07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 3, 2013

ஜோதிஜி 4வது நாள் - முகம் காட்டும் கண்ணாடி


இன்று சமூக இணைய தளங்கள் நமது வாழ்க்கையோடு ஒன்றாக கலந்து கொண்டே நம்மை மாற்றிக் கொண்டும் வந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிவிர்கள் தானே?

வெறுமனே வலைபதிவுகள் என்பதோடு நிற்காமல் உங்கள் எண்ணம் பரந்து பட்டு செல்ல வேண்டும்.  

ஆனால் ஒவ்வொரு நிலையிலும் உங்களின் கவனம் சரியாக இருக்க வேண்டும். பெண்கள் என்றால் இன்னும் சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும்.  பயந்து கொண்டே இருந்தால் பறவைகள் மட்டும் தான் இந்த உலகில் பறந்து இருக்க முடியும். 

இன்று கண்டங்களை நாள் கணக்கில் கடக்க முடிய காரணமே யாரோ ஒருவர், ஏதோவொரு சமயத்தில் எடுத்த துணிச்சலான முடிவு.

ஆனால் நாம் வேடிக்கை பார்க்க மட்டும் விரும்புகின்றோம். விதாண்டாவாதம் செய்யவும் விரும்புகின்றோம். 

இன்று முகநூல் (ஃபேஸ்புக்), ட்விட்டர் ,கூகுள் ப்ளஸ் (கூகுள் கூட்டல்), ஆர்க்குட் (இது இப்போது வலு இழந்து விட்டது). இது தவிர தொழில் ரீதியான தொடர்புகளுக்கு லிங்டு இன் போன்ற சமூக தளங்கள்.

இப்படி ஒரு உலகம் இருக்கின்றது எனபது உங்களுக்குத் தெரியுமா?

இதனால் என்ன பலன் என்றாவது தெரியுமா?

வலைபதிவுகள் எனறால் குறைந்த பட்சம் 300 வார்த்தைகளாவது கோர்வையாக எழுதத் தெரிய வேண்டும். குறைந்த பட்சம் படிப்படியாக கற்றுக் கொள்ளவாவது வேண்டும்.  அப்போது தான் அதுவொரு முழுமையான பதிவாக இருக்கும்.  கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு, திரட்டி குறித்த விழிப்புணர்வு போன்றவைகளை அவசியம் கற்று இருக்க வேண்டும்.

ஆனால் முகநூலில் நான்கு வரிகளில் நீங்க சொல்லும் ஒரு விசயம் நான்கு கண்டங்களையும் தாண்டி அதற்கு அப்பாலும் சென்று சில சமயம் பிரளய்த்தை உருவாக்கும்.

பல சமயம் வெகுஜன இதழ்களில் இதன் மூலம் பிரபல்யமாகவும் மாற உதவும்.

ட்விட்டர் என்பதற்கு வரிகள் கூட தேவையில்லை. நான்கு வார்த்தைகளில் நச்சென்று ஒரு விசயத்தை உங்களால் செதுக்க முடிந்தால் போதும்.  வாய்ப்புகள் அநேகம். உங்கள் திறமைகளை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எதைப் பார்த்தாலும் பயம் அலர்ஜி என்றால் போர்த்திக் கொண்டு படுத்து விட வேண்டியது தான்.  அப்போது கூட டெங்கு கொசு வந்து ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கத்தான் செய்யும்? என்ன செய்ய முடியும்?

என்னுடைய அறிமுக பதிவில் என்னுடைய முகநூல், கூகுள் கூட்டல் (GOOGLE PLUS)   ட்விட்டர் பற்றி கொடுத்துள்ளேன். 

முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் நிதானமாக காலடி எடுத்து வைங்க.  பலமுறை நான் பகிரும் படங்கள் பெரும்பாலும் முகநூலில் இருந்து எடுத்து போடுவது தான். 

நான் பார்த்தவரைக்கும் மிக மோசமான விசயங்களும் மிக மிக நல்ல விசயங்களும் இந்த முகநூலில் நமக்கு எளிதாக கிடைக்கின்றது. தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. 

பலர் இந்த முகநூல் மூலம் சப்தம் இல்லாமல் பல அரிய சாதனைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

கீழே உள்ள தகவல்களை படித்துப் பாருங்க.


ஃபேஸ்புக்ல என்ன சாதிச்சாலும் இதை லாகவுட் பண்ணினா ஒருத்தனுக்கும் தெரியாது - இந்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை வச்சி இரண்டு ரூவா ஒரு கிலோ அரிசி கூட வாங்க முடியாது - இந்த உட்கார்ந்து மேகஸின்ல படிச்சிட்டு அதை தமிழ்ல்ல போடுறதுக்கு எங்காவது கோயில்ல உட்கார்ந்து பிச்சை எடுத்தா அஞ்சு பத்து கிடைக்கும்இப்படின்னு பல நண்பர்கள் கூறக்கண்டேன். ஃபேஸ்புக் மூலம் அடுத்தவங்க என்ன சாதிசசங்கன்னு நான் சொல்றதை விட நான் என்ன சாதிச்சேன்னு பட்டியல் போடு சொல்கிறேன் இதை ஒவ்வொரு வருடமும் செய்வேன்.


2012 ஃபேஸ்புக் மூலம் என்னுடைய சொந்த உழைப்பில்சொந்த பணத்தில் ஒன்னு இல்லை இரண்டு இல்லை ஆயிரம் இல்லை லட்சம் இல்லை லட்சம் மக்களுக்கு மேல் பயனடைந்துள்ளார்கள் அதுவும் தினமும். இதை சொல்வது என் பிரதாபத்தை நானே புகழ்வதற்க்கு அல்ல - ஃபேஸ்புக் ஒரு அருமையான தளம் இதன் மூலம் நீங்கள் நிறைய பெறுவீர்கள் என உறுதியுடன் சொல்லி - ?புறம் பேசுவதும்தனி மனித விமர்சனமும் கூட ஒரு வண்புணர்வும் விபாச்சாரமும் போல" எண்ணி அதை சொல்லும் நண்பர்களையும் இரட்டை வேடம் போடும் நண்பர்களையும் உதாசீனம் செய்து நீங்கள் உங்களுக்கு என்ன நல்லது முடியுமோ அதை செய்யுங்கள்.1. சமச்சீர் ஆன்லைன் கல்வி - www.samacheeronline.com 2011ஆம் ஆன்டு ஆரம்பிக்கப்பட்டு இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேவையான் அத்தனை பாடபுத்தகங்களும் பிடிஃப் செய்யபட்டு பல வித வசதிகளுடன் ஆரம்பித்த நான் இன்று லட்சத்தி 31 மெம்பர்கள் உள்ளனர். இதில் தினமும் 6000 - 18,000 வரை லாகின் செய்கின்றனர். பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த வருடம் பள்ளி திறக்கும் வரை புக் வராமல் சுமம இருக்கும் குழந்தைகள் இந்த புத்தகத்தை யூஸ் வெய்கின்றனர். 

தினமும் இதன் மெம்பர்ஷிப் ஏறி கொண்டே செல்கிறது. இதில் மொத்தம் 18 லட்சம் பக்கங்களை உள்ளடக்கிய போர்ட்டல் - இதில் விளம்பரமோ அல்லது ஒன்றுமே கிடையாது. இது லட்சமாக இருந்தபோது தேணம்மை லக்ஷ்மனன் மற்று மற்ற பத்திரிக்கையாளர்கள் இதை ஆர்ட்டிக்களாக போட்டு லட்சம் பிளஸ் வரை போனது.2. ஆன் லைன் தமிழ் கல்வி மற்றூம் டெக்னிக்கள் கோர்ஸ் கல்வி போர்ட்டல் - http://www.samacheeronline.com/tamillearning/ இதை ஆரம்பித்து ஆரம்ப தமிழ் முதல் பட்டதாரி தமிழ் பாடம் வரை ஒலி ஒளி வசதியுடன் அமைக்கபட்ட இட்ந்ஹ போர்ட்டலுக்கு உலகம் முழுவது தமிழ் கற்க இது வரை 2லட்சத்தி 13 ஆயிரம் பேர் மெம்பராக இலவசமாக தமிழ் கற்கின்றனர்.3. நாக் 60 டேஸ் சேலஞ் - www.nag60days.com இது இந்த வருடம் மட்டும் 280 மக்கள் சேர்ந்து சுமார் 3415 கிலோ வரை உடம்பை குறைத்து ஆரோக்யமால இருக்கின்றனர். இதில் 19 வயதில் இருந்து 70 வயது ஆட்கள் வரை மெம்பராக உடம்பை குறைத்தது மட்டுமல்ல ஒரு பத்து வயது இளமையாகி புது லைஃப் ஸ்டைலோடு நோய் நொடியின்றி இருக்கின்றனர். இது அனைத்தும் ஒரு புதுமையான 3டி ஃபார்முலாவை கொண்டு மருந்து மாத்திரை என்று ஒரு மன்னாங்கட்டியும் இல்லாமல் குறைக்கபட்ட சாதனை. சாதாரண ஃபேஸ்புக் மெம்பரில் இருந்து முண்ணனி நடிகைநடிகர்கள் வரை இதில் பயனடைந்து உள்ளனர்.4. தமிழ் நாடு பிளட் டோனர்ஸ் - www.tnblooddonors.comலட்சக்ககனக்கில் டேட்டாபேஸை கொண்ட ஆன்லைன் ரதத வங்கி போர்ட்டல் - இப்போது வெறும் சென்னை மட்டும் தான் உள்ளது 2013ல் இது அனைத்து தமிழக நகரங்களின் டேட்டாபேஸ் மற்றூம் இதில் சில சிறப்பு வசதிகளை கொண்டுள்ள இலவச போர்ட்டல்.இதன் பயன் பாடு 1.7 லட்சத்திற்க்கும் மேல்.5. செக் யுவர் ஹார்ட் - www.checkyourheart.us /


உங்களின் வயதுபிளட்பிரஷர்கொலஸ்ட்ரால் டீட்டெயில் மற்றும் இன்னும் சில டீட்டெயிலை போட்டால் ஒரு நிமடத்தில் உங்களின் இருதய நிலை உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் சதவிகிதம் எத்தனை வருடங்களில் வரும் என்பதை சொல்லும் அற்புத இலவச போர்ட்டல். இதன் பயன் பாடு லட்சத்திற்க்கும் மேல்.6. ஈக்குவல் மேட்ரிமோனி - www.equalmatrimony.com

ஊனமுற்றோருக்காக அரம்பிக்க பட்ட இலவச கல்யாண போர்ட்டல். இதை நடத்த முடியாமல் போனதற்க்கு சில ஆட்கள் பலம் இல்லாதது தான். இதற்க்கு டிமிட்ரி - கார்த்தி கருணா உதவி செய்ய வந்த போது இதை 2013ல் வெற்றீ கரமாக நடத்தி முடிப்பேன். இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு இலவச சுயம்வரம் இந்த மக்களுக்காக நடத்தி அவர்களுக்கும் நாம் வாழ்வில் ஒரு ஒளி ஏற்றி வைப்போம்.இந்த வருடம் நாக்லேப்ஸ் வியாபர விஷயம் என்பதால் பட்டியல் இடவில்லை. புது மற்றூம் உதவி இயக்குனர்களுக்காக ஒரு புது முயற்சியை 2013 ஜனவரி 14ல் தொடங்குவேன். இது போக சபரிவானரசன் போன்ற பல பேர் உதவி செய்யும் இந்த ஃபேஸ்புக் நெட்வொர்க் ஒரு அருமையான வரப்பிரசாதம். எனக்கு கிடைத்த 9000 பிளஸ் இந்த ஃபேஸ்புக் நட்பு தான் என்னை இதை செய்ய வைத்தது. 

இதற்க்கு கார்ணம் நீங்கள் நீங்கள் நீங்கள் தான். 


நன்றியுடன் - நாகராஜன் ரவி.

உங்களால் தினமும் ஒரு மணி நேரம் தான் ஒதுக்க முடிந்து இந்த இணையம் பக்கம் வர முடிகின்றது என்றால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஓராயிரம் விசயங்களை உள்வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட முடியும்.  காற்றில் தூசி, நாற்றம், மணம், வாசம் என்று எல்லாமே கலந்து தான் இருக்கும். 

நாமும் வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது.

குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க ஒரு தொடர்

படங்கள் 4 தமிழ் மீடியா.காம்

18 comments:

 1. ஜோதிஜி,

  உங்கள் அறிமுகம் சரி தான், ஆனால் இங்கு குறிப்பிடப்பட்ட சேவைகள் எல்லாம் முகநூல் ,துவித்தர் எல்லாம் தலை எடுக்கும் முன்னரே இணையத்தில் புழங்கி வருபவையே.

  தமிழ்நாடு அரசின் பாடநூல்கள் எல்லாம் பிடிஎஃப் இல் அரசாலேயே இலவசமாக இணையத்தில் ரொம்ப நாளா கொடுத்துவருகிறது. அமெரிக்காவில் இயங்கும் தமிழ்வழி பள்ளியில் கூட அதனைப்பயன்ப்படுத்துவதாக 2007 இலேயே செய்திகள் கேள்விப்பட்டுள்ளேன்.

  http://textbooksonline.tn.nic.in/ViewFeedback.htm

  CBSE,NCERT books எல்லாம் மத்திய அரசால் இலவசமாக பிடிஎஃப் ஆக கொடுக்கப்பட்டு வருகிறது.சிவில் செர்வீசுக்கு தேவையான நூல்களும் இலவசமாக கிடைக்குது.

  இதய நோய்,உடல் எடை குறைப்பு ,ரத்ததானம் எல்லாம் இணையத்தில் ரொம்ப நாளாக பலரால் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது, எனவே முகநூல் வந்து தான் இதெல்லாம் நடக்குது என்பது போல கருத்து தோன்றுவதால் இதனைக்கூறுகின்றேன்.

  இணையம் பல வாசல்களை திறந்துவிட்டுள்ளது எனப்பொதுவாக கூறலாம்.

  ஐ ஆப்கள் பல சேவைகளை உருவாக்கியுள்ளது.ஆனால் அதெல்லாம் ஐ போன் இருந்தால் தான் பயன்ப்படுத்த முடியும், இப்போ அண்ராயிடில் அதே போல உருவாக்கிட்டாங்க.

  ஆனால் எல்லாமே இணைய வளர்ச்சியினால் மட்டுமே சாத்தியம் ஆனது எனலாம்.

  ReplyDelete
 2. அன்பின் ஜோதிஜி - பொதுவாக இங்கு blogspot.com ல் இணைந்த பதிவுகளை மட்டுமே அறிமுகம் செய்ய வேண்டும் என ஒரு விதி முறை இருக்கிறது - இருப்பினும் இப்பொழுது வேர்ட்பிரஸ்சும் அனுமதிக்கிறோம் - தங்களின் சிறந்த நோக்கத்தினை மனதில் கொண்டு முக நூல், கூகுள் கூட்டல், கீச்சுகள் ( ட்விட்டர் ) மற்றும் ஆர்குட் தளங்களில் இருந்தும் நல்ல அறிமுகங்கள் தருவதற்கு தங்களுக்காக பிரத்யேகமாக அனுமதி தந்திருக்கிறோம்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. பொதுவா ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் இந்த தளங்கள் பற்றி எல்லாருமே கவனமாக இருக்க சொல்லி அட்வைஸ் செய்யுறாங்க.உங்க இந்த பகிர்வு நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 4. உபயோகமான தகவல்களுடன் பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 5. எல்லாமே ஒரு எல்லைக்குள் இருப்பது நல்லது.

  உங்களது இந்தப் பதிவில் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஒருமுறைக்குப் பல முறை படிக்க வேண்டிய எழுத்துக்கள் உங்களுடையது. நிறைய சிந்திக்கவும் வைக்கிறது.

  சமூக வலைப்பின்னல்களை மிகவும் கவனமாகத் தான் கையாள வேண்டும்.

  தங்களைப் பற்றிய எந்த ஒரு விவரமும் கொடுக்காமல் அல்லது உண்மையான விவரங்கள் போடாமல், மற்றவர்களைப் பற்றி அத்தனை விஷயங்களையும் அறியவும் சிலர் இவற்றைப் பயன் படுத்துகிறார்கள்.

  நாம் தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

  நல்ல பதிவு.
  ReplyDelete
 6. பயந்து கொண்டே இருந்தால் பறவைகள் மட்டும் தான் இந்த உலகில் பறந்து இருக்க முடியும்.

  அருமையான தளங்களின் அறிமுகங்கள் பயனுள்ளவை .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. வணக்கம்
  ஜோதிஜி
  இன்று பதியப்பட்ட அனைத்துப்பதிவுகளும்அருமை சிலது புதியவை சிலது பழையவை, எனக்கு டிவிட்டர் முகறூல் கூகிள் பற்றிய விளக்கம் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. சில தளங்கள் எனக்கு பயன்படும் என எண்ணுகிறேன் தகவலுக்கு நன்றி.
  ## பயந்து கொண்டே இருந்தால் பறவைகள் மட்டும் தான் இந்த உலகில் பறந்து இருக்க முடியும். ##
  மிகவும் அருமை என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
 9. வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியராக இருப்பது பெரிய பொறுப்பாகத் தோணுது. ஒரு வாரத்திற்கான கட்டுரைகளை ஏற்கனவே எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் பொறுப்பை ஏற்பதுதான் நலம்னு தோணுது. கவனிக்காமல்விட்ட ஒரு சில நல்ல பதிவர்களை வலைச்சரம் கட்டுரைகள் மூலம் கண்டு கொள்ள முடியுது. :)

  ReplyDelete
 10. வித்தியாசமான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 11. பயனுள்ள பல தகவல்கள்.

  வலைபதிவுகள் எனறால் குறைந்த பட்சம் 300 வார்த்தைகளாவது கோர்வையாக எழுதத் தெரிய வேண்டும். குறைந்த பட்சம் படிப்படியாக கற்றுக் கொள்ளவாவது வேண்டும். அப்போது தான் அதுவொரு முழுமையான பதிவாக இருக்கும். கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு, திரட்டி குறித்த விழிப்புணர்வு போன்றவைகளை அவசியம் கற்று இருக்க வேண்டும்.//

  உண்மை உண்மை.

  ReplyDelete
 12. வ்வவால் இந்த முறை ஒரு சின்ன தவறு செய்து விட்டேன். உங்களிடம் தெரிந்த இது போன்ற தளங்களை அறிமுகம் செய்து எனக்கு மின் அஞ்சல் செய்ய சொல்லியிருக்கலாம். நீங்க ராக்கோழி கணக்காக இருக்கீங்களே?

  அப்புறம் எங்கே போய் உதவி கேட்பது?

  ReplyDelete
 13. மிக்க நன்றி சீனா அய்யா. இது ஒரு விதை. அடுத்தவர்களும் இது போன்ற பல விசயங்களை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்க அனுமதி கொடுங்க.

  ReplyDelete
 14. நன்றி பூந்தளிர்

  பயந்துக்கிட்டே இருந்தா வீட்டை பூட்டிக் கொண்டு படுத்துக் கிடக்க வேண்டியது தான். என் பார்வையில் வலை தளங்களை விட இது போன்ற தளங்கள் வாயிலாக நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன்.

  ReplyDelete
 15. நஜிமுதீன் தொடர் வருகைக்கு நன்றி.

  நன்றி அம்மா

  ReplyDelete
 16. நன்றி இராஜேஸ்வரி

  நன்றி ரூபன். அவசியம் அந்தப்பக்கமும் போங்க.

  நன்றி எழில்.

  வருண். நலமா? முறைப்படி திட்டமிட்டு முன்னரே எழுதி வைத்து விட்டால் மிக நன்றாக இதை அனுபவிக்க முடியும். அதற்கான நேரமும் வலைச்சரம் நமக்குத் தருகின்றது. சீனா அவர்களை தொடர்பு கொள்ளுங்க வருண்.

  ReplyDelete
 17. நன்றி சுரேஷ்

  நன்றி கோமதி அரசு

  ReplyDelete
 18. ஆஹா! இது இதைதான் நண்பரே உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன், அறிமுகம் போட்ட அன்றே சொன்னேன், உங்களிடம் இருந்து கண்டிப்பாக இந்த ஒரு வார ஆசிரியர் வகுப்பில் நிறைய கற்றுக்கொள்வேன் என்று சொன்னது இப்ப பாருங்க , நிஜமானது.

  அருமையான பதிவு கலக்கல் நண்பரே, எனது மனம் நிறைந்த பாராட்டுகளும்.
  நிறைய கற்றுக்கொண்டேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது