பக்தி பழங்கள் (விநாயகர் தின சிறப்பு பதிவு )
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் . என்ன கொழுக்கட்டை ரெடியா ? நல்லா சாப்பிடுங்க , நாடு நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க . அப்படியே நான் ரொம்ப நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க .
இன்று நாம் பார்க்க போவது பக்தி பழங்களை . ஆம் பக்தி மணம் கமழும் பதிவுகள்உள்ள தளங்களை பார்க்க போகிறோம் .வாருங்கள்பார்க்கலாம் .
மாதவி பந்தல் :
சிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா? இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா? மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்! மாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி! அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது! மாதவிப் பந்தல் மேல், எங்கோ இருந்து வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, கீதம் இசைக்கின்றன! இந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே! என தன்னை பற்றி சொல்லும் இவரின் வலைப்பூவை பார்க்கலாம் வாங்க .





