07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 22, 2014

தேனிலவு செல்ல அழகான இடங்கள்.

வாம்மா புதுப் பொண்ணு!! நல்லா இருக்கியா!?

நல்லா இருக்கேன்க்கா. நீங்க எப்படி இருக்கீங்க!? மாமா, பசங்கலாம் சௌக்கியமா!?

நல்லா இருக்காங்க. இந்தா ஸ்வீட். சாப்பிடு. கல்யாணம் முடிஞ்சு முதன் முதலா எங்க வீட்டுக்கு வரும்போது நீ மட்டும் தனியாய் வரலாமா!? எங்க உன் வீட்டுக்காரர்!?

அவர் ஆஃபீஸ் போயிருக்கார்க்கா. உங்கக்கிட்ட ஒரு உதவி கேக்கச் சொன்னார்க்கா.

என்ன உதவிம்மா!? முடிஞ்சா செய்றேன்.

ஒண்ணுமில்லக்கா. ஹனிமூன் போலாம்ன்னு இருக்கோம். அதான் எங்க போறதுன்னு தெரியல! நீங்கதான் பிளாக்லாம் எழுதிறீங்களே! அதுமில்லாம மாமாவோடு நிறைய இடம் போய் வந்திருக்கீங்களே! உங்களை கேட்டா சரியா இருக்கும்ன்னுதான் வந்தேன்.

ம்ம்ம் எங்க போனாலும் ஃபோட்டோ எடுக்குறேன்னு என் பசங்களும், என் சகோக்களும் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கு இப்படி ஒரு யூஸ் வரும்ன்னு அவங்களுக்குலாம் தெரியுமா!? நாங்க டூர் போனபோது எடுத்தப் படம்லாம் காட்டுறேன். அதுல எந்த இடமாவது உனக்குப் பிடிக்குதாப் பாரு. இல்லாட்டி சில இடத்தோட லின்க் கொடுக்குறேன். நீயும் உன் வீட்டுக்காரரும் பார்த்து முடிவு பண்ணி போய் வாங்க.

சரிக்கா.

முதல்ல கரண்ட் இருக்கும்போதே லிங்க்லாம் உன் வீட்டுக்காரருக்கு மெயில் தட்டி விடலாம் வா!

வெளியே டூர் போகும்போது எப்பவுமே பிளான் பண்ணிக்கிட்டுதான் போகனும். திடுதிப்ன்னு அங்கப் போய் அவஸ்தைப் படக்கூடாது. எத்தனை நாள், எங்க தங்குறது, என்னலாம் பார்க்கனும்ன்னு முதல்லியே பிளான் பண்ணிக்கனும்ன்னு என் அண்ணா மோகன்குமார் சொல்றார். மனுசன் குளுமணாலி தொடங்கி நம்ம ஊர் ஏலகிரி வரை ஒரு இடம் பாக்கி விடாம சுத்தி பார்த்திருக்கார். அழகான புகைப்படங்களோடு தன் அனுபவத்தை சொல்லி இருப்பார். அவர் பதிவுகளை வாசிச்சுப் பார்.

ஆறு ஓடும் ஊரில் குடியிருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென சொல்லி, தேனி சுற்றி நிறைய சுற்றுலா தலங்கள் இருக்கு. அவை என்னலாம்ன்னு பட்டியலிட்டு, தன் பயண அனுபவத்தை முரளி குமார் சொல்றார்.

மூணாற்றை அழகியப் படங்களோடு நமக்கு சுத்திக் காட்டுகிறார் மகுடேஸ்வரன். ஆனா, ஊர் உலகமே போகனும்ன்னு ஆசைப்படுற ஊட்டி மேல இவருக்கு ஏன் இப்படி ஒரு ஒவ்வாமை!?

புகை மண்டலமா இல்ல நீர்த்துளியான்னு சந்தேகத்தோடு துவாந்தார் நீர்வீழ்ச்சியை சுத்திப் பார்த்தோடு இல்லாம எங்களையும் தன் படங்களின் வழியாய் கூட்டி சென்றது வெங்கட் நாகராஜ். அண்ணனோட வலைப்பக்கம் போனால் காசி, சபரிமலை, டில்லி ரோட்டோர உணவுத்திருவிழான்னு செமையாக் கலந்துக் கட்டி இருப்பார். எங்காவது போனோமா! இடத்தை ரசிச்சுப் படமெடுத்தோமான்னு இல்லாம அடுத்தவங்க பேசுறதையெல்லாம் ஒட்டுக் கேட்டு பதிவா போடுவார் இந்த தலைநகர தளபதி.

தேக்கடி படகு வீட்டில் ஒரு நாள் முழுக்க தன் நண்பர்களுடன் தங்கியிருந்த தன் அனுபவத்தை கிரியேஷ் பகிர்ந்திருப்பதைப் பார்த்து முடிவெடு. எனக்குக் கூட இப்படி ஒரு படகு வீட்டில் போய் தங்கனும்ன்னு ஆசை. இந்த வருச லீவில் போக முடியுதான்னு பார்க்குறேன்.

கர்நாடக மாநிலத்து கூர்க், தலைக்காவிரி, தங்கக்கோவில் சுத்திப் பார்த்த அனுபவத்தை குரு சொல்லி இருக்கார். அவரும் அவர் நண்பர்களும் சாப்பிட்ட இடம் போர்க்களம் போல காட்சியளிக்குதுன்னு சொல்றார். படத்தைப் பார்க்கும்போது எனக்கும் அப்படிதான் தோணுது.

ஆசியாவின் மிக நீளமான மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு போய் வந்த வித்யா புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்காங்க.

தேனிலவுக்கு கோவா போகலாமான்னு தெரியல. வெளிநாட்டுக்காரர்லாம் நிறைய பேர் வருவாங்க. எதுக்கும் நம்ம வீடு சுரேஷை கெட்டு சொல்றேன். ஏன்னா அவர் கோவா போய் வந்ததா ஜொள்ளி இருந்ததா நினைவு.

எனக்குத் தெரிஞ்சவங்க எண்ணெய் மசாஜ்+குளியல்+சூடான, சுவையான சாப்பாடு+தூக்கம். மீண்டும் குளியல்+சாப்பாடு+தூக்கம்ன்னு குற்றாலத்துக்குப் போய் நாலு நாள் தங்கிட்டு வருவாங்க. குற்றாலம் போய் வந்திருந்தாலும் அதுப்போல தங்கி குளிக்கனும்ன்னு ஆசை.தன் குற்றால அனுபவத்தை செ.நாகராஜ் சொல்றார்.

நம்ம ஊருக்கு பக்கம்தான் இருக்கு. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ன்னா ஒகேனக்கல் போய் வாங்க. என் தம்பி கோகுல் போய் வந்து பதிவு போட்டிருக்கார். தம்பி பிசி போல! முன்போல பதிவுப் பக்கம் வருவதில்லை.

பெங்களூர்ல பொட்டானிக்கல் கார்டன் இருக்குன்னு தெரியும். ஆனா, கோட்டை இருக்குறது வசந்தக்குமார் சொல்லித்தான் தெரியும்.

எங்க ஊர் பக்கத்துல ஆறு, கடல், நீர்வீழ்ச்சின்னு ஏதுமில்ல. அதனால, என் கடைசி காலத்தில் நான் இருக்கும் வீட்டுப் பக்கத்தில் எதாவது ஒரு நீர் நிலை இருக்கனும்ன்னு ஆசைப்படுவேன். என் கனவு வீட்டை கானப்பிரபா எனக்கு காட்டி இருக்கார். 

இந்தியாவில் தெற்கு பகுதிக்கு ஊட்டி, வடக்கிற்கு குலுமனாலி, கிழக்கில் டார்ஜிலிங் என்றால் மேற்குக்கு மகாபலேஷ்வர்ன்னு புது தகவல் சொல்லும் விஜிகுமாரி பதிவு.

காதல் சின்னமான தாஜ் மகால் சாய்ஞ்சுக்கிட்டே வருதுன்னு பயமுறுத்துறார் முத்துக்கிருஷ்ணன். 

திருமயம் மலைக்கோட்டைப் பற்றி முழுதகவலையும்,படத்தோடு ஸ்ரீ சொல்லி இருக்கார்.

எனக்கு பிடித்த இடங்களுள் மதுரை நாயக்கர் மஹாலும் ஒண்ணு, எனக்கு பிடிச்ச வலைப்பூ எழுத்தாளர்களில் சகோ கலாக்குமரனும் ஒருவர்.பிடித்த ஒருவர் மூலம் பிடித்த இடத்தைப் பற்றி அறிய வருவது எவ்வளவு சுகம்!?

நீலகிரி மலையில் உள்ள சுற்றுலா இடங்களையும், மலையின் சிறப்புகள் மற்றும் அங்கு வாழ் மக்களைப் பற்றி ஒட்டக்கூத்தன் பகிர்ந்திருக்கிறார்.

பிச்சாவரம் ஏரியின் அழகையும், படகு சவாரியையும் மலர்விழி சொல்லுறதை படிச்சுப் பாரு.

நம்ம ஊரிலிருந்து அதிகப்பட்சம் நூறு கிலோ மீட்டர்க்குள் இருக்கும் செஞ்சிக்கோட்டையைப் பத்தி தஞ்சாவூரான் பதிந்த பதிவைப் படிச்சுப் பாரு.

எனக்குப் பிடித்த ஊர்களில் முதன்மையான இடம் தஞ்சாவூருக்குண்டு. தஞ்சைப் பெரிய கோவிலின் தரையில் விழுமா!? விழாதான்னு புகைப்பட ஆதாரத்தோடு சொல்கிறார் ஜெகதீஸ்வரன்.

பொதிகை மலைப் பயணத்தையும், அகத்தியரின் வழிப்பாட்டையும் போகர்
என்ற பதிவர் சொல்லி இருக்கார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பாபநாசம். இங்க போனா ஒரேக் கல்லில் ரெண்டு மாங்கா. ஒண்ணு அகத்தியருக்குத் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடத்தைப் பார்க்கலாம். மலை மேல அழகிய நீர்வீழ்ச்சியும், படகு சவாரியும் உண்டு தேனிலவைக் கொண்டாடின மாதிரியும் ஆச்சு!! அங்க போறதுக்கு முன் எறும்பு சொல்றதைப் படிச்சுட்டுப் போங்க.

கோவா பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களைப் பற்றி குறிஞ்சிக்குயில் தளத்துல படிச்சிக்கப்பா!.

பெங்களூரு லால்பாக் எப்பவுமே பூக்களால் களைக் கட்டும். விசேசத்தினங்களில் இன்னும் அழகா இருக்கும்// அந்த அழகையெல்லாம் தன் மூன்றாவது கண்ணால் ராமலஷ்மி அழகாப் படம் பிடிச்சு வந்திருக்கார்.

பெங்களூருவின் அழகான குண்டலஹள்ளி ஏரியையும், அதன் மறுபக்கத்தையும் வனிலா பாலாஜி பகிர்கிறார்.

கொல்லி மலையில் தன் நட்புகளுடன் ஆட்டம் போட்டதை அழகான படத்தோடு ரசிக்கும்படி சங்கர் சொல்லி இருக்கார்.

நான் சொன்ன பதிவுகளைப் படிச்சும், படங்களைப் பார்த்தும் எதாவது ஒரு இடத்தை செலக்ட் செஞ்சு தேனிலவுக்குப் போய் சந்தோசத்துடனும், பாதுகாப்புடனும் திரும்பி வாங்க. ஆல் தி பெஸ்ட்.

நன்றிக்கா! நான் போய் எங்க வீட்டுக்காரர்கிட்ட இதெல்லாம் சொல்றேன்.

58 comments:

 1. புதிய அறிமுகங்கள் உள்ளனவா என்று பார்த்துவிட்டு வருகிறேன் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. அதான்!! உங்களுக்கு தெரியாத தளங்களைக் கண்டுப்பிடிப்பதற்குள் போதும் போதுன்னு இருக்கு.

   Delete
  2. நான்கு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...

   அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

   Delete
 2. சுற்றுலாத் தலங்களைப் பகிர்ந்த இந்தத் தொகுப்பும் (வழக்கம் போல்) வெகு ஜோர்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 3. அடக்கடவுளே... இன்னிக்காவது ஃபர்ஸ்ட் ராங்க் வரலாம்னு பாத்தா... இந்த டிடி எங்கருந்தோ மூக்கை நீட்டிட்டாரே...! தேவுடா!

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு போஸ்ட் போடும் நேரத்துல உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்றேன். நீங்க முதல் ஆளய் வந்துடுங்கண்ணா!

   Delete
  2. அதான் கரீக்ட்டு...! டாங்ஸு தங்கச்சி!

   Delete
 4. //இடத்தை ரசிச்சுப் படமெடுத்தோமான்னு இல்லாம அடுத்தவங்க பேசுறதையெல்லாம் ஒட்டுக் கேட்டு பதிவா போடுவார் இந்த தலைநகர தளபதி.//

  நல்ல பெயர் எனக்கு! :(((( இனிமேல் ஒட்டுக் கேட்பதை பதிவா எழுதக்கூடாதுன்னு சொல்லிடப்போறாங்க!

  என்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 5. வழக்கம் போல் இன்றைய அறிமுகங்களும் அருமை. எங்க வூட்டுக்காரரையும் இதில் சேர்த்துக்கிட்டதுல மிக்க மகிழ்ச்சி....:)

  நானும் அவர் காதை நினைத்து கவலைப்பட்டு தான் சொல்லிட்டிருக்கேன். எங்க கேட்கிறாரு....:(( அடி வாங்காம இருந்தா சரி தான்....:))))

  ReplyDelete
  Replies
  1. அப்ப அண்ணி சொல்ல நினைச்சதைத்தான் நான் சொன்னேனா!?

   Delete
 6. அப்புறம் ஆரம்பத்திலேயே சொல்ல நினைத்தேன் சகோதரி... அறிமுகங்களுக்கு சென்று வர தாமதம்... (-) ஓட்டு போட்டு விட்டீர்கள் சகோ...

  ReplyDelete
  Replies
  1. கரண்ட் கட் வரப்போகுதேன்னு அவசர அவசரமா ஓட்டு போட்டதுல நானே மைனஸ் ஓட்டு போட்டுக்கிட்டேனா!? ராஜி! இனி கவனமா இரும்மா!

   Delete
 7. Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 8. இன்றைய முன்னுரை ஆஹா தேனிலவுக்கு செல்ல ஏதுவான இடங்களைப்பற்றி அழகிய ஒரு கண்ணோட்டம்... அதோடு அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் எல்லோருக்கும் அன்பு வாழ்த்துகள்பா ராஜி..

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி மஞ்சுக்கா!

   Delete
 9. வாத்தீயாரம்மா வளமை போல பகிர்வு இன்றைக்கும் வெகு சிறப்பாக
  அமைந்துள்ளது !! அது சரி இப்பெல்லாம் மேக்கப் போடுவதே இல்லை
  என்று இனியா சொன்னாள் உண்மை தானே ?..இத்தனை விரிவாக கதை
  சொல்லிச் சொல்லி ஒவ்வொருத்தரையும் அறிமுகம் செய்வதென்ன
  அத்தனை இலகுவான காரியமா ! என் தங்கை கெட்டிக் காரி .வாழ்த்துக்கள்
  ராஜிம்மா .அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சொந்தங்களே .

  ReplyDelete
  Replies
  1. முதல் நாள்தான் மேக்கப் போட்டு லேட்டா வந்தேன்னு கழுவி கழுவி ஊத்திட்டு..., இப்ப ஏன் மேக்கப் போடலைன்னு கேள்விக் கேக்குறீங்களா!?

   Delete
 10. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துத்துக்கள்.... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்....

  என்பக்கம் கவிதையாக -நேரில் பேசும் தெய்வங்கள் என்ற தலைப்பில்
  எனது புதிய தளத்தின் முகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com/

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க தளத்தில் இணைந்து விட்டேன் ரூபன். அனா, கவிதையை படிக்க நேரமில்ல. இனொரு நாள் வருகிறேன்.

   Delete
 11. புதுபுது ஐடியா புடிக்க நீங்க எந்த ஊர்ல ரூம் போடுறிங்கன்னு சொல்லவே இல்லையே அக்கா ;) !! வழக்கம் போல சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அதேதான் நானும் நினைத்தேன் மைதிலி..
   ஊரெல்லாம் சுத்திப்பாத்துட்டு வந்துறேன் ராஜி!

   Delete
  2. அடடா! போறப் போக்கைப் பார்த்தால் என்க்கெதிரா கொடிப் பிடிப்பீங்கப் போல!!

   Delete
 12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

   Delete
 13. பல இடங்கள் பார்க்கத்தூண்டும் இடங்கள். தேக்கடி படகு வீடு தனிச்சுகம் அனுபவித்தோம்! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் போய் தங்கி வரனும்ன்னு ஆசைதான். உங்க மாமாக்குதான் டைம் கிடைக்கல

   Delete
 14. ஹூம்...... இனிமே எங்க தேனிலவுக்கு எல்லாம் போறது?????

  ReplyDelete
  Replies
  1. இருங்க வூட்டம்மாக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். தேனிலவுக்கும், பூரிக்கட்டை அடிக்கும்...,

   Delete
 15. கிட்டதட்ட ஒட்டு மொத்த வலைத்தளம் ஆளுங்களையும் அறிமுகப் படுத்தியாச்சு போல, யாவருக்கும் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 16. பலே! பலே! நன்னா நெறைய பேர அழைச்சுருக்கேளே! எப்படித்தான் சமாளிச்சேளோ!!!!

  அருமையான இன்ட்ரோ சகோதரி!!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. டிடி அண்ணா போகாத தளங்கள் எதுன்னு கண்டுப்பிடிக்குறதுக்குள் போதும் போதும்ன்னு ஆகுது. அது தவிர வேறு சிரமம் ஏதுமில்ல.

   Delete
 17. ஆஹாஹா நம்ம இடுகையையும் அறிமுகப்படுத்த ஒருத்தர் இருக்காங்கனு நினைக்கும் போது... ம்ம் எழுத எழுத்தே வரலை. இன்னிக்கு யதேச்சையா ப்ளாக் கவுண்ட்ர் பார்த்தா 20 வருகை, அடடா, என்னடா இன்னிக்கு இவ்வளவு பேர் வந்து பார்த்திருக்காங்கனு யோசிச்சி பார்த்து பிறகு தான் தெரிஞ்சுது நீங்க அறிமுகப்படுத்தியிருக்கீங்கனு. பிரமாதம், உங்க சேவை நாட்டுக்கு தேவை.

  ReplyDelete
  Replies
  1. இனி தொடர்ந்து எழுதுங்க. அது போதும்.

   Delete
 18. அஹா.., பல இடங்களின் தகவல்களை அள்ளி கொடுத்திருப்பதை பார்த்தால், shelf ல் அடுக்கி வைக்கப்பட்ட அழகான புத்தக வரிசை போல இருக்கு. அந்த களஞ்சியத்தில் என்னுடைய பக்கமும் இருப்பதில் சந்தோசம் ராஜி. பொறுமையும் , அருமையும் எல்லோருக்கும் கை வந்த கலையாக இருப்பதில்லை.... really superb!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ! நான் ரசிச்சு படிக்கும் எழுத்தாளர்களில் உங்களுக்கும் ஒரு இடமுண்டு.

   Delete
 19. இதையெல்லாம் படிச்சதும் எனக்கும் ஆசை வந்துருச்சி... தேனிலவு செல்ல!!!

  ReplyDelete
  Replies
  1. என் பொண்ணு ஏர் ஹோஸ்டஸாதான் இருக்கா. வேணுமின்னா அவக்கிட்ட சொல்லி டிக்கட் புக் பண்ணித் தரச் சொல்லவா சகோ!?

   Delete
 20. எங்கள் வலைச்சர குழுவில் இணைந்திருக்கும் ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
  Replies
  1. கிடா வெட்டியாச்சா!?

   Delete
 21. நல்ல தொகுப்பு. எனது பதிவையும் இணைத்திருப்பதற்கு நன்றி:)!

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவு இல்லாம புகைப்படம் சார்ந்த இந்த அறிமுகம் முற்றுப்பெறாதே!!

   Delete
 22. ஆத்தாடி ஐடியா மன்னி தான் போங்கள் ! என்னமா அசத்துறா இந்தப் பொண்ணு என் கண்ணே பட்டுடும் போல சுத்தி போடும்மா. ராஜி மேக்கப் இல்லாமலே நீ அழகாகவே உள்ளாயம்மா.
  தொடரட்டும் பணி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா!

   Delete
 23. அழகான மனம் நிறைக்கும் தேனிலவுத் தொகுப்பு. நிறைய புதிய தளங்கள். ஒவ்வொரு தளமாய் சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி ராஜி. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ராஜி :-)

  ReplyDelete
 25. எல்லா இடத்தையும் சுத்தி சுத்தி பார்த்தேன்.
  இருந்தாலும் இந்த 73 வயசிலே வீட்டுக்காரியும் கூட வர
  இத்தனை இடத்தையும் தனியே போவது சாத்தியம் இல்ல.

  அதனாலே உங்க வீட்டுக்கே விருந்தாளியா வந்து
  உங்களையும் கூட்டிகிட்டு லால் பாக் போலாம்னு முடிவு .

  திங்கள் கிழமை வர்றோம்.

  4 இட்லி சூடா சட்னி சாம்பார் வச்சுடுங்க. போதும்.
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 26. கருங்குயில் பதிவுகள் மிகவும் அழகானவை. விவரமானவை.
  அக்னி சாட்சி ஏன் திரு மணங்களில் என்ற பதிவும் நன்றாக இருக்கிறது.

  இருப்பினும்.

  அத்தனை விவரங்களையும் அழகாக எடுத்துச் சொன்னவர்
  தலைப்பில் இருக்கும் கேள்வி
  அக்னி சாட்சி ஏன் ?

  என்ற கேள்விக்கு மட்டும் விடை அளிக்கவில்லையே !!

  வலைச்சர ஆசிரியருக்குத் தெரிந்திருக்கலாம்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 27. "தேனிலவு செல்ல அழகான இடங்கள்." எனத் தாங்கள் சுட்டிய அறிமுகங்களை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 28. பயணப்பதிவுகள் எழுதும் பலரது தளங்கள் அணிவகுத்து அழகு சேர்த்தன! சிறப்பான அறிமுகங்கள்! நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் தேனிலவு செல்ல தஞ்சையை தேர்வு செய்திருப்பது வியப்பளிக்கிறது :-)

  ReplyDelete
 30. ஏகப்பட்ட பேரை அறிமுகம் செஞ்சிருக்கீங்க.... எப்படியாவது நேரம் ஒதுக்கி அனைவரையும் படிக்கணும்பா...

  ReplyDelete
 31. அன்பு ராஜி மேடம்...

  நன்றிகள்.

  ReplyDelete
 32. நன்றி சகோதரி

  ReplyDelete
 33. நன்றி சகோதரி ...எனது வலைதளத்தை தேர்வு செய்ததற்கு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது