பவளமல்லியைக் கோர்த்து விட்டு விடை பெறுகிறேன்.
➦➠ by:
Geetha Sambasivam
அடுத்து ஏற்கெனவே பல முறைகள் சொல்லி இருக்கும் ஒரு தளம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய தளம். இதனை ஆய்வு செய்து எழுதியவர் காந்தியவாதியான திரு தரம்பால் என்பவர். நம் நாட்டின் இன்றைய நிலைமைக்கு இத்தகைய ஆய்வுகள் தேவை என்பது என் கருத்து என்பதோடு இளைய சமுதாயம் பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவை நன்கறிந்து புரிந்து கொண்டால் இன்றைய இந்தியாவை சிறப்பான முறையில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். வழிகாட்டியாகவும் இருக்கும். திரு தரம்பால் 2006 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் தான் இறந்தார்.
இந்தத் தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இதன் செய்திகள் பரவலாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும். இவரின் "The Beautiful Tree" என்னும் புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டும். இதை இளைய நண்பர் திரு ஆமாச்சு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.
http://tinyurl.com/knf35cm/தரம்பாலின் படைப்புகள்
தரம்பால் குறித்த தளத்தின் சுட்டி
http://www.samanvaya.com/dharampal/தரம்பால்
இங்கே சென்று பார்க்கவும். ஆண்டவன் ஒருவனுக்கே அர்ப்பணம் செய்யப்படும் பவளமல்லியை ஒத்த இந்தத் தளத்தின் செய்திகள் அனைவருக்கும் சென்று பயனடையப் பிரார்த்திக்கிறேன்.
அடுத்து எனக்கு இணையம் வந்த சில நாட்களிலேயே அறிமுகம் ஆன மழலைகள் தளம்.
http://www.mazhalaigal.com/tamil.php/மழலைகள்
தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளி வரும் இந்த இணைய இதழ் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் எழுதி வரும் அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள். தமிழ் மழலைகளில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் புராணக்கதைகளில் இருந்து அறிவியல் தகவல்கள் வரை அனைத்தும் அளிக்கப் படுகிறது. ஆங்கிலத்திலும் அவ்வாறே தரப் படுகிறது. தமிழ் மழலைகளில்
"http://www.mazhalaigal.com/ பிள்ளையார் பாட்டி
என்ற பெயரில் என் படைப்புகளைக் காணலாம். அதோடு மற்ற எழுத்தாளர்களின் படத்துக்கு நேரே சுட்டினால் அவர்களின் படைப்புகளைக் காண முடியும்.
http://www.mazhalaigal.com/management/team/team-001/mglta007gss_geetha.php/
என் படைப்புகளை இந்தச் சுட்டியில் காணலாம்.
இதை நிர்வகிப்பது திரு ஆகிரா என்னும் ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர் பொறியியலில் பட்டம் வாங்கி சில ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர் வேலையை விட்டுவிட்டுப் பல தளங்களையும் நிர்வகித்து வருகிறார்.
இன்று வரையிலும் தொடுத்த கோர்த்த பூச்சரங்களில் தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு அடுத்து வரப் போகும் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடை பெறுகிறேன்.
ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம்.