07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 21, 2012

அறிவோம் அமானுஷ்யம்...

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்...
சில விடயங்கள் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்தாலும் கூட, ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கும். இவை மனித அறிவுக்கோ, அல்லது விஞ்ஞானத்துக்கோ எட்டாதவை. தோண்டத் தோண்ட அதிசயக் கிணறுபோல் அகன்று கொண்டே செல்பவை. இந்த மாதிரி விடயங்களுக்குப் பொதுவாக காரணம் எதுவும் இருப்பதில்லை அல்லது அந்தக் காரணம் நமக்குப் புலப்படுவதில்லை. அமானுஷ்யங்கள் பற்றிய அனுமானங்கள் தான் உலவுகின்றனவே தவிர ஆதாரங்கள் மிகக்குறைவு.
அவ்வாறான அமானுஷ்யம் பற்றிய இரண்டு பதிவுகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ளக் கொணர்ந்திருக்கிறேன்.
முதலாவதாய் திரு. என்.கணேசன் அவர்கள். பகுத்தறிவுக்கு எட்டாத, தான் படித்த அல்லது தெரிந்து கொண்ட விடயங்களை அதிசயம் ஆனால் உண்மை! என்ற இடுகையில் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். சுவாரசியமான அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் பதிவு இது.
அடுத்ததாய் , திரு. ரமணன் அவர்களின் வலைத்தளத்தில் கண்டெடுத்த பூனை. இதுவொன்றும் சாதாரணப் பூனை அல்ல. அமானுஷ்யப் பூனை. ஒரு பூனைக்கு இருக்கும் அசாத்தியமான திறமையைப் பற்றிய பதிவு இது. இதுவும் ஆதாரங்களைக் கொண்டு திரட்டப்பட்ட பதிவே.
அடுத்த சில பதிவர்களுடன் அடுத்த முறை சந்திக்கிறேன்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

16 comments:

 1. இருவருமே பல வருடங்களாகவே எழுதிக்கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறதே?

  வாழ்த்துக்கள் அவர்களுக்கும், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரான உங்களுக்கும்.!

  ReplyDelete
 2. மிகவும் குறைவான அறிமுகங்கள் ஆனாலும் மனதுக்கு நிறைவானவை.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அமானுஸ்யம் அருமை.......

  ReplyDelete
 4. ஆச்சரியமூட்டும் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. இருவரும் எனக்குப் புதிய பதிவுகள் சகோதரி. பதிவர்களிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. நன்றி.

  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. என்.கணேசன் ஏற்கனவே எனக்கு பரிச்சயமானவர். ரமணனின் பதிவும் அருமையானது.

  ReplyDelete
 7. \\இரண்டாவது அறிமுகம் புதியவர் ! அவர் தளம் சென்று பார்க்கிறேன் ! நன்றி சகோதரி !

  முதல் லிங்கில் http://enganeshan.blogspot.in/2012/03/blog-post_26.ஹ்த்மல் என்று உள்ளதை http://enganeshan.blogspot.in/2012/03/blog-post_26.html என்று திருத்தவும். நன்றி !\\

  நன்றி சகோதரரே. இணைப்பினை மாற்றியாகி விட்டது.

  ReplyDelete
 8. \\இருவருமே பல வருடங்களாகவே எழுதிக்கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறதே?

  வாழ்த்துக்கள் அவர்களுக்கும், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரான உங்களுக்கும்.!\\

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 9. \\மிகவும் குறைவான அறிமுகங்கள் ஆனாலும் மனதுக்கு நிறைவானவை.

  பாராட்டுக்கள்.\\

  நன்றி ஐயா.

  ReplyDelete
 10. \\அமானுஸ்யம் அருமை.......\\

  நன்றி தோழி...

  ReplyDelete
 11. \\ஆச்சரியமூட்டும் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..\\

  நன்றி தோழி. எனக்கும் இந்த மாதிரியான அமானுஷ்யங்களில் ஆர்வம் அதிகம்.

  ReplyDelete
 12. \\முதல் அறிமுகம் ஏற்கனவே விகடன் தளத்தில் எழுதி பிரபலமானவர் ...இரண்டாவது அறிமுகம் படிக்கிறேன்...அப்புறம் ஒரே ஒரு கேள்வி ..வலைச்சரத்தில் ஏன் ஏற்கனவே பிரபலமானவர்களை அறிமுக படுத்தவேண்டும் ??வலைச்சரம் படிக்கும் நண்பர்கள் அவர்களையும் தெரிந்து வைத்து இருப்பார்கள் தானே ?\\

  பிரபலமானவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை விடவும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்று எண்ணித்தான் அவர்களை அறிமுகம் செய்தேன். பிரபலமானவர்களின் பதிவு நல்ல பதிவாக இருந்தால் அதைப் பகிர்வதில் தவறொன்றும் இல்லையே நண்பரே. நன்றி.

  ReplyDelete
 13. \\இருவரும் எனக்குப் புதிய பதிவுகள் சகோதரி. பதிவர்களிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. நன்றி.

  வேதா.இலங்காதிலகம்.\\

  நன்றி தோழி.

  ReplyDelete
 14. \\என்.கணேசன் ஏற்கனவே எனக்கு பரிச்சயமானவர். ரமணனின் பதிவும் அருமையானது.\\

  நன்றி நண்பரே.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது