07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 12, 2013

சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க !!!

"மனுஷனுக்கும் மிருகத்துக்கும் இருக்குற ஒரே வித்தியாசம் சிரிப்பு" என்று என் நண்பன் ஒருவன் சொன்னான். அப்போது, நான் "ஏன்டா குரங்கு சிரிக்கிறத எத்தன தமிழ் சினிமாவுல காட்டியிருக்காங்க !!" என்றேன். உடனே, அவனுக்கு சிரிப்பு வந்தது. எனக்கு தமிழ் சினிமா காட்டிய குரங்கு சிரிப்பு ஞாபகம் வந்தது.

இன்று நாம் பார்க்க இருப்பது 'நகைச்சுவை' பதிவுகள்

**
அழகான பெண்களுக்கும், இவர் பகிர்ந்த நகைச்சுவைக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அழகாக இருக்கு, ரசித்துவிட்டு போவோம் என்று தான் தோன்றுகிறது. நான் ராம்மலரின் நகைச்சுவை பதிவுகளை மட்டுமே சொன்னேன்.

*
அறிஞர் வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவைகள் எல்லாம் மாணவர்களுக்கு பாடமாகவே புகட்டப்படுகிறது. அந்த அறிஞர் 'ஏன் அறிஞர்களாக கருதப்படுகிறார்கள்' என்பதை அவர்களுடைய சமயோஜின புத்தியை புரியவைக்கிறது பால கணேஷின் மின்னல் வரிகள் வலைப்பதிவு.

*
வலைப்பதிவுகளில் அதிக உறுப்பினர்கள் கொண்ட வலைப்பதிவு என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வலைப்பதிவிலும், இறுதி காட்சியை சொல்லாமல் மின்னஞ்சல் அனுப்பி தெரிந்துக் கொள்ளுங்கள் என்று வித்தியாசமான உத்தியை SP.VR. SUBBAIYAவின் 'வகுப்பறை' வலைப்பதிவு கையாள்கிறது.

*

சோழர் தலைவனின் நகைச்சுவை துணிக்குகள் என்ற வலைப்பதிவு பழைய வலைப்பதிவு என்றாலும், பத்திரிக்கைகளின் நகைச்சுவை தொகுப்பு என்று சொல்லலாம். பல நகைச்சுவைகள், மின்னஞ்சலில் வந்த பார்வட் மெயிலாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

*

நிறம் வலைப்பதிவில் கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள் அழகான கோர்த்து கொடுத்திருக்கிறார். இமேஜ், வீடியோ என்று கூகிளின் பகடி நம்மை சிரிக்க வைக்கிறது.

*
 ரிசியின் 'மௌன தேசம்' என்ற வலைப்பதிவில் அம்மாவுக்கு மகள் எழுதும் மிகவும் ரசிக்க முடிந்தது. குறிப்பாக, "கோவி கண்ணன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன்" என்று வலைப்பதிவர் கோவி. கண்ணன் கண் முன்னே வந்து சிரிக்க வைக்கிறார்.

*

நகைச்சுவை, நையாண்டி, லோள்ளு எல்லாம் வார்த்தைகளில் மட்டும் சொல்ல வேண்டியதில்லை. படம் போட்டு காட்டினாலே போதும் என்கிறது முகில் இந்த பதிவுகள். மேலே, நீங்கள் படித்த நகைச்சுவைகளை விட, முகிலின் இந்த படங்கள் பார்த்த மாத்திரத்தில் சிரிக்க வைத்துவிடும்.

10 comments:

 1. நான் ரசித்துப் படிக்கும் அருமையான
  பதிவர்களின் பதிவுகளை சுருக்கமாகவும்
  சிறப்பாகவும் அறிமுகம் செய்துள்ளது
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
 4. மின்னல் வரிகள் மட்டுமே தெரிந்தவர்..மற்றவர்களைத் தொடர்கிறேன்...சிரிப்பு ஒரு அருமருந்து...

  ReplyDelete
 5. சிறந்த தள அறிமுகங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. நகைச்சுவையாளர்கள் அறிமுகம்...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. மின்னல் வரிகள் கணேஷ் தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள்..... படிக்கிறேன்.

  அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. பாலகணேஷ் தெரியும். மற்ற அறிமுகங்களையும் பார்க்கிறேன்.
  நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது