07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 15, 2013

சுவைமொட்டுகளுக்கு விருந்தளிக்கலாம் வாங்க

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் 

இன்று நாம் மிகவும் முக்கியமான விசயத்தை பற்றி பேசப் போகிறோம். நாம இத்தனை உழைக்கரதும், கஷ்டப்படரதும் இதுக்காக தாங்க. என்னனு யோசிக்கிறீங்களா??? கொஞ்சம் பொறுங்க. அனுபவ காலமான (20 - 30வயது) பார்த்துட்டு வந்துடலாம்.

இந்த வயதில் நமக்கு கிடைப்பது எல்லாம் அனுபவங்கள் தான். நிறைய புதிய பொறுப்புகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். துணை, குழந்தைகள், உறவினர்களுக்கிடையே மாட்டி, முழி பிதுங்கி, பல நேரங்களில் நமது சுயத்தையும் இழக்க நேரிடும். எல்லா நோயும் மெதுவா தலையக் காட்டரது இந்த காலகட்டத்தில் தாங்க. வாழ்க்கையை  திட்டமிட்டு அழகாக நகர்த்துகையில் தீடீரென்று நோய்கள் தாக்கினால் எல்லாமே தவிடுபொடிதான். ஆரோக்கியமான உணவு இல்லாததே நோய்களுக்கான முக்கிய காரணம். இப்ப புரிந்து இருக்குமே எதைப் பத்தி பேசப்போறோமென்று. ஆரோக்கியமான உணவு என்ன என்பதையும், சில உணவு செய்முறைகளையும் தான் இன்னைக்கு பார்க்க போறோம். எல்லோரும் இப்ப அடுக்களைக்கு போகலாமா??

வெங்காயத்த உரிக்க பயந்துட்டு சமையல்கட்டு பக்கமே எட்டிப் பாக்காத பொண்ணு சமையல் நல்லா பண்ணுதேனு ஆச்சரியப்பட்ட அம்மாக்கு நான் சொன்ன பதில் இதுதாங்க.
“மகளுக்கு சமைக்கத் தெரியாது இருக்கலாம்,ஏன் மனைவிக்கு கூட சமைக்க தெரியாது இருக்கலாம்...ஆனா எல்லா அம்மாக்களுக்கு கண்டிப்பா சமைக்க தெரியும்”. ஸங்கீத் குட்டிக்காக கத்துகிட்டது தாங்க சமையல். இப்ப ஓரளவு நல்லா சமைக்கரேனு மாமா சொல்லரதுக்கு காரணம் இணையம் தாங்க. வலைப்பக்கங்களும், யூ ட்யூபும் தான் கைகொடுக்குது என் சமையலுக்கு.

பிரச்சனைக்களுக்கு காரணமும், பிரச்சனைகளுக்கான முடிவும் இந்த சமையல் கட்டுல தாங்க இருக்கு. அறுசுவைக்கு மயங்காத ஜீவன் இனிமேல் பொறந்துதாங்க வரனும். சுவை மட்டும் போதுமானா... இல்லைங்க ஆரோக்கியமான உணவு ரொம்ப முக்கியம். அரோக்கியமான உணவு எப்படி இருக்கனும் என்ற விளக்கத்தை இந்த பிரமிட் மூலமா அழகா சொல்லி இருக்காங்க.

1) அறுசுவை
உணவு வழிகாட்டி கூர்நுனி கோபுரம்
இந்த அறுசுவை வலைப்பக்கத்தை கண்டிப்பா படிச்சுபாருங்க. இங்கே ஆரோக்கிய உணவு செய்முறைகள் பத்தி அழகா விளக்கி இருக்காங்க. கேழ்வரகு வைத்து எத்தனை விதமாக சமைக்கலாம் என்பதை அறிய
கேழ்வரகு . இங்கே சமையல் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. படித்து ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடுங்கள்
இது வெளியூரில்  சமைத்து சாப்பிடும் எல்லா சகோதரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
2. வனப்பு
சந்திரகெளரி இந்த வலைப்பக்கத்தில் தேவையான பலதகவல்களை பகிர்ந்துள்ளார். இவரது பத்திய அட்டவணை மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது.
நீரிழவு நோய் குறித்து விளக்கி அதற்காக நாம் சாப்பிட வேண்டியவை குறித்தும் அழகாக விளக்கியுள்ளார்

-------------------------------------------------------------------------------------------------
3. கோவை2தில்லி
ஆதிவெங்கட் இந்த வலைப்பக்கத்தில் அனுபவம், நினைவுகள் என்று நிறைய பதிவு செய்து இருந்தாலும் என்னை இழுத்தது இந்த சமையல் பதிவுகள்தான். முதலில் கோவை என்ற வார்த்தைதான் இந்த வலைப்பக்கத்தை பார்க்கும் ஆவலை தூண்டியது. உள்ளே போய் பார்த்ததும் அசந்துவிட்டேன். அவரது எழுத்துக்கள் எளிமையாகவும் ஈர்ப்பவையாகவும் இருக்கிறது.
சமையல்
பொறுமையா படிச்சுபார்த்து, பிடித்தது செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்
-------------------------------------------------------------------------------------------------
4. அடுப்பங்கரை
இந்த வலைப்பக்கத்தில் குழம்பு வகைகள் மிகவும் எளிமையான வகையில் செய்ய சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும ருசியாகவும் இருக்கிறது . இதில் சிலவற்றை நான் சமைத்துள்ளேன். சமையலுக்கான நல்ல வலைப்பக்கம்.
குழம்பு வகைகள்
-------------------------------------------------------------------------------------------
5. தெய்வ சுகந்தி

கல்லூரி நாட்கள் முதலே நல்ல தோழி. இவங்க வீட்டு சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். கம்பயன் ஸ்டடி என்று சொல்லி இவங்க வீட்டுக்கு போய் நல்லா சாப்பிட்டு வருவேன். ஆனா அப்ப எல்லாம் எப்படி செய்யனும் என்று கேட்க தோன்றியதே இல்லை. சமையல் செய்ய ஆரம்பித்த பிறகு “கேட்காம இருந்துட்டோமே” என்று வருந்தியதுண்டு. சுகனோட இந்த வலைப்பக்கம் பார்த்ததும் அத்தன சந்தோசம் எனக்கு. ஏதாவது சிற்றுண்டி செய்ய மண்டைய பிச்சுக்கும் போது ஓடிப் போய் பார்க்கரது இவ லின்க் தான்.
சிற்றுண்டிகள்
சுகனின் எல்லா ரெசிப்பிகளும் அருமையாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
இன்று இத்தோடு விடைபெறுகிறேன். எங்கேனு கேட்கரீங்களா??????? நேரா சமையல்கட்டுக்கு தான். மீண்டும் நாளை சிங்கை கவிஞர்களோடு சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.


 

26 comments:

 1. அழகிய தொகுப்பு....

  வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  ReplyDelete
 2. நாம் பின்பற்றும் உணவுமுறை தான் நம் ஆரோக்கியத்தின் ஆணிவேர் . அதை நினைவூட்டும் விதமாக உங்களுடைய இவ் வலைத்தொகுப்பு மிகச்சிறப்பு.
  பாராட்டுகள் அனிதா.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க.....உங்கள் உதவியால் தான் இது சாத்தியமாயிற்று.

   Delete
 3. சமையல் குறித்த பதிவர்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தன்பாலன். நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளையும் பார்வையிடுங்கள்

   Delete
 5. ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றை இன்று அறிமுகபடுத்திருக்கிறீர்கள் அனைத்தும் அருமை. கடைகளில் விற்கப்படும் ஆயத்த உணவுகளுக்கும், ஆங்காங்கே விற்கப்படும் துரித உணவிற்கும் மக்கள் அடிமையாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றிய பகிர்வுகள் அனைத்தும் யாவர்கும் பயனுள்ளதாக அமையுமென்பதி சந்தேகமில்லை. இன்றய சரத்தில் இடம்பெற்ற உணவுகள் அனைத்தும் நல்ல சுவை. வலைச்சரம் இன்று அறுசுவை உணவுடன் களைகட்டியுள்ளது சரத்திற்காக இன்று விதவிதமாக சமைத்து பகிர்ந்த அனிதா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 6. ஆரோக்கிய, சுவை உணவு தளங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க...

  ReplyDelete
 7. நல்ல பதிவு, சமையலைப் பற்றி ஏதும் தெரியாதென்றாலும், நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டுமெனத் தெரியும். பதிவிற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுமன். கத்துக்கோங்க சமையலை......

   Delete
 8. ஆரோக்கியம் என்பது அடுப்பங்கரையில் இருந்து தான் தொடங்குகின்றது. அதை முன்னிறுத்திய தகவல்களுடன் - அருமையான பதிவு!..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க துரை செல்வராஜூ

   Delete
 9. நல்ல சரம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. 1) பிச்சினிக்காடு இளங்கோ

  2) ஷா நவாஸ்

  3) கவிஞர் நெப்போலியன்

  4) கோபாலக் கண்ணன்

  5) கோவி.கண்ணன்

  6) சி. கருணாகரசு

  7) ஜெயந்த்

  waiting New Links....

  Thanks...

  அன்புடன் DD

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்தவர்களா????

   Delete
 11. //வெங்காயத்த உரிக்க பயந்துட்டு சமையல்கட்டு பக்கமே எட்டிப் பாக்காத பொண்ணு சமையல் நல்லா பண்ணுதேனு ஆச்சரியப்பட்ட அம்மாக்கு நான் சொன்ன பதில் இதுதாங்க.
  “மகளுக்கு சமைக்கத் தெரியாது இருக்கலாம்,ஏன் மனைவிக்கு கூட சமைக்க தெரியாது இருக்கலாம்...ஆனா எல்லா அம்மாக்களுக்கு கண்டிப்பா சமைக்க தெரியும்”. ஸங்கீத் குட்டிக்காக கத்துகிட்டது தாங்க சமையல். இப்ப ஓரளவு நல்லா சமைக்கரேனு மாமா சொல்லரதுக்கு காரணம் இணையம் தாங்க//

  அதுமட்டுமல்ல.....

  முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
  கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
  குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
  தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
  இனிதெனக் கணவ னுண்டலின்
  நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.

  இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது....நல்ல அறிமுகவுரை...வாழ்த்துக்கள் அனிதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா...உங்க ரசம் மறக்கவே மாட்டோம்

   Delete
 12. சத்தான சமையல், சுவையான சமையல், ஆரோக்கியத்திற்கான சமையல், ஆயுளை நீடிக்க சமையல், உடலுக்கு ஊறுவிளைவிக்காத சமையல் என தற்கால மனிதனின் இயந்திர வாழ்க்கைக்கு உணவே மருந்து என்ற அடிப்படையிலான இந்த பதிவு அனைவரும் பின்பற்ற வேண்டியது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஜான் அண்ணாவா??????? நன்றிங்க

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது