07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 17, 2012

விடை பெறுக மயிலன் : பொறுப்பேற்றுக் கொள்க நுண்மதி

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மருத்துவர் மயிலன், தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் கடமை உணர்வுடனும் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

பொதுவாக வலைச்சர ஆசிரியர்கள் தினந்தினம் பல பதிவர்களை அறிமுகப் படுத்துவார்கள். விதி முறைகளின் படி ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும். மரு.சி.மயிலனோ வித்தியாசமாக, ஒன்றுக்கு மேற்பட்டதென தினந்தினம் இரண்டு பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகளோ சுய அறிமுகப் ப்திவுகள் உட்பட 65. பெறப்பட்ட மறுமொழிகளோ தற்போதைய நிலவரப்படி 207.

நண்பர் மரு.சி.மயிலன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் சகோதரி நுண்மதி அவர்கள். இவர் இயற்பெயர் திருமதி ராணி கிருஷ்ணன். பொறியியலில் ECE துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தகவல் தொழில் நுட்பத் துறையில் சென்னையில் பணிபுரிகிறார். படிப்பது, எழுதுவது, கைவேலைகள் செய்வது மற்றும் பயணம் செய்வதில் ஆர்வமுடையவர்.

சகோதரி நுண்மதி அவர்களை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்றுக்கொள்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மரு.சி.மயிலன்

நல்வாழ்த்துகள் சகோதரி நுண்மதி

நட்புடன் சீனா

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் மயிலன்....

  சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் நுண்மதி.....

  ReplyDelete
 3. vaazhthukkal!

  mayilanukkum-
  nunmathikkum!

  ReplyDelete
 4. மிக்ச்சிறப்பாக ஓர் வித்யாசமான முறையில் அரும்பணியாற்றி விட்டு விடை பெற்றுச்செல்லும், வலைச்சர ஆசிரியர் திரு. மயிலன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நாளை முதல் ஒரு வாரத்திற்கு புதிய வலைச்ச்ர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ள செல்வி. நுண்ம்தி அவர்களை
  வருக! வருக!! வருக!!!
  என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  என் அன்புள்ள கெள்ரி லக்ஷ்மி,

  தங்களின் இந்தப் பணி மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  அன்புள்ள ராணி,

  தாங்கள் சாதாரண 'மதி'யுள்ளவர் அல்ல. நுண்மதி கொண்டவர் என்பது இதுவரை எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியம்.

  அதை நாளை முதல் எல்லோரும் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஓர் மிக அருமையான வாய்ப்பு இப்போது அளிக்கப்பட்டுள்ளது. அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 6. நாளை முதல் ஒரு வாரத்திற்கு புதிய வலைச்ச்ர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ள செல்வி. நுண்ம்தி அவர்களை
  வருக! வருக!! வருக!!!
  என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  என் அன்புள்ள கெள்ரி லக்ஷ்மி,

  தங்களின் இந்தப் பணி மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  அன்புள்ள ராணி,

  தாங்கள் சாதாரண 'மதி'யுள்ளவர் அல்ல. நுண்மதி கொண்டவர் என்பது இதுவரை எனக்கு மட்டுமே தெரிந்ததோர் இரகசியம்.

  அதை நாளை முதல் எல்லோரும் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஓர் மிக அருமையான வாய்ப்பு இப்போது அளிக்கப்பட்டுள்ளது. அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 7. மிக்க நன்றி ஐயா..பதிவுலக அனுபவத்தில் மறக்க முடியாத ஒரு வாரம்..

  ReplyDelete
 8. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது