07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 28, 2013

கடலடியில் புதைந்து போன எகிப்திய நகரம்

அனைவருக்கும் வணக்கம், இது கடலடி ஆய்வை பற்றிய ஒரு பதிவு.

மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion ) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும், தங்க தகடுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர். ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியா) பகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.

tks to Huffworldpost

அலாவுதினும் அற்புத விளக்கா ?

அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள், இந்த இடமானது (Thonis-Heracleion) உலக அளவிய துறைமுகம் மட்டுமல்ல, மத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.

கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் :

64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள், தங்க காசுகள், பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்க) இவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள், கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்து, சுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போல) விலங்குகள்.

இதேபோல தமிழக கடல் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும், இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)
படகுகள் பறப்பது போல் தோற்றம் தரும் இந்த காட்சி, மினோர்காவில் (ஸ்பெயின்)  எடுக்கப்பட்டது.படித்தால் தள்ளுபடி

பிரேஸில் நாட்டு சிறை கைதிங்களுக்கு ஒரு சலுகை இருக்காமா அதாவது ஒரு புத்தகத்தை படிச்சு கட்டுரை எழுதிக் கொடுத்தா 4 நாட்கள் அவனுடைய தண்டனை காலத்தில் சலுகை.
நம்மாளா இருந்தா என்ன செய்வான்.  யாரையாச்சும் புடிச்சு நிறைய புத்தகங்களுக்கு ரிப்போர்ட் தயார் செஞ்சு கொடுத்து ஈஸியா வெளில போயரலாம்னு நினைப்பான்.
ஆனா அதுக்கும் ஆப்பு வெச்சு இருக்காங்க என்னன்னா அதிக பட்சம் வருசத்திற்கு 48  நாட்கள் மட்டும் தான் தள்ளு படி.சுனாமியால் அழிந்தது போக எஞ்சியிருக்கும் சோழர் கால கலங்கரை விளக்கம்.  இடம் : கோடியக்கரை (tks to wikipedia)

"எல்லோரையும் போல நானும் இருந்துவிடுவதென்பது மிகமோசமான விசயமாகவே இருக்கமுடியும். அதனை நான் வெறுக்கிறேன்."
~ ஆர்னால்டு.  (tks to Ilangovan Balakrishnan)


 "உலகத்தை மாற்ற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர்கள் தான் உண்மையில் அதனைச் செய்தும் விடுகிறார்கள்"வண்ணத்துப்பூச்சி என்றவலைத்தளத்தில் மணிக்கணக்காக பார்த்து ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சட் சட் என்று ஓரிரு வரிகளில் சேனல் மாற்றித்தருகிறார் நண்பர் ஜீவன்சுப்பு

 ஹை(ய்யோ)க்கூ..!  (ஹைகூவை இந்த அளவு யாரும் கூவலேன்னு நினைக்கிறேன் )

கண் தெரிந்தும்
தடவுகின்றான்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!

ஹைகூவுக்கான இலக்கணம் இதில இருக்கிறாப்பல தான் தோனுது.

பிளாக்குல ட்வீட்டு ...!

ஜவுளிக்கடை கண்ணாடி முன் புதுத்துணியை போட்டுப் பார்க்கும்பொழுது கேவி.ஆனந்த் பட ஹீரோ மாதிரி தெரியும் நான் , அதே துணியை வீட்டுக்கண்ணாடி முன் போட்டுப்பார்க்கும்பொழுது பாலா பட ஹீரோ மாதிரி தெரிகின்றேன். // கண்ணில் பிரச்சினையா , கண்ணாடியில் பிரச்சினையா ....? //
இத படிக்க இங்க சொடுக்குங்க : நிலாச்சோறு - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...! ,


கதம்ப மாலை : சாய்ரோஸ் சென்னை வலைப்பதிவர்

அறிவியல் பகிர்வுகள் படிக்க படிக்க ஓ போட வைக்கின்றன.
லியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு!  

நெசமா இது ஒரு முழு வரலாறுதான் இத மூச்சு விடாம படிங்க. (மண்டை சூடான அதுக்கு நான் பொருப்பில்ல சும்மா..) என்னை மிகவும் கவர்ந்த ஒரு பதிவு.

உலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்  (தகவல்கள தேடி தேடி கொடுத்திருக்கார் ...இன்ட்ரஸ்டிங்)
                                                                   ****
நாம்  அறிந்திராத வரலாற்று தகவல்களையும் புகைப்படமாக அள்ளி வழங்கி இருக்கிறார் காணாமல் போன கணவுகள் ராஜி. நாம ஒரு இடத்துக்கு போறம் இந்த மாதிரி ஆய்வில் ஈடுபடுகிறோமா ? என்று நம்மை திகைக்க வைக்கிறார்.
                                                                      ****
தமிழன் மறந்து போன பறவைகள், விலங்குகளின் பெயர்கள் நம்மை திகைக்க வைக்கிறது தலைகீழ் விகிதங்களில் அசினின் ரசிகர் வவ்வால் !!!


உலைவாயை மூட முடியுமா (சமீபத்திய பதிவு)

                                                                    ****

ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?  நண்பர் முரளியின் மூங்கில் காற்றில்.


செப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக்கங்கள்  இதுவும் ஒரு நிழல் ஆராய்சி பதிவு, ( தொடர்புடைய பதிவை  படித்தால் தான் புரியும்)

                                                                   ****
நிழலின் நீளம் அறிவோமா?  இது சமரச உலாவும் இடமே... பதிவர் சார்வாகன் அவர்களின் பதிவு.
                                                                  ****

இப்பதிவைப் படித்தால் மண்டை குளிர்ச்சியடையும்; வழுக்கைத் தலையிலும் முடி முளைக்கும்!!!  சவால் விடுபவர் பதிவர் ஜெயதேவ்தாஸ்.

                                                                 ****

அபுசி தொபசி  என்ன இது (வார்தைகளின் முதல் எழுத்து சுருக்கம்) அரசியல், புத்தகம், சினிமா,தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிரிப்பு இப்படி பல பரிமாணங்களையும் வாரம் ஒரு முறையாக முறையாக தரும் செல்லப்பா யோகசுவாமி அவர்களின் வலை பக்கம் செல்லப்பா தமிழ் டைரி, கிளாசிக் தகவல்கள் படிக்க சுவாரஸ்யம்.


அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் விவகாரங்களை இந்த லிங்கில் அலசுகிறார்

                                                            ****

நுணுக்கமாக கட்டுரைகளை தருபவர்  மூண்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்
சமீபத்தில்  விண்வெளிச் சாகுபடி  ரசிக்க வைத்த பதிவு

                                                            ****
மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே..

அன்புடன்,

கலாகுமரன்.

27 comments:

 1. மின்வெட்டு... பிறகு வருவேன்...

  ReplyDelete
 2. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.... தங்களது தொகுப்பு மிக அருமை...

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கு நன்றி D.D ;)

   Delete
 4. கலாகுமரன்,

  //தமிழன் மறந்து போன பறவைகள், விலங்குகளின் பெயர்கள் நம்மை திகைக்க வைக்கிறது தலைகீழ் விகிதங்களில் "அசினின் ரசிகர் வவ்வால்" !!!

  ஹி...ஹி ..நல்ல அறிமுகத்திற்கு நன்றி!


  ரொசெட்டா கல்வெட்டு பற்றிக்கூட ஒரு பதிவு போட்டிருக்கேன்.

  # எகிப்திய வரலாறு ,மற்றும் கிடைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் என பிரமிக்க வைப்பவை, அத்தகைய ஆதாரங்கள் நம்மிடம் இல்லாமலே "கல் தோன்றி மண் தோன்றா காலம்னு" பேசிட்டு இருக்கோம், நமக்கும் அப்படிலாம் தொல்லியல் வரலாறு இருக்கா ,எல்லாம் கடலோடு போச்சா, கரைக்கு வந்த பின் எதுவுமே கட்டலையானு எனக்கு எப்பவுமே சந்தேகமாவே இருக்கும், ஏற்கனவே ஒரு வரலாற்று தொடர் ஆரம்பித்து விட்டு ,தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சது இன்னும் முடியலை, எகிப்திய ,இந்திய வரலாறு என தொடரலாம்னு பார்க்கிறேன் ,நடக்க மாட்டேங்குது அவ்வ்!

  ReplyDelete
  Replies
  1. எகிப்திய வரலாறு ,மற்றும் கிடைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் என பிரமிக்க வைப்பவை, அத்தகைய ஆதாரங்கள் நம்மிடம் இல்லாமலே "கல் தோன்றி மண் தோன்றா காலம்னு" பேசிட்டு இருக்கோம், நமக்கும் அப்படிலாம் தொல்லியல் வரலாறு //தமிழனுக்கு பல்வேறு காலகட்டங்களில். சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறான் யாதும் ஊறே யாவறும் கேளீர் ""வெறும் வார்த்தையாக எனக்கு தெரியவில்லை. இயற்கை சீற்றங்களும் தன் பங்குக்கு கொண்டு சென்று விட்டன. தமிழன் யாவற்றிலும் முன்னோடி என்லாம். ஆதாரங்களின்றி வெறும் பேச்சு வீனே.. பண்டைய எகிப்தியரை பற்றி அடுத்து ஒரு பதிவு போடுகிறேன், விரிவாக இல்லை , நன்றிங்க வவ்வால்.

   Delete
 5. அறிமுகங்கள் சுவாரசியமான நடையில் உள்ளது. எனது பதிவுகளையும் அறிமோப் படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 6. * சுவாரசியமானஅறிமுகங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நிஜாமுதீன்

   Delete
 7. நல்லதொரு ஆய்வுப் பதிவு சகோ! அருமை!
  நிறையப் புது விடயங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்!

  இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. இன்றைய அறிமுகங்கள் அருமை...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
  www.99likes.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நவ்சின்கான்

   Delete
 9. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கு நன்றி

   Delete
 10. நன்றி கலாகுமரன் ..!

  ReplyDelete
 11. அறிமுகத்துக்கு நன்றி.
  அபுசிதொபசி - சுவாரசியமாக இருக்கிறது. நன்றி.

  ReplyDelete
 12. அறிமுகப் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் !!

  ReplyDelete
  Replies
  1. நானே நானே தான் , நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது