07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நுண்மதி. Show all posts
Showing posts with label நுண்மதி. Show all posts

Sunday, June 24, 2012

காதல் செய்வோம்...

எனக்குப் பிடித்த இரண்டே இரண்டு காதல் பதிவுகளுடன் விடைபெறுகிறேன்.

முதலாவது, திரு விஜயன் அவர்கள் எழுதிய பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை. காதல் சொட்டும் இவரது வலைக்குள் நுழைந்தால் காதலின் விருந்துண்ட ஒரு திருப்தி வந்து விடுகிறது. இவர் எழுதிய அதிசய ராகம் என்கிற பதிவும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

இரண்டாவதாய், என் உயிர் கவிதை என்கிற காதல் வழிக் கல்வி . இதற்குச் சொந்தக்காரர் திரு. சஞ்சய் அவர்கள். அ, ஆ,... ஔ என உயிரெழுத்துக்களில் உயிர் கவிதை சொல்லித் தருகிறார்.

இனிய நண்பர்களை அளித்த வலைச்சரத்திற்கும், வலைச்சர நண்பர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றிகளுடன்
-நுண்மதி.



மேலும் வாசிக்க...

தெரி(ளி)ந்து கொள்வோம் வாரீர்...

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ஆனால் பயன் தருபவை.

இரத்ததானம் செய்வது பற்றிப் பல ஐயப்பாடுகள் நமக்குள் விரவிக் கிடக்கின்றன. செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, ஒரு அடி முன் வைத்தால் எங்கே இரத்த தானம் செய்வதென்ற கேள்வி நமக்கும் ஒரு அடி முன்னால் சென்று நிற்கும். தொண்டு நோக்கோடு இரத்த தானம் செய்வோம் என நம்மை அழைக்கிறார் திரு.அல்போன்ஸ் சேவியர்.

கட்டடம் கட்டுவதால், மண்வளம் குறைகிறதாம். மண்வளத்தைக் குறைத்துவிட்டு, இயற்கையை அழித்துவிட்டு நாமெல்லாம் எங்கே வாழ்வது? புதிதாய் பூமியொன்று கண்டறிய அப்படியொன்று இருப்பதாய் அறியப்படவிலையே. இருக்கிற பூமியில், மண்வளத்திற்கு ஊறு இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி என இங்கே தெளிவிக்கிறார் திரு.அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான் அவர்கள்.


நம் காலடியில் என்ன இருக்கிறது? கொஞ்சம் மண்ணும் நிறையத் தண்ணீரும் என்றுதான் இன்றுவரை எண்ணியிருந்தேன். ஓரளவு மின்சாரமும் நம் காலடியில் இருக்கிறதாம். இந்த அறிவியல் தகவலை இங்கே தான் தெரிந்துகொண்டேன்.

 உங்களிடமிருந்து விடைபெறும் அடுத்த பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்
- நுண்மதி.
மேலும் வாசிக்க...

கொஞ்சம் தமிழும், கொஞ்சும் விளக்கங்களும்...

தமிழும், இலக்கிய இலக்கணங்களும் எந்தவொரு தருணத்திலும் பிரிக்க இயலாதவை. தமிழ் இலக்கியங்களுக்காக வகுக்கப்பட்டவை இலக்கணங்கள். நாம் வழமையாக உரையாடுவது பேச்சுத் தமிழிலேயே. எது சரி எனத் தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழை ஒரு புறம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான ஆராய்ச்சியில் ஒன்று ( இந்த வம்புக்கு நான் வரலை, நீங்க ஒண்ணு அல்லது ஒன்னு என்று கூட சொல்லிக்கலாம்)  திரு. இராம.கி அவர்கள் வளவு தளத்தில் எழுதிய இடுகையான ஒண்ணா, ஒன்னா? . நாம் படித்தறிய வேண்டியதான இடுகைகளில் ஒன்று.

இரண்டாவதாய், திணை பற்றிய விளக்கத்தை முன்வைக்கிறார் திரு. அருள்மொழிவர்மன் அவர்கள். ஐந்து நிலம், ஐந்து ஒழுக்கம், ஐந்து திணைகள் இவற்றை இவரின் பார்வையில் நாம் காண்பது புரிந்து கொள்ள ஏதுவாகவே இருக்கிறது.

அடுத்ததாய் பகிரப்போவது தொல்காப்பியம் கூறும் அகத்திணை பற்றி. தலைவி, தலைவன் இவர்களை நாம் இனங்கண்டு கொள்வது எளிதே. நற்றாயையும் செவித்தாயையும் ஒன்று என்றே பலர் எண்ணிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டி, தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு என்ன என்பதை தோழி ஜோஸ்பின் புனிதா அவர்கள் தமிழ் தொகுப்புகள் தளத்தில் உணர வைத்திருக்கிறார்.


நான்காமவர், திரு. ஜடாயு அவர்கள். பள்ளிக் காலத்தில் சீவக சிந்தாமணியைப் படிக்கும்போது இவருக்குத் தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியதுண்டு. இவர் எழுதிய அமானுஷ்யமான காந்தர்வ இலக்கணம் கற்க இங்கே சொடுக்குங்கள்.

தித்திக்கும் தமிழ் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியம் கூட தித்திக்கும் தொல்காப்பியமாய்  மாறி விடுகிறது, இவரின் எழுத்துக்களில். இதனோடு சேர்த்து தொன்மைத் தன்மையையும் விளக்கியிருக்கிறார் திரு.தமிழ்மாறன். படித்துப் பார்த்தால் விழிகள் சுவையுணர்கின்றன என்றால் அது மிகையாகாது.

அடுத்த பதிவில் அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.
மேலும் வாசிக்க...

கவிதைக்கதம்பம்...

வலைச்சர நண்பர்களுக்கு
வணக்கம் சொல்லி
இன்றொரு கவிதைக் கதம்பம்
கொணர்ந்திருக்கிறேன்...

அம்மா என்றொரு தேவதைக்கு
பிரிய(யா)த் தோழி
அளித்த அன்புப் பரிசு...

நேற்றைய நள்ளிரவில்
அக்கடிகாரம் விதைத்த
சுந்தரமான வற்றாயிறுப்பு...

இருட்டைப் பேசவைக்கும்
உரந்தையின்
புகாரி...

திருடுவதற்கல்லாப்
பூக்கள் வளர்த்த
பிரபாகரன்...

ஞாபகத் தூறல்கள்
தெளிக்கும் சுஜாவின்
அழகுக் கவிதைகள்...

இவ்வாறாய் ஐந்துப் பூக்கள்
கொண்டு தொடுத்த
அழகுச் சரம்
உங்கள் பார்வைக்காய்...

- நுண்மதி.
மேலும் வாசிக்க...

Wednesday, June 20, 2012

பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்...

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றைய நமது அறிமுகமாக பஞ்ச பூதங்கள் போல் ஐவரைக்  கொணர்ந்திருக்கிறேன்.

முதலாவது வலைப் பதிவர் கவிதா அவர்கள். இவர் 2006 மார்ச் முதல் வலையுலகில் வலம் வருகிறார். இவர் எழுதிய கொலை செய்யப் போகிறேன் நான் ரசித்துப் படித்த பதிவு. மிகவும் சுவாரசியமாகவும் முடிவைக் கணிக்க முடியாதபடியும் இருந்தது.

இரண்டாமவர் பாச மலர் அவர்கள். இவர் எழுதிய நிச்சலனமற்ற பொழுதுகளில் என்கிற பதிவினைப் படிக்கும் போது புரியவில்லை எனினும், புரிந்தவுடன் ஆம் என அனைவரும் அங்கீகரிக்கும்படிக்கு இருந்தது.

மூன்றாவதாக, திரு.நேச மித்திரன் அவர்கள். பெண்ணாகப் பிறந்ததினாலோ என்னவோ, பெண்மையைப் போற்றினாலோ அல்லது பெண்மைக்கு ஆதரவாய்ப் பேசினாலோ மனம் அவர்களை நாடுகிறது. பெண்மை போற்றும் மத்தகம் இதோ.

அடுத்த வலையுலக நண்பர், சிவகுமாரன் அவர்கள். 'குடி'மகனைக் கணவனாகக் கொண்டால் நம் பெண்கள் வேண்டுமானால் அனுசரித்துப் போகலாம். ஆனால், இவரின் கவிதை நாயகி பாரதி கண்ட... இல்லையில்லை... இளங்கோ கண்ட புதுமைப்பெண். இவரின் புலம்பல் சிலம்பின் புலம்பலாய்.

ஐந்தாமவர், திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

அடுத்த சில பதிவர்களுடன், அடுத்த முறை சந்திக்கிறேன்.

இன்றைய நாள் இனிய நாளாகட்டும்,
நுண்மதி.
மேலும் வாசிக்க...

Monday, June 18, 2012

முதல் அறிமுகம்

வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும்,  வலைச்சர நண்பர்களுக்கும் வணக்கம். என்ன படிக்கலாம் எனத் தேடி அலையும் வாசகர்களுக்கு இதைப் படித்தால் இனிக்கும் என அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய விடயம். இவ்வாறு அழகுப்பணி ஆற்றிய ஆசிரியரிடையே பணியாற்ற எனக்கும் அழைப்பு அனுப்பிய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இங்கிருக்கும் பலருக்கும், வலைப் பூவிற்கும்கூட நான் புதியவள். என் முதல் அறிமுகமாய் என்னுடைய இடுகைகளைப் பற்றிச் சொன்னால் காதலையும், தாய்ப்பாசத்தையும் தவிர நான் எழுதியவை மிக மிகக் குறைவே. திரு. வை. கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல நேரங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி " உங்களுடைய அனுபவங்கள் பற்றியும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதுங்கள் " எனத் தெரிவிப்பதுண்டு. எனினும் என்னவோ காதலைப் பற்றியே வலம் வருகிறேன்.

என்னுடைய இடுகைகளைப் பற்றிய அறிமுகம் இதோ :

என்னால் எழுதப்பட்ட முதல் கவிதை காதலைப் பற்றியதே.

காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஒன்று, இரண்டு என இப்போது மூன்று பகுதிகள் எழுதியிருக்கிறேன்.

அன்பெனும் விருந்து எப்படி இருக்கும் ஆதரவற்றவர்களின் பார்வையில் என்ற ஒரு கற்பனை.

மரத்தோடு நான் கொண்ட காதல் மண்ணியம் பேசுவோம் என்கிற இடுகையில்.

நீதிமன்றங்களின் மூலம் மணங்கள்தான் ரத்தாகிறதே தவிர மனங்கள் ரத்தாவதில்லை என உணர்த்தும் ஒரு இடுகை.

முதுமைக் காதல் முத்தானக் காதல் என நான் உணர்ந்தபோது எழுதிய இடுகை இது.

பழைமை போற்றும் ஒரு ஆண்மகனின் எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியாகிறது என எழுதியதுதான் அண்மைய இடுகை.

எனக்குப் பிடித்த சில பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தும் அடுத்த இடுகையோடு அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது