07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 8, 2013

புத்தகங்களை அறிமுகம் செய்யும் பதிவர்கள் !!

வணக்கம் நண்பர்களே !

 ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பும், பெருமையும் வழங்கிய சீனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, என் ஆசிரியர் பணியை தொடங்குகிறேன். இந்த ஒரு வாரம் என்னை தொடரப் போகும் வாசகர்களுக்கு, இறுதி பதிவில் நன்றி தெரிவிக்க போகிறேன் என்றாலும் முன்பே ஒரு 'நன்றி'யை சொல்லி தொடங்குகிறேன்.

புத்தகங்கள் மீது எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால், எனது முதல் பதிவாக புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கும் பதிவர்கள், பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெட்டியரட்டைகள், சினிமா, பொழுது போக்கு போன்ற பதிவுகளுக்கு நடுவில் புத்தகங்களை வாசித்து, அந்த படைப்பை பற்றிய விமர்சனத்தை பகிர்ந்த நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே ! அவர்களுக்கு நன்றி தெரித்துக் கொண்டு, அந்த பதிவையும், புத்தகத்தையும் உங்களிடம் பகிர்ந்து விரும்புகிறேன். 

முதலில் பதிவர், பத்திரிக்கையாளரான யுவகிருஷ்ணாவின் “கதிரேச செட்டியாரின் காதல்” நூல் விமர்சனத்தை சொல்ல விரும்புகிறேன். பிரபல பத்திரிக்கைகளில் நூல் விமர்சனம் என்று பத்து வரிகள் ஒதுக்கி, மேலோட்ட பார்வையே இருக்கும். அதே பத்திரிக்கை இரண்டு பக்கத்திற்கு நூல் விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போல யுவாவின் எழுத்து நடை(பத்திரிக்கையாளர் என்பதால் அப்படி இருக்கலாம்). இவர் இதுப் போன்ற பதிவுகளை புத்தகக் கண்காட்சி சமயத்தில் மட்டும் பதிவிட்டாமல், மாதம் ஒன்று அல்லது இரண்டு புத்தகம் என்று பகிர்ந்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

அடுத்து, பார்க்க இருக்கும் பதிவு என்பது சொல்வதை விட வலைப்பூ என்று சொல்லலாம். புத்தக விமர்சனத்திற்கு என்று ஒரு தனி வலைப்பூவை “நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்” என்ற பெயரில் கிருஷ்ண பிரபு நடத்தி வருகிறார். இந்த புத்தக விமர்சனம் என்று குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், அனைத்து புத்தகத்தையும் பிரித்து மெய்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். குறிப்பாக, 2012 சென்னை புத்தகக் கண்காட்சி எழுதிய பதிவு  லைவ் வீடியோ கவரேஜ் கொடுத்ததுப் போல் இருந்தது.

புத்தக விமர்சனத்திற்கு என்று இருக்கும் இன்னொரு வலைப்பூ “புத்தக விமர்சனங்கள்”. சாய் என்பவர் இந்த வலைப்பூவில் தான் வாசித்த பல புத்தகங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆனால், பெரும்பாலான புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களாக இருப்பது கொஞ்ச,ம் நெருடலாக இருக்கிறது.

அடுத்து நாம் பார்க்க இருக்கும் பதிவர் அதிஷா. எவ்வளவு சீரியஸ்யாய் படம் எடுத்தாலும், அதை காமெடியாக பார்க்கக் கூடிய நபர் ஒரு புத்தகத்தை சீரியஸாய் விமர்சனம் எழுதியிருந்தார். விகடனை புறக்கணிக்கும் என் போன்ற ஆட்களுக்கு இவர் எழுதிய பதிவு தான் அந்த நூலை அறிமுகம் செய்து வைத்தது. 2013ல் உயிர்மையில் சிறந்த கட்டுரை பிரிவுக்கு பரிசுப் பெற்ற ராஜூ முருகனின் “வட்டியும் முதலும்” நூல் தான் அது. விகடன் இது போன்ற நல்ல கட்டுரை வெளியிடுகிறது என்பதை இதுப் போன்ற பதிவுகள் மூலமே தெரிந்துக் கொள்ள முடிகிறது.

அடுத்து பார்க்க இருக்கும் பதிவர் என்று சொல்வதை விட, பதிப்பாளர் என்று சொல்லலாம். அகநாழிகை பதிப்பகத்தின் உரிமையாளர் வாசுதேவன். இவர் பதிப்பாளர் மட்டுமல்ல தீவிர இலக்கிய வாசகர். இவர் எழுதிய “வலி சூழ்ந்த வாழ்க்கை - அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ‘நுகம்’ சிறுகதைத் தொகுப்பு”  என்ற விமர்சனத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

நூல் பற்றிய விமர்சனங்கள் மட்டும் இல்லாமல், ஒரு சிலர் தாங்கள் பணியாற்றிய நூல்களை பற்றியும் தங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சுகுமார் சுவாமிநாதன் அட்டை வடிவமைத்த “கேபிளின் கதை” நூல் பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலத்தில், தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு பிறரையும் படிக்க தூண்டும் இந்த பதிவர்களையும் பாராட்டியாக வேண்டும்.

மீண்டும் நாளை பார்க்கலாம்.

13 comments:

 1. விகடன் மேல் அப்படியென்ன கோபம் ?அதையும் ஒரு பதிவாய் போடலாமே !உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. அன்பின் குஹன் - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. இரு தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. புதிய அருமையான அறிமுகங்கள் இரண்டு பகிர்வுககும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நிறைய தெரியாத பதிவர்கள் . போய் பார்த்துட்டு வரேன்

  ReplyDelete
 6. நல்ல விமர்சகர்கள் அறிமுகம்.
  உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  தொடருங்கள்... தொடர்கிறோம்...

  ReplyDelete
 7. புத்தக விமர்சகர்களை அறிமுகப்படுத்தியது வரவேற்பிற்குரியது....பாராட்டுகள்!

  ReplyDelete
 8. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 9. புத்தகங்களுக்கு இவ்வளவு பேர் எழுதறாங்களா...? நல்லதொரு அறிமுகம் தான். நான் உயிரியல் பத்தி கொஞ்சம் எழுதறேன். உங்களுக்கு தெரிஞ்ச உயிரியல் பத்தி எழுதறவங்க இருந்தா அறிமுகம் செய்யுங்க.

  நன்றி.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள்....

  நல்வரவு. தொடர்ந்து சந்திப்போம்....

  ReplyDelete
 11. குகன் ஐயா...நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(www.99likes.blogspot.com)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது