07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 29, 2013

தூரிகைச்சிதறலின் முதல் நாள் அறிமுகம்...

எனதன்பு வலைப்பூத் தோழமைகளுக்கு எனது பணிவான வணக்கம். வலைச்சரத்தில் ஒரு மலராய் இருந்துவரும் எம்மையும் இந்த ஒரு வாரம் இங்கிருக்கும் மலர்களையெல்லாம் தொடுத்து மாலையாக்கி வலைச்சரத்தை அலங்கரித்து மணம்வீசச் செய்வதற்காக அழைத்திருக்கும் நண்பர் அன்பின்சீனா அவர்களுக்கு எமது நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். _/\_ 

பூமாலையின் அழகினை ரசித்தும், அதன் வாசம் சுவாசித்தும் மகிழும் அனைவருக்கும் மாலையினைத் தொடுக்கும்திறன் இருக்குமா..??! சந்தேகமே.... இருந்தும் தொடுத்துப்பார்க்க ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள். அழகாய தொடுத்து அலங்கரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறேன் . அனைத்து மலர்களையும் சரத்தில் இணைக்க இயலாவிடினும் நான் கண்டு ரசித்த மலர்களை சரத்தில் கோர்க்க முயல்கிறேன். யாம் தொடுக்கப்போகும் பூச்சரத்தில் பல மலர்கள் விடுபட்டுப்போயிருப்பினும் விடுபட்ட அந்த மலர்கள், மணத்திலோ அழகிலோ குன்றியது இல்லை என்பதை அனைவரும் அறிவோம். அந்தமலர்களை எடுத்து அலங்கரிக்கத் தவறியதற்காக எம்மை பொருத்தருளவும்.

எம்மைப்பற்றி எடுத்துக்கூறுமளவு அதிகம் எதுவுமில்லை. எழுத்துப்பள்ளியில் ஆசிரியர்களாகவும், எழுத்துலகில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களும் வீற்றிருப்போர் மத்தியில் எழுத்தாணியை கையில் எடுத்துக்கொண்டு அகரம் படிக்கத் துவங்கும் எண்ணத்தோடு இப்பொழுதுதான் எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவி நான்.:)

 எமக்குள் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து, நான் எழுத்துலகிற்கு வருவதற்குக் காரணமாயிருந்த நண்பர் கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். _/\_ அவரைப்பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் எமது அடுத்துவரும் அறிமுகத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

எம்மைக் கவர்ந்த எழுத்தாளர் எழுத்து சித்தர் ஐயா.திரு.பாலகுமாரன் அவர்கள். அவரது நூல்களை விமர்சனம் செய்யும் அனுபவம் இல்லாத காரணத்தால் அவரது படைப்புக்களை இன்றளவும் பிரமிப்புடன் படித்துவரும் பல வாசகர்களில் ஒருவராய் இருந்துவருகிறேன். அவர் எழுதிய நூல்களை இது நன்றாக இருக்கிறது என சுட்டிக்காட்டும்படி இல்லாது அனைத்தும் மிக அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் எம்மை மிகவும் பிரமிக்க வைத்த நூல் உடையார். நமது சோழ வரலாற்றை அனைவரும் எளிமையாக படித்து மேற்கொண்டு அறிந்துகொள்ளும்படியான ஆவலைத் தூண்டும் படியாக அமைந்திருக்கிறது.

தூரிகையில் சிதறியிருக்கும் எமது சிந்தனைச்சிதறல்களில் எம் மனங்கவர்ந்த பதிவுகளில் இருந்து சில தங்கள் பார்வைக்காக பகிர்கிறேன். படித்து எம் எழுத்துக்களை செம்மைப்படுத்திக்கொள்ள தங்கள் கருத்துக்களை வழங்கவும்.

கவிதைகள்:
நாளைய நம்பிக்கை

தான் மையல்கொண்ட மனதாளும் மன்னவனின் புகழ் என்றும் நீங்காது நிலைத்து, பூமித்தாயும் தன்மீது பொறாமை கொள்ளும்படியான மகவை ஈன்றெடுக்க விரும்பும் காதலியின் சின்ன சின்னப்பேராசையாய் அவளது நாளைய நம்பிக்கை.

அன்புக்குரியவனே

 தன் அன்புக்குரியவரின் உள்ளத்தினை அவன் கண்களைக்கண்டு அறிய அவனை அருகே அழைக்கும் காதலியின் உணர்வுத்துளிகள்.

நூலகம்

அரியபல விசயங்களை அறிவித்திட முயற்சிக்கும் ஆசானின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாது அறிவிளியாக இருக்கும் மாணவியின் மனதின் வெளிப்பாடாய்...

கதைகள்:

மறுஜென்மம்
 ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டால் குடும்பத்தாரின் நிலை என்ன..?? இறந்தவளைப்பற்றி இந்த சமூகம் எப்படி பேசுகிறது என்பதை கண்டுணர்ந்து தற்கொலை முடிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வு...

கட்டுரை :

பண்டிகையும்,தொலைக்காட்சியும்..!!
தொலைக்காட்சி தேர்ந்தெடுக்கும் புதுமுகக்கதாநாயகிகள், பிரபலங்களைப் பொறுத்து அந்தந்த தொலைக்காட்சிகள்தான் முடிவு செய்கின்றன இன்றைய நம் பண்டிகைகளின் சிறப்பை.

முதல் நாள் சுய அறிமுகப்படலம் என்பதால் எமது தூரிகைத்தோட்டத்தில் பூத்த சில மலர்களை வலைச்சரத்தில் வழங்குகிறேன். வாருங்கள்... வாசித்துப் பூவின் மணம் பற்றித் தங்கள் மனம் திறந்து கருத்தை அளியுங்கள்...

நாளை முதல் மற்ற தோட்டங்களில் பூத்திருக்கும் என் மனம் கவர்ந்த மணம் வீசும் மலர்களைக் கண்டு ரசித்து அவைகள் மூலம் வலைச்சரத்தை அலங்கரிக்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது போல் துறைக்கு சிலராய் உங்களுடன் பகிர்ந்து என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்கிறேன்.

அறிமுகமாகும் நண்பர்களுக்கு, அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவரத் தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_

வாழ்க வளமுடன்...

15 comments:

 1. 28 comments:

  சே. குமார் said...
  அக்கா வாழ்த்துக்கள்....

  அறிமுகம் அருமை...

  தொடர்ந்து கலக்குங்க....

  தொடர்கிறோம்...

  வெங்கட் நாகராஜ் said...
  நல்ல சுய அறிமுகம்.....

  வலைச்சரத்தில் இது உங்கள் வாரம்.... அருமையான பதிவுகள் தந்திட வாழ்த்துகள்....

  த.ம. 2

  கவிக்காயத்ரி said...
  @சே.குமார்...நன்றி தம்பி..தங்கள் அனைவரது ஊக்கத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்..

  கவிக்காயத்ரி said...
  @வெங்கட் நாகராஜ்..நன்றி தோழர். தங்கள் ஊக்கத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.._/\_

  ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
  நிறுத்தி நிதானமாய் எழுதியிருக்கின்ற உங்களின் எழுத்துப்பாணி வாசிக்கக் கவர்கிறது

  வை.கோபாலகிருஷ்ணன் said...
  தங்களின் சுயஅறிமுகம் மிகச்சுருக்கமாக ஆனால் மிகச்சுவையாக உள்ளது.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  திண்டுக்கல் தனபாலன் said...
  பணிவான சுய அறிமுகம் அருமை... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

  கவிக்காயத்ரி said...
  @ஸ்ரீவிஜி...மிக்க நன்றி தோழி..:)

  கவிக்காயத்ரி said...
  @வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி ஐயா..தங்களின் வாழ்த்து எம் எழுத்துக்களை வளப்படுத்தட்டும்.. _/\_

  கவிக்காயத்ரி said...
  @திண்டுக்கல் தனபாலன்..வாழ்த்திற்கு நன்றி சகோ. தங்கள் அனைவரின் வழிகாட்டலிலும், ஊக்கத்திலும் நல்லமுறையில் செயலாற்றிட முயற்சிக்கிறேன்..நன்றி

  Unni Krishnan said...
  அருமையான அறிமுகம்...கனிவான கருத்துக்கள் வழங்க காத்திருக்கிறோம்....என்றும் தங்கள் மேலான எழுத்துக்கள் தொடர என் இதய பூர்வ வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்!

  ReplyDelete
 2. Unni Krishnan said...
  அருமையான அறிமுகம்...கனிவான கருத்துக்கள் வழங்க காத்திருக்கிறோம்....என்றும் தங்கள் மேலான எழுத்துக்கள் தொடர என் இதய பூர்வ வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்!

  கவிக்காயத்ரி said...
  @unnikrishnan, வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழரே. தங்கள் வாழ்த்துக்கள் வளப்படுத்தட்டும் எம்மை..:)

  இளமதி said...
  சுய அறிமுகம் மிக அருமை தோழி!

  உங்கள் வலைச்சர ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  கவிக்காயத்ரி said...
  @இளமதி..மிக்க மகிழ்ச்சி தோழமையே..நன்றி..:)

  சங்கவி said...
  வாழ்த்துக்கள்.. கலக்குங்க..

  கவிக்காயத்ரி said...
  @சங்கவி...நன்றி தோழர்.:)

  துரை செல்வராஜூ said...
  உதய வேளையில் இதயத்தைத் தொடும் இனிய அறிமுகம்!..தங்கள் வரவு நல்வரவாகுக!..

  கவிக்காயத்ரி said...
  @துரை செல்வராஜூ, இதயத்தைத் தொட்ட அறிமுகமென உதயத்திலும் குளிரூட்டும் சந்திரனாய் நிங்கள் மறுமொழி..மகிழ்ச்சி தோழர்..வாழ்க வளமுடன்.

  cheena (சீனா) said...
  அன்பின் கவிக் காயத்ரி - வலைச்சர விதி முறைகளீல் முக்கையமானவை :
  தமிழ் மணத்தில் இணைக்கப் பட வேண்டும்
  தங்கள் பதிவுகள் "காயத்ரி " என்றோ அல்லது தங்களுக்குப் பிடித்த முறையிலோ லேபிள் இடப்பட வேண்டும். நாளை இந்த லேபிளைச் சொடுக்கினால் தங்களின் இடுகைகள் வரவேண்டும். அதற்காகத்தான்.
  அனைத்து மறு மொழிகளும் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் - திங்கள் காலை இந்திய நேரம் 6 மணி முதல் ஞாயிறு மாலை இந்திய நேரம் 6 மணி வரை எழுதலாம் - பதிவிடலாம். ஆவன செய்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  கவிக்காயத்ரி said...
  @அன்பின் சீனா ஐயா..நன்றி ஐயா..தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் பதிவிட்ட உடன். லேபில் கொடுக்கவில்லை. கொடுத்துவிடுகிறேன்..நன்றி.

  cheena (சீனா) said...
  அன்பின் கவிக் காயத்ரி - சுய அறிமுகப் பதிவு அருமை - அருமை - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறு மொழி இட்டு - திரும்ப இங்கு வந்தேன் -

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  கவிக்காயத்ரி said...
  @அன்பின் சீனா ஐயா.. மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். ஒரு சில தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும்..:)நன்றி.

  இராஜராஜேஸ்வரி said...
  அழகாய தொடுத்து அலங்கரித்த அருமையான சர்த்திற்குப் பாராட்டுக்கள்..

  கவிக்காயத்ரி said...
  @இராஜ இராஜேஸ்வரி..மிக்க நன்றி தோழி. மலர்ச்சரத்தை ரசித்து மகிழ்ந்தமைக்கு..:)

  anandsweetkani said...
  வாழ்த்துக்கள்
  கவி. காயத்ரி அவர்களே.

  தங்களின் அறிமுகமே
  அனைவரின் கண்களையும், கவனத்தையும் கவர்ந்திழுத்திட்ட
  வண்ணமலர் மாலையாக அமைந்திருக்கின்றனவே!!!
  தொடர்ந்துவரும் நாட்களில் தாங்கள் தொடுத்து வழங்கவிருக்கும்
  மலர்மாலையானது பாரெங்கிலும் மணம் வீசிடுமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
  மீண்டும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு
  தாங்கள் தொடுத்து வழங்கவிருக்கும் மலர் மாலையின் மணத்தினை நுகர்ந்து
  மயங்கிட மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடருங்கள்.

  2008rupan said...
  வணக்கம்

  இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது அறிமுகம் மிகச்சிறப்பாக உள்ளது தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. @anandsweetkani..வாங்க ஆனந்த்..தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மகிழ்ச்சி..:)

  ReplyDelete
 4. @ரூபன்....மிக்க நன்றி தோழர்..:)

  ReplyDelete
 5. கரந்தை ஜெயக்குமார் Said அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 6. NIZAMUDEEN Said..
  கவிகாயத்ரி அவர்களே!
  தங்கள் சுய அறிமுகம் மிகவும் சுவையாக உள்ளது. நன்று.
  மீண்டும் நாளையும் மற்ற பதிவர்களின் பதிவுகள் தொகுப்பினை
  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  த.ம.5

  ReplyDelete
 7. இவ்வாரம் வலைச்சர ஆசிரியராய் கலக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. @டினேஷ் சுந்தர்...வாங்க தோழர்...வாழ்த்திற்கு நன்றி..:)

  ReplyDelete
 9. @டினேஷ் சுந்தர்...வாங்க தோழர்...வாழ்த்திற்கு நன்றி..:)

  ReplyDelete
 10. அறிமுகம் அருமை! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 11. மிக அழகாய் தொடுத்த அறிமுகச்சரம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @கோமதி அரசு...மிக்க நன்றி தோழமையே..:)

  ReplyDelete
 13. @S. Suresh, மிக்க நன்றி தோழர்..:)

  ReplyDelete
 14. சுய அறிமுகம் சுருக்கமாகவும்
  அருமையாகவும் இருந்தது.
  இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. @S. Ramani, மிக்க நன்றி..தங்கள் வாழ்த்து வளமாக்கட்டும்..:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது