டிர்கள் அத்தோடு தங்கம்பழனியைப் பற்றிய அறிமுகம் அருமை
  அத்தோடு வெளவ்வால் வலைத்தளம் பற்றிய அறிமுகமும் மிக நன்று வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. ஜோதிஜி நான் இன்றுதான் புதிய வலைப்பூ எழுத தொடங்கி இருக்கிரேன். உங்க இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி

  ReplyDelete
 11. அருமையான தகவல்களுடன் இரண்டு அருமையான வலைப்பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! இருவரும் நான் விரும்பி படிக்கும் வலைப்பூ எழுத்தாளர்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. பதிவை பிரபலமாக்க சொன்ன வழிகள் தற்போதும், எப்போதும் பேஷன்.இருந்தாலும் இந்த மார்கெட்டிங் முறை தவறு என தெரிந்தாலும்,நாமும் அந்த நன்றியை திருப்பிவிட வேண்டியதாகி விடுகிறது.இது ஒரு இடியாப்ப சிக்கல்.

  பெட்டிக் கடை உதாரணம் அருமை. தொடர் முயற்சி தோற்பதில்லை.

  வவ்வாலும் அப்படித்தான். சகலகலாவல்லவர். சமீபமாக அவருடைய பதிவுகள் எதையும் மிஸ் பண்ணுவதில்லை.

  ReplyDelete


 13. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  ReplyDelete


 14. மிக்க நன்றி அம்பாளடியன். இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

  உண்மை தான் முரளி. சார்வாகன் அவர்களை தொழிற்களம் பதிவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்துள்ளேன். நன்றி.

  நன்றி ரஜ்ஜனி நாராயணன்.

  வருக சசிகலா தங்கம் பழனி


  ReplyDelete
 15. r


  நன்றி இராஜராஜேஸ்வரி

  நன்றி வவ்வுஜி. உங்கள் உழைப்புக்கு உண்மையான தேடல் கொண்டு உங்கள் அக்கறைக்கு என் இனிய நல்வாழ்த்துகள். இன்னும் பல விசயங்களை இந்த வருடம் துவைத்து காய போட வாழ்த்துகள்.

  நன்றி இளங்கோ

  எதிர்பாராமல் உள்ளே வருவார். எவராயினும் உண்மையான அக்கறையான கருத்துக்களை தருவார். அவர் தான் வவ்வால்.

  நன்றி ரூபன். புத்தாண்டு வாழ்த்துகள்

  வணக்கம் பூந்தளிர். இந்த வருடம் பரவலாக நீங்கள் அறிய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  சிவானந்தம். வலைபதிவில் நீங்க ஒரு முக்கியமான நபர். பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன். நல்வாழ்த்துகள்.

  வருக வணக்கம் பாரதிதாசன். நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. எழுதுவது என்பது முதலில் உங்களுக்ககாக என்று இருக்கட்டும்.//

  சரியாக சொன்னீர்கள். நாம் எழுதும் பதிவு முதலில் நமக்கு மனதிருப்தியை தரவேண்டும். நம்மாளும் நாலு விஷயங்களை எழுத முடிகிறது என்ற மன தெம்பை தரவேண்டும்.

  தங்கம் பழனி அவர்களை படித்து இருக்கிறேன். மற்றவர் பதிவைப் படிக்கிறேன்.
  வவ்வால், தங்கம்பழனி இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. ##எழுதுவது என்பது முதலில் உங்களுக்ககாக என்று இருக்கட்டும். அப்புறம் மற்றவர்களைப் பற்றி யோசிக்கலாம்.##
  எழுத்தை நேசிப்பவர்கள் தனக்காகத்தான் எழுதுவார்கள் .புகழை நேசிப்பவர்கள்தான் அடுத்தவர் விருப்பத்தை எழுதுவார்கள். நல்ல அருமையான கருத்து..

  ReplyDelete
 18. அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் இனிய ஆங்கில வருட (2013) புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. அருமையாக சில கருத்துகளையும், உங்க அனுபவத்தையும் சொல்லிருக்கிங்க, சில பதிவர்களின் அறிமுகமும் கலக்கல்.

  அந்த ஏழு பாயிண்ட் வேண்டாம் என்பதுபோல் இருந்தது, புதிய பதிவரை வழி தட்ட செய்துவிடும். சரி அதை பின்பற்ற சொல்லவில்லை என்பதால் ஓகே.

  நல்ல பாடம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். அறிமுக பதிவர்களின் பதிவுக்கு சென்று படிக்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது