07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 5, 2013

ஜோதிஜி 7வது நாள் - விதைகள் மலடா?

வணக்கம் நண்பர்களே

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் இந்த உலகில், நாம் வாழும் ஊரில் எத்தனையோ மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. நமக்கு எல்லாமே ஏற்புடையதாக இருக்காது. சிலவற்றுக்கு எதிர்க்க வேண்டும் என்று மனதிற்குள் மட்டும் தோன்றும்.

நம் வாழ்க்கை சூழ்நிலை அதை அனுமதிக்காது. அது சுயநலம், பொதுநலம், அக்கறையின்மை என்று என்ன பெயர் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம். 

நாம் யாரையும் திருத்த வேண்டிய அவசியத்தில் பிறக்கவில்லை.  ஆனால் நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும்.  மாற்றங்கள் என்பது மாறிக் கொண்டேயிருப்பது. மாற்றங்கள் என்பது நம்மிடம் இருந்து உருவாவது. நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டியது.  ஆனால் நாம் எல்லோருமே மற்றவர்கள் மாற வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். நம்மை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. ஆனாலும் நாம் மாற்றத்தை எதிர்பார்த்தே காத்துக் கொண்டிருக்கின்றோம்.

நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை நிதர்சனமாக உணர முடியும் என்பதைப் போல நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்பதையும் யோசிக்க முடியும் தானே? 

அரசாங்கம் என்பது மிகப் பெரிய தொழிற்சாலையின் எந்திரம் போல உள்ள நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு விசயம்.  ஆனால் நாம் என்ன உணர்ந்தோம் என்பதைப் பற்றி எழுத முடியும்.  நம் சந்தில் நடந்த அக்கிரமத்தை அப்படியே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதன் பாதிப்புகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? இப்படி மாறிநடந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் எழுத முடியும் தானே?

நாம் எழுதுவதற்கே திரைப்பட நடிகர் நடிகைகளைப் பற்றி மட்டுமே யோசிக்க விரும்பும் போது ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்.

வலை எழுத்துக்கள் சாகாவரம் பெற்றது. உங்கள் தலைமுறைகளை தாண்டி நிற்கப் போவது. உங்களுக்கு எது வேண்டுமானாலும் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்.  ஆனால் இரண்டையும் பற்றி எழுதி வைத்து விடுங்க.

காரணம் இப்போதைய சூழ்நிலையில் உங்களுக்கு பிடிக்காத காரணிகள் நீங்கள் அடுத்த வருடம் அந்த எழுத்தை நீங்களே வாசிக்கும் போது எந்த அளவுக்கு உங்கள் மாறுதல் அடைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள உதவும். 

முடிந்தவரைக்கும் எழுதுங்க.
முயற்சிகளோடு எழுதுங்க.
எழுத்தில் உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் மனம் சார்ந்த வளர்ச்சி.

நிச்சயம் இந்த தளம் போன்ற ஒரு தளத்திற்குள் சென்றால் உங்களுக்குத் தெரிந்தவர் தெரியாதவர், பிடிக்காதவர், பிடிக்காதவர் என்று அத்தனை தளங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.  குறைவான நேரம் உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.


வரைச்சரம் மூலம் தான் உங்களை கண்டு கொள்ள முடிந்தது என்றார் முரளி. அப்படி என்றால் என்ன? 4 வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இன்னமும் உழைப்பு தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.  இங்கு எவரும்  நிச்சயமானவர்கள் இல்லை. வேறு வழியே இல்லை. உழைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். உண்வுக்கு, இருப்பிடத்திற்கு விரும்பும் மற்ற விசயங்களுக்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உழைப்பும் களைப்பும் அண்ணன் தம்பிகள். ஒற்றுமையாக இருக்க வைப்பதில் தான் நம் மனம் முக்கிய பங்கு வகிக்கின்றது.  உண்மையாக உழைத்தால் களைப்பு வரும். இல்லையென்றால் வெறும் கொட்டாவி தான் வரும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டு கெட்ட ஆவிகளை சுமந்த ஜீவனமாகத்தான் வாழ முடியும்.

வாசிப்பு அனுபவம் என்பது வளரவேண்டியது.  குறுகிய குட்டையாக இருந்தால் அதற்கு பெயர் சாக்கடை என்று சொல்லி விடுவார்கள். இது போன்ற தளங்களுக்கும் நீங்கள் செல்ல வேண்டும்.


எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் எனக்கு பிடிக்காத விசயங்கள், இதுவெல்லாம் நமக்கு தேவைப்படாது என்று கருதிய விசயங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாய் மாறிய போது அதன் பின்னே சென்றுள்ளேன்.  

காரணம் எதையும் ஒதுக்குவதில்லை. தேவைப்படுவதை அப்போது எடுத்துக் கொண்டு மற்றவற்றை தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ள தயாராய் இருந்துள்ளேன். காழ்ப்புணர்ச்சி என்பது வாசிப்பில் வந்து விட்டால் உங்கள் ந்யூரான்களை நீங்கள் முடக்கி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

கதவை மட்டுமல்ல.  ஜன்னலையும் திறந்து வைத்து விடுங்க.

ஜாக்கிரதையோடு நாம் வாழப் பழகிக் கொண்டால் தன்னளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ள முடியும் என்பது உறுதி தான்.  ஆனால் உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் கடத்த வேண்டும் என்றால் நீங்கள் திறந்த மனதோடு இருந்தால் தான் முடியும்.  தவறுகள் நடக்கும் போது, தவறுகள் உங்களை சோதிக்க அருகே வரும் போது தான் உங்களின் உண்மையான பலமும் பலவீனமும் உங்களுக்கே தெரியும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்க.

நம்முடைய தவறுகள் நம்முடைய முதல் ஆசான்.

எது குறித்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம் படிக்கலாம். ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றோம் என்பது தான் இங்கே முக்கியம்.  மனம் என்பது குப்பையை அடைத்து வைக்கும் இடமல்ல.  ஆனால் குப்பைகள் சேர்ந்தால்?

நாம் தானே சுத்தமும் செய்ய வேண்டும். முடை நாற்றம் வருவதற்குள் பல சமயம் மூச்சு கூட போய் விடக்கூடிய ஆபத்தை அந்த குப்பைகள் உருவாக்கி விடக்கூடும்.தமிழ்நாட்டை விட்டு வேறொரு மாநிலத்தில் வேலை நிமித்தமாக உயர் பதவியில் வசிக்கும் இவர் அக்கறைபோடு பகிர்ந்து கொள்வதை படித்துப் பாருங்க.  நேரமில்லை என்பது ஒரு பொய்ச் சாக்கு என்பது மனதிற்கு தெரியும் தானே?

இது போன்ற தளங்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்க.  நாம் இருப்பதை விட்டு விட்டு எத்தனையோ தேவையில்லாத விசயங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பது புரியும்.


நான் நன்றாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும், எனது எழுத்து நடை நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவசியம் வளர்ந்த எழுத்தாளர்களின் தளங்களை போய்ப் பாருங்க.  சுருக்கமாக அவர்களின் வீச்சு எந்த அளவுக்கு நம்மைத் தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  அவர்கள் தான் சிறப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் கற்றுக் கொள்வதில் ஏன் நமக்கு ஒரவஞசகம்.


எனக்கு படிக்க நேரமில்லை என்பவர்கள் மட்டும் இந்த தளத்திற்குள் சென்றால் உள்ளம் கொள்ளை போகும்.

எழுதுவதை கற்றுக் கொண்ட பின்பு உங்களை நிலைநிறுத்திக் கொள்ள இவர் சொல்லும் விசயங்களை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலரின் தள வடிமைப்பு பார்த்து மனதளவில் அதிக ஆச்சரியம் அடைந்துள்ளேன். இப்போது தான் சற்று கற்றுள்ளேன். இவர் பங்கு முக்கியமானது.


நன்றி சீனா அய்யா அவர்களே. எனது வலைச்சரம் ஆசிரியர் பணி இத்துடன் முடிவடைந்தது.

உங்களின் சில விதிகளை உடைத்துள்ளேன் அல்லது மீறியுள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என் வணக்கம்.

கோடுகள் என்பது நாம் உருவாக்குவது.  வானத்தில் இருந்து எவரும் வந்து போட்டு விட்டு போவதில்லை.  கோடுகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நம் எல்லை நமக்குத் தெரிய வேண்டும் என்பதே. ஆனால் நிச்சயம் என் எல்லைக்கோடு என்ன என்பதை உணர்ந்த இந்த வாரத்தில் பயணித்துள்ளேன். காரணம் இது வரைக்கும் பஞ்சாயத்து எதுவும் வரவில்லை என்பதே எனக்கு கிடைத்த அங்கீகாரம்.

நிச்சயம் சிலரை யோசிக்க வைத்துள்ளேன். என்னளவில் சிலரை அறிமுகம் செய்துள்ளேன்.  

ஆனால் இது முழுமையானது அல்ல.  அங்கீகாரம் என்பது சிறிய குழந்தைகள் முதல் சாவுக்கு அருகில் உள்ளவர்கள் வரைக்கும் தேடிக் கொண்டேயிருப்பது தான். நீங்கள் எதிர்பார்த்த தளங்கள் இங்கே அறிமுகம் இல்லாத பட்சத்தில் அது என் நேரக்குறைவின் காரணமாக உழைக்க முடியாத நிலை என்பதாக எடுத்துக் கொள்ளுங்க.  

மறுபடியும் சொல்கின்றேன். எழுதுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்க வேண்டும்.  

விதைகள் உறங்கினால் நாம் பூமிப்பந்தில் பார்க்கும் எந்த காடுகளும், அதன் மூலம் வளர்ந்த உயிரினங்களும், இதன் மூலம் கிடைத்த பல நல்ல காரியங்களும் நம் வாழ்வில் கிடைத்திருக்காது. இந்த வசதியான சுகமான வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்க முடியாது.

கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.

நல்வாழ்த்துகள். 

இந்த 2013 வருடம் உங்கள் உண்மையான எண்ணங்கள் அக்கறையான உழைப்பின் மூலம் வெற்றி அடைய  

தேவியர் இல்லத்தின்  நல்வாழ்த்துகள்.

நன்றி நண்பர்களே.

நன்றி சீனா அய்யா அவர்களே.

27 comments:

 1. வாசிப்பின் அவசியத்தையும் எழுத ஊக்கமும் தரும் பதிவு...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் வலைச்சரம் பலைய பூக்களால் இல்லாமல் பழைய சரமாக இல்லாமல் புதிய பூக்களால் தொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு, கடனுக்கு என்று எழுதாமல் கடமையாக எழுதியுள்ளீர்கள், செலவிட்ட நேரங்களுக்கும் அறிமுகங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 3. உங்கள் எழுத்தும் கருத்தும் சிறப்பு...நல் வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 4. ஜோதிஜி,

  நேரமின்மையால் ஓட்டமாக ஓடி முடித்தது தெரிகிறது,கிடைத்த நேரத்தில் ஒரு "cameo innings" ஆடிட்டிங்க :-))

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இடையில் ஐந்து நாட்கள் வரவில்லை என்றாலும், உங்களின் கடைசி அதாவது ஏழாவது நாளில் படிக்காத எல்லா பதிவுகளையும் படித்துவிட்டேன், இதோ இப்போது கடைசி பதிவுக்கும் வந்துவிட்டேன்.

  அருமையான ஒரு கருத்தை கடைசியாக சொன்னது பிடித்திருக்கிறது.

  நமது இன்றைய அனுபவம்தான், நாளைய வரலாறு, அதனால் நாம் எப்போதும் சினிமா அரசியல் என்று பாராமல், சில உண்மை சம்பவங்களையும் எழுதவேண்டும், நமது எழுத்துகளைதான் நாளைய சமுதாயம் படிக்கும் என்பதை நினைவில் வைக்கவேண்டும்.

  மிக அருமை நண்பரே!
  எல்லாவற்றையும் படித்து கருத்துகள் சொல்லிட்டேன். உங்களுடைய பல கருத்துகள் மிக அருமையாக இருந்தது நன்றி.

  ReplyDelete
 6. ஜோதிஜி டாங்கள் ஏற்றுக்கொண்ட பணியை மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி இருக்கீங்க. நானும் தினசரி வந்து பார்த்துட்டே இருக்கேனே. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 7. //வரைச்சரம் மூலம் தான் உங்களை கண்டு கொள்ள முடிந்தது என்றார் முரளி. அப்படி என்றால் என்ன? 4 வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இன்னமும் உழைப்பு தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.//
  அப்படி இல்லை சார்! பழைய பதிவர்களை தேடிப் பிடித்து படித்திருக்க நான் முயற்சிக்க வேண்டும்.
  திரட்டிகள் மூலம் படிக்கும் பதிவுகளை தேர்ந்தெடுக்கும்போது பல நல்ல பதிவர்களின் பதிவுகள் கண்ணில் படாமல் விடுபட்டு விடுகிறது. இப்போதெல்லாம் அவ்வாறான பதிவுகளைப் படிக்குபோது அந்த வலைதளத்தில் இணைந்து விடுகிறேன்.

  ReplyDelete
 8. முடிந்தவரைக்கும் எழுதுங்க.
  முயற்சிகளோடு எழுதுங்க.
  எழுத்தில் உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் மனம் சார்ந்த வளர்ச்சி.//

  உண்மைதான்.

  அருமையான வலைச்சர வாரம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.//
  மிகச் சரியான வார்த்தைகள்.நன்றி

  ReplyDelete
 10. மிக ஆழ்ந்த உள்வாங்கல், தெளிவான சுயபரிசோதனை, தார்மீகக்கடமை, மொழிச்சிந்தனை, மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் அதில் நமது பங்கு என அத்தனையும் அடக்கியிருந்தது கடந்த ஒருவார கால உங்கள் வலைச்சரப் பணி. நேரமின்மை காரணமாக இன்றுதான் எல்லாவற்றையும் படிக்கமுடிந்தது. உளப்பூர்வமான வாழ்த்துக்கள் ஜோதிஜி! அதிலும் முத்தாய்ப்பாய் அந்த கடைசி வரிகள்
  //கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்// எனக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது.

  இன்றைய கடைசி நாளில் என் தளத்தையும் அறிமுகப்படுத்துவீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். கடந்த வாரம் கூட இதே வலைச்சரத்தில் உஷா அன்பரசு என்னை அறிமுப்படுத்தி இருந்தார். ஓ... நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி ஜோதிஜி!

  ReplyDelete
 11. @கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்."

  டாலர் நகரம் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. இந்த 2013 வருடம் உங்கள் உண்மையான எண்ணங்கள் அக்கறையான உழைப்பின் மூலம் வெற்றி அடைய

  தேவியர் இல்லத்திற்கு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. // உங்களின் சில விதிகளை உடைத்துள்ளேன் அல்லது மீறியுள்ளேன் //

  வ்ழிகளில் தடைகள் வருகையிலே
  விதிகள் உடைவதில் என்ன அதிசயம் ?

  பழையன கழிதலும் புதியன புகுதலும்
  விதி வழி போகா மனிதரின் கதை தானே !!

  ஒரு கோணத்தில்,

  தருமம் உடைந்தது. திருடன் உருவானான்.
  மனிதம் அழிந்தது. மாவோயிஸ்ட் உருவானான்.

  இன்னொரு கோணத்தில்,

  இலக்கணம் உடைந்தது. இலக்கியம் இறக்கவில்லை.
  புதுக்கவிதை பூத்தது. . புன்னகை புரிந்தது.

  அதனால்,
  உடைப்பதில் தவறில்லை.
  உண்மைகள் வெளிப்படுமின்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 15. நன்றி! மீண்டும் வலைச்சரம் வருக!

  ReplyDelete
 16. வழக்கமான வலைச்சர வாரமாக இல்லாமல் உங்கள் விமரிசனத்துடன் சேர்ந்து ஒரு வித்தியாசமான வாரத்தை கொடுத்திருக்கிறீர்கள், ஜோதிஜி!

  உங்களின் எழுத்துக்களிலிருந்து நிறைய கற்க வேண்டும் என்று புரிகிறது.

  //உங்கள் குழந்தைகள் உங்கள் செயலிலிருந்துதான் கற்கிறார்கள்; உங்கள் சொற்களிலிருந்து இல்லை//
  பெற்றோர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய வார்த்தைகள்.

  //எழுத்தில் உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் மனம் சார்ந்த வளர்ச்சி.//

  பதிவர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்.

  படித்த அத்தனை பேர்களையும் சிந்தனைக் கடலில் தள்ளியிருக்கிறீர்கள். நீந்திக் கரை சேர நாளாகும்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. நல்ல பல கருத்துக்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 19. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 20. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 21. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 22. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 23. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 24. சிந்தனைகளின் தொகுப்பாய் இந்த ஒரு வாரம் அமைந்தது. நன்றி.

  ReplyDelete
 25. நறுக்குத் தெறித்தாற் போல என்பார்களே அதுபோல் இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்துமே. ஒரு எழுத்தாளன் முதலில் ஒரு வாசகன் என்பது உணமை. அதேபோல் எழுதிக்கொண்டே இருந்தோமேயானால் நம் எழுத்துக்கள் மெருகடையும் என்பதும் உண்மையோ உண்மை உங்கள் அறிவுரைகள் எங்களைப் போன்ற புதிதாய் எழ்துபவர்களுக்கு ஒரு வழிகாட்டி நன்றி

  ReplyDelete
 26. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக (செல்போன்) எனது கமெண்ட் பல முறைகள் பிரசுரமாகி விட்டது. மன்னிக்கவும்.

  ReplyDelete
 27. நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது