07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts
Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts

Sunday, July 15, 2012

இன்றே கடைசி..!


எச்சரிக்கை: இது ஒரு சிரிப்பு பதிவு..., சிரிக்காதவர்களுக்கு திகார் ஜெயில் காத்திருக்கிறது..!
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் “ஊக்கு விற்ப்பவனும் ஊக்கமடைவான்-ன்னு பெரியவர்கள் சொல்லியிருக்காங்க (யார் அந்த பெரியவர்ன்னு கேளுங்களேன்., அட கேளுங்களேன்..., அது வேற யாருமில்லை ஹி ஹி ஹி நான் தான்).! அதில் எத்தனை உண்மை அடங்கியிருக்கிறது என்பது வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றிய இந்த வாரம் எனக்கு உணர்த்தியது.! என்னை பொருத்தவரை வலைச்சரத்தில் நம் பதிவுகள்.. அறிமுக படுத்தப்படுவதே ஒரு நல்ல அங்கீகாரம் தான் என்பேன்.! இதில் வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றால் அது கிட்டத்தட்ட ஒரு நாட்டின் அரசனாக முடிசூட்டிக்கொள்வதை போன்றது!

அந்த வகையில் நாலு பேர் அறிந்த என்னை... நானூறு பேர் அறியச்செய்த வலைச்சர நிர்வாகிகளுக்கு.., என் இதயம் நிறைந்த நன்றிகளை இப்பதிவின் மூலமாக உரித்தாக்குகிறேன்! என்னை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்ற்கும், என்னை நம்பி இந்த பொறுப்பினை ஒப்படைக்கத் துணிந்த ஐயா சீனா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.!

வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றியவர்களது ஒவ்வொருவரின் வலைத்தளமும் அவர்களது ஆசிரியர் பொறுப்பிற்கு பிறகு பதிவுலகத்தால் வெகுவாக திரும்பி பார்க்கப்படுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை..! அந்த வகையில் நானும் இனி திரும்பி பார்க்கப்படுவேன் என்பது என்னுள்..., ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை!

நான் எந்த அளவு திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறேன் என்பதற்கு உதாரணமாக ஒரு சின்ன நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன்.! நேற்று.., என் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.! அழைத்த தொலைபேசி எண் புதிதாக இருந்ததால் குறிப்பாக STD CODE பரிச்சயமில்லாததாக இருந்ததால் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.! பின்பு அந்த STD CODE-ஐ வைத்து இணையத்தில் தேடிப் பார்த்த போது அது உகாண்டாவிலிருந்து வந்த அழைப்பு என்று தெரியவந்தது.! எனக்கோ ஒரே ஆச்சிரியம்.., நமக்கு ஆப்பிரிக்காவில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும்.. உகாண்டாவிலுமா இருக்கிறார்கள்..? என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.!

அழைப்புக்கு உயிர் கொடுத்ததும்... கார்த்திக் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட எதிர்முனையில் பேசிய அந்த நண்பர்., தான்... உகாண்டாவில் அரசு பணியொன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும்.., வலைச்சரத்தின் மூலம் எனது வலைத்தள அறிமுகம் கிடைக்கப் பெற்றதாகவும் இந்த ஒரு வாரத்தில் இரவு பகல் பார்க்காமல் நான் எழுதிய அத்தனை இடுகைகளையும் வாசித்ததில் என் எழுத்தின் தீவிர ரசிகர் ஆகிவிட்டதாகவும் கூறினார். அதோடு மட்டுமின்றி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு உகாண்டாவில் ஒரு சிலை வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.! அதற்க்கு பதிலளித்த நான் எனக்கு தெரிந்த வரையில் உலகில் காகங்களே இல்லாத நாடு நியூஸிலாந்து மட்டும் தான் என்பதால்., உகாண்டாவில் எனக்கு சிலை வைக்க துளியும் விருப்பம் இல்லை என்றேன்.! இதை தொடர்ந்து ஒரு வித ஏமாற்றத்தோடு அவர் விடைபெற்றார். இப்படிபட்ட நல்ல உள்ளங்களை எனக்கு பெற்றுத்தந்த வலைச்சரத்திற்க்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.! (இது முழுக்க முழுக்க கற்பனை அல்ல...!)

நான் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பிற்கு அழைக்கப்பட்டதுமே.., யார் யாரையெல்லாம் எனது பதிவுகளின் வழியே அறிமுகப்படுத்துவது என்று ஒன்பது தலைப்புகளின் கீழ்., தலைப்பிற்கு ஐந்து பதிவர்கள் வீதம்., நாற்பதிற்கும் மேற்பட்ட பதிவர்களின் வலைத்தளங்களை கொண்ட பட்டியலை தயாரித்து விட்டேன். பணிச்சுமை மற்றும் நேரமின்மை காரணமாக அவற்றுள் ஐந்து தலைப்புகளின் கீழ்.., தலைப்பிற்கு மூன்று பதிவர்கள் வீதம் வெறும் பதினைந்து பதிவர்களின் வலைத்தளங்களை தான் என்னால் பரிந்துரை செய்யமுடிந்தது.

இவற்றில் நான் விரும்பி வாசிக்கும் பல நண்பர்களின் வலைத்தளங்கள் விடுபட்டு போய் விட்டது என்பது தான் உண்மை., அவர்களுள் குறிப்பிட தக்கவர்கள்.., நான் எழுத துவங்கிய நாட்களிலிருந்தே தவறாமல் விரும்பி வாசித்து வரும் மெல்ல தமிழ் இனி வாழும்-ரெவெரி; பயண கட்டுரைகளை புகைப்படங்களுடன் வெகு அழகாய் பதிவிட்டுக்கொண்டிருக்கும் வீடு திரும்பல்-மோகன்குமார்; புகழ் பெற்ற எழுத்தாளர்களுடன் தனக்கிருந்த நட்பினை சுவைபட எழுதிக் கொண்டிருக்கும் மூத்த பதிவர்களுள் ஒருவரான மின்னல் வரிகள்-கணேஷ்; மற்றும் 600 பதிவுகள் என்ற அசாதாரண சாதனையை கடந்த சகோதரி மணிராஜ்-ராஜராஜேஸ்வரி போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இவர்களை உரிய வகையில் பரிந்துரைக்க முடியாமைக்காக வருந்துகிறேன்.!

பொதுவாக தினமும் பதிவுகள் எழுதுவதென்பது என்னால் முடியாத ஒன்று ஆனால் இந்த ஒரு வார காலமாக தினமும் நான் பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.! ஒரு வாரகாலமும் தவறாமல் வருகை புரிந்து., கருத்துரைத்து.., வாக்களித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.., உங்களது..... இதே அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து தான்.... என் வலைத்தளத்திலும் நான் காத்திருக்கிறேன் என்பதை மறந்துவிடவேண்டாம்..,பிரிய மனமின்றி.., வேறு வழியின்றி விடைபெறும்..., வரலாற்று சுவடுகள்.!
மேலும் வாசிக்க...

Saturday, July 14, 2012

மிரட்டும்.. பெண் வேங்கைகள்..!


அனைவருக்கும் வணக்கம்., தொடர்ச்சியாக என்னை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நேற்றைய இடுகையை வாசித்த உடனேயே தெரிந்திருக்கும்.., அது ஏதோ அவசரகதியில் எழுதப்பட்ட இடுகை என்று.! உண்மைதான்.! நண்பர் ஒருவர் “வெள்ளி-இரவு” தாய் மண்ணிற்காக பயண புறப்பாட்டில் இருந்ததால் அவருக்கான சில பொருட்களை வாங்குவதில் அவருடன் எனது நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் காரணமாகவே நேற்றைய பதிவிற்கான நண்பர்களின் மறுமொழிகளுக்கு கூட உடனே நன்றி தெரிவிக்க இயலாமல் போனது! இதற்க்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளவே இந்த முன்னுரை.! வாக்குரிமையை பயன்படுத்தி நேற்றைய பதிவை பரிந்துரை செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்..! இனி இன்றைய பதிவிற்கு செல்வோம் வாருங்கள்.!

தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator)! இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே.? உண்மையில் இந்த காரணங்களுக்காக ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கப்படவில்லை.!

விளைச்சல் நேரங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருட்கள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுப்போகாமல் வைத்து பாதுகாத்து விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் குளிர்சாதன பெட்டி. நாளடைவில் உயிர்காக்கும் மருந்துகளை., பதப்படுத்தி வைத்து பயன்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. தற்போது மூன்று நாளைக்கு தேவையான சாப்பாட்டை ஒரே நாளில் சமைத்து.., அவற்றை கெட்டுபோகாமல் வைத்து பயன்படுத்த இன்றைய நவீன இல்லத்தரசிகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது! ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் உணவுப்பொருட்கள் எப்படி கெட்டுப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.!

உணவுப்பொருட்களில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வெளிப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் அந்த உணவுப் பொருளில் உள்ள நீர்ச்சத்தின் உதவியுடன் பல்கி பெருகி அந்த உணவுப் பொருளை அழுக வைத்து விடுகின்றன இதைத்தான் நாம் உணவுப்பொருள் கெட்டுப்போய்விட்டது என்கிறோம்.! அவை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்படும் போது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரெப்ரி ஜெரன்ட் (refrigerant) என்ற வாயுதான். இந்த வாயு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் அதிக அளவு ஆவியாகி ஃபிரிட்ஜ்ஜிக்குள் உறைபனி போன்ற குளிரை உற்பத்தி செய்கிறது.  இந்த குளிர்ச்சி உணவுப்பொருளில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் நிகழ்வை தடுத்துவிடுவதால் உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருள் கெட்டுப்போவதில்லை.!

இன்று வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் பொதுவாக இரண்டு அடுக்கு கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டது. இதில் ரெப்ரிஜிரேட்டர் நீரின் உறைநிலைக்கு மேலேயுள்ள (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது.! நீரின் உறைநிலைக்கு கீழேயுள்ள (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது தான் ப்ரீசர். ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா (anhydrous Ammonia) வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத்தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.!

டை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை (Ozone Layer) வெகுவாக பாதிக்ககே கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து உலகமெங்கும் 1994 ஆம் ஆண்டு CFC-ஐ உற்பத்தி செய்யும் ஃபிரிட்ஜ்கள் தயாரிக்க தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து CFC இல்லாத ரெப்ரி ஜெரன்ட்டுகள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது வரை இந்த வகை ஃபிரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன! சரி இனி தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்..!

ஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் அந்த வீட்டில் பெண் இல்லையென்றால்., அந்த வீடு வீட்டிற்க்கு உண்டான முழுமையை பெறுவதில்லை. வீட்டை கெளரவித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பெண்கள் பதிவுலகத்தையும் கெளரவிக்க வந்தது., நிச்சயம் வரவேற்புக்குரியது என்று தான் சொல்ல வேண்டும்.! அதிலும் சில பெண் சகோதரிகள்..., கதை, கவிதை, கட்டுரை என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.!

அறிமுகம்-13; வலைத்தளம்: http://rajiyinkanavugal.blogspot.com/
பதிவர்: சகோ. ராஜி!

கதை, கவிதை, நகைச்சுவை பதிவு என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் பதிவர் சகோ ராஜி. இவரது ஏனைய இடுகைகளை காட்டிலும் இருவர் பேசுவது போல் அமைக்கும் உரையாடல் வகை இடுகைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.! அவற்றில் நான்கு இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.! படித்தால் மட்டும் போதுமா? மோனாலிசா புன்னகையின் மர்மம்? முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்! யார் பெறுவார் இந்த அரியாசனம்?

அறிமுகம்-14; வலைத்தளம்: http://thmalathi.blogspot.com/
பதிவர்: சகோ. மாலதி!

காதல், சமூகம் சார்ந்த தனது எண்ணங்களை கவிதையாக வடித்து வருபவர் சகோ மாலதி.! இவரது காதல் கவிதைகளில் காதல் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை சமூகம் சார்ந்த கவிதைகளில் கோபக்கனல் சுட்டெரிக்கும்! இவரது இடுகைகளில் எண்ணை கவர்ந்த சில இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்! ஆனந்த காதலில் மூழ்கி திளைக்கிறேன்! மறக்க இயலாத மே18 நானுன் ஒருத்தி என்பதாலா அன்பனே! மானங்க்கெட்ட உலகத்தீரே

அறிமுகம்-15; வலைத்தளம்: http://veesuthendral.blogspot.com/
பதிவர் சகோ. தென்றல்!

சினிமா பாடலுக்கான கவிதை எழுதும் எல்லா தகுதியும் கொண்டவர் சகோ தென்றல் சசிகலா! சினிமாப் பாடல் பாணியிலேயே எழுதும் கவிதையாக இருந்தாலும், உரைநடை கவிதையாக இருந்தாலும் சரி அனைத்தும் ரசிப்புக்குரியவை! கவிதை பிரியர்கள் தவறாது இணைந்திருக்க வேண்டிய தளம்.! இவரது அனைத்து கவிதைகளுமே ரசித்து மகிழவேண்டியவை இருப்பினும் இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கே பகிர்கிறேன் வாசித்து மகிழுங்கள்! பேச்சில்பெண்ணுரிமை! எங்கும் தமிழ்! பூப் பூவாய்பூத்திருக்கு! சிறைக்கு வெளியே!

வலைச்சரத்தில் நாளை ஆசிரியராய் என் இறுதிநாள்! இதுவரை, தொடர்ந்து எனக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்., நாளையும் சந்திப்போம்., நன்றி வணக்கம்.!
மேலும் வாசிக்க...

Friday, July 13, 2012

மகாகனம் பொருந்திய பதிவர்கள்.!


அனைவருக்கும் வணக்கம்., ஒளியை உணர்வதற்கு.. இயற்கையால் மனிதனுக்கு பரிசளிக்கப்பட்ட அற்புதமான உறுப்பு தான் கண்.! மனிதனது கண்கள் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்ணங்களை வேறுபடுத்தி காணும் தன்மை கொண்டது..! ஒரு நிழற்பட கருவியின் (camera) இயக்கத்தை போல் செயல்படும் கண்.... உடலில் உள்ள ஏனைய பிற எல்லா உறுப்புக்களை காட்டிலும் அற்புதமான மெக்கானிசம் கொண்டது. இதில் ஏற்படும் சில குறைபாடுகளினால் உண்டாவது தான்... இன்று வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் பிரச்சனையான கிட்டப்பார்வை (Myopia) ., மற்றும் தூரப்பார்வை (Metropia) குறைபாடுகள்.!

அது குறித்து காண்பதற்கு முன்பு முதலில் கண் எப்படி இயங்குகிறது என்று சுருக்கமாக தெரிந்துகொள்வோம்..! (விரிவாக எனது இணைய தளத்தில் விரைவில் எழுதுகிறேன்) நாம் ஒரு பொருளை கான முயற்சிக்கும் போது கண்ணின் வெளிப்புறத்திலுள்ள கார்னியா (Cornea) வெளிச்சத்தின் உதவியுடன் அவற்றை ஒளிக்கற்றைகளாக படம் பிடித்து தனக்கு பின்னால் உள்ள குவிஆடிக்கு (Lens) அனுப்பிவைக்கிறது. குவிஆடி அவற்றை புகைப்பட உருவங்களாக மாற்றி தனக்கு பின்னால் உள்ள விழித்திரையின் (Retina) மீது குவிக்கிறது.! விழித்திரை இவற்றை மின்விசைகளாக மாற்றி நரம்புகளின் வாயிலாக மூளைக்கு அனுப்பி வைக்கிறது. மூளையில் அவை விருத்தி செய்யப்பட்டு பொருளின் உருவம் உணரப்படுகிறது. இத்தனை நீளமான நிகழ்வுகள் நொடிக்கும் குறைவான வினாடிகளில் நடந்தேறித்தான் நம்மளால் பொருட்களை பார்க்க இயலுகிறது..!

இந்நிகழ்வின் போது ஒளிக்கற்றைகள்.. விழித்திரையின் மீது சரியாக குவிக்கப்படாத போது ஏற்படுவதுதான்., கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சனை.! ஒரு பொருளை நாம் பார்க்கும் போது அருகில் உள்ள பொருள் நன்றாக தெரியும் அதே வேலை தூரத்தில் உள்ள பொருட்கள் அவ்வளவாக தெளிவாக தெரியாது. இந்த கோளாறு ஏற்படுவதற்கு காரணம் நாம் பார்க்கும் பொருளிலிருந்து பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் கார்னியா மற்றும் லென்ஸ் மூலம் நமது விழித்திரையின் மீது மிகச்சரியாக குவிக்கப்படாமல் விழித்திரைக்கு முன்பாகவே குவிந்துவிடுவது தான். இதன் காரணமாக அந்த பொருளின் தெளிவான பின்பம் விழித்திரைக்கு கிடைக்கப்பெருவதில்லை. இதுவே கிட்ட பார்வை கோளாறு என்று அழைக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் மையோப்பியா (((((((((()))(((Myopia) என்று அழைக்கிறார்கள்.!

தூரப்பார்வை பிரச்சனையில் நாம் பார்க்கும் பொருளிலிருந்து பெறப்பட்ட ஒளிக்கதிர்கள் நம் விழித்திரையின் மீது குவியாமல் விழித்திரையை தாண்டி விழித்திரைக்கு பின்பக்கம் போய் குவிந்துவிடுகிறது. இதன் காரணமாக விழித்திரையால் அந்த பொருளின் தெளிவான பிபத்தை பெற இயலாமல் ஒரு மங்கலான தோற்றத்தையே மூளைக்கு வழங்க இயலுகிறது. இதுவே தூரப்பார்வை குறைபாடு என்று அழைக்கப்படுகிறது இதனை மருத்துவர்கள் மெட்ரோப்பியா என்று அழைக்கிறார்கள். மிகத்துல்லியமாக கணிக்கப்பட்ட குவியதூரம் கொண்ட கண்ணாடிகளை (eye class) அணிவதன் மூலமாக கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரண்டு கோளாறுகளையும் சரி செய்து கொள்ளமுடியும். சரி இனி பதிவின் தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்.!

அறிமுகம்-10; வலைத்தளம்: http://www.tamilparents.com/
பதிவர்: சம்பத்குமார்

எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருக்கும் இணைய உலகில் எவை உண்மையில் பிறருக்கு பயனுள்ள விசயமாக இருக்குமோ அவற்றை மட்டுமே எழுதுக்கொண்டிருப்பவர்களுள் ஒருவர் தான் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத்குமார் வலைச்சர ஆசிரியராக இவர் பணியாற்றிய போது தான் இவரது வலைத்தள அறிமுகம் எனக்கு கிடைத்து. குழந்தை வளர்ப்பின் நுட்பம் பற்றி... இவர் பதிவிடும் இடுகைகள் பெற்றோர்கள் மட்டுமின்றி அனைவரும் வாசிக்க வேண்டியவை.! இவரது சமீபத்திய தொடர் இடுகையான குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை :பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 அனைவரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டியது.!

அறிமுகம்-11; வலைத்தளம்: http://dindiguldhanabalan.blogspot.com/
பதிவர்: திண்டுக்கல் தனபாலன்

இணையத்தில் நல்ல கருத்துக்களை மட்டுமே எழுதிகொண்டிருக்கும் மிக சொற்பமான பதிவர்களில் திண்டுக்கல் தனபாலனும் ஒருவர். தோராயமாக ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவரது வலைத்தள அறிமுகம் எனக்கு கிடைத்தது.! இவரது தெய்வம் இருப்பது எங்கே? என்ற இடுகையைத்தான் நான் முதன் முதலில் வாசிக்க நேர்ந்தது.! மனிதனதுபிரச்சனைகளுக்கு காரணமானது எது? மற்றும் மனித வாழ்வில் போனால் வராதது எது? மற்றும் முயற்சி+பயிற்சி=வெற்றி போன்றவை நீங்கள் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய இடுகைகள் ஆகும்.!

அறிமுகம்-12; வலைத்தளம்: http://urssimbu.blogspot.com/
பதிவர்: மாணவன்

வலைத்தளத்தில் நான் எழுத துவங்குவதற்கு முன்பு இருந்தே மாணவனின் வலைத்தளம் எனக்கு பரீட்சயம் தான்.! இயல்பாகவே வரலாறுகளை வாசிப்பதில் எனக்கு இருந்த ஆர்வம் இவரது வலைத்தளத்தை பார்த்த பின் நானும் எழுதினால் என்ன என்ற சிந்தனையை தோற்றுவித்தது.! அந்த வகையில் என்னை பதிவுகள் எழுத தூண்டியது இவரது வலைத்தளம் தான் என்றால் மிகையில்லை.! பல்வேறு சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை தன்னுள் அடக்கியிருக்கும் இவரது வலைத்தளத்தின் ஒவ்வொரு இடுகையையும் நாம் தவறவிடாமல் வாசிக்க வேண்டியவை.! இருப்பினும் இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கு பகிர்கிறேன் தவறாமல் வாசித்து மகிழுங்கள். ஜேம்ஸ்வாட் - வரலாற்று நாயகர், மற்றும் கன்பூசியஸ் தத்துவ மேதை சர்எட்மன்ட் ஹில்லாரி, ராபர்ட் கார்டு வெல்.!

எனது இன்றைய அறிமுகம்... இவர்கள் மூவர்களோடு இத்துடன் இனிதே நிறைவுறுகிறது.. எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால்.. நாளையும்.. என்னை கவர்ந்த சில பதிவர்களோடும்.... ஏதாவது ஒரு புதிய தகவலோடும்.... மீண்டும் வருவேன்.! நன்றி.. மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்.!
மேலும் வாசிக்க...

Thursday, July 12, 2012

தருமியல்ல இவர்கள் ...சிவன்.!


அனைவருக்கும் வணக்கம்.. நரம்பு மண்டலத்தின் (Nervous System) தலைமை செயலகமாக விளங்கும் மூளை (Brain) சற்றேறக்குறைய நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் முக்கிய மற்றும் சிக்கலான உறுப்பு ஆகும். மெல்லிய நரம்பின் வாயிலாக உடலின் அனைத்து பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மூளை சராசரியாக 1.5 கிலோகிராம் எடை கொண்டது. பொதுவாக ஆண்களின் மூளை அளவில்.. பெண்களின் மூளையைக்  காட்டிலும் சற்று பெரியது. (அளவில் மட்டும் தான் மேட்டர்ல இல்லை ஹி ஹி ஹி).

வெளிபுற சேதங்களிளிருந்தும்.. உட்புற சேதங்களிளிருந்தும் மூளை தன்னை காத்துக்கொள்ள தன்னை சுற்றிலும் பல்வேறு அடுக்குகளை எற்படுத்திக்கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மண்டையோடு (Skull)… முதுகு தண்டுவட நீர்மம் (Cerebrospinal Fluid).. மூளை தடுப்பு வேலி (Blood Brain Barrier) ஆகியவையாகும். இவை ஒவ்வொன்றும்... ஒவ்வொரு விதத்தில் மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது.! இவற்றில் மூளை தடுப்பு வேலியின் பங்கு அதி முக்கியமானது. உடலுக்குள் ரத்தத்தின் வழியாக பரவும் எல்லாவித தொற்றுநோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து மூளையை காக்கும் பணியை மூளை தடுப்பு வேலி மேற்கொள்கிறது.! உடல் எவ்வளவு பெரிய அதிர்வுகளை சந்தித்தாலும் அந்த அதிர்வு மூளையை தாக்காமல் தடுப்பது முதுகு தண்டுவட நீர்மம்..! வெளிப்புற விசையின் நேரடிப்பாதிப்பிலிருந்து மூளையை காப்பது மண்டையோட்டின் பிரதான பணியாகும்..!

மருத்துவர்களால் மனித மூளை... மூன்று பெரிய பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது..! அவையாவன முன்பக்க மூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum), மூளைத்தண்டு (Brain Steam).. இதில் உணர்வுகளை கட்டுப்படுத்தும் பணியை முன்பக்க மூளையும்.. தகவல்களை சேமித்தல்.. மற்றும் தேவைப்படும் நேரத்தில் அவற்றை பயன்படுத்துதல்... குறிப்பிட்ட ஒன்றை அடையாளம் காணுதல் போன்ற அதிமுக்கிய பணிகளை சிறுமூளையும்.. மூளையை தண்டுவடத்தோடு இணைக்கும் பணியை மூளை தண்டும் மேற்கொள்கிறது.! தண்டுவடம் அவசரகாலத்தில் நிகழும் அனிச்சை செயலை மேற்கொள்ளும் அதி முக்கிய உறுப்பு என்பது குறிப்பிடதக்கது.!

மூளை மெல்லிய நரம்பின் வாயிலாக உடலின் அனைத்து பகுதிலோடும் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது..! உடம்பின் எந்த பாகத்திலும் சின்ன கலாட்டா நடந்தாலும் கூட.. அந்த வினாடியே அது பற்றிய செய்தி நரம்பின் வழியாக மூளைக்கு போய் சேர்ந்துவிடும். மூளைக்கு தெரியாமல் நம் உடலில் எந்த இடத்திலும் எந்த ரகசியமும் நடைபெற இயலாது. உடலின் உட்பகுதியில் என்ன நடந்தாலும் சரி... உடம்பின் வெளிப்பகுதியில் என்ன நடந்தாலும் சரி.. அதன் பிறகு மூளை நம் உடலை சரிப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் வியப்பின் உச்சமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு சின்ன சாம்பிள்.. அதாங்க எடுத்துக்காட்டு.!

உடலில் எந்த இடத்தில் அடி பட்டாலும் உடனே நமக்கு வலிக்கும்... நேரம் ஆக ஆக... வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மூளையின் செயல்பாடுகள் வியப்பின் உச்சமாக இருக்கும்..! அதை பத்தி தெரிந்துகொள்வதற்கு முன்பு.. முதலில் உடலில் அடிபட்டவுடன் ஏன் வலிக்கிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.! உடம்பின் எந்த இடத்தில் அடி பட்டாலும் அந்த இடத்தில் உள்ள ரத்த தந்துகிகள் சிதைவடைய ஆரம்பிக்கும்.! ரத்த தந்துகிகள் சிதைவடையும் போது அந்த இடத்திற்கு பாயும் ரத்த ஓட்டம் தடைபடும்... ரத்த ஓட்டம் தடைபடும் போது அந்த பகுதியில் உள்ள சதைச் செல்களுக்கு போய் சேரவேண்டிய ஆக்ஸிஜன் தடைபடும்.  வந்து சேர வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாத காரணத்தினால் அந்த இடத்தில் நிகழும் குழப்பம் தான்…. அடிபட்டதும் நாம் உணரும் வலி (Pain)..!

இந்த வலி ஏற்பட்டதும் மூளையின் ஒட்டு மொத்த கவனமும் அங்கே போய் பதியும். உடம்பின் பல பாகங்களுக்கும் கட்டளைகள் பறக்கும். உடனடியாக கைகள் வலிக்கும் இடத்தை தேய்க்க உத்தரவிடப்படும். பொறுத்துக் கொள்ள முடியாத வலியென்றால் அதை தணிக்கும் விதமாக கண்களில் நீர் சுரக்க உத்தரவிடப்படும்...! இவை எவற்றிக்குமே வலி அடங்கவில்லை என்றால் மூளை அவசரகால அடிப்படையில் செயல்பட்டு வலியை மறக்க செய்யும் புரோட்டீன்களை உற்பத்தி செய்து குறிப்பிட்ட வலியுள்ள அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கும். இந்த புரோட்டீன்களில் மரிசுனா (Marijuana) போன்ற போதைப் பொருளில் இருக்கும் ரசாயன கலவைகள் இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புரோட்டீன் செல்கள் காரணமாகத்தான் அடிபட்ட ஒருவர் சிறிது நேரத்துக்குள் வலியை மறந்து... எழுந்து நடக்க முடிகிறது. சிதைந்து போன ரத்த செல்கள் மறுபடியும் உயிர்ப்புக்கு வரும் போது ரத்த ஓட்டம் சீராகி வலி மெல்ல மெல்ல குறைந்து அடிபட்ட இடத்தில் ஏதேனும் காயம் இருந்தால் அதுவும் ஆற ஆரம்பித்துவிடுகிறது. மனித மூளை அதி அற்புதமானது. அதன் பணிகள்... செயல்படும் வேகம், நினைவு திறன்கள், புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் மருத்துவர்களையும்., உயிரியல் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.! இன்று இந்த அளவு தகவலே போதும் என்று நினைக்கிறேன்.! இனி... பதிவின் தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்...!

அறிமுகம்-7; வலைத்தளம்: http://blog.arutperungo.com/
பதிவர்: அருட்பெருங்கோ!

கவிதைகளை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு திறமை பத்தாது., ஆயினும்.. அருட்பெருங்கோவின் எந்த கவிதையை வாசித்தாலும் ஒருவித வித்தியாசமான உணர்வை உணர முடியும்.. கவிதைகளில் இவர் பயன்படுத்தும் எளிமையான வார்த்தைகள் என்னைப்போல ரசனையற்றவனையும் ரசிக்க செய்யும்..! சிறுகதைகளில் கூட, காதலை கவித்துவமாய் வெளிப்படுத்தும் இவரது எழுத்துநடை காதலின் மேல் நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களையும் கூட அசைத்து பார்க்கும் தன்மை கொண்டது. அதுக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இந்த தொடர் க(வி)தை அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு;பாகம்-1  பாகம்-2; பாகம்-3; பாகம்-4; க(வி)தையே இப்பிடி இருந்தால் கவிதையெல்லாம் எப்பிடி இருக்கும்? லேபில்களில் வழியே சென்று தேடிப்பிடிச்சு படிங்க! நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீ ங்க..!

அறிமுகம்-8; வலைத்தளம்: http://npandian.blogspot.com/
பதிவர்: நம்பிக்கை பாண்டியன்!

வெகு சமீபத்தில் தான் நண்பர் நம்பிக்கை-பாண்டியன் அவர்களின் வலைத்தள அறிமுகம் கிடைத்தது.! இவரது கவிதைகளில் இருக்கும் நேர்த்தி என்னை வியந்து ரசிக்க வைத்தது! ஆறு வருடங்களுக்கும் மேலாக.. இவர் தனது இணைய பக்கத்தை கவிதைகளால் நிரப்பிவருகிறார்.! நான் இவரது உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம் என்ற இடுகையைத்தான் முதன் முதலாக வாசித்தேன். அதன் பிறகு எனது விருப்ப வாசிப்பு எல்லைக்குள் இவரை உள் நுழைத்து விட்டேன்.! சமீபத்தில் நான் ரசித்து வாசித்த உன் ரசிகன், மற்றும் என் ரயிலில் நீ ஆகிய கவிதைகளை நீங்களும் ஏன் வாசித்து மகிழக் கூடாது? இவரது வலைத்தளம் ஆனந்த விகடன் வலையோசையில் சமீபத்தில் கெளரவிக்கப்பட்டுள்ளது. ஒரு எட்டு போய் வாழ்த்திட்டு வாங்க!

அறிமுகம்-9; வலைத்தளம்: http://www.pulavarkural.info/
பதிவர்: புலவர். சா. இராமானுசம்
  
என் வாசிப்பு எல்லையில் ஐயா புலவர் சா.இராமானுசம் அவர்கள் மட்டும் தான் தமிழ் வலையுலகில் இலக்கண தமிழில் வெண்பா கவிதை வடித்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இவரது கவிதையை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு வயதோ.. அனுபவமோ இல்லை.! ஆதலின் இவரது சமீபத்திய நான்கு படைப்புகளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.! தவறவிடாமல் வாசித்து மகிழுங்கள். இன்னும் எதற்கோ நடிக்கின்றால்.!, மழையே மழையேவாராயோ.!, மனித நேயமில்லையோ மத்திய அரசே.!, வலையேற ஒரு கவிதை வாராது போகுமந்தோ.!


கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டேன் என்று நினைக்கிறேன்., மீதி கிணறையும் தாண்ட உங்களது தொடர் ஆதரவை வேண்டி தவமிருக்கிறேன்.! எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசி இருந்தால் நாளையும் என்னை கவர்ந்த சில பதிவர்களோடும்.. ஏதாவது ஒரு தகவளோடும் மீண்டும் வருவேன் நன்றி.. மீண்டும் சந்திப்போம்... வணக்கம்!
மேலும் வாசிக்க...

Wednesday, July 11, 2012

பிளாக்கர்ர்ர்....மெக்கானிக்ஸ்ஸ்ஸ்ஸ்...!


அனைவருக்கும் வணக்கம்... ஒரு தேசத்தின் வளர்ச்சி.... அறிவியல் துறையில்... அந்த தேசம் பெற்றிருக்கும் வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது..! அறிவியல் துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கும்... கம்ப்யூட்டர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..! ஒரு நாடு பொருளாதாரத்திலும் தகவல் தொழில்நுட்ப துறையிலும்... வளர்ச்சியடைய விரும்பினால்... அந்த நாடு.... கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவது... தவிர்க்க இயலாததாகிறது...! தற்போதைய சூழ்நிலையில்... உலகில் உள்ள... அனைத்து நாடுகளும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த துவங்கிவிட்டன... இவ்வாறு... பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பழுதடைந்து உபயோகமற்றவையாக மாறி.... இறுதியில் குப்பையாக மாறுகிறது.!

பிளாஸ்டிக்.. போன்ற அழியாக் குப்பைகளால் ஏற்கனவே... குப்பைமேடாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகம்.... இனி வரும் காலங்களில் பெருகிவரும் இந்த கம்ப்யூட்டர் குப்பைகளால்... மெகா குப்பை மேடாக காத்திருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை...! பலவிதமான சுற்றுப்புறச்சூழல்... சீர்கேட்டை உண்டாக்கும் மின்னணு குப்பைகள் என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் குப்பைகளை... முறையாக அகற்ற வழி தெரியாமல் இப்போதே உலக நாடுகள் தடுமாற ஆரம்பித்து விட்டன...!

இந்தியாவில் மட்டும் தோராயமாக ஆண்டுக்கு 25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள்... பயன்படுத்த தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டு குப்பையாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிறது சமீபத்திய புள்ளிவிபரங்கள்.... என்றால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எத்தனை கம்ப்யூட்டர்கள் குப்பையாக மாறிக்கொண்டிருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்..! பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை... சரி செய்ய ஆகும் பணத்தில் ஒரு புதிய கம்ப்யூட்டரையே வாங்கி விடலாம் என்பதால்.... யாரும் பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை சரி செய்து பயன்படுத்த முன் வருவதில்லை...!

அமெரிக்கா.. ஜப்பான்.. ஜெர்மனி... போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள ஓரளவு பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை இந்தியா.. சீனா.. பாகிஸ்தான்.. பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து... பணம் ஈட்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல்.... மின்னணு குப்பைகள்... விசயத்திலிருந்தும் ஓரளவிற்கு தப்பிக்கொள்கிறது..! இந்த பழுதுபட்ட கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகளான சீனா.. இந்தியா..  உள்ளிட்ட ஆசிய நாடுகள் தான் மின்னணு குப்பைகள் விசயத்தில் எதிர்காலத்தில் அதிக அளவில் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு தவிக்க போகும் நாடுகள் ஆகும்..!

கம்ப்யூட்டர்களில் உள்ள சர்க்யூட் போர்டு (Circuit Board) ... மானிட்டர் (Monitor) ... கேத்தோடு-ரே-ட்யூப் (Cathode Ray Tube) ... பேட்டரி (Battery) ஆகியவற்றில்... காப்பர் (Copper).. துத்தநாகம் (Zing).. பெரிலியம்(Beryllium) போன்ற ரசாயன பொருட்கள் பெருமளவில் அடங்கியுள்ளன.. இவை கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் ஆவியாகி காற்றில் கலந்து மனிதர்களுக்கு எண்ணற்ற சுகாதார கேடுகளை ஏற்படுத்த வல்லவை.! அதோடு மானிட்டரில் இருந்து வெளியேறும்... காரீய ஆக்ஸைடு (Lead Oxides) மற்றும் பேட்டரிகளில் இருந்து வெளியேறும்... பாலி குளோரினேட்.... பைபீனல் புரோமினேட் போன்றவை எதிர்காலத்தில் மனிதனது ஆரோக்கிய வாழ்விற்கு வேட்டு வைக்கும் முக்கிய காரணிகளாக திகழப்போகின்றன என்றால் மிகையில்லை..!

கம்ப்யூட்டர்களின் பெரும்பாலான பாகங்கள்... பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தான் தயாரிக்கப்படுகின்றன... இந்த பிளாஸ்டிக்குகள் எக்காலத்திலும் மக்கி அழிவதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழலையும் வெகுவாக பாதிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது..! அந்த வகையில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருக்கும் போதும் சரி பயன்பாட்டிற்க்கு பிறகும் சரி எண்ணற்ற தீமைகளை மனித குலத்திற்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத நிஜம்..! ஃபிரிட்ஜ்.. டீவி.. வாஷிங்மெஷின்.. மின்சார அடுப்புகள்.. குழந்தைகள் விளையாடும் எலெக்ட்ரானிக் பொம்மைகள் ஆகியவையும் கம்ப்யூட்டர்களோடு இணைந்து மின்னணு குப்பைகளாய் மாறி நம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வேட்டு வைக்க காத்துக்கொண்டிருக்கின்றன.... ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்ப்யூட்டர்கள் நிச்சயம் தேவைதான்.. அதே நேரம்.. அவை மின்னணு குப்பைகளாய் மாறி மனித குலத்தின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு கேள்விக்குறியாய் நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது தானே நண்பர்களே.! இன்னும் எழுதலாம் பக்கம் பக்கமாய்... ஆனால் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.! இனி தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்..!
--- 
அறிமுகம்-4; வலைத்தளம்: http://tvs50.blogspot.com/
பதிவர்: tvs50

என் வாசிப்பு எல்லையில்.. ஒரு தொழில்நுட்ப பதிவரின் பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்தவர் டிவிஎஸ்-50-யாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.! தொழில்நுட்ப பதிவுகளில் இவர் காட்டிய எளிமை.. இவர்... பதிவிடுவதை நிறுத்தி  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்.. இன்று வரையில் எந்த தொழில்நுட்ப பதிவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டச் செய்திருக்கிறது. பீட் பர்னர் குறித்து இவர் எழுதிய பிளாக்கின் வாசகர்களைஅதிகரிக்க நிரந்தரமாக்க என்ற இடுகையைத்தான் நான் முதன் முதலாக கூகிள் வழித்தேடல் மூலமாக படிக்க நேர்ந்தது.! பிளாக்கின் உள்ளேயே படங்கள் திறக்க, மற்றும் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க மற்றும் பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட மேலும் வாசிக்க என்பவை குறித்தெல்லாம் அன்றே (அப்போது நான் இணையம் பற்றி கூட அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை) அவர் எழுதிய இடுகைகள் என்னை பொருத்தவரை வியப்பிற்குரியது. இவர் பதிவு எழுதுவதை நிறுத்துவதற்குறிய காரணம் எதுவாக இருந்தாலும் அவற்றை கடந்து மீண்டும் எழுதவர வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது!

அறிமுகம்-5; வலைத்தளம்: http://www.bloggernanban.com/
பதிவர்: அப்துல் பாஸித்

டிவிஎஸ்-ஸிடம் நான் கண்ட அதே எளிமை பிளாக்கர் நண்பனிடமும் இருக்கிறது.! சற்றேறக்குறைய இவரது பிளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி என்ற இடுகையைத்தான் முதலில் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இவரது ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற தொடர் இடுகை மூலம் பிளாக்கர் வடிவமைப்பு பற்றி நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன் என்றால் மிகையில்லை.! அதைப்போல பேஸ்புக்கில் கப்பலேரும் மானம் மற்றும் அறிவது நல்லது கூகிள் பாதுகாப்பு என்ற இடுகைகள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டியவை என்று கருதுகிறேன்! சகபதிவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்களை தீர்த்துவைப்பதில் இவர் காட்டும் வேகம்... பதிவுலகில் இவருக்கென்ற ஒரு அடையாளத்தை எற்படுத்திக்கொண்டிருக்கிறது!

அறிமுகம்-6; வலைத்தளம்: http://www.vandhemadharam.com/
பதிவர்: சசிகுமார்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் சந்தாதாரர்கள்.. ஆயிரத்தி ஐநூறை நெருங்கும் பின்தொடர்பாளர்கள் என்ற வியக்கத்தகு சாதனைக்கு சொந்தக்காரர் வந்தேமாதரம் சசி. பதிவு எழுதும் அனைவரும் பல்வேறு பேஸ்புக் குழுமங்களில் இணைந்திருப்போம் (என்னை தவிர... அது என்ன மாயமோ தெரியலை இதுவரை எந்த குரூப்பும் நம்மளை சேர்த்துக்கலை ஹி ஹி ஹி) அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழுமங்களில் இணைந்திருந்தால் பதிவுகளை ஒரே கிளிக்கில்அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்வது எப்படி என்ற இவரது இடுகையை வாசிக்க தவற வேண்டாம்! வலைப்பூவின் பேஜ்வியுஸ் அதிகரிக்க RECOMMENDED FOR U என்ற விட்ஜெட் நிறுவுவது குறிப்பிடும் அவரது இடுகையையும் வாசித்து பயன் பெறுங்கள். பிளாக்கரில் Subscribe விட்ஜெட் நிறுவுவது எப்படி என்ற இடுகையும் நீங்கள் வாசிக்க வேண்டிய ஒன்று தான்! வலைத்தளம் வைத்திருக்கும் எல்லோருக்கும் பயன்படும் இடுகையான உங்கள் வலைப்பூ வைரசினால்பாதிக்கப்பட்டுள்ளா என்பதை கண்டறிய நம் வலைத்தளத்தை அடிக்கடி ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுதல் இன்றியமையாதது. அந்த வகையில் இந்த இடுகையும் அதி முக்கியமானது!

இன்று நான் அறிமுகப்படுத்திய மூவரையும் அறிமுகப் பதிவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. ஏனெனில் இவர்கள் மூவரும் ஏற்கனவே சிகரம் தொட்டவர்கள்..! இவர்களை நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.! எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால் நாளை மீண்டும் ஏதாவது ஒரு தகவலுடனும்.. என்னை கவர்ந்த சில பதிவர்களுடனும் வருவேன்.. மீண்டும் சந்திப்போம் ... நன்றி.. வணக்கம்...!
மேலும் வாசிக்க...

Tuesday, July 10, 2012

என் சீட்டுகட்டுல 3 ஜோக்கர்ஸ்.!


அனைவருக்கும் வணக்கம்.... நேற்றைய எனது அறிமுக இடுகையில்... இனி நான் எழுதும்... ஒவ்வொரு இடுகையிலும்... ஏதாவது ஒரு தகவல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்... அந்த வகையில்.. இன்றைய பதிவில்.. முத்துகளை (Pearl) பற்றிய சில அடிப்படை தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! மனிதர்கள்... தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக... உடலின் பல்வேறு உறுப்புக்களில்... அணிந்துகொள்ளும் அணிகலன்கள்... ஆபரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன... இந்த ஆபரண பட்டியலில்... பண்டைய காலம் தொட்டே... மிகவும் விலையுயர்ந்த... பொருட்களில் ஒன்றாக கருதப்படுவதுதான் முத்து (Pearl).. இது... முசெல் (Mussel)... என்ற ஒரு வகை மெல்லுடலி….. இனத்தை சேர்ந்த... முத்துசிப்பியின் (Pearl Oyster)... உடலிலிருந்து... பெறப்படுகிறது.!

கடலில்.... அமைதியாக மிதந்து கொண்டிருக்கும்... ஒரு முத்துசிப்பியின் உடலுக்குள்... மணல் துகள்கள்.. நுழையும் போது... உடலில் ஏற்படும்... உறுத்தலை தாங்கிக் கொள்ள இயலாத சிப்பி.... தனது உடல் திசுக்களை (tissue)... அந்த மணல் துகளின்... மேல் பதியவைத்து... உறுத்தலை குறைக்க முயற்சிக்கிறது. அந்த திசுக்களே... நாளடைவில் வளர்ந்து.. பெரிதாகி.. முத்துக்களாக.. உருப்பெருகிறது..! இந்தவகையில்... ஒரு முத்துசிப்பிக்குள்... முத்து உருவாவதற்கு... தோராயமாக... மூன்று முதல்... ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது... இதனால்.... முத்து.... அரிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்றாகி... ஒரு விலையுயர்ந்த ஆபரணமாக.. காலம் காலமாக.. இருந்து வருகிறது.!

சற்றேறக்குறைய... முத்து முதன் முதலில் கண்டறியப்பட்டது... இந்தியப் பெருங்கடலை (Indian Ocean)... ஒட்டியுள்ள.. பிரதேசங்களில் தான் என்கிறது வரலாறு..! தென் தமிழகத்தில்... பாண்டியர் வம்சத்தினர் (Pandyan Dynasty, 500 BCE – 1345 AD)... ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் இருந்தே.. அதாவது கி.மு.500-லிருந்தே.. தமிழகத்தில்.. முத்துக்கள் புழக்கத்தில் இருந்ததாக... வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன... தொடர்ந்து.... மன்னார் வளைகுடா (Gulf of Mannar).... அரேபிய வளைகுடா (Persian Gulf).... தென் சீன கடல் (South China Sea) ஆகியவற்றை சார்ந்துள்ள பிரதேசங்களில்... இருந்தும் முத்து கண்டெடுக்கப்பட்டு... உலகின்.. பல்வேறு தேசங்களுக்கு... பண்டைய காலத்திலிருந்தே.. ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.!

முத்து... என்றாலே.... உங்களுக்கு... வெண்மை நிறம் தான்.. ஞாபகத்திற்கு வரும்.. இல்லையா?...... உண்மையில்... கருப்பு (Black Pearl).. சிவப்பு (Red Pearl).. பச்சை (Green Pearl)... நீலம் (Blue Pearl)... மஞ்சள் (Yellow Pearl)… இளஞ்சிவப்பு (Pink Pearl) உள்ளிட்ட பல்வேறு நிறங்களில்.. முத்து கிடைக்கிறது... மனிதர்களால் முத்துக்கள் விரும்பி ஆபரணமாக அணியப்படுவதர்க்கு காரணம்.... முத்துக்களிருந்து வெளிப்படும்... ஒருவகையான ஈர்ப்பு மிக்க... பிரகாசமான ஒளி... என்றால் மிகையில்லை... அதற்க்கு காரணம்... கால்சியம் கார்பனைட் (Calcium Carbonate).... எனப்படும் வேதிப்பொருள் முத்துக்களில்.... அடங்கியிருப்பதுதான்.... இந்த வேதிப்பொருள் தான்... முத்து பிரகாசமாய் ஜொலிப்பதர்க்கு முக்கிய காரணமாய் விளங்குகிறது.!

கிட்டத்தட்ட... பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை... இயற்கையாக... கடலில் இருந்து... கிடைக்க பெற்ற... இயற்கை முத்துக்கள் (Natural Pearls) தான் பயன்பாட்டில் இருந்தன... அதன் பிறகு.. முத்துக்களை.. மக்கள்.. அதிக அளவில்.. வாங்கி பயன்படுத்தியதன் காரணமாக... முத்துக்களுக்கு.. பற்றாக்குறை ஏற்பட்டது.. உங்களுக்கு ஒன்று தெரியுமா.... இன்று நகைக்கடைகளில்.. புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான முத்துக்கள்... செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவைதான்...! செயற்கையான முறை என்றதுமே... ஏதோ.... ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களை வைத்து... முத்துக்களை.. தயாரிப்பார்களோ... என்று நினைத்துவிட வேண்டாம்... செயற்கையான முறையில் என்றால்... கிட்டத்தட்ட வளர்ப்பு தேனியில் இருந்து.. தேன் பெறுவதை போல... ஒரு மீன் போல முத்துசிப்பியை வளர்த்து... இயற்கையாக... சிப்பிக்குள்.. முத்து உருவாகும் போது ஏற்படும் நிகழ்வை... செயற்கையாக ஏற்படுத்துவார்கள்.!

அதன் படி... அதீத கவனத்துடன்... வளர்க்கப்பட்ட... முத்துசிப்பிகளுக்குள்... செயற்கையாக... மணல் துகள்களை.. அதன் உடலில் நுழைத்து... முத்து உருவாவதை தூண்டுவார்கள்... இம்முறையில் உருவாக்கப்படும்... செயற்கை முத்துக்கள் (Cultured Pearls).... கிட்டத்தட்ட... இரண்டு வருடங்களிலிலேயே... அதன் முழு வளர்ச்சியை எட்டிவிடுகிறது... அதோடு மட்டுமின்றி... இம்முறையில்.. ஒரே நேரத்தில்.. அதிக அளவில்.. முத்துக்களை... உருவாக்கவும் முடிந்தது.. இவ்வாறு செயற்கை முறையில்... முத்துக்களை உருவாக்கும் நுட்பத்தை.. உலகில்.. முதன் முதலாக... மிக்கிமொட்டோ கோகிசி (Mikimoto Kokichi, 1858 1954) என்ற ஜப்பானிய வல்லுனர்... 1896 ஆம் ஆண்டு நிகழ்த்திக்காட்டினர்... அன்று முதல்... இன்று வரை... செயற்கை முத்துகளை உருவாக்குவதில் ஜப்பான் தான்.. உலகிலேயே முதலிடத்தில்.. தொடர்ந்து நீடித்து வருகிறது.!


இன்று நகைக்கடைகளில் கிடைக்கும்... 95% முத்துக்கள்... இவ்வாறு செயற்கை முறையில்... உருவாக்கப்பட்டவையே.! ஆனாலும் இன்றளவும்... பஹ்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா.. போன்ற நாடுகளில்... இயற்கையாக கடலில் இருந்து பெறப்படும் முத்துகள்... அதிக அளவில் விற்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இதுவரை.. இயற்கையாக கிடைத்த முத்துக்களில் லாவோ சூ (Pearl of Lao Tzu, founded in Philippines)... என்ற முத்துதான்... உலகிலேயே மிகப்பெரிய முத்தாக கருதப்படுகிறது. இது கிட்டத்தட்ட... 9.5 அங்குல நீளமும்... 5.5 அங்குல விட்டமும்... 6.4 கிலோ எடையும்.... கொண்டதாகும். பதிவின் நீளம் கருதி.. முத்துக்கள் பற்றிய முத்தான விசயங்களை.. இத்துடன் முடித்துக்கொள்வோம்.!

அட .. இருங்க.. எங்க கிளம்பீட்டீங்க.. என்னாது... பதிவு முடிஞ்சிருச்சா.. அடகொடுமையே... இனிமேதாங்க.. மெயின் மேட்டரே இருக்கு.. நீங்க பாட்டுக்கு.. இப்பிடி.. பொசுக்குன்னு கிளம்பி போயிட்டா... வலைச்சர நிர்வாகிகள்.. என்னை.. டின்னு கட்டிடமாட்டாங்க.... ஏண்டா.. உன்னை.. பதிவர்களை அறிமுகபடுத்துன்னு சொன்னா.... நீ.. பாட்டுக்க.. பக்கம்.. பக்கமா பதிவு எழுதிகிட்டு இருக்கேன்னு... உங்களுக்கு புண்ணியமா போகும்.. கீழே உள்ளதையும் கொஞ்சம் படிச்சுட்டு போங்க..! பதிவை.. விமர்சிக்கிறீர்களோ.... இல்லையோ... பதிவர்களை பற்றி ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லிபுட்டு போங்க.. அப்பத்தான்... மீ எஸ்கேப் ஆக முடியும். ஹி ஹி ஹி!
----
அறிமுகம்-1; வலைத்தளம்: http://alaiyallasunami.blogspot.com/
பதிவர்: விச்சு!

உங்களுக்கு வெப் மற்றும் ப்ளாக்-கை பற்றி.... என்ன தெரிஞ்சிருந்தாலும்.. அதையெல்லாம் ஓரங்கட்டி வச்சிருங்க.. ஏன்னா.. கைதேர்ந்த... இணையநுட்ப பதிவரான... நம்ம விச்சு இது பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து ப்ளாக் மற்றும் வெப்-னு ஒரு பதிவு போட்டிருக்காரு.. போய் படிங்க.. படிச்ச பின்னாடி தான் உங்களுக்கு தெரியும்... நம்ம எவ்வளவு விவரமில்லாம இருக்கோம்ங்கிறது. அதே மாதிரி கம்ப்யூட்டர்ல வைரஸ்வராமல் பாதுகாப்பது எப்படிங்கிறது குறித்தும் விரிவா அலசி ஆராய்ஞ்சு ஒரு பதிவு போட்டிருக்கார். உங்க கம்ப்யூட்டர பைசா செலவில்லாம வைரஸ்ல இருந்து... பாதுகாக்கனும்னா உடனே ஓடிப்போய் படிங்க... உலகின் புகழ் பெற்ற கட்டுமானங்கள்.. பற்றி இவர் ஆராய்ந்து எழுதியிருக்கும் மனிதனின் கட்டுமானம் என்ற பதிவை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால் ஐம் சாரி நீங்க ரொம்பவே இவரை மிஸ் பண்ணுறீங்கன்னு தான் சொல்ல முடியும். கல்யாணத்துக்கு முன்னாடி.. மற்றும்... கல்யாணத்துக்கு பின்னாடி உள்ள ஆண்-பெண்களோட... மனநிலை எப்படி இருக்கும்... என்பது குறித்து... இவர் ஆராய்ந்து.. எழுதிய க.மு-க.பி இடுகையை வாசிச்சதும்... நிச்சயமா இவரு ஒரு மருத்துவ மேதாவின்னு முடிவு செஞ்சேன்.

அறிமுகம்-2; வலைத்தளம்: http://rajamelaiyur.blogspot.com/
பதிவர்: ராஜ பாட்டை ராஜா!

இன்றைய நவநாகரீக இளைஞர்களின்.. தலையாய.. பிரச்சனையான... பிகர்களை கரெக்ட் பண்ணுவது எப்பிடிங்கிறது.. குறித்து ஆராய்ந்து பதிவிட்டிருக்கும் நம்ம ராஜபாட்டை ராஜா., நமக்கு வயதாகிவிட்டதா என்பதை கண்டறிய உங்களுக்கு வயதாகிவிட்டதா என்று தலைப்பிடப்பட்ட... ஒரு புதிய மென்பொருள்... அதாங்க சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவரின் இக்கண்டுபிடிப்பு பற்றி அறிந்த பில்கேட்ஸ்.. இவரிடம்... ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தமிழகம் வந்தபோது பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. என்பது பற்றி... இவர் ஆராய்ந்து எழுதிய இடுகை.. இணைய உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.. என்றால் மிகையில்லை.! இவரது சாதனை இத்தோடு முடிந்துவிடவில்லை.. அரசியல்வாதி ஆவது எப்படி என்பது குறித்து இவர் எழுதிய புத்தகம்... ஜே.கே.ரெளலிங்கின் ஹாரிபாட்டர் புத்தக விற்பனையை... பின்னுக்கு தள்ளி... உலகளவில் புத்தக விற்பனையில்.. புதிய சகாப்தத்தை படைத்தது... என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அறிமுகம்-3; வலைத்தளம்: http://www.bladepedia.com/
பதிவர்: கார்த்திக்!

நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கலைவாணர் பற்றி நாம் எல்லோரும் அறிவோம்.. சிந்திக்கவும்... சிரிக்கவும்.. வைத்த மகாகலைஞன்... இணைய உலகில்... எனது வாசிப்பு எல்லையில்... ப்ளேட் பீடியாகார்த்தியும் அப்படித்தான்.. இவரது பதிவை வாசிக்கையில்... நம்மை சிரிக்கவைப்பதோடு... மட்டுமல்லாமல்... நல்ல விசயங்களை வாரி வழங்கி... சிந்திக்கவும் வைப்பார். இவரது பதிவெழுத பத்து கட்டளைகள் என்ற இடுகையைத்தான் நான் முதன் முதலில் வாசித்தேன்.. அதன் பிறகு.. நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில்.. ஒருவராக இடம்பிடித்து விட்டார்.! IRCTC-டிக்கெட்முன்பதிவு செய்ய தேவையான டிப்ஸ் பற்றி குறிப்பிடும் இவரது இடுகையில் நகைச்சுவையை கலந்திருக்கும் இவரது.. திறமை.... வியப்புக்குரியது.! எனது ஆஸ்த்தான ஹீரோவான.. ஜாக்கியை.. பற்றி.. இவர் எழுதிய ஜாக்கிசான்-அதிரடி ஆசான் என்ற இடுகை.. ஜாக்கியை பற்றிய... எனது தற்போதைய எண்ணங்களை பிரதிபலித்தது.. ஒருவேளை நீங்கள்.. ஆன்லைனில் நீங்கள் ஷாப்பிங் செய்பவராக இருந்தால்... இவரது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எப்படி என்ற இடுகையையும் கட்டாயம் வாசியுங்கள்...!

எனது இன்றைய அறிமுகம்... இவர்கள் மூவர்களோடு இத்துடன் இனிதே நிறைவுறுகிறது.. எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால்.. நாளையும்.. என்னை கவர்ந்த சில பதிவர்களோடும்.... ஏதாவது ஒரு புதிய தகவலோடும்.... மீண்டும் வருவேன்.! நன்றி.. மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்.!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது