முதல் அறிமுகம்
➦➠ by:
நுண்மதி,
முதல் அறிமுகம்
வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும், வலைச்சர நண்பர்களுக்கும் வணக்கம். என்ன படிக்கலாம் எனத் தேடி அலையும் வாசகர்களுக்கு இதைப் படித்தால் இனிக்கும் என அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய விடயம். இவ்வாறு அழகுப்பணி ஆற்றிய ஆசிரியரிடையே பணியாற்ற எனக்கும் அழைப்பு அனுப்பிய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இங்கிருக்கும் பலருக்கும், வலைப் பூவிற்கும்கூட நான் புதியவள். என் முதல் அறிமுகமாய் என்னுடைய இடுகைகளைப் பற்றிச் சொன்னால் காதலையும், தாய்ப்பாசத்தையும் தவிர நான் எழுதியவை மிக மிகக் குறைவே. திரு. வை. கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல நேரங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி " உங்களுடைய அனுபவங்கள் பற்றியும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதுங்கள் " எனத் தெரிவிப்பதுண்டு. எனினும் என்னவோ காதலைப் பற்றியே வலம் வருகிறேன்.
என்னுடைய இடுகைகளைப் பற்றிய அறிமுகம் இதோ :
என்னால் எழுதப்பட்ட முதல் கவிதை காதலைப் பற்றியதே.
காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஒன்று, இரண்டு என இப்போது மூன்று பகுதிகள் எழுதியிருக்கிறேன்.
அன்பெனும் விருந்து எப்படி இருக்கும் ஆதரவற்றவர்களின் பார்வையில் என்ற ஒரு கற்பனை.
மரத்தோடு நான் கொண்ட காதல் மண்ணியம் பேசுவோம் என்கிற இடுகையில்.
நீதிமன்றங்களின் மூலம் மணங்கள்தான் ரத்தாகிறதே தவிர மனங்கள் ரத்தாவதில்லை என உணர்த்தும் ஒரு இடுகை.
முதுமைக் காதல் முத்தானக் காதல் என நான் உணர்ந்தபோது எழுதிய இடுகை இது.
பழைமை போற்றும் ஒரு ஆண்மகனின் எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியாகிறது என எழுதியதுதான் அண்மைய இடுகை.
எனக்குப் பிடித்த சில பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தும் அடுத்த இடுகையோடு அனைவரையும் சந்திக்கிறேன்.
இந்நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.