07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 11, 2013

உலக அரசியல் பேச்சு !!!

உலக அரசியல் சாதமான விஷயம் இல்லை. ஏறக்குறைய உள்ளூர் அரசியல் போல் ஏமாறுவது மக்கள், ஏமாற்றுவது ஆளும் வர்க்கம் என்று இருந்தாலும், உலக அரசியலில் பாதிப்பு மிக பெரியது. அமெரிக்காவில் டாலர் விலை சரிந்தாலும், இந்திய ஐ.டி. மக்களுக்கு வேலை கோவிந்தா ! டாலர் விலை ஏறினாலும், இந்த ரூபாய் மதிப்புக்கு அரோகரா !!

டாலர் எப்படி தான் போக வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால், டாலரை நம்பி நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியை தான் நம்மை நமாபே கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்று, உலக அரசியல் பேசும் பதிவர்களின் பதிவுகளை தான் நாம் பார்க்க போகிறோம்.

*

'ஆகாயம்' என்ற பெயரில் பதிவு எழுதி வரும் கிருஷ்ணா, அமெரிக்காவின் ப்ரிசம் நிறுவனம் தகவல்களை எப்படி திருடுகிறது என்பது தனது எளிமையான பதிவின் மூலம் விளக்கியிருக்கிறார்.

பயங்கரவாதற்கு எதிராக அரசு போராடுகிறது என்றாலும், அதை இன்னொரு ஆளும் அரசு ஊக்கவித்துக் கொண்டு தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முஹம்மத் ஆஷிக் பதிவு விளக்குகிறது.

“Advanced Working Class” என்ற ஆங்கில பெயரில் வலைப்பூவை வைத்திருந்தாலும், தமிழில் தான் பதிவிடுகிறார்கள். ஏறக்குறைய பெரும்பாலான பதிவுகள் உலக அரசியல் தான் பேசுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்குள் நடக்கும் ஒற்றாடல் பற்றிய இந்த பதிவு அருமையாக விளக்குகிறது.

உலக அரசியல் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள் கலையரசுனுடையது. ஈழ தமிழன். இவர் தனது அனுபவத்தை “அகதி வாழ்க்கை” என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். தமிழர் இனப்படுகொலை என்று மட்டுமில்லாமல், உலகத்தில் மனித உரிமை மீறல் பற்றி தனது வலைப்பதிவில் பதிவு செய்து வருகிறார்.

வெளிகண்ட நாதரின் “பாலக்கரை பாலனின் பால்ய பார்வை” வலைத்தளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பதிவாக இருந்தாலும், இன்னும் உலக அரசியலில் பெரிய மாற்றமில்லாததால் இப்போதும் இந்த காலத்தில் கூட பொருந்தக்குடியதாகவே இருக்கிறது.

சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சாதகமாக, அதுவும் ஒசாமாவின் மரணத்திற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் சொல்கிறார் மோனி.

அ.முத்துகிருஷ்ணனை வலைப்பதிவர் பட்டியலில் சேர்ப்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இனப்படுகொலை, அணு உலை எதிர்ப்பு, மனித உரிமை மீறல்கள்களுக்காக போராடி வரும் போராளி. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில், இவரது இணையதளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைக்கிறேன். இவர் போராடுவதைப் பற்றி எழுதுவதில்லை. நாமும் போராட வேண்டும் என்பதற்காக எழுதுகிறார். குறிப்பாக, மலாலாவை பற்றிய பதிவு எதோ அயல்நாட்டில் நடந்த நிகழ்வு அல்ல. வெவ்வேறு நிறத்தில் நன் நாட்டில் பல சம்பவங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் நாளை பார்க்கலாம்.

8 comments:

 1. அனைவரும் அவசியம் தொடர வேண்டிய
  அருமையான பதிவுகள்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள்...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வணக்கம்

  இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்!

  ReplyDelete
 5. அனைத்தும் நல்ல தளங்கள்... அறிமுகத்திற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(www.99likes.blogspot.com)

  ReplyDelete
 7. எனது பதிவின் கருத்தை அங்கீகரித்து மேலும் பலரை சென்றடைய செய்தமைக்கு மிக்க நன்றி சகோ.குகன்.

  அப்புறம்,

  இதில்...

  //சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சாதகமாக, அதுவும் ஒபாமாவின் மரண்த்திற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் சொல்கிறார் மோனி.//--

  ---'ஒசாமா' என்று வரவேண்டும்..!

  "சா" ஒரே ஒரு எழுத்துதான்..! ஆனாலும்... ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்..! 'இந்த அளவுக்கு நான் நாட்டு நடப்பு தகவல்களை அறியாது போய்விட்டேனே' என்று..!
  :-))

  ReplyDelete
 8. // ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  "சா" ஒரே ஒரு எழுத்துதான்..! ஆனாலும்... ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்..! 'இந்த அளவுக்கு நான் நாட்டு நடப்பு தகவல்களை அறியாது போய்விட்டேனே' என்று..!
  :-)) //

  நன்றி சகோ. மாற்றிவிட்டேன்.

  நான் எழுதினதை படித்துவிட்டு நானே அதிர்ந்துவிட்டேன் :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது