07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 24, 2012

கொஞ்சம் தமிழும், கொஞ்சும் விளக்கங்களும்...

தமிழும், இலக்கிய இலக்கணங்களும் எந்தவொரு தருணத்திலும் பிரிக்க இயலாதவை. தமிழ் இலக்கியங்களுக்காக வகுக்கப்பட்டவை இலக்கணங்கள். நாம் வழமையாக உரையாடுவது பேச்சுத் தமிழிலேயே. எது சரி எனத் தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழை ஒரு புறம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான ஆராய்ச்சியில் ஒன்று ( இந்த வம்புக்கு நான் வரலை, நீங்க ஒண்ணு அல்லது ஒன்னு என்று கூட சொல்லிக்கலாம்)  திரு. இராம.கி அவர்கள் வளவு தளத்தில் எழுதிய இடுகையான ஒண்ணா, ஒன்னா? . நாம் படித்தறிய வேண்டியதான இடுகைகளில் ஒன்று.

இரண்டாவதாய், திணை பற்றிய விளக்கத்தை முன்வைக்கிறார் திரு. அருள்மொழிவர்மன் அவர்கள். ஐந்து நிலம், ஐந்து ஒழுக்கம், ஐந்து திணைகள் இவற்றை இவரின் பார்வையில் நாம் காண்பது புரிந்து கொள்ள ஏதுவாகவே இருக்கிறது.

அடுத்ததாய் பகிரப்போவது தொல்காப்பியம் கூறும் அகத்திணை பற்றி. தலைவி, தலைவன் இவர்களை நாம் இனங்கண்டு கொள்வது எளிதே. நற்றாயையும் செவித்தாயையும் ஒன்று என்றே பலர் எண்ணிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டி, தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு என்ன என்பதை தோழி ஜோஸ்பின் புனிதா அவர்கள் தமிழ் தொகுப்புகள் தளத்தில் உணர வைத்திருக்கிறார்.


நான்காமவர், திரு. ஜடாயு அவர்கள். பள்ளிக் காலத்தில் சீவக சிந்தாமணியைப் படிக்கும்போது இவருக்குத் தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியதுண்டு. இவர் எழுதிய அமானுஷ்யமான காந்தர்வ இலக்கணம் கற்க இங்கே சொடுக்குங்கள்.

தித்திக்கும் தமிழ் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியம் கூட தித்திக்கும் தொல்காப்பியமாய்  மாறி விடுகிறது, இவரின் எழுத்துக்களில். இதனோடு சேர்த்து தொன்மைத் தன்மையையும் விளக்கியிருக்கிறார் திரு.தமிழ்மாறன். படித்துப் பார்த்தால் விழிகள் சுவையுணர்கின்றன என்றால் அது மிகையாகாது.

அடுத்த பதிவில் அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

5 comments:

 1. ஆஹா!

  இன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தே ஐநது பதிவுகள் .....

  பஞ்சாட்சரம் போல .....

  கல்க்கிட்டீங்க!

  வாழ்த்துகள்.

  இன்று முழுவதும் தங்களுக்கு இந்த வலைச்சர ஆசிரியர் பதவி உண்டு.

  எனவே இன்று மேலும் ஓரிரு முறைகள் வலைச் சரப்பக்கத்திற்கு வருகை தந்து மேலும் சில அறிமுகங்களையும் தந்து அசத்தலாம்.

  முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

  இன்று இந்தப்பதிவினில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  vgk

  ReplyDelete
 2. தொடருங்கள்., தொடர்கிறோம்.!

  ReplyDelete
 3. இனிய அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள் !

  ReplyDelete
 4. எங்களிற்குத் தெரியாத மிகச் சிறந்த அருந்தமிழ்ப் பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள் சகோதரி. எல்லாவற்றையும் சென்று பார்த்தேன். நான் மிகத் தாழ்ந்துவிட்டதாக உணர்கிறேன் .மிக மிக நன்றி. அனைவருக்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது