07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 14, 2013

நன்றி வலைச்சரமே !!

வலைச்சரத்தில் என்னுடைய கடைசி பதிவு. இது கொஞ்சம் வருத்தமாக தான்
இருக்கிறது. இனி வலைச்சரத்தை வாசிக்கும் வாசகனாக மட்டுமே உறவு வைத்துக் கொள்ள முடியும்.

இந்த ஒரு வாரம் தனிப்பட்ட முறையில் பல சாவல்களை தாண்டி தான் பதிவிட வேண்டியதாக இருந்தது. குறிப்பாக, என் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கிராஷ். எல்லா பதிவுகளும் அலுவலகத்தில் எழுதி, ட்ராப்டில் வைத்து ஒவ்வொரு நாள் காலை பப்ளிஷ் செய்ய வேண்டியதாக இருந்தது.

இந்த ஒரு வாரம் வாசகர்களிடம் மொக்கை போடாமல், என்னால் முடிந்த அளவுக்கு வலைப்பதிவுகளை திரட்டி பகிர்ந்துக் கொண்டேன் என்று நம்புகிறேன். குற்றம், குறை இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு tmguhan@yahoo.co.in தெரியப்படுத்தவும்.

வலைச்சரத்தில் எனது கடைசி பதிவு என்பதால், வலைப்பதிவில் எனக்கு பிடித்தவர்களைப் பற்றி நான் பகிர்ந்து கொள்கிறேன்.

 *

யெஸ். பாலபாரதி. வலைப்பதிவர்களின் 'தலை யாய் இருந்தவர். இப்போது, பத்திரிக்கையில் ரொம்ப பிசியாக இருப்பதால், மிக அரிதாகவே பதிவிடுகிறார். இவர் எழுதும் 'ஆட்டிசம்" பட்டிய தொடரை வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

 *

என்.சொக்கன். பா.ரா கிழக்கில் இருக்கும் போது, நான் எழுத நினைக்கும் தலைப்புகளை சொல்வேன். ஒவ்வொரு முறையும் பா.ரா அவர்கள் 'சொக்கன் எழுதுறான்ப்பா' என்பார். இவர் நிஜமாகவே ஐ.டி. துறையில் வேலை செய்கிறாரா ? என்ற சந்தேகம் வரும். ஒரு முறை அவரை நேரடியாகவே கேட்டுவிட்டேன். நான் தூங்குவது குறைவு என்றார். எழுதுவதில் அசுர உழைப்பாளி என்று சொல்லலாம்.

 *

மருதன். இவரைப் பார்த்து பேசும் போது கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள் இன்னும் இருக்காறார்களா என்ற எண்ணம் வந்தது. சே, பிடல் காஸ்ட்ரோ, லெனின் என்று எல்லா கம்யூனிசத் தலைவர்களை புத்தகம் எழுதியிருக்கிறார். மிக அரிதாகவே வலைப்பதிவு பக்கம் வருவார்.

 *

பத்ரி. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர். பதிப்பு தொழிலில் எனக்கு மானசீக குரு. இவரை பார்த்து தான் நான் சூடுப் போட்டுக் கொண்டேன். இவர் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், பதிப்பகத்தில் இவருடைய பதிவுகள் தான் எனக்கு உத்வேகமாய் இருந்திருக்கிறது.

*

அடுத்து, என் இனிய நண்பர்கள் 'கேட்டால் கிடைக்கும்' சுரேகா, கேபிள் சங்கர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என் நன்றியை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 நன்றி வலைச்சரமே !!

7 comments:

 1. அருமையான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்.....

  ReplyDelete
 2. ‘போய்’வாருங்கள் குகன்.
  நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வெற்றியுடன் முடித்திருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 4. அன்பின் குகன் - அருமையான வாரம் - அறிமுகங்கள் அனைத்துமே நன்று

  "இனி வலைச்சரத்தை வாசிக்கும் வாசகனாகவே உறவு வைத்துக் கொள்ள முடியும் " ஏன் இந்த வருத்தம் குகன் - தங்களீன் விருப்பம் என்ன கூறுக. நிறைவேற்ற பரிசீலிப்போம்.

  கவலை வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தீர்கள்... நன்றி... இன்றைக்கு பிடித்தவர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. மிக முக்கிய தளங்களை இன்று நினைவு கூர்ந்தவிதம் நன்று.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது