07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 11, 2013

அறிமுகப் படலம்
எல்லோருக்கும் இதயம் கனிந்த வணக்கங்கள் 

முதலில் சீனா ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. கேட்ட ஒவ்வொரு முறையும், தவணைப் பத்திரத்தை நீட்டிய போதும் முகம்சுழிக்காமல்முடிந்த போது எழுதுங்கள்என்று கூறி ஊக்குவித்த பண்பிற்கு எனது நன்றிகள் பல.
தோணும்போது எழுதித் தள்ளுவதும்....தோணாதபோது ஒரு மாதம் கூட எழுதாமல் இருப்பது என கட்டுப்பாடுகளே இல்லாமல் எழுதிப் பழகிய பிறகு முதன் முறையாக ஒரு வாரம் தொடர்ந்து பொறுப்பாசிரியராக இருக்கிறேன் என வாக்கு கொடுக்கும் போது ரொம்பவே உதறத்தான் செய்தது உள்ளுக்குள்.
விதி வலியது தான் போலும்.

என்னைப் பற்றிய அறிமுகம் என்று சொன்னதும் முதலில் தோன்றியது 

ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறதுஅப்புறம்  
ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்
 எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்
சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன்
நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி  மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) 
 இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தைபாவம் மோகன்
மோகன் யாருனு யோசிக்றீங்களா???

யோசிக்கவே யோசிக்காதிங்க. கடந்த 7 ஜென்மமா கடும் தவமிருந்து என்னை வாழ்க்கைத் துணையா அடைந்த என் கணவர்தான் . நான் செய்யும் செயல்களுக்கு (அறக்கட்டளை மற்றும் எழுதுதல்) எனக்கு உறுதுணையாக நின்று ஊக்குவிக்கும் அவருக்கு ஒரு நன்றி சொல்லலாமானு நினைக்கும் போதே, நமக்கு நாமே நன்றி சொல்லுவோமா என்று உள்ளே ஒரு பட்சி குரல் கொடுக்க, பெரும் காதலை தெரிவித்துக் கொண்டு நான் இதுவரை கிறுக்கியதில் சிலதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அதுக்கு முன்னால நான் வலைத்தளம் துவக்கிய கதையை பாத்துடலாம் வாங்க 

எதுக்கு எழுதனும் என்று வியாக்கியானம் பேசிட்டு இருந்த என்னை எழுத வைத்த பெருமை ஒரு நண்பனையே சாரும். அவரு யாருனு உள்ள இருந்து ஒரு கேள்வி வருதா???? அப்படியே காத்திருக்க சொல்லுங்க...உடனே சொன்னா சஸ்பென்ஸ் போயிடுமே. எங்கன விட்டேன். முகநூலில் தான் முதல் கிறுக்கலை ஆரம்பித்தேன். அப்புறம் அதே நண்பரின் நச்சரிப்பு தாங்காமல் ஒரு வலைத்தளத்தை ஓபன் பண்னி அதுக்கு பேர் வைக்கரதுக்குள்ள உயிரே போயிருச்சு...... யாருக்குனு கேட்கரீங்களா?????? நம்ம நண்பருக்கு தான். அவர் சொன்ன அத்தனை பேரையும் நிராகரிச்சுட்டு நாம வைச்ச பேர் தான்
எண்ண ஓவியம்  (அவர் இதவிட நல்ல பேர் சொன்னார்ங்கிறது வேறு விசயம்).

மெருகேத்துதல்இந்த வார்த்தை எங்க கேட்டாலோ, பார்த்தாலோ இந்த நண்பன் நியாபகம் தான் வரும். ”மெருகேத்து உன் எழுத்தை, சோம்பேறியா இருக்காதஎன்று தினமும் அர்ச்சனை செய்து இன்று சில பேர் நல்லா எழுதறேனு சொல்லற அளவு எழுதறதுக்கு காரணம் இந்த நண்பன். இவங்க 2 பேர் பெயரையும் அப்புறமா சொல்லரேன்....சரி சரி இப்ப வாங்க என்னோட வலைத்தளத்தை பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

என்னோட தாத்தா பற்றி தான் முதன் முதலா எழுதினேன். சிந்திக்க கற்றுக்கொடுத்தவர், நான் IAS ஆகனும் என்ற அவர் கனவை நிறைவேத்த முடியாதது ஒரு ஓரத்தில் இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது எனக்கு.
தாத்தாவின் கடைசி நிமிடங்களை இதில் பதிந்து இருப்பேன். தாத்தாவின் இடம் இன்னும் இட்டு நிரப்பமுடியாத காலி கோப்பையாகவே இருக்கிறது.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் தோழமைகளே......
--------------------------------------------------------------------------------------------------------------------

 புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. இக்கதை எழுதும் போது நான் புற்றுநோயால் இழந்த நெருக்கமானவர்களின் பிம்பங்கள்..... கண்களை நிறைத்து முற்றுப்புள்ளியில் என் துளி கண்ணீரும் கலந்த நொடி அது.
மரணத்தை கம்பீரத்துடன் ஏற்றவளாக கவிதா வலம் வருவாள் இக்கதையில்.
 புற்று நோயுடன் போராடி வரும் அனைவருக்குமாய் ஒரு நிமிடம் பிராத்தனை செய்து கொள்வோம் வாருங்கள். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

நான் எழுதுவதை என்றுமே கவிதையென்று சொல்ல மனம் ஒப்புவதில்லை எண்ண வெளிப்பாடுனு சொல்லிக்கரேன். நான் சமீபத்தில் கிறுக்கியதுஇருத்தலை உணராமல்” இதைப் படிச்சுட்டு தலைய பிச்சுக்குகாம இருந்தா சரி.
 
ஒற்றை வார்த்தைக்காக இதையும் அப்படியே படிச்சுருங்க......நேரம் இருந்தால் மத்தவற்றையும் படிச்சுட்டு கருத்துக்கள் சொல்லுங்க. திட்டனும் நினைக்கரவங்க தனியா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க(இன்னும் 10 வருசத்துக்கு நேரம் ஒதுக்கமுடியாது...ஏன்னா....ஏன்னா...அத்தன பேர் கியூல வைட்டிங்)
---------------------------------------------------------------------------------------------------------------------

 மெளனச்சிதறல் என்ற தலைப்பில் சிலதை கிறுக்கி இருக்கிறேன். சும்மா விளையாட்டுக்காக நாலு வரிகளில் எழுத ஆரம்பித்து இப்ப 4 வரிக்கு மேல எழுதவே வரமாட்டேங்குதுனா பாருங்களேன்.இவை முகநூலில் மெளனச்சிதறல் என்ற பக்கத்தில் இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 மலரும் நினைவுகளென என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுத்துக்களாக்கி இருப்பேன்.  என்னைப் பத்தி தெரிஞ்சுக்கனுமா....படிங்க இதை.
மயக்கம் போட்டு விழுந்தீங்கனா கம்பெனி பொறுப்பாகதுங்க....எதுக்கும் முன்னெச்சரிக்கையா சொல்லிட்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------------ 
பின் குறிப்பு : நண்பர்கள் பேர் சொல்லாமயே போரேனு நினைக்கரீங்க தானே. நண்பர்கள் பற்றியும் அவங்க வலைத்தளத்தை பற்றியும் 6வது நாள் தனி பதிவே போடரேன். அப்ப படிச்சு தெரிஞ்சுக்கோங்க. நாளையில் இருந்து நான் படித்து இரசித்த சில வலைத்தளங்களை உங்களோடு பகிர்கிறேன்.

 

 


50 comments:

 1. வாழ்த்துகள் அக்கா... எல்லாமே சூப்பரா இருந்துச்சு. அழகான அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி காயத்ரி.......உன்னோட பட்டாம்பூச்சிக்கு இணையாகுமா ?????

   Delete
  2. தமிழ்மணம் இணைக்க தெரியாதா...?

   Delete
  3. :).....ஆமாங்க...சீனா ஐயா செய்து தருவதா சொன்னார்.....இப்போது இணைத்துவிட்டார்.

   Delete
 2. வலச்சரத்தின் இந்தவார ஆசிரியை அனிதாராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அனிதா அவர்களே தங்களின் அறிமுகப்படலமே இவ்வளவு அமர்களமாக இருக்கிறதே அப்படியானால் இனி வரும் 6-நாட்களும் வலச்சரம் நிச்சயமாக காளை கட்டுமென நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நானும் நேரம் கிடைக்கும்பொழுது வலைச்சரம் பக்கமாக வந்து பார்த்துக்கொள்கிறேன். தங்களால் சரத்தில் கோர்க்கப்படும் மலர்கள் பற்றியும், அம்மலர்களின் மணம்பற்றியும் அறிந்திட ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடருங்கள் தங்களின் நற்பணியை. இதெல்லாம் எழுதிவிட்டு ஒருமுக்கியமான விசயத்தை விட்டுவிட்டேனே சரி அதையும் சொல்லிவிடுகிறேன், இங்கு எதற்காகவோ தனியா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க என எழுதப்பட்டுருந்தது அந்த அப்பாயிண்மண்டை இந்த அப்பாவிக்கும் வழங்குங்கள் இன்னும் 10 ஆண்டு என்ன தங்களின் நட்பை மனதில் சுகமாக சுமந்தபடியே 100 ஆண்டுகளானாலும் காத்திருக்கலாம் என்பதற்காகவே. (நட்போடு திட்டுவதிலும் திட்டு வாங்குவதிலும் தனி சுகமே அதனால்தான் திட்ட இவ்வளவு விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கிறதென நினைக்கிறேன்).

  என்றென்றும் நட்புடன்
  ஆனந்த்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த்...உங்கள் அன்பிற்கு முன் எல்லாம் சிறிதாகத்தான் இருக்கும். திட்டுவதற்காகவே ரொம்ப நாளா காத்திருந்தீங்க போல

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 3. வாழ்த்துக்கள் டா அனிதா .....

  ReplyDelete
  Replies
  1. நன்றி மீரா........தோழியின் வாழ்த்து புது உற்சாகத்தை தருகிறது

   Delete
  2. வலச்சரத்தின் - வலைச்சரத்தின்

   வலச்சரம் நிச்சயமாக காளை கட்டுமென - வலைச்சரம் நிச்சயமாக கலை கட்டுமென...


   (ட)ல்மில் என்றும் வாழும்... !!!!!

   Delete
 4. வாரம் சிறப்புற வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் ஆசிரியை!
  கலக்குக்குங்க!

  கூடவே வலைப்பக்கத்திலும் கொஞ்சம் தொடர்ந்து எழுதுங்க! :)

  ReplyDelete
 6. வணக்கம்

  தங்களைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது அத்தோடு உங்கள் வலைப்பூ பக்கம் சென்று பார்த்தேன் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் இந்த வாரம் வலைச்சரத்தில் சிறப்பாக அசத்த எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ரூபன்.........கண்டிப்பாக நன்றாக படைக்க முயற்சி செய்கிறேன்

   Delete
 7. சுய அறிமுகம் நன்று... தெளிவுடன் அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தனபாலன்.....நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்து.

   Delete
 8. Replies
  1. எனக்கு புரியவில்லை....ஏதோ அவசரத்தில் கருத்து பதியும் போது சிறிது எழுத்துப்பிழை. இதில் தவறாக எடுக்க என்ன இருக்கிறது என்று புரியவில்லை.......

   Delete
 9. அனிதா அம்மா.. இனிய அறிமுகம்!
  நீங்கள் எனக்கு புதிய அறிமுகம் ... தங்கள் வலையையும் பார்வையிட்டு வந்தேன்..
  ..ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
  www.99likes.blogspot.com
  ♥... கணினி தகவல் ...♥

  ReplyDelete
 10. உங்கள் வலைச்சரம் அறிமுகம் மிகச்சிறப்பாக இருக்கிறது. உங்கள் எழுத்தும், அதன் உள்ளே ஓடும் ஒரு துள்ளோட்டமும் எப்போதுமே ஒரு அழகு. உங்கள் வலைப்பக்கமும் போனேன். நிறைய இயருக்கிறது படிக்க. ஒன்றொன்றிலும் என் கருத்தை பதிவு செய்வேன். உங்கள் தமிழ்ப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள். இனியும் எதிர்பார்ப்புகளுடன்,....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுமன். கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன்

   Delete
 11. வணக்கம்.. நான் இன்றுதான் இந்த பக்கத்தை முதன்முதலாக எட்டிப் பார்க்கிறேன்... முகநுால் கிணற்றிலிருந்து முதலில் வெளியேற வேண்டும்.. வெளியே பெரிய பெரிய நீர்நிலைகள் எல்லாம் இருக்கிறது.....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அரங்கன். உங்கள் எழுத்துக்கள் விரைவில் உங்களை நல்ல இடத்திற்கு இட்டுச் செல்லும். ரொம்ப அருமையா எழுதரீங்க

   Delete
 12. வாழ்த்துக்கள் சகோதரி...
  தொடருங்கள்... தொடர்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. அண்ணா தங்கை எழுதும் போது முதல்ல வந்து கருத்து போடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க. ரொம்ப நன்றி குமார்.

   Delete
 13. அழகான அறிமுகம்,வாழ்த்துக்கள்,கலக்குங்க

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்க சதாசிவம்

   Delete
 14. நன்றிங்க “தனிமரம்”

  ReplyDelete
 15. இந்த வாரம் முழுதும் சிறப்புடன் பணிபுரிய என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நிஜாமுதீன்

   Delete
 16. நல்ல நயத்துடன் இனிய தொடக்கம்!.. வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க. உங்கள் வாழ்த்து மனம் மகிழ வைக்கிறது

   Delete
 17. தங்களின் புதிய களத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...இந்த வாரம் முழுக்க இந்த வலைதளத்தை படிப்போர் எல்லாம் தங்களை பாராட்டும்படியாய் தங்கள் பணியை செவ்வனே செய்வீர்கள் என நம்புகிறேன்... இனிக்க சொல்லுங்கள், இனியவைகளை சொல்லுங்கள், இதுவரை யாரும் சொல்லாதை சொல்லுங்கள், உங்களால் இதுவரை இயலாமல் போனதை இயன்றதே எனும்படியாய் இந்த வாரத்திற்குள் சொல்லுங்கள்.. வாழ்க வளமுடன் .....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நீங்கள் சொன்னதை நினைவில் நிறுத்தி என்னால் முடிந்தவரை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்... நன்றிங்க

   Delete
 18. வாழ்த்துகள் அனிதா(தெய்வா!) shared name between us:))

  ReplyDelete
  Replies
  1. நன்றிடா சுகன். மறக்க முடியாத நினைவுகளடா அது....இப்ப தெய்வா என்கிற பெயர் யாருமே அழைக்காத ஒன்றாகி விட்டது. ஸ்ங்கீத் அப்ப அப்ப கூப்பிட்டு நியாபகப்படுத்தரான். நிஜமா யாராவது அந்த பேர் சொல்லி அழைக்க மாட்டாங்களானு ஏங்குதுபா. உன் வாழ்த்து என் எழுத்துக்கு பெரும் ஊக்கத்தை தருதுடா.....ரொம்ப நன்றிடா

   Delete
 19. சுய அறிமுகம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.

   Delete
 20. அன்பின் அனிதா ராஜ் - சுய அறிமுகப் பதிவு நன்று - தங்களீன் சிறந்த ஆறு பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் - அவர்ற்ரைச் சென்று பார்த்து இரசித்துப்படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் ஆங்காங்கே இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்க ஐயா....முடிந்தால் மற்றவைகளையும் படித்துப் பார்த்து குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

   Delete
 21. வாழ்த்துக்கள்! அறிமுகம் சிறப்பு! தொடருங்கள் செவ்வனே! நன்றி!

  ReplyDelete
 22. உங்களின் வலைப் பக்கம் வருகிறேன் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் தோழி

   Delete
 23. சிறப்பான சுய அறிமுகம். இதுவரை உங்கள் எழுத்துகளை படித்ததில்லை. இனிமேல் படிக்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க...கண்டிப்பா படிச்சுட்டு கருத்து சொல்லுங்க

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது