07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 4, 2013

நம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி !!!

இன்று நான் அறிமுகம் செய்யவிருப்பது பல்சுவைப் பதிவர்களாக விளங்கும் சிலரை. பதிவு சுருக்கமாக அமையவேண்டும் என்ற நோக்கில் சில பதிவுகளை மட்டும் இங்கே அறிமுகம் செய்கின்றேன் மற்றபடி பதிவுலகில் பல்சுவை பதிவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அனைவருக்கும் எனது வணக்கங்களும்...வாழ்த்துகளும் ...

1) கவிதைவீதி சௌந்தர் நான் நேரில் சந்தித்த பதிவர்களில் ஒருவர் . ஆசிரியர் பணியோடு ஊர்க்காவல் படை பணியினையும் மேற்கொள்கிறார். தோற்றத்தில் உருக்கு  போல் இருந்தாலும் இவர் கவிதைகளில் என்ன ஒரு மென்மை. கண்ணீர் வடிக்கும் வேப்பமரம் என்ற தலைப்பிட்டு அவர் எழுதிய கவிதை என்னை மிகவும் கவர்ந்தது . அவசியம் வாசியுங்கள்.

2) அடுத்தபடியாக பல்சுவை பதிவுகளின் சரணாலயமாக விளங்கும் வேடந்தாங்கல். நண்பர் கருண்குமார் எழுதும் இந்த வலைப்பூவில் பெயருக்கேற்றாற்போல் பல்சுவைக்கு பஞ்சமில்லை. இப்படி ஒரு மனைவி அமைந்தால் நான் ரசித்த சிறந்த பதிவுகளில் ஒன்று ( யம்மா ...என்னா அடி! அவ்வவ்...)

3) அடுத்ததாக வருகிறார் அரசர்குளத்தான் . நண்பர் ரஹீம் கசாலி அவர்களின் பதிவுகள் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் இது நடந்த கதையல்ல ...நடக்காத கதையுமல்ல என்ற இந்த பதிவில் பெற்றோரை தனிமைப் படுத்துபவர்களுக்கு சாட்டையடி கொடுக்கிறார்.

4) அடுத்தபடியாக கதம்ப வலைத்தளம் அருணா செல்வம் . பல்சுவைப் பதிவுகள் நிறைந்த இத்தளத்தில் நாங்க அப்பவே அப்படி (நிமிடக்கதை) எனக்கு மிகவும் பிடித்தது. நீங்களும் படித்து மகிழுங்கள் .

5) அடுத்தபடியாக பல்சுவை தளமான வழிப்போக்கனது உலகம் . தமிழர்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய ஒரு அருமையான தொடரை எழுதியுள்ளார் தளத்தின் ஆசிரியர். அனைத்து தமிழர்களின்  சார்பாக எனது வணக்கத்தையும் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் தொடர் தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி.

6) அடுத்தபடியாக அறிமுகப்படுத்துகிறேன் தேன்மதுரத் தமிழ் தளத்தை. சிறந்த பல்சுவை தளமான இத்தளத்தில் இடம்பெற்றுள்ள நம்ம வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது .

7) இன்றைய  அறிமுகங்களின் நிறைவாக, உலகெங்கும்  வசிக்கும் பதிவர்கள் ஒன்றாகக்  கூடும்  சந்திப்புகளில் தவறாது தன்னை இணைத்துக்கொண்டு அதை பல மாதங்களுக்கும் சுவை  குன்றாமல் விவரிக்கும் அண்ணன் நாஞ்சில் மனோ . வாசம் வீசிய வசந்த விழாவில் பதிவர்கள் அட்டகாசம் என்ற பதிவின் மூலமாக பல பதிவர்களின் உண்மை முகங்களைக் காண ஓடோடி வாருங்கள்...

மீண்டும் நாளை சந்திப்போம்  சொந்தங்களே..வணக்கம்!

17 comments:

 1. ஒருவரை தவிர மற்றாவர் எல்லோரும் எனக்கு தெரிந்தவர்களே. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. @ராஜி வருகைக்கு நன்றி சகோதரி !

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள்...
  பலர் அறிமுகமானவர்கள்...சிலர் புதியவர்கள்...

  வாழ்த்துக்கள் பாலா அண்ணா.

  ReplyDelete
 4. அன்பின் கூடல் பாலா - அனைத்து அறிமுகங்களூம் அருமை - சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மறுமொழிகளும் அங்கே போட்டு - மகிழ்ச்சியுடன் வந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் சொந்தங்களே !

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நன்றி திரு.சே.குமார், திரு. சீனா ஐயா மற்றும் சகோதரி அம்பாளடியாள் ....

  ReplyDelete
 8. சிறப்பான பதிவர்களை சிறப்பித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. கூடல் பாலா அவர்களுக்கு வணக்கம்.

  உங்களின் அறிமுகங்களில் என் வலைப்பதிவையும் கண்டு மகிழ்ந்தேன்.
  மிக்க நன்றி.
  மற்ற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பல்சுவை பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. என் தள அறிமுகத்திற்கு மிகவும் நன்றி கூடல் பாலா அவர்களே! அதிலும் இரட்டை மகிழ்ச்சி அனைவரும் சிந்திக்கவேண்டியப் பதிவை நீங்கள் பகிர்ந்தது, அதையே உங்கள் பதிவிற்குத் தலைப்பாகவும் வைத்து..மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..நன்றி நன்றி நன்றி பல!
  அறிமுகம் பற்றி சீன ஐயாவின் பின்னூட்டத்தில் அறிந்தேன், அவர்களுக்கும் நன்றி! மூன்று தவிர மற்றவைப் புதியது..பார்க்கிறேன்!

  ReplyDelete
 13. @ s suresh, @ மாதேவி, @ அருணா செல்வம், @ திண்டுக்கல் தனபாலன், @ கிரேஸ் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 14. அனைவரும் நான் தொடரும்
  அருமையான பதிவர்கள்
  அறிமுகம் செய்தவிதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. கூடல் பாலா ஐயா...நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 16. ஒரு தளத்தை தவிர மற்ற தளங்கள் தொடர்ந்து படிக்கும் தளங்கள்.....

  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது