07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 13, 2013

சினிமா... உலக சினிமா !!

ஏழைகளுக்காக, ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்காக, ஏழைகளை நம்பி.... பணக்காரர்கள் தயாரிக்கும் ஒரே பொருள் 'சினிமா'. வாரம் ஒரு சினிமா என்று இருந்த காலம் சென்று, நம் வாழ்நாளில் சினிமா ஒன்றாக கலந்திருக்கிறது. சினிமாவைப் பற்றி பேசாமல் ஒரு நபருடன் உரையாட முடியாத அளவிற்கு சினிமா நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது.

சரி... இன்று நாம் பார்க்க இருப்பது சினிமா பதிவுகள். சாதான சினிமா அல்ல.... உலக சினிமா பதிவுகள்.

 **

உலக சினிமா என்றால் அயல் நாட்டு சினிமா என்ற சிலர் கருதுகிறார்கள். இந்தியாவும் உலகத்தின் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்திய சினிமாவை ஒதுக்கி வைத்து தான் பலர் உலக சினிமாவை பார்க்கிறார்கள். 'உலக சினிமா' என்ற இந்த வலைப்பதிவில், இந்திய சினிமாவில் வந்த உலக சினிமாவை பற்றி எழுதியிருக்கிறார்கள்.

*

உலக சினிமா ரசிகன் என்ற பயரில் இருக்கும் இந்த வலைப்பதிவர் 'உலக சினிமாவை பற்றி இல்லாமல், நம் உள்ளூர் சினிமாவை பற்றியும் விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு படத்திற்கு ஒரு பதிவு என்று இல்லாமல், தொடர்பதிவு எழுதி அந்த படத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார். இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ஆமென்' படத்தின் கதையின் பின்னனியை அருமையாக விளக்கியிருக்கிறார்.

*

ஹாலிவுட்ராஜ் தனது வலைப்பதிவின் பெயரிலே சினிமாவுக்கான வலைப்பதிவு என்று சொல்லி விடுகிறார். என்ன விஸ்வரூபத்தை 'உலக சினிமா' பிரிவில் சேர்த்தது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. பழைய உலக சினிமா படங்களை பற்றியும் எழுதியிருக்கிறார்.

*

உலக சினிமாவை பற்றி பேசும் போது அதை இயக்குனர்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. பிச்சைப்பாத்திரம் என்ற வலைப்பதிவில் பிரான்சுவா த்ருபோ இவருது மிக முக்கியமானது என்று சொல்லலாம்.

*
நான் வலைப்பதிவில் வந்த காலத்தில் உலக இனிமாவை பற்றி அதிகம் படித்தது வண்ணத்துப்பூச்சியாரின் பதிவுகள். ஒரு படத்தை எடுத்துக் கொண்டால், படத்தை மட்டும் அல்லாமல், அதன் இயக்குனர் கொண்டு அலசி ஆராய்வார். எனோ இப்போது இவரை வலைப்பதிவுகள் பக்கம் பார்க்க முடிவதில்லை.

*
உலக சினிமாவை பற்றி பேசும் போது, புத்தகம் பேசுகிறது இதழில் உலக சினிமா வரலாறு தொடராக எழுதிய அஜயன் பாலாவை எப்படி சொல்லாமல் இருக்க முடியும். வனயுத்தம், சென்னையில் ஒரு நாள் வசனகர்த்தா. உலக சினிமாவை குறித்து தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர் வலைத்தளத்தை மட்டுமல்லாமல், புத்தகத்தையும் படிக்க வேண்டும்.

*

உலக சினிமாவை பற்றி தமிழில் வந்த புத்தகங்களில் விகடனில் வந்த செழியனின் "உலக சினிமா" புத்தகம் மிகவும் முக்கியமானது. அந்த புத்தகத்தில் வந்த திரைப்பட பட்டியலை இந்த பதிவில் தாமிரா குறிப்பிட்டுயிருக்கிறார்.

*
மேலும், உலக சினிமாவை குறித்து வாசிக்க, இவர்களது வலைப்பதிவுகளை பாருங்கள்.

http://worldmoviesintamil.blogspot.com
http://hollywoodbalas.blogspot.com
http://www.jackiesekar.com
http://umajee.blogspot.com
http://www.cablesankaronline.com

மீண்டும் நாளை பார்க்கலாம்.

3 comments:

 1. சினிமா தளங்களின் நல்லதொரு தொகுப்பு... முதல் தளம் புதிது... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வலைச்சர சிறப்பு ஆசிரியர் குகன் அவர்களுக்கும்,
  நிரந்தர ஆசிரியர் பெருமக்களுக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  என் மேல் வைத்த நம்பிக்கையை
  வீண் போகாதவாறு மென்மேலும் உழைத்து பதிவிடுகிறேன்.

  அன்புடன்,
  உலகசினிமா ரசிகன்.

  ReplyDelete

 3. என்னுடைய வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதருக்கு மிக்க நன்றி குகன். என்னங்க பண்ணுறது, விஸ்வரூபம் பார்த்தப்ப அது எனக்கு உலக சினிமா மாதிரி தான் தோனுச்சு, அதுனால் தான் லேபல் "உலக சினிமா"ன்னு வைச்சேன். :):)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது