07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 10, 2013

தாழம்பூ மணக்குது! தொடுக்க இயலாது! பறிக்கலாம் வாங்க!

அடுத்ததாக மறைந்திருக்கும் தாழம்பூப் புதர்களில் இருந்து தாழம்பூ மலருகையில் வெடித்துக் கிளம்பும் மணம் எங்கும் பரவுவது போலப் பரவ வேண்டிய சில பதிவுகள்.  இவை அனைத்தும் கலைப்பதிவுகள். சில தொழில் நுட்பப் பதிவுகள்.  என்றாலும் தொழில் நுட்பமும் ஒரு கலை தானே! முதலில் ஒரு ஓவியக் கலை குறித்த பதிவு.

இது ஆங்கிலத்தில் இருக்கிறதாலே வலைச்சரத்தில் ஒத்துப்பாங்களானு தெரியலை;  என்றாலும் இந்த உயர்ந்த கலை அனைவருக்கும் தெரியணும்னு கொடுக்கிறேன். திரு ராகவேந்திர ப்ரசாத் என்னும் இளைஞரால் வரையப்படும் இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.  அதுவும் அந்தப் பிள்ளையார்!  ஆஹா!  தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் இருக்காராம்.  நீங்களும் பாருங்களேன்!

 http://raga-artblog.blogspot.in

  http://raga-artblog.blogspot.in/2013/04/vighnaharta.html/Art Blog

அடுத்ததும் கிட்டத்தட்ட ஓவியம், சிற்பம் சம்பந்தப் பட்ட பதிவு தான்.  இவரைக் குறித்து அநேகமாய் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  என்றாலும் மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.  சிங்கைவாசியான திரு விஜயின் ஆர்வம் சோழர், பல்லவர், முற்காலச் சோழர், பாண்டியர் காலச் சிற்பங்கள், சிலைகளைத் தேடி எடுத்து அவை குறித்த புராணக் கதைகளோடு பகிர்வதோடு அல்லாமல் எந்த எந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற குறிப்பையும் தருகிறார்.  சிலைகள் திருட்டுப் போவதைத் தடுக்கவும் முயன்று வருகிறார்.  திவாகர் மூலம் அறிமுகம் ஆன இவரின் பதிவுகள் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வருகின்றன.  இவரின் ஒரு சில பதிவுகளின் புராணக் கதைகளை நான் தொகுத்து அளித்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.  தற்சமயம் இவரோடு தொடர்பு இல்லாவிட்டாலும் பதிவுகளைப் பார்க்கத் தவறுவதில்லை.  பின்னூட்டம்  எப்போவாவது கொடுக்கிறேன். :)))


http://poetryinstone.in/lang/ta/2009/03/05/seduction-of-the-deer-headed-sage.html

இங்கே ரிஷ்ய சிருங்கர் குறித்த சிற்பங்களையும் நான் தொகுத்து அளித்த விளக்கங்களையும் காணலாம். தற்சமயம் அவருக்கும் நேரமில்லை; எனக்கும்! :))))

http://poetryinstone.in/lang/ta/கல்லிலே கலைவண்ணம் கண்டோம் சிங்கப்பூர் விஜய்

அடுத்து இணையத்துக்கு வந்த நாளில் இருந்து நண்பரான திரு விழியன் என்னும் உமாநாத்.  சிறந்த புகைப்படக் கலை நிபுணர்.  இவரின் படங்களை இவரின் பதிவுகளில் கண்டு அசந்து போயிருக்கேன். எங்க வீட்டுக்கு வரேன்னு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகச் சொல்லிட்டு இருக்கார்.  வந்தால் தான் நிச்சயம்.  காமேஷ் கல்யாணத்தின் போது நேரில் சந்தித்தேன். குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதில் நிபுணர்.  குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். இவரின் செல்ல மகள் குழலியும் ஒரு குழந்தை எழுத்தாளர்.  அவளின் மழலை மொழியில் பல கதைகளைச் சொல்கிறாள் இப்போதே.


அவருடைய புகைப்படப் பதிவுகளின் சுட்டியை மட்டுமே எடுக்க முடிந்தது. அங்கே சென்றால் உங்கள் விருப்பம் போல் எந்த ஆல்பத்தை வேண்டுமோ திறந்து பார்க்கலாம்.

  http://vizhiyan.wordpress.com/vizhiyan-clicks/விழியன் பக்கம்/

அடுத்துக் கோலங்கள் உதயன்.  இவரும் அருமையாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். மதுரைக்கருகிலுள்ள சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று அரிய புகைப்படங்களை எடுத்து வருகிறார்.  அவற்றில் பலவும் அடங்கும்.  அந்தக் காலச் சமணப்பள்ளிகள், படுக்கைகள் போன்றவற்றையும் எடுத்துள்ளார்.  அனைத்தும் மூதாதையரைத் தேடி என்ற தலைப்பில் தொகுத்து வருகிறார்.

 http://udhayan-photos.blogspot.in/ உதயனின் உதார்கள்/

 உதயனின் உதார்கள் என்ற பதிவுகளில் இவற்றைக் காணலாம்.  இவருடைய கோலங்கள் குறித்த தளத்தின் சுட்டியின் வழியே அந்தத் தளம் கிடைக்கவில்லை.

அடுத்ததாக நாம் ஏற்கெனவே பார்த்த கவிதைகளிலும், தூதுக்குறளிலும் கலக்கிய திரு துரை அவர்களின் புகைப்படத் தொகுப்புகள். இவரும் அரிய பல காட்சிகளைப் படமாக்குவதோடு ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் அவங்க வீட்டு சமையல் காட்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்வார். :)))))

http://www.flickr.com/photos/duraian/ துரை ந.உ.

அடுத்துத் திரு தங்கம் பழநியின் வலைப்பூ தொழில் நுட்பம்.

http://www.tholilnutpam.com/தொழில் நுட்பம்

சில வருடங்களாகப் படித்து வருகிறேன்.  அதிலும் முக்கியமாய்ப் ப்ரின்டர் தகராறு செய்தால் இந்தப் பதிவைப் படிப்பேன். புரியுதா என்னங்கறது வேறு விஷயம். :)))

http://www.tholilnutpam.com/2013/11/HP-OfficeJet-Pro-3620-with-ePrint4-and-HP-mobile-printing-apps-8.html/

அடுத்து தி.வா. வின் "தொண்டு கிழங்களுக்கு கணினி" வலைப்பூ.  இவரும் பல அரிய தகவல்களைத் தருகிறார்.  ஸ்க்ரீன் ஷாட்டெல்லாம் எடுத்துப் போட்டு மெனக்கெட்டு நேரத்தைச் செலவழித்து என் மரமண்டையில் ஏற்றப் பார்ப்பார்.  ஆனால் மண்டையில் ஏறாது என்பதே உண்மை.  எதையும் ஒரு முறை நேரில் பார்க்கணும் என்று எனக்குத் தோணும்.  அதிலும் முக்கியமா மின்னாக்கம் செய்யும் வழிமுறைகள். நேரம் அவருக்குக் கிடைப்பது கஷ்டம். பார்க்கையில் கேட்கவெனப் பல கேள்விகள் வைச்சிருக்கேன்.  ஆனால் எப்போவோ பார்க்கும்போது அது எல்லாமும் மறந்துடும். :)))

இதைப் பலரும் அறிமுகம் செய்திருக்காங்க என்றாலும் தொண்டு கிழம் அல்லாத என் மூலம் அறிமுகம் ஆவதில் பெருமை அடைகிறேன். இளைஞர்களுக்கு கணினி னு சொல்லி இருந்தால் புரிஞ்சிருக்குமோ? சந்தேகமா இருக்கு! :)))

http://techforelders.blogspot.in/தொண்டு கிழங்களுக்கு கணினி

அடுத்தது ஒரு முக்கியமான தளம் கணியம்.

திரு ஶ்ரீநிவாசன் என்பவரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு பல இளைஞர்களால் எழுதப்பட்டு வெளிவரும் இந்த இதழில் எளிய தமிழில் லினக்ஸ் இயங்கு தளம் குறித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள்.  இங்கே பார்க்கவும்.

http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/எளிய தமிழில்

மேலும் இவற்றை க்ரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடுவதால் யார் வேண்டுமானாலும் காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடலாம்.  திருத்தவும் திருத்தலாம்  வணிக ரீதியிலும் வெளியிடலாம்.  ஆனால் மூலப் புத்தகம், அதன் ஆசிரியர், http://www.kaniyam.com/ ஆகியன பற்றிக் குறிப்பிடுவதோடு மற்றவர்களுக்கும் இதே உரிமையைத் தர வேண்டும்.  வெளியிடுவதை க்ரியேடிவ் காமன்ஸ் பெயரில் வெளியிட வேண்டும்.

அவ்வளவு ஏன்?  உங்கள் பதிவுகளைக் கூட நீங்கள் இம்முறையில் மின் புத்தகமாக வெளியிடச் செய்யலாம்.  உங்கள் பதிவுகளில் காப்பி ரைட்டுக்கு உள்ளாகும் பதிவுகள் இல்லாமல் சொந்தப் பதிவுகளாய் இருந்தால் க்ரியேடிவ் காமன்ஸ் மூலம்  வெளியிட்டு அனைவரையும் பயனடையச் செய்யலாம்.

அடுத்துக் கீழுள்ள சுட்டி இன்று (9--11--13) தற்செயலாகப் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இது.  திரு ஶ்ரீநிவாசன் (கணியம்) இதழின் பொறுப்பாசிரியர் குழுமத்துக்கு அனுப்பி இருந்த சுட்டிகளில் படித்தேன். நீங்களும் படிச்சுப் பாருங்க.  :)))

http://othisaivu.wordpress.com/2013/10/19/post-267/ஒத்திசைவு

இதிலே மூன்றாவது பகுதி வந்தாலும் முதலிரு பகுதிகளுக்கான சுட்டியும் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  படித்துவிட்டுக் கருத்துப் பரிமாற்றம் செய்யவும்.  நன்றி. :)))))))

அடுத்ததாக இளைஞர் விநோத் ராஜனின் புதிய ஆக்கம் அவலோகிதம்.  அது குறித்து அவர் கூறுவது:

அவலோகிதம் - ஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். உள்ளிடப்பட்ட உரையினை தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய யாப்பு உறுப்புக்களை வெளியிடும். இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினையும் கண்டுகொள்ளும்.
பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்கள் தமிழ் மொழியை அகத்தியருக்கு உபதேசித்தவராக கருதிய, சர்வபுத்தர்களின் மஹாகருணையின் உருவகமாக விளங்கும் பகவான் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரரின் பெயர் இம்மென்பொருளுக்கு இடப்பட்டது.
இம்மென்பொருள் பெ.ஹெச்.பி'ல் [PHP] இயற்றப்பட்டு கூகிள் ஆப் இஞ்ஜினில் இயங்குகிறது. இதற்கு ரெஸ்ட் ஏ.பி.ஐ'யும் உள்ளது. கூடவே டெர்மினலில் இருந்தும் இதை செயல்படுத்தலாம்.
நீங்கள் இம்மென்பொருளினை விரும்பி, அதற்கு உதவ விரும்பினால் கீழ்க்கண்ட பே-பால் இணைப்பை சொடுக்கவும் அல்லது எனது அமேசான் விருப்ப-பட்டியலில்உள்ளதையும் கொடுக்கலாம் !
இம்மென்பொருள் தற்போது கிட்ஹப்பில் உள்ளது. நீங்கள் இந்த மென்பொருளின் வளர்ச்சியில் பங்களிக்க விரும்பினால், நிச்சயம் செய்யலாம்.
இது ஒரு கட்டற்ற மென்பொருள்.

தளம் - http://www.avalokitam.com/

மூல நிரல் - https://github.com/virtualvinodh/avalokitam

ஆக்கம் - வினோத் ராஜன்.

31 comments:

 1. நல்ல அறிமுகங்கள். இன்று எல்லா சுட்டிகளையுமே உடனே திறந்து பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நேற்று வரை சொன்ன சுட்டிகளைத் திறந்து பார்க்கவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்னி ஹை! :)))))

   Delete
 2. இன்று "அறிமுகம்" ஆன வலைப்பதிவுகள் தங்கசுரங்கங்கள் .

  இது போன்ற வலைகள் தான் வலைச் சரத்தில் எடுத்துக் காட்டப்படவேண்டியவை.

  நன்றி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஐயா, வலைச்சரம் தொடுக்கும் நபர்களிடமே சுட்டிக்காட்ட வேண்டுமென நினைப்பேன். அப்புறம் வேறு வேலைகளில் மறந்தே போயிடும். பாராட்டுக்கு நன்றி. நேற்றைய பதிவைப் பார்த்தீர்களா? உங்கள் பதிவின் சுட்டியைக் கொடுத்திருக்கேன். :)))

   Delete
 3. வணக்கம்
  அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் தொடருகிறேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. வணக்கம்

  வாருங்கள் அன்புடன்...புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
  உயிரில் பிரிந்த ஓவியமாய்(கவிதையாக)
  http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக்கு நன்றி ரூபன். வந்து பார்க்கிறேன்.

   Delete
 5. மிக்க நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. வெறும் நன்றி தானா? :P :P :P

   Delete
 6. அவசியமான அறிமுகங்கள் . நன்றி .

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பப் பதிவுக்கு வந்தீங்க. இப்போ முடிக்கிற சமயமும் வந்திருக்கீங்க. விடை பெறும் முன்னர் மாலை வெளியாகும் பதிவையும் அவசியம் பாருங்க. :))))

   Delete
 7. தங்கத்தில் பொறிக்கப்பட வேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. தங்கத்தில் பொறிக்கப்பட வேண்டிய பதிவுகளின் அறிமுகம். இல்லையா? இதான் சரி! :))))

   Delete
 8. ஆச்சரியத்துடன் மிரண்டு போய்விட்டேன். சற்று நேரத்திற்கு முன் ஒரு கல்லூரி பேராசியருடன் தமிழ் சார்ந்த மென்பொருள் முயற்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். உங்களின் அறிமுகம் கிடைத்தது. மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜோதிஜி, என் அறிமுகத்தால் உங்களுக்குப் பயன் ஏதும் இல்லை. :))) பதிவுகளின் அறிமுகம் பலன் தரும். நன்றி.

   Delete
 9. இன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள்.

  இனிமேல் தான் ஒவ்வொறு தளமாகப் போய்ப்பார்க்கணும்.

  தாழம்பூ மணத்துடன் பதிவினைத் தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வைகோ சார், இவை அனைத்தும் முக்கியமான பதிவுகள். ஒரு முறை சென்று பாருங்கள். நன்றி.

   Delete
 10. தாழம்பூ மணம் இல்லம் முழுதும் மெல்லிய உணர்வாக பரவும். சரியான தேர்வுகள் தான். திவாஜியை தெரியும். வினோத்ராஜன் 'ஓஹோ' என்ற பெரிய காரியத்தை மெளனமாக செய்த இளைஞர். அவருக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் அவருக்கே தெரியாது. அந்த விஷயத்தில் நான் தான் தாழம்பூ!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். நீங்கள் தாழம்பூவும் தான். வருகைக்கு நன்றி "இ"சார்.

   Delete
 11. தாழம்பூவாய் மணக்கும் பதிவர்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.’உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
 12. அறிமுகம் செய்த தளங்கள் எல்லாமே எனக்குப் புதியவை.. மெய்யாலுமே.. உடனே போய் பார்க்கிறேன்... ரொம்ப நன்றிம்மா..

  ReplyDelete
 13. எனது வலைபதிவை அறிமுகபடுதியற்கு மிக்க நன்றி !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராகவேந்திர பிரசாத், வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 14. தாழம்பூ பதிவர்களில் சிலர் தெரிந்தவர்கள் சிலர்புதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. விநாயகரின் ஓவியம்.. உண்மையில் ஒரு காவியம்!.. அற்புதம்.. தாழம்பூவின் மணம் - மனம் எல்லாம் நிறைகின்றது

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் துரை. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. பல தளங்கள் எனக்குப் புதியவை.....

  படிக்கிறேன்.....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது