07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 11, 2012

ந்தோ வந்துட்டேன்...


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

"ஆசிரியர்"... எவ்வளவு பெரிய வார்த்தை அது...?
வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணி ஏற்கிறீர்களா? என்று வந்த மின்னஞ்சல் நிச்சயம் என்னை நெகிழ செய்தது...
பெருமையுடன் ஏற்றுகொண்ட பொறுப்பை இங்கே இனிதே துவக்குகிறேன்..இதுநாள் வரை நான் அவதானித்தபடி, பதிவுலகில் பல குழுமங்கள், அணிகள் இருக்கத்தான் செய்கிறது.. அதோடு அந்தந்த குழுமம் தாண்டிய வாசிப்பு கொஞ்சம் குறைவே... எனக்கு, என் தளத்திற்கு என்று ஒரு இருபது பேர் இருக்கிறார்கள்.. நிச்சயம் நான் எந்த பதிவு (அது குப்பையே ஆயினும்) போட்டாலும் வாசித்துவிடுவார்கள்.. ஆனால் அந்த குழுமம் தாண்டிய ஒரு reach கிடைக்கும் பதிவுகளைத்தான் அதிகம் சிலாகிக்கிறேன்.. இதே நிலைமைதான் எல்லா இடத்திலும்.. நமக்கு தெரிந்த வலையுலகம் தாண்டி நாம் பயணிப்பதில்லை.. வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்கும் பலரையும்,அவர்கள் அறிமுகப்படுத்துபவர்களையும்,இங்கே பின்னூட்டம் இடுபவர்களையும் வைத்து பார்க்கும் போது இந்த குழுமத்தில் நான் அன்னியப்பட்டு நிற்கிறேன்..
எனவே முதல் வேலையாக வலைச்சர குழுமத்தில் இருக்கும் நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்...

எழுத்தார்வம் எங்கு துவங்கியது என்று சரியாக சொல்ல முடியாது.. சீனா ஐயா முன்னுரையில் சொல்லியிருந்ததுபோல பாடம் தாண்டிய தமிழை முதலில் வாசிக்க தொடங்கியது விகடனில்தான்.. விகடன்தான் பள்ளி நாட்களில் சுஜாதாவை எனக்கு காட்டிகொடுத்தது, கல்லூரி நாட்களில் தபூ சங்கரை அறிமுகம் செய்து வைத்தது, மிக சமீபத்தில் ராஜு முருகனை முன் நிறுத்தியது... இது போல ஒவ்வோர் சமயமும் என் வாசிப்புகள் அங்கிருந்துதான் விரிந்தது....சுஜாதா என்ற genius முதல் சாரு நிவேதிதா போன்ற குப்பைவரை நவீன எழுத்தாளர்களைத்தான் நிறைய வாசித்திருக்கிறேன்.. இலக்கிய வாசிப்புகள் மிக குறைவு...

தேர்ந்தெடுத்த துறையின் அழுத்தம் காரணமாய் எழுதுவதற்கான நேரம் ஒரு பெரும்பற்றாகுறைதான். காகிதங்களில் எழுதி எழுதி காணாமல் போன எழுத்துக்களை எண்ணி வருத்தப்படும் வேளைதான் பதிவுலகம் கண்ணில் பட்டது.. எழுத தொடங்கி ஒரு வருடம் கூட இன்னும் நிறையவில்லை.. அதற்குள் கிடைத்திருக்கும் இந்த ஒரு வார பொறுப்பு மகிழ்ச்சிக்கு குறைவாய் எதுவும் தந்துவிடவில்லை.

இதுவரை எழுபத்தி எட்டு பதிவுகள் எழுதியுள்ளேன்.. கழிசடைகளை நீக்கினால் ஒரு பத்து பன்னிரண்டு நல்ல பதிவுகள் எழுதிய திருப்தி இருக்கிறது...

என்னுடைய எழுத்துக்களில் எனக்கு விருப்பமான சிலவற்றை இங்கே உங்கள் வருகைக்கு சமர்ப்பிக்கிறேன்...

விருப்பமான சிறுகதை: இரவானவள்

கொஞ்சம் சின்ன சின்ன கவிதை(!) துளிகள்... தேவதை பிம்பங்கள்

விருப்பமான கட்டுரை: கவனத்திற்குரிய இரங்கற்செய்தி

எழுதிய ஒரே ஒரு சினிமா விமர்சனம் : வழக்கு எண் 18/9

ஜாலி பதிவுகளில் சில :இவற்றைக் வாசித்து பார்த்தால் எனது அலைவரிசை உங்களுக்கு கொஞ்சம் புரிந்து போகும்..


பதிவுலகம் பற்றிய ஓர் சிறு வருத்தம்..
கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் இங்கே அதிக வரவேற்பு கிடையாது.. சினிமா தாக்கம்தான் அதிகம்.. அதுவும் நேர்த்தியான சினிமா விமர்சனங்கள் எழுதும் நிறைய பதிவர்களை விட செய்தித்தாள் விளம்பர தலைப்பு போல எழுதப்படும் துணுக்கு செய்திகளுக்கு இங்கே கவர்ச்சி அதிகம்.. அது தவறு என்று சொல்லவரவில்லை.. அதை தாண்டியும் இன்னமும் நிறைய நண்பர்கள் தங்கள் வாசிப்பினை அதிகமாக்க வேண்டும் என்று விரும்புவேன்..அவ்வளவே...

தவிர, வலைச்சரத்தை நான் கவனித்து வந்துள்ளேன்.. என்னை முதன் முதலில் இங்கே "வீடு" சுரேஸ்குமார் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.. அறிமுகம் செய்த அன்று என் தளத்தில் சம்பந்தப்பட்ட இடுகையின் கீழே எனக்கான அறிவிப்பையும் கொடுத்து இருந்தார்... அப்போது அந்த குறிப்பிட்ட இடுகைக்கான வருகையாளர் எண்ணிக்கையை குறித்து வைத்துக் கொண்டேன்... எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.. பின்னாளில் இரண்டு மூன்று முறை அவ்வாறே சில நண்பர்களால் அறிமுக படுத்தப்பட்ட போதும் இதே நிலைதான்...ஆனால் இங்கே வலைச்சரத்தில், "அருமையான அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்ற டெம்ப்ளேட் கமெண்டுகள் பிரித்தெடுத்தது...சிரிப்புதான் வந்தது...

இரண்டு காரணங்கள் இருக்கலாம்... அறிமுக படுத்த பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல அறிமுகங்கள் கவனிக்க படாமல் போயிருக்கலாம்... அல்லது வெறும் டெம்ப்ளேட் கமெண்டுகள் மட்டும் போடுவது சில நண்பர்களின் பொழுதுபோக்காய் இருக்கலாம்..

எனவே இங்கே இந்த ஒரு வாரத்திற்கான இரு அறிவிப்புகளை இங்கே முன் நிறுத்துகிறேன்..

அதிக அறிமுகங்கள் செய்ய போவது இல்லை..குறைந்தது இரு அறிமுகங்களாவது ஒரு பதிவிற்கு இருக்கவேண்டும் என்று சீனா ஐயா சொல்லியிருந்தார்கள்... அந்த குறைந்த பட்சத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள போகிறேன்...எனவே இந்த வாரம் பதிமூன்று (என்னையும் சேர்த்து) அறிமுகங்கள் மட்டும்தான்...அறிமுகம் தேவையற்ற என் மனம் கவர்ந்த பிரபல பதிவர்களை ஆங்காங்கே குறிப்பிடுவேன்..அவ்வளவே..

தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது....

வலைச்சரதிற்கான நோக்கம் மிகவும் பெரியது..அதற்கு மரியாதை செய்ய வேண்டியே இந்த இரு அறிவிப்புகள்...

எழுத்தாளர்கள் காசுபணம் என்ற எல்லையைத் தாண்டி பெரிதாய் மதிப்பது அங்கீகாரத்தை மட்டுமே.. அதனை தாமாய் முன்வந்து, வாரம் ஒருவரை நியமித்து பதிவர்கள் பலருக்கு கிடைக்கசெய்யும் வலைச்சரத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

எல்லாம் வல்ல தமிழே போற்றி...!

என்றும் நன்றியுடன்.. சி.மயிலன்..


51 comments:

 1. கலக்குங்க பாஸ் வித்தியாசமான தொடக்கம்

  ReplyDelete
 2. அட,,, ஆரம்பமே நச்.... உங்களது விருப்பப்படியே துவக்குங்கள் சரத்தை..

  வாழ்த்துக்கள்.

  (இந்த பதிவை வாசித்து பார்த்து போட்ட கமென்ட்யா இது)

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர் மயிலன் வாழத்துகள் வித்தியாசமான அறிமுகம் ஆரம்பமே தலையில் குட்டி ஆரம்பித்திருக்கிறீர்கள்...
  தொடருங்கள் தொடருகிறேன்..!

  (இது என்னுடைய டெம்ளட் கமெண்ட்)

  ReplyDelete
 4. தமிழ்வாசிக்கு எவ்வளவுய்யா கமிஷன் கொடுத்த.....?

  ங்கொய்யால என்னை அறிமுகப்படுத்தினா 1000ரூபாய் கட்டணம் கம்பனிக்கு கட்டனும்....என் அக்கவுண்ட் நம்பர் மெயில் அனுப்புகிறேன்......

  ReplyDelete
 5. வாடா மச்சா வயசுக்கு வந்துட்ட....
  வா வா வா...
  வாத்துக்கள்!

  ReplyDelete
 6. வித்தியாசமா தொடங்குறீங்க!

  தொடர்கிறேன்! உங்களை!

  ReplyDelete
 7. உண்மை பேசி ஆரம்பித்திருக்கிறீர்கள் மயிலன். நானும் உண்மையாய் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்களைப் படித்து கருத்திட முயல்கிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. பதிவுலகம் பற்றிய ஓர் சிறு வருத்தம்..// இப்படி மனதில் பட்டதைச் சொல்லி ஆரம்பிக்கும் அறிமுகமே சிறப்பாய் இருக்கிறது . நேரம் இருக்கும் போது தங்கள் தளம் வருகிறேன் .

  ReplyDelete
 9. நேற்று இரவு தான் உங்களின் சில பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது., சும்மா சொல்லக்கூடாது கலக்குகிறீர்கள்.

  வலைச்சரத்திலும் ஆசிரியராக கலக்குவீர்கள் என்று நம்புகிறேன், உளம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 10. நேற்று தங்கள் வலைக்கு வந்தேன் ..டெம்பிளேட்டுக் கமெண்ட்டோ என்னவோ..ஆரம்பமே கடுபிடியாக இருக்கிறீங்க!..என்னமோ செய்யுங்க!...வந்து பார்த்து வாழ்த்தை எழுதுகிறேன். ஆசியப்பணி - அறிமுகப்பணி சிறப்படையட்டும். நல்வாழ்த்து.
  டென்மார்க் வேதா. இலங்காதிலகம்..

  ReplyDelete
 11. ஸாரே !! உங்க பதிவுக்கு நூத்துக்கணக்கிலே யாரும் வர்றதில்லையே அப்படின்னு
  நொந்து நூடுல்ஸா போயிருக்கீக... நல்லாவே தெரியுது !!

  நீங்க வருப்படாதீக.. எல்லாருக்குமே ஒரு வட்டம் கீது. அந்த வட்டத்துக்குள்ளே தான்
  நம்ம எல்லாருமே சுத்தறோம் .. இல்லயா !!

  ஒரு விசயம். எழுதறது எல்லாமே நம்ம மனசு திருப்திக்காகத் தான். மனசுலே தோண்ரதை
  எல்லாம் எங்கனாச்சும் சொல்லணும். அத சொல்லிப்பிட்டோம் என்ற ஒரு நிம்மதிய‌
  இந்த வலை உலகம் தருது.

  எழுதினவங்க எல்லாமே , நம்ம எழுதினது எல்லாத்தையும் இத்தனை பேரு படிப்பாங்க அப்படின்னு
  நினைச்சு எழுதினாங்களா என்ன?

  நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஒற்ற பதிற்றுப்பத்து,ஓங்கு பரிபாடல் இவற்ற எல்லாம்
  எழுதினவங்க எல்லாம் இத்தனை பேர் வருவாங்க படிப்பாங்க அப்படின்னு நினைச்சாங்க... இல்லயே !!

  அவக எல்லாம் இருக்கட்டும்.திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் இவத்தை எல்லாம்
  முழுசா படிச்சவங்க எத்தன பேரு இருக்காக !!

  ஸோ கவலைய் விடுங்க.
  எழுதறத மட்டும் விட்டுடா தீக.

  அந்தக்காலத்துலே துளசிதாசரைக்கேட்டாகளாம்... ஏன்யா... இவ்வளவு பெரிசா ஒன்னு எழுதிக்கினே போறே !!
  யாரு படிப்பாக அப்படின்னு..

  அவரு சொன்னாராம்:

  என் மன நிம்மதிக்காக, என் மன நிறைவுக்காக அப்படின்னு.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 12. ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 13. சாரு நிவேதிதா என்ற குப்பை வரை? வன்மையாக கண்டிக்கிறேன் எனினும் உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்!

  ReplyDelete
 14. எல் கே said...
  //வாழ்த்துகள்//

  நன்றி எல் கே

  ReplyDelete
 15. //PREM.S said...
  கலக்குங்க பாஸ் வித்தியாசமான தொடக்கம்//

  நான் சொல்லியிருந்த ஏன் குழுமத்திலிருந்து ஒருவர்...:)

  வருகைக்கு நன்றி பிரேம்.. தொடர்ந்து வாருங்கள்...

  ReplyDelete
 16. தமிழ்வாசி பிரகாஷ் said...
  //அட,,, ஆரம்பமே நச்.... உங்களது விருப்பப்படியே துவக்குங்கள் சரத்தை..
  வாழ்த்துக்கள்.//

  நன்றி நண்பரே... :)

  //(இந்த பதிவை வாசித்து பார்த்து போட்ட கமென்ட்யா இது)//

  உங்களை நான் அறிவேன்... படிக்காமல் நீங்கள் கமென்ட் போடுவதில்லை..இதுவரை ஏன் தளத்தில் நீங்கள் ஒரு கருத்துதான் போட்டிருக்கிறீர்கள்.. ஹி ஹி.. அந்த நேர்மை சூப்பர்...

  ReplyDelete
 17. வீடு சுரேஸ்குமார் said...
  //வணக்கம் நண்பர் மயிலன் வாழத்துகள் வித்தியாசமான அறிமுகம் ஆரம்பமே தலையில் குட்டி ஆரம்பித்திருக்கிறீர்கள்...
  தொடருங்கள் தொடருகிறேன்..!
  (இது என்னுடைய டெம்ளட் கமெண்ட்)//

  அதானே பாத்தேன்... இந்த பயபுள்ள நல்லவனாயிடுச்சோன்னு... :)


  //தமிழ்வாசிக்கு எவ்வளவுய்யா கமிஷன் கொடுத்த.....?//

  ஹஹாஹா... அன்பாலே சேந்த கூட்டம்...  //ங்கொய்யால என்னை அறிமுகப்படுத்தினா 1000ரூபாய் கட்டணம் கம்பனிக்கு கட்டனும்....என் அக்கவுண்ட் நம்பர் மெயில் அனுப்புகிறேன்......//

  லிஸ்ட்லேந்து உங்கள தூக்கிட்டேன்.. தகவலுக்கு நன்றி...:)

  ReplyDelete
 18. வெளங்காதவன்™ said...
  //வாடா மச்சா வயசுக்கு வந்துட்ட....
  வா வா வா...
  வாத்துக்கள்!//

  வாத்தா? புரிஞ்சுபோச்சுய்யா... புரிஞ்சுபோச்சு...:)

  ReplyDelete
 19. Seeni said...
  //வித்தியாசமா தொடங்குறீங்க!
  தொடர்கிறேன்! உங்களை!//

  நன்றி சீனி..

  by the way, நீங்க மணிரத்தினம் fan ஆ? :)

  ReplyDelete
 20. குழுமங்கள், அணிகள் என்ற எல்லைகளைத் தாண்டிய அறிமுகங்கள்
  என நீங்கள் ஆரம்பித்தது மிகவும் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 21. பா.கணேஷ் said...
  //உண்மை பேசி ஆரம்பித்திருக்கிறீர்கள் மயிலன். நானும் உண்மையாய் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்களைப் படித்து கருத்திட முயல்கிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  நன்றி தலைவரே...
  நிச்சயம் உங்களின் நம்பிக்கை வீணாகாது... அட்டகாசமான பதிவர்களை அணிவகுத்து வைத்துள்ளேன்.. தயாராய் இருங்கள்...:)

  ReplyDelete
 22. Sasi Kala said...
  //பதிவுலகம் பற்றிய ஓர் சிறு வருத்தம்..// இப்படி மனதில் பட்டதைச் சொல்லி ஆரம்பிக்கும் அறிமுகமே சிறப்பாய் இருக்கிறது . நேரம் இருக்கும் போது தங்கள் தளம் வருகிறேன் .//

  நன்றி சசிகலா...

  நிச்சயம் வாருங்கள்..

  ReplyDelete
 23. வரலாற்று சுவடுகள் said...
  //நேற்று இரவு தான் உங்களின் சில பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது., சும்மா சொல்லக்கூடாது கலக்குகிறீர்கள்.//

  நெசமாத்தான் சொல்றீங்களா? :))

  //வலைச்சரத்திலும் ஆசிரியராக கலக்குவீர்கள் என்று நம்புகிறேன், உளம் கனிந்த வாழ்த்துக்கள் //

  மிக்க நன்றி நண்பா..

  ReplyDelete
 24. kovaikkavi said...
  //நேற்று தங்கள் வலைக்கு வந்தேன் ..டெம்பிளேட்டுக் கமெண்ட்டோ என்னவோ..ஆரம்பமே கடுபிடியாக இருக்கிறீங்க!..என்னமோ செய்யுங்க!.//

  கெடுபிடி என்றெல்லாம் இல்லை தோழர்.. போலி பாசாங்கு வேணாம் என்பதைத்தான் சொல்கிறேன்...  //வந்து பார்த்து வாழ்த்தை எழுதுகிறேன். ஆசியப்பணி - அறிமுகப்பணி சிறப்படையட்டும். நல்வாழ்த்து//


  மிக்க நன்றி....டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. sury said...
  //ஸாரே !! உங்க பதிவுக்கு நூத்துக்கணக்கிலே யாரும் வர்றதில்லையே அப்படின்னு
  நொந்து நூடுல்ஸா போயிருக்கீக... நல்லாவே தெரியுது !! //

  அப்படி நான் எதுவும் சொல்லலையே சாரே... அறிமுகங்கள் என்று இவ்விடம் காட்டப்படும் எத்தனை பேருக்கு அது உண்மையிலேயே ஒரு அறிமுகமாய் இருக்கிறது என்றுதான் ஐயம் எழுப்பி உள்ளேன்.. இந்த புள்ளியிலேயே நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு கமென்ட் போட்டிருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்..

  //நீங்க வருப்படாதீக.. எல்லாருக்குமே ஒரு வட்டம் கீது. அந்த வட்டத்துக்குள்ளே தான்
  நம்ம எல்லாருமே சுத்தறோம் .. இல்லயா !! //

  அதைதான் நானும் சொல்றேன்.. வலைச்சர வட்டத்திற்கு எனக்கு தெரிந்த ஒரு வட்டத்தில் இருந்து சில அறிமுகங்கள் செய்யபோகிறேன்...

  //ஒரு விசயம். எழுதறது எல்லாமே நம்ம மனசு திருப்திக்காகத் தான். மனசுலே தோண்ரதை
  எல்லாம் எங்கனாச்சும் சொல்லணும். அத சொல்லிப்பிட்டோம் என்ற ஒரு நிம்மதிய‌
  இந்த வலை உலகம் தருது.//

  இந்த பதிவும் அதே திருப்தியதான் எனக்கு தருது...:)

  //எழுதினவங்க எல்லாமே , நம்ம எழுதினது எல்லாத்தையும் இத்தனை பேரு படிப்பாங்க அப்படின்னு
  நினைச்சு எழுதினாங்களா என்ன? //

  எல்லாருமே என்று எதையும் ஒருமை படுத்த முடியாது.. அங்கீகாரம் எதிர்பார்பவர்கள் நிச்சயம் ஏராளம்.. இல்லேயேல் நான் ஒரு டைரியில் எல்லாத்தையும் எழுதிட்டு இருக்கலாமே.. எதுக்கு ப்ளாகர்...? எதுக்கு திரட்டிகள்..? எதுக்கு வலைச்சரம்? எல்லா பதிவர்களுக்கும் ஆரம்ப காலத்தில் ஒரு தேக்க நிலை இருக்கும்... அதை அவர்களது ஐம்பதாவது அல்லது நூறாவது பதிவில் புலம்பியிருப்பதை பார்க்கலாம்.. எனக்கும் அது இருந்தது..

  //நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஒற்ற பதிற்றுப்பத்து,ஓங்கு பரிபாடல் இவற்ற எல்லாம்
  எழுதினவங்க எல்லாம் இத்தனை பேர் வருவாங்க படிப்பாங்க அப்படின்னு நினைச்சாங்க... இல்லயே !!
  அவக எல்லாம் இருக்கட்டும்.திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் இவத்தை எல்லாம்
  முழுசா படிச்சவங்க எத்தன பேரு இருக்காக !!//

  அவுங்கள பத்திலாம் எனக்கு தெரியல.. ஆனா சாருவின் "எக்ஸைல்" படித்திருந்தீர்கள் என்றால் அங்கீகாரம் கிடைக்காத இந்த கால எழுத்தாளன் எப்படி புலம்புவான் என்று புரியும்... யாரு கண்டா? சுஜாதாவை மக்கள் ஏற்காமல் இருந்திருந்தால் தலைவரும் புலம்பி இருப்பாராய் இருக்கும்...

  //ஸோ கவலைய் விடுங்க.
  எழுதறத மட்டும் விட்டுடா தீக. //

  கவலையோடவே எழுதிட்டு போறேனே...:)
  .

  நன்றி சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 26. எஸ்தர் சபி said...
  //ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா...//

  நன்றி எஸ்தர்..

  தொடர்ந்து வா...

  ReplyDelete
 27. முன்பனிக்காலம் said...
  //சாரு நிவேதிதா என்ற குப்பை வரை? வன்மையாக கண்டிக்கிறேன் //

  \\சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’,’கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்’ என்று இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா ஃபிக்ஷன் என்கிறார்கள்) எல்லைமீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா எல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது.\\

  இது கணையாழியில் தலைவர் சொன்னது... உடனே கேட்கலாம்... 'சுஜாதா நாவல்களிலோ, சிறுகதைகளிலோ " பீ, மூத்திரம், தேவடியாள், கரமைதுனம்..." போன்ற வாரத்தை பிரயோகங்கள் இல்லையா?' என்று.. நிச்சயம் இருக்கும்.. கதையில் அவைகள் இருக்கும்.. ஆனால் சாருவின் எழுத்துக்களில் கதையே அதுதான்.. வம்படியாக திணிக்கப்பட்டிருக்கும்.. "zero degree" மற்றும் "excile" நாவல்களை விவாதிக்க ஒரு பதிவு எழுதினேன்.. எழுதி முடித்து வாசித்து பார்க்கும் போது பிளஸ் என்று எதையும் நான் குறிப்பிட்டிருக்கவில்லை... இன்னும் அந்த பதிவு draftல் தான் உள்ளது.. ப்ளாகரில் trash வசதி இல்லாததால்..

  //எனினும் உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்!//

  நல்லது... சாருவின் கருத்து சுதந்திரத்தை நானும் மதிக்கிறேன்.. அடுத்த நாவல் வந்தாலும் வாசிப்பேன்.. :)

  ReplyDelete
 28. Muruganandan M.K. said...
  //குழுமங்கள், அணிகள் என்ற எல்லைகளைத் தாண்டிய அறிமுகங்கள்
  என நீங்கள் ஆரம்பித்தது மிகவும் பிடித்திருக்கிறது.//

  நிச்சயம் சிறப்பான அறிமுகங்கள் காத்திருக்கின்றன ஐயா... வாரம் முழுதும் வாருங்கள்.. மிக்க நன்றி..

  ReplyDelete
 29. ..//அப்படி நான் எதுவும் சொல்லலையே சாரே... அறிமுகங்கள் என்று இவ்விடம் காட்டப்படும் எத்தனை பேருக்கு அது உண்மையிலேயே ஒரு அறிமுகமாய் இருக்கிறது என்றுதான் ஐயம் எழுப்பி உள்ளேன்.. //

  நீங்கள் சொல்வது சரியே. நான் தான் சரியாகப் படிக்கவில்லை.

  அது இருக்கட்டும்.
  உண்மையான எழுத்தாளன் ஒருவன் சமூக, பொருளாதார அங்கீகாரம் இல்லை என்று
  எழுதாமல் இருக்க இயலுமா?

  பாட்டுக்கொருவன் பாரதி கூட அவன் வாழ் நாட்களில் அவனுக்குரிய அங்கீகாரம்
  பெற்றதாகத்தோன்றவில்லையே !!

  இன்னொருமுறை அது இருக்கட்டும்.

  உங்கள் வள்ளுவமும் ஜொள்ளுவமும்.
  உண்மையிலேயே ரசித்தேன்.
  வாழ்க்கையிலே வெற்றியடைந்தவர் யாவருமே
  வித்தியாசமாகச் செய்ததில்லை.
  வித்தியாசமாக எண்ணினார்கள் முதற்கட்டத்தில்.

  திங்கிங்க் டிஃபரன்ட்லி இஸ் க்ரியேடிவிடி.
  கீப் இட் அப்.

  இட் என்று சொல்வது க்ரியேடிவிடி ஐ.
  ஆல் த பெஸ்ட்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 30. வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலைப்பூவிற்கு வரத்தான் செய்கிறார்கள். அறிமுகங்கள் அதிகமாக இருக்கும்போது அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். எனவே பொத்தாம்பொதுவாக வாழ்த்துக்கள் என்று கமெண்ட் போடுகிறார்கள். ஆனால் ஒரு அறிமுகத்தையாவது கண்டிப்பாக வாசித்துப்பார்ப்பார்கள். இது என்னுடைய கருத்து. கண்டிப்பாக உங்கள் அறிமுகங்களை வாசித்துப்பார்த்தே கமெண்ட் போடுகிறோம்.

  ReplyDelete
 31. “கடைசியில் உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாய்ங்களே!!!” என்றிட நேர்ந்திடுமோன்னு அஞ்சினேன்..!!! ஆனால், நீங்க உங்களுக்கே உரிய அக்மார்க் but நேர்மையான லொள்ளுடன் ஆரம்பித்துள்ளீர்கள்..!! அசத்துங்கோ…!

  வாசித்தால் மட்டுமே கமெண்ட் போட வேண்டும், அம்புடுதானே..! இன்னைக்கு நீங்க அறிமுகப்படுத்திய ‘பிரபல பதிவரை’ யாம் நன்றாக அறிவோம்..! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும்…!! என்சாய் பிரண்ட்ஸ்..!

  ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுடீக.. மீதி பன்னிரெண்டு பேரையும் (நேரம் கிடைக்கும்போது) நிறுத்தி நிதானமா கவனிச்சிட வேண்டுயதான்..!!! :)

  ReplyDelete
 32. வித்தியாசமான நல்ல ஆரம்பம். உங்கள் அறிமுகங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ( இப்படி கமெண்ட் பண்ணவும் யோசிக்க வேண்டியிருக்கு. இதுவும் ஒருவகை டெம்ப்ளேட் தான். )

  கவிதைகளில் எனக்கு புரிதல், ஆர்வம் குறைவு. உங்கள் சிறுகதைகள் சில வாசித்திருக்கிறேன். கமெண்டிட்டது குறைவு என்று நினைக்கிறேன்.

  இவ்வளவு நாள் வாசித்தாலும் வலைச்சரத்தில் அதிகம் கமெண்ட் போடாததற்கு காரணமும் அநாவசியமாக ஏன் டெம்ப்ளேட் கமெண்ட் போடவேண்டும் என்பதே.

  //தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... //

  ஓகே ... டன்.

  ReplyDelete
 33. sury said...

  //திங்கிங்க் டிஃபரன்ட்லி இஸ் க்ரியேடிவிடி.
  கீப் இட் அப்.

  இட் என்று சொல்வது க்ரியேடிவிடி ஐ.
  ஆல் த பெஸ்ட்.//

  நன்றி சுப்பு தாத்தா.

  ReplyDelete
 34. விச்சு said...
  //வலைச்சரம் அறிமுகம் மூலம் பலர் வலைப்பூவிற்கு வரத்தான் செய்கிறார்கள்.//

  நிச்சயம் ஒப்புக்கொள்ளாமல் இல்லை.. நானே பலரை இங்குதான் அறிந்தேன்...

  //அறிமுகங்கள் அதிகமாக இருக்கும்போது அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். எனவே பொத்தாம்பொதுவாக வாழ்த்துக்கள் என்று கமெண்ட் போடுகிறார்கள். //

  அதைத் தவிர்க்கத்தான் நான் இந்த இரு அறிவிப்புகளை முன் வைத்தேன்...

  ReplyDelete
 35. திவ்யா @ தேன்மொழி said...
  //“கடைசியில் உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாய்ங்களே!!!” என்றிட நேர்ந்திடுமோன்னு அஞ்சினேன்..!!! ஆனால், நீங்க உங்களுக்கே உரிய அக்மார்க் but நேர்மையான லொள்ளுடன் ஆரம்பித்துள்ளீர்கள்..!! அசத்துங்கோ…! //

  ஹஹா...நன்றி திவ்யா...

  //ஏதோ பயபுள்ள ஆசப்பட்டுடீக.. மீதி பன்னிரெண்டு பேரையும் (நேரம் கிடைக்கும்போது) நிறுத்தி நிதானமா கவனிச்சிட வேண்டுயதான்..!!! :)//

  அது சரி...:)

  ReplyDelete
 36. ஹாலிவுட்ரசிகன் said...
  //வித்தியாசமான நல்ல ஆரம்பம். உங்கள் அறிமுகங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ( இப்படி கமெண்ட் பண்ணவும் யோசிக்க வேண்டியிருக்கு. இதுவும் ஒருவகை டெம்ப்ளேட் தான். )//

  :) நன்றி நண்பா...

  //கவிதைகளில் எனக்கு புரிதல், ஆர்வம் குறைவு. உங்கள் சிறுகதைகள் சில வாசித்திருக்கிறேன். கமெண்டிட்டது குறைவு என்று நினைக்கிறேன்.//

  நினைவிருக்கிறது.. சிறுகதைகளுக்கு மட்டும் கமென்ட் எழுதினீர்கள்...

  //இவ்வளவு நாள் வாசித்தாலும் வலைச்சரத்தில் அதிகம் கமெண்ட் போடாததற்கு காரணமும் அநாவசியமாக ஏன் டெம்ப்ளேட் கமெண்ட் போடவேண்டும் என்பதே.//

  இது இதத்தான் நான் எதிர்பாக்குறேன்... சூப்பர்...

  ReplyDelete
 37. முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  கண்டிப்பாக உங்கள் அறிமுகங்களை வாசித்துப்பார்த்தே கமெண்ட் போடுகிறேன் ! நன்றி !

  ReplyDelete
 38. /தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது..../

  சபாஷ். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

  /வலைச்சரதிற்கான நோக்கம் மிகவும் பெரியது..அதற்கு மரியாதை செய்ய வேண்டியே இந்த இரு அறிவிப்புகள்.

  எழுத்தாளர்கள் காசுபணம் என்ற எல்லையைத் தாண்டி பெரிதாய் மதிப்பது அங்கீகாரத்தை மட்டுமே./.


  அழகான அறிபூர்வமான அறிவிப்பு. ;)

  தங்களின் இந்த அறிவிப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 39. ///தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது....///

  நிதர்சன நெத்தியடி..

  டாக்டர் முதல் பால்லயே சிக்ஸ்ரா...கலக்குங்க...நிச்சயமாய் முழுதும் படித்துப்பார்த்து தொடர்கிறேன்

  ReplyDelete
 40. அன்பின் மயிலன் - சுய அறிமுகப் பதிவுகள் அத்தனையும் அருமை. சென்று படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழி இட்ட பிறகு இங்கு எழுதுகிறேன்.

  சரி நான் எங்கே கூறினேன். . குறைந்த பட்சம் இரு அறிமுகங்களாவது ஒவ்வொரு பதிவினிலும் இருக்க வேண்டுமென்று.

  அதற்காக பதிவிற்கு இரண்டு அறிமுகங்கள் தான் செய்வேன் என அடம் பிடிப்பது நன்றா மயிலன் ?

  பொதுவாக அதிக அறிமுகங்கள் செய்யும் போது - தளத்திற்கு வருகை தரும் பதிவர்கள் அத்தனையையும் படிக்க இயலாது. பலர் பல பதிவுகளை முன்னரே படித்திருக்கலாம். இன்னும் சிலர் அப்பதிவுகளை எழுதிய பதிவர்களீன் மற்ற பதிவுகளைப் படித்திருக்கலாம். அப்பதிவர்களைப் பற்றி ஒரு சிந்தனை மனதில் வைத்திருக்கலாம். இவர்கள் எல்லாம் அங்கு சென்று படிக்காமலேயே இங்கு மறு மொழிகள் இடலாம். அதனை டெம்ப்ளேட் எனப் புறந் தள்ள வேண்டாம் மயிலன்.

  அது மட்டுமல்ல - பல நாட்களுக்குப் பிறகு கூட நேரம் கிடைக்கையில் அப்பதிவுகளைப் படிக்கும் மறுமொழி இடும் பதிவர்களும் உண்டு.

  ஆகவே வழக்கத்திற்கு மாறாக - அறிமுகங்களை பதிவிற்கு இரண்டு எனபதனை மறந்து - அதிக அறிமுகங்களைத் தருக என அன்புடன் கூறுகிறேன்.

  பொதுவாகப் பார்த்தால் முழுவதும் படித்து இரசித்து மகிழ்ந்து - மறுமொழி மட்டும் ஒரிரு வரிகளீல் டெம்ப்ளேடாக எழுதும் பல பதிவர்களும் இருக்கிறார்கள்.

  ஆகவே மறுமொழிகளை வைத்து எவ்வித முடிவிற்கும் வர வேண்டாம் மயிலன்.

  இறுதியாக - வெட்டி பிளாக்கர் குழும நண்பர்கள் அனைவரையும் அன்புடன் இந்த வாரம் முழுவதும் வலைச்சரப் பதிவுகளைப் படிக்க அழைத்தீர்களே ! நட்பின் காரணமாக அவர்களும் வந்து நட்பின் அடிப்படையில் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடக் கூடிய வாய்ப்பும் உண்டு என்பதனை மறந்து விட்டீர்களா மயிலன்.

  பரவாய் இல்லை. இது வரை அனைவரும் சென்ற வழியில் சென்று - பல நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்துக என அன்புடன் வேண்டுகிறேன்.

  நல்வாழ்த்துகள் மயிலன்
  நட்புடன் சீனா.

  ReplyDelete
 41. அன்பின் தமிழ் வாசி - வலைச்சரக் குழுவில் இருந்து கொண்டு - மயிலனின் முடிவினைப் பாராட்டி - தொடர்க என அனுமதி அளித்தது வருத்தத்தினை அளீக்கிறது. மறு மொழிகள் இடும் போது கவனம் தேவை. நட்புடன் சீனா

  ReplyDelete
 42. அன்பிற்குரிய சீனா ஐயா...

  தாங்கள் அனுப்பியிருந்த வலைச்சர விதிமுறைகளில் அப்படி உள்ளமையால்தான் நான் அதனை குறிப்பிட்டு இருந்தேன்...

  //அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும். //

  ஒன்றுக்கும் மேற்பட்ட என்று தாங்கள் சொல்லவில்லை எனில் சில பதிவுகளில் ஒருவரை மட்டும் அறிமுகம் செய்திருப்பேன்.. தங்களின் சொல்லை மனதில் கொண்டே பதிவிற்கு இருவர் என்று எனக்கு நானே வரையறை வைத்துக் கொண்டேன்... என்னுடைய சிறு வயது குணமாக கூட இது இருக்கலாம்.. அடம்.. :)

  மற்றபடி என் நோக்கம் இதுதான்.. நான் பத்து பேரை அறிமுக படுத்தி இருந்தாலும் அது அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று தரும் அறிமுகமாக இருக்க வேண்டும்.. நிச்சயம் என் பாணியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஐயா.. மற்றபடி நான் விதிமுறை மீறல் ஏதும் செய்தால், அருள் கூர்ந்து அதனைக் குறிப்பிடுங்கள்..நிச்சயம் மாற்றி கொள்கிறேன்...

  நன்றியுடன் மயிலன்...

  ReplyDelete
 43. cheena (சீனா) said...

  அன்பின் தமிழ் வாசி - வலைச்சரக் குழுவில் இருந்து கொண்டு - மயிலனின் முடிவினைப் பாராட்டி - தொடர்க என அனுமதி அளித்தது வருத்தத்தினை அளீக்கிறது. மறு மொழிகள் இடும் போது கவனம் தேவை. நட்புடன் சீனா///

  தங்கள் அறிவுரைக்கு நன்றி.
  இந்த இடுகையில் வாசகனாக மறுமொழி இட்டு விட்டேன்.

  ReplyDelete
 44. இனி குழு உறுப்பினர் என்ற முறையில் கவனமாக மறுமொழி இடுகிறேன். நன்றி

  ReplyDelete
 45. ///எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.. பின்னாளில் இரண்டு மூன்று முறை அவ்வாறே சில நண்பர்களால் அறிமுக படுத்தப்பட்ட போதும் இதே நிலைதான்.../////

  வாசகர்கள் தமக்கு வேண்டியதாக, பிடித்தமானதாக இருந்தால் எங்கிருந்தாலும் தேடி வந்து படிப்பார்கள். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. நம்மில் சினிமா விரும்பிகள் அதிகம் இருப்பதாலேயே சினிமா பதிவுகள் அதிகம் பேரால் படிக்கப்படுகின்றன. அத்தகைய பதிவுகளில் கவர்ச்சிப்படங்கள் இருப்பதும் ஒரு காரணம். தவிர இவற்றை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று எதுவும் இல்லை.

  எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு சிக்கலான தொழில்நுட்பத்தை பற்றி எழுதினீர்கள் என்றால் அதில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும். எத்தனை பேருக்கு அதை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கும்? இந்த மாதிரி பதிவை அது சம்பந்தமானவர்களே அதிகம் விரும்பி படிப்பார்கள். படிக்க முடியும். அவர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது தெரியும்தானே?

  எனவே எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற அளவுகோளை வைத்து வேறு வேறுவகை கட்டுரைகளை, பதிவுகளை அளவிட முடியாது. ஒரு தொழில்நுட்ப பதிவை 200 பேர் படிப்பதும், சினிமா பதிவை 1500 பேர் படிப்பதும் இயல்பான ஒன்று. இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 46. /// இங்கே வலைச்சரத்தில், "அருமையான அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்ற டெம்ப்ளேட் கமெண்டுகள் பிரித்தெடுத்தது...சிரிப்புதான் வந்தது...////

  வலைச்சரத்தில் மட்டுமல்ல, பதிவுலகம் முழுதும் இத்தகைய டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பெரும்பாலானவை தம் வருகையை பதிவு செய்யும் நோக்கத்துடன் இடப்படுபவை. தமிழ்மணத்தில் எத்தனாவது ஓட்டு, இண்ட்லியில் எத்தனாவது ஓட்டு என்றெல்லாம் பின்னூட்டம் இடுபவர்களும் இருக்கிறார்கள்.

  அதிரடியாய் வலைச்சரத்தில் உங்கள் வாரத்தை துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் மயிலன் ...

  பன்னிக்குட்டி அண்ணே சொன்னது பல ஹிட்ஸ்களை வைத்து எழுத்தை எடை போட முடியாது தான். ஆனால் நன்றாக எழுதித்தானே இருக்கிறோம், ஏன் வாசிக்கிறார்கள் இல்லை என்ற ஆதங்கம் இயல்பானது என்று நினைக்கிறேன்.

  உங்கள் வள்ளுவர் vs ஜொள்ளுவர் பதிவு ஆச்சர்யப்படுத்த வைத்தது. அந்த பாணியில் வெண்பா கூட நீங்கள் ட்ரை பண்ணலாம் .. கலக்கும் ..

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே..
  உங்களோட முதலாம் கருத்தோட நான் முழுதும் ஒத்து போகிறேன்.. நான் சொல்வது எண்ணிக்கை அதிகமானதால் ஏற்படும் சிக்கலை..

  அப்புறம் நீங்க சொன்னது மாதிரி... டெம்ப்ளேட் கமென்ட் கூட தாங்கிக்கலாம்.. இந்த ஓட்டு கமென்ட்... முடிய்யல...

  ReplyDelete
 49. நன்றி..
  கோபாலகிருஷ்ணன் ஐயா..
  நண்பர் சம்பத்குமார்
  திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 50. ஜேகே said...
  //உங்கள் வள்ளுவர் vs ஜொள்ளுவர் பதிவு ஆச்சர்யப்படுத்த வைத்தது. அந்த பாணியில் வெண்பா கூட நீங்கள் ட்ரை பண்ணலாம் .. கலக்கும் ..//
  அதையே தொடரவேண்டும் என்று நினைத்தேன்.. அதவிட பெட்டரா பண்ணனும்ங்குற நெனப்புலயே அது நின்னுபோச்சு.. தொடர முயற்சிக்கிறேன்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது