07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label MGR. Show all posts
Showing posts with label MGR. Show all posts

Sunday, August 17, 2014

வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!!


வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு எனது இனிய காலை வணக்கங்கள. கடந்த ஆறு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
            உண்மையில் இந்த ஆறு நாட்களாக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அதிகம்!  கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பிற்காக ஆசிரியருக்கும், வாத்தியாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
      இன்றைய அறிமுகங்களுக்கு/பதிவுகளுக்கு செல்வோமா?
1.கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி-13: “மற்ற ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு!” என்ற NSK அவர்களின் பாடல்வரிகளுக்கொப்ப சிரிப்பைப்பற்றிய ஒரு வலைப்பூவை அறிமுகம் செய்யும் விருப்பம் ஏற்பட்டதால் இந்த அறிமுகம்!  தளிர் சுரேஷ் அவர்களின் வலைப்பூவிற்குப்போய் சிரிச்சிட்டு வாங்க!
2.அவல் உருண்டை: செவிக்கும் கண்ணுக்கும் மட்டுமே உணவிட்டால் வயிற்றுக்கு ஈவது எப்போது? அப்பப்ப எதாவது உள்ளாற தள்ள வேண்டாமா? சீசனுக்கு தகுந்தமாதிரி கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் உருண்டை சாப்பிட என் சமையல் அறையில் – கீதா ஆச்சாள் அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று வாருங்கள்!
3.”கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி”:
தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தில் சித்தப்பா மகளுடன் இணைந்து பாடும்  பாசம் பொங்கும் பாடல்! நாகேஷ் எத்தகைய குணச்சித்திர நடிகர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு! பாசக்காரப் பொண்ணுங்களப் பெத்தவங்களுக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்பவே புடிச்சிடும்னு நம்புறேன்! கேட்கும்போதெல்லாம் எனது அண்ணன் மகள்களின் பாசத்தை நினைவுபடுத்தி என்னை சிலிர்க்கச் செய்யும் உன்னதப் பாடல். கவிஞர் வாலியின் வைர வரிகளில் உருவான மயிலிறகால் வருடும் பாடலை வாசிக்கவும் சுவாசிக்கவும் ‘கிணற்றுத் தவளை’யின் வலைப்பூவிற்கு தாவிக்குதித்துச் செல்லுங்கள்!
4.மனிதன் மனிதனிடம் : நான் எனது முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தபடி ஒரு பாடலையோ கவிதையையோ தமிழ்ப்படுத்துவது என்பது அவரவர் கற்பனைத்திறனையும் சொல்லாடும் திறனையும் பொறுத்தே அமைகிறது! அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த ரெகே பாடகரான பாப் மார்லேயின் பாடலை இங்கே தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார் ஷாஜி! ஒன்றிரண்டு அப்பட்ட வார்த்தைகளை தவிர மிகவும் ரசிக்கும் வண்ணமே பிரவாகம் அமைந்துள்ளது! ஷாஜியின் வலைப்பூவிற்குள் சென்று பாப் மார்லேயின் கவித்துவத்தையும் ஷாஜியின் சொற்களின் பிரவாகத்தை  ரசியுங்கள்
5.துண்டிப்பு – ராஜ சுந்தர்ராஜன்: எல்லாவற்றிலிருந்தும் வேறாகிப்போன நிலை எவ்வாறிருக்கும் என்பதனை உணர்த்தும் பாமரத்தனமான வார்த்தைகளாலமைந்த கவிதை. காணக்கிடைத்த வலைப்பூ “அரியவை”!
6.மொழம்: ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பொதிந்திருக்கும் ஈரம் தோய்ந்த தாயுள்ளத்தை - சற்றே உரைநடை பாணியில் இருந்தாலும் ஒரு முழுமையான சிறுகதையையே கவிதையாய் வடித்ததைப்போல் கொடுத்திருக்கிறார்! படித்து முடிக்கையில் கண்ணோரம் லேசாய் கண்ணீர் குளம் கட்டுகிறது! ‘ஈர’த்தை உணர மாட்டிக்கொள்ளுங்கள் சகோதரி ராமலட்சுமியின் வலைப்பூவிற்குள்!
7. VGK – 31 முதிர்ந்த பார்வை: அன்பிற்குரிய வாத்தியார் வைகோ அவர்களின் இந்த வாரத்திற்கான சிறுகதை விமர்சனப்போட்டி கதைக்கான தலைப்புதான் இது! ரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும்!  அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்! போட்டின்னா உண்மையான போட்டி இதுதான்! மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க! வெற்றியாளர்கள் மாறி மாறி வந்து கிட்டே இருக்காங்க!  போன வாரம் நம்ப வலைச்சர ஆசிரியர் அன்பின் சீனா ஐயாவும் வாங்கியிருக்காரு!’ஆசிரியர்’ வந்து ‘ஸ்டூடன்ட’ நாக் அவுட் பண்ணிட்டாரு! அவரும் முழு மூச்சா இறங்குனாருன்னா? போட்டி பலமாகிகிட்டே போகுதுங்கோ! யார் வேண்ணாலும் இதுல கலந்துகுட்டு பரிச தட்டிகிட்டு பொயிடலாம்! விடா முயற்சியும் ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம்! வெற்றியாளரோட விமர்சனத்த பாத்தா உங்களுக்கே அது புரியும்!  நான் இன்னைக்கு இந்த இடுகைகள போட்டுற பொறுப்புக்கு வந்து இருக்கேன்னா அதுக்கு நம்ப வாத்தியார் வைகோஉடைய இந்த போட்டிதான் காரணம்னு அடிச்சு சொல்லுவேன்! (பசியில் உணவாய், பகையில் துணையாய் இருந்தால் ஊருக்கு லாபம்! அது அவருக்கு மிகவும் பொருந்தும்) நீங்களும் வாங்க கீழ இருக்குற வாத்யாரோட வலைப்பூவுக்கு! வெற்றிகளும் அதன் மூலமா பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு!

இது என்னுடைய படை(டி)ப்பிற்கான நேரம்!
பி()ண பா(போ)தை
பிணம் தின்னி
கழுகும் - கூட
உயிர் பிரிய -
காத்து நிற்கும்!
பிரியம் ஏதுமின்றி
பணமே அளவாகி
மனம் கொத்தும்
பா(போ)தையில்-
மூட மனிதர்கள்?!
MGR

அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன்  காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள் கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா  இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன் சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
 “வாழ்க்கை அழகானது!”- ஹெலன் கெல்லர்
கண் தெரியாத, காதுகேளாத, வாய்பேச முடியாதவராக (பின்னாளில் இதை மட்டும் தனது விடா முயற்சி மூலமாக மீட்டெடுத்தார்) இருந்த  இவருக்கே வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை இவ்வாறு இருந்திருக்க்கிறதென்றால்?!  நாம் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய உறுதிகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொண்டு எனக்கு பேராதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றிகூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்! ஏதோ எனக்கு தெரிந்தவரை, இட்ட பணியை செய்திருப்பதாகவே நம்புகிறேன்! சரியா என நீங்கள்தான் சொல்லவேண்டும்! நேரக்குறைவு மற்றும் அனுபவக்குறைவு காரணமாக மிக நல்ல பல வலைப்பூக்களை நான் விட்டிருக்கக்கூடும்! அவர்களுக்கு எனது வருத்தத்தைத்தெரிவித்துக்கொள்கிறேன்! வலை சொந்தங்கள் என்றும் தொடர்கதைதான்! இடங்கள் மாறும்! உறவுக்கதை – தொடர்கதையாய் – என்றும் தொடரும்!
நன்றி! நன்றி! நன்றி! வணக்கம்! ஜெய் ஹிந்த்!
உங்களிடம் பிரிய(யா) விடைபெறும்
உங்கள்
MGR


மேலும் வாசிக்க...

Saturday, August 16, 2014

வலைச்சரத்தில் ஆறாம் நாள்!!!!!!


வலைச்சரத்தில் ஆறாம் நாள்!!!!!!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு எனது இனிய காலை வணக்கங்கள. கடந்த ஐந்து நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
      நேற்றைய எனது கேள்விக்கு எடுத்த இடம், கோணம் இரண்டிற்குமே முதலில் சரியான பதிலளித்த கில்லர்ஜிக்கு எனது பாராட்டுக்கள்!  இதற்கு முன்னர் அமெரிக்காவில் வசித்துவரும் எனது தம்பி சுபாஷ் மட்டுமே சரியான பதிலளித்துள்ளான்! நீங்கள் இரண்டாவது! உங்களின் கூரிய பார்வைக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்!
 இனி இன்றைய அறிமுகங்கள்:

 1.கவிதை என்பது உணர்வு கடத்தி: கவிதை எழுதத்துவங்கும் எல்லோருக்குமே மனதில் எழும் கேள்வி “நல்லாத்தானே எழுதியிருக்கேன்?”, அதற்கு ஒரு பதில் – இவற்றையே ஒரு கவிதை வடிவில் அருமையாக தந்திருக்கிறார் திரு. ரமணி அவர்கள்! இது ஏதோ எனது மனதில் எழும்பிய கேள்விக்கு அவர் பதில் சொல்வதுபோலவே தோன்றியது! கவிதை என்றால் என்ன என்பதை இதைவிட எளிமையாக தெளிவாக எவராவது எழுதியிருக்கிறார்களா – தெரியவில்லை! 

http://yaathoramani.blogspot.in/2012/12/blog-post_10.html

2.எனக்குள் ஒருவன்: கண்ணீர் மன அமைதிக்கு தலைசிறந்த மருந்து! இவ்வாறு துவங்கி ஒரு தன்னாய்வுபோல படிப்பவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதத்தில் எழுதியுள்ளார்! அது பலருக்கும் பொருந்தும்படியாக சுவாரசியமாகத்தான் இருக்கிறது! விருமாண்டி, WWE சூப்பர் ஸ்டார் ஸ்டோன்கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் இதமாதிரி மெரட்டுற போட்டோவா போட்டு வச்சிருப்பாரு! பேரயோ அல்லது போட்டோவயோ பாத்து பயப்படாம உள்ளாற போங்க!

3. Why Speak Tamil : தலைப்புதான் ஆங்கிலத்தில் இருக்கிறது! வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் பேசும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தவேண்டும்; அது அவர்களாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்பொழுது எவ்வாறு பலனளிக்கும் என்பதனை அருமையாக எடுத்துச்சொல்லும் இடுகை! தாய்மொழியை மறக்கலாமா? அதையே குழந்தைகளுடனான உரையாடலுடன் இடையிடையே சேர்த்து சுவைபடகொடுத்திருப்பது அருமை!  மகள்களைப்பற்றிய எனது இடுகைகள் இவரைக் கவர்ந்ததன் ரகசியம் இப்பொழுது புரிகிறது! You go and see! மன்னிக்க! நீங்களும் போய்ப்பாருங்கள் சொக்கன் சுப்ரமணியனின் வலைப்பூவிற்குள்! இரண்டு அழகு, துறு துறு குட்டிகள் உங்களை வரவேற்பார்கள்!


4. ஓவியத்திற்குக் கவிதை: மரபுக்கவிதையா எழுதித்தள்ளுறதுல இவர் கில்லாடி! பேனாவ திறந்தாக்க கவிதை – கொட்டும்! வார்த்தை பிரவாகம் பேசும்! இது ஒரு உதாரணம்! கணக்கில்லாம எழுதித்தள்ளிய கணக்காயருடைய கொஞ்ச(சு)ம் படைப்புகளுக்கு இந்த மணிக்கதவினை தாழ் திறக்கச் செய்யுங்கள்!

5. சோழ மண்ணில்: கங்கைகொண்ட சோழபுரம்! நான் சென்றுவந்த வியக்கவைக்கும் இடங்களில் ஒன்று! மலைப்பை ஏற்படுத்தும், மனதுக்கு இதமளிக்கும் உன்னத இடங்களில் ஒன்று! அமைதிக்காக போர்தொடுத்த ராஜேந்திரசோழனின் பராக்கிரமங்களோடு அவன் கட்டிய கோயில், வெட்டிய குளம், மாளிகை (மேடு) என்று பயணம் அழைத்துச்சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்! கரந்தை ஜெயக்குமார் அவர்களின்
வலைப்பூவிற்குள் வாருங்கள்!

இன்றைக்கான எனது படைப்புகள்!
கடந்த காலம்!
குளத்தில் விசிறிய
குசும்புக் கல்லென
கலங்கச் செய்திடும்
துன்பம் எல்லாமே
துணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில் சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ()துவும் இங்கே
கடந்து போகும்!
எம்ஜிஆர்---
(பட உதவி - நன்றி கூகிள்)
பயன்()பாடு!
ஏற்றிவிடும் ஏணிகள்
படியேறுவதில்லை!
நாற்காலிகள் என்றும்
தாம் அமர்வதில்லை!
பாத்திரங்கள் ஒன்றும்
உணவருந்துவதில்லை!
சாலைகள் எங்கும்
பயணிப்பதில்லை!
பயன்படுத்தும் – மனிதன்?
பலன் ஒன்றுமில்லை!
எம்ஜிஆர்---
(பட உதவி - நன்றி கூகிள்)

மீண்டும் நாளை சந்திக்கும்வரை உங்களிடம் அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் MGR




மேலும் வாசிக்க...

Friday, August 15, 2014

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்!!!!!


வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு
 எனது இனிய காலை வணக்கங்களும்
 சுதந்திரப் பொன்னாள் வாழ்த்துக்களும்!
கடந்த நான்கு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! குறிப்பாக வாத்தியார் விஜிகே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்!
 
1. சுதந்திர தினம்சுதந்திரம் பற்றிய வரலாற்றினை எளிமையா கொடுத்திருக்கிற கட்டுரை! சுவாரசியமா இருக்கு  சுதந்திரக்காற்றை (சு)வாசியுங்கள்
2. சுதந்திர தினம்இந்த கவிதையின் எளிமை என்னைக்கவர்ந்தது! ‘விஜய’குமார் பக்கம் போய்ப்பாருங்க்!
3. இந்தியா பற்றிய தகவல்கள் நம் பாரத நாட்டைப்பற்றி சின்சின்னச் செய்திகள் இங்கே இருக்கு!
4. வலைச்சர ஆசிரியரின் பேட்டி: என்னப்போல கத்துக்குட்டிங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! இன்னும் தமிழ் (சு)வாசிக்க போய்ப்பாருங்க! அன்பின் சீனான்னா – சும்மாதானா?
6. கா.ந. கல்யாணசுந்தரம்.
"வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !"
வாழ்க்கைல - ஒரே ஒரு ரூபாகூட கைல இல்லாம பசி பின்னிஎடுத்தா எப்படி இருக்கும்னு ஒரே ஒருதடவ அனுபவிச்ச எனக்கு இந்த கவிதையின் வலி(மை)யை உணர முடிகிறது-பிரமாதம்!!! என்ன தவம் செய்தோம், பிரிந்து செல்லும் பாதைகள், நட்பின் இலக்கணம், பாலில் நெல் ஹைக்கூ பாணி கவிதைகள் திரும்பிப் பார்க்கவைக்கின்றன!
7. விண்ணப்பம் - சாலைப் பணியாளர்களின் சிரமத்தை தொட்டுசெ(சொ)ல்லும் கவிதை!  மாரிமுத்துவின் வலப்பூவிற்குள் சென்று விண்ணப்பத்தைப் பார்வையிடுங்கள்
8. எது நாகரீகம்? நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்னு பாடுனத கேட்டிருப்போம்! ஆனா இவரோட பாணி “நீ முன்னாலே போன நான் உனக்கு முன்ன இருப்பேன்” ! என்ன ஒருதடவ கேட்டேபுட்டாரு! “இன்னாடா நீ வூட்லயே குந்திகினு இருக்க”ன்ற மாதிரி! போய்பாத்தாதான் தெரியுது இவரு காத்துமாதிரி எல்லா எடத்துலயும் பூந்துடுவாருன்னு!வெட்டி பந்தா’ எங்கே கொண்டுபோய் விடும்னு மட்டைக்கு ரெண்டு கீத்தா சொல்லியிருக்காரு! அதுல அருமையா ஹென்றி போர்டு, நேட்டிவிடியோட தெங்கச்சி சாமிநாதன் இவங்களோட வாழ்க்கைலேருந்துன்னு நல்ல உதாரணங்கள்வேற! இவரு தளத்த முழுசா சொல்லணும்னா – நேரம் பத்தாது! நீங்களே பொய் செல்ப் செர்விஸ்ல புடிச்சத எடுத்துக்குங்கோ! அவருதாங்க வலை= டபுள்-டி!
9. காற்றாலே தோற்றமிங்கே! “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று சொல்லாமல் சொல்லும் கவிதை! அடைபட்ட காற்றுக்கு(ம்) சுதந்திரம் கிடைத்தால் என்னாகும்? ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் காட்டும் விளையும் பயிர் பவித்ரா! வரிகளில் விரியும் வானவில்லுக்குச் சென்று ‘காற்றின் தோற்ற’த்தைக் காணுங்கள்!
10. சி. ஜெயபாரதன், கனடா. தாகூரை விரும்பாத கவிஞன் உண்டா ரசிகன்தான் உண்டா? தமிழ்ப்படுத்தப்படும் கவிஞர்களின் கவிதைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வார்த்தைப் பிரவாகத்தைத் தூண்டும்! மொழிபெயர்ப்பின் வலிமையே அதுதானே!
ஜெயரதன் தமிழில் என் மனதிற்கு நெருக்கமான தாகூருக்கு அளித்த கீதாஞ்சலி கீழே! இந்த சுதந்திர தினப்பொன்னாளில் இதனைப் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்! கவியோகி தாகூரைப்பற்றி மேலும் அறிய கீழே உள்ள வலைப்பூவிற்குள் ப்ரவேசியுங்கள்!

இது எனது படைப்புகளுக்கான நேரம்!

 
உரிமை!
உளுத்துப்போன
‘நிலை’ ஆனாலும்
உடைந்துபோன
ஜன்னல் ஆனாலும்
பூட்டிய பூட்டு
எடுத்தியம்பும்
மிஞ்சிய வீட்டின்
‘பத்திர’ நிலை!
 (ஆக்கம் & புகைப்படம் ரவிஜி---)
 
தேடல்!
எந்தன் சுயம்
காணும் விருப்பத்தில்
எனது தேடல்கள்--!
நிழலை
கண்ணுற்றேன்!
நிஜத்தினில்-
எப்போது…?
(ஆக்கமும், புகைப்படமும்
புகைப்படத்திலும் – எம்ஜிஆர்)
(இந்த புகைப்படம் எங்கே எப்படி எடுக்கப்பட்டது என்பதனை முதலில் சரியாக சொல்பவருக்கு நாளை பாராட்டு தெரிவிக்கப்படும்)
 சுதந்திரக்காற்றை சுவாசித்து மீண்டும் நாளை சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுவது 
உங்களின்
அன்பு
MGR
மேலும் வாசிக்க...

Thursday, August 14, 2014

வலைச்சரத்தில் நான்காம் நாள்


லைச்த்தில் நான்காம் நாள்!!!!
அன்பின் வலைச்சொந்தங்களுக்கு எனது இனிய காலை வணக்கங்கள்! கடந்த மூன்று நாட்களில் வலைச்சரத்திற்கு வந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்திவரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! நானும் கொஞ்சம் கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறேன்! இன்றைய மெனு என்னன்னு பார்க்கலாமா?
1. என்னுடைய வலைப்பூவில் நான் எழுதிய ஒரு கவிதைக்கு பயன்படுத்திய அதே படத்திற்கு இவரின் கவிதை பார்த்து மகிழந்தேன்!  இரண்டாவதோ - தலைப்பே கவிதை! நீங்களே செல்லுங்கள்--- மகிழ்நிறை வலைப்பூவிற்கு விடுமுறையின் வித்தியாசத்தை நீங்களும் அனுபவியுங்கள்!

(i) எங்கள் விடுமுறை நாட்கள்! http://makizhnirai.blogspot.com/2013/08/blog-post_31.html

2. இப்படி ஒரு வெரைட்டியா என்று அசந்து போகச் செய்த வலைப்பூ! அருமையான கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, ஹெலன் கெல்லர் பற்றிய இடுகை, மகள்களின் மீது அளப்பரிய பாசம் கொண்டவர்களை புன்னகைக்கச் செய்யும் ஒரு கவிதை--- மிச்சத்த நீங்களே சகோதரி கீதமஞ்சரியோட வலைப்பூவுக்கு போய் படிச்சுக்கோங்க! இவங்கல்லாம் போட்டியில பரிச அள்றாங்கன்னா ஆச்சரியமே இல்ல! இவங்க எழுதுன கவிதைய யாராச்சும் கைமாத்தா கெட்டாக்க அதுலயும் ஆச்சரியம் இல்ல!

 (i) கவிதைக்கைமாற்று! https://plus.google.com/116170104301961496548/posts

 (ii)ஆசிரியர் செய்த பிழை!ஆஸ்திரேலிய காடுறைக்கதை!

(ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய “The Master’s Mistake” என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்) http://geethamanjari.blogspot.in/2014/07/7.html

(iii)அதிசயப்பெண்மணி ஹெலன் கெல்லர்! http://geethamanjari.blogspot.in/2012/06/blog-post.html
(iv)பெரிய மனுஷி ஆகிவிட்டாளாம்!  http://geethamanjari.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
3. சிலர் கை நடுக்கத்துலயும், சிலர் அவசரத்துலயும், சிலர் கட்டிங் அடிச்சதாலயும் புகைப்படம் blurr அடிச்சாக்க என்ன பண்றது.  போங்க PIT – தமிழில் புகைப்படக்கலை தளத்துக்கு! அத வச்சு படத்த கூர் தீட்டுங்க!  மாசா மாசம் புகைப்பட போட்டி வேற வச்சு ஜெயிச்சவங்கள கெளரவிக்கிறாங்க!  அப்படியே நீங்களும் ஒரு என்ட்ரி போடுங்க! நான் போட்டதெல்லாம் அப்பீட்ட்ட்…! இன்னும் கத்துக்கணும்கோ!
(i)Highpass Sharpening செய்வது எப்படி?
(ii) ஆகஸ்ட் மாத புகைப்பட போட்டிக்கான இணைப்பு கீழே! http://photography-in-tamil.blogspot.in/2014_08_01_archive.html
4. சில்லென்ற தூறலில் நனைந்த உணர்வைத்தருகின்றது இந்த “மழை துளி”.  அழகிய படங்களோடு போனஸாக பல கவிதைகளும் காணக்கிடைக்கின்றன!  மழைக்கு கீழ ஒதுங்கலாம் வாங்க பனித்துளி சங்கரோட வலைப்பூவிற்கு! அப்புடியே இன்னும் புடிச்சதயும் படிச்சுட்டு வரலாம்!
http://www.panithulishankar.com/2013/03/poet-panithulishankar-tamil-latest-best.html
இனிமதான் இருக்கு ஹீரோ வாத்தியாரோட என்ட்ரி!
5. கண்ணா--- ‘திருப்பதி லட்டூ’ தின்ன ஆசையா?
திருப்பதி லட்டுன்னா பூந்தி, நெய், முந்திரி, கிராம்பு, பச்ச கல்பூரம், திராட்ச, எல்லாம் போட்டு --- சொல்றப்பவே நாக்கு ஊறுதே! அதுமாதிரி பல சுவையும் நிறைஞ்ச கதைகளையும், கவிதைகளையும், சந்திப்புகளையும், காஞ்சி முனிவர் பத்தியும், இன்னும் என்ன்வெல்லாம் உண்டோ எல்லாம் கலக்கலா இருக்குற ஒரு இடம் உண்டு!  விமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு போட்டிய அறிவிச்சு, “என் கதைகள  விமர்சனம் பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும் கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி  பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய மனசு எல்லாருக்கும் வருமா? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGK. அவரு ஒரு பொடிமட்ட மாதிரி! தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு! சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு! சிந்திக்கவும் வைப்பாரு! எத சொல்ல? எத விட? அவருதாங்கோ தனது 600ம் இடுகைய வெற்றிகரமாக இட்ட ‘நம்ம வாத்தியார்’ வை. கோபாலகிருஷ்ணன் அவுங்க! என்னோட அதிர்ஷ்டம் என்னன்னா அந்த இடுகைல எனக்கும் முதல் பரிசு கிடைச்சதுக்கான அறிவிப்பு வெளியானதுங்கறதுதான்! இதவிட வேற என்ன வேணும்? கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும்!      எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு வாங்குனவங்க பட்டியல்ல! ஏங்க என்னையே ஊக்கப்படுத்தி எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி பரிசு வாங்க முடியாது? இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க! வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு பாருங்க!
     VGK வாத்தியாரே “நூறாண்டு காலம் வாழ்க”! வ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில் ஒருவன்” விரைவில் ஆகுக!  அன்பின் VGK அவர்களின் 600ம் இடுகையை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்!
600ம் இடுகை - வெற்றியின் வாசல் இதோ!
எனது நன்றி அறிவிப்பிற்கான இணைப்பு இதோ!
நம்ப வாத்தியாரோட பதிவுகள் எக்கச்சக்கம். சிலத மட்டும் இங்க பட்டியல் போட்டிருக்கேன்! அதுக்கே மூச்சு முட்டுது! மிச்சத்த நீங்களே வலைக்குள்ள போய் (சு)வாசிச்சுக்குங்கப்பு!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 
மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.htmlஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
காதல் வங்கி
மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
VGKஅவர்கள் தானே வரைந்த ஓவியத்துடன் கூடியது) 
ஜா தி ப் பூ
காதலாவது ...கத்தரிக்காயாவது!!
மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3 http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_24.html
கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!! http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html
தேடிவந்த தேவதை பகுதி 1 / 5
இனி துயரம் இல்லை
உடம்பெல்லாம் உப்புச்சீடை
ஐம்பதாவது பிரஸவம் 
மை டியர் பிளாக்கி + குட்டிக்குழந்தை தாலி 
வை. கோபாலகிருஷ்ணன் - பெயர் காரணம்
100வது பதிவு - இந்த நாள் இனிய நாள்
மலரும் நினைவுகள்:
நல்லதொரு குடும்பம்
அலுவலக நாட்கள்
என்னை வரவேற்ற எழுத்துலகம்
நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்
துபாய் பயணம்
கலைகளிலே அவள் ஓவியம்
ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா !
காது கொடுத்துக்கேட்டேன் ... ஆஹா
குவா குவா சப்தம்.
ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மிகச் சுலபமான வழி
தமிழ்மணத்தில் ஒரு வார நட்சத்திரப்பதிவராகி
தினம் 4 பதிவுகள் வீதம் அந்த வாரம் மட்டும் 28 பதிவுகள் வெளியிட்டு, அந்த வார TOP 20 LIST இல் FIRST RANK முதலிடம் வகித்தது, அந்த ஆண்டில் 15வது ரேங்க் வாங்கியது. அந்த வார முதல் பதிவு “ஜாங்கிரி” இணைப்பு:
நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி
முதல் ஆண்டின் முடிவினில் அளித்த 200வது பதிவு.
301வது பதிவு - பெரியதோர் பரிசு பெற்ற நாடக நிகழ்ச்சியுடன்
500வது பதிவு
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html 
மீண்டும் பள்ளிக்குப்போகலாம் 6-7 பாகங்கள் - ஆரம்பம்
http://gopu1949.blogspot.in/2012/03/1.htmlசிறப்புத்தொடர்
’பொக்கிஷம்’ சிறப்புத்தொடர் 12 பகுதிகள் - ஆரம்பம்
என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
அனுபவத்தொடர் - சுவாரஸ்யமான 4 பகுதிகள்.
அடடா என்ன அழகு ... அடையைத் தின்னு பழகு
போட்டியில் பரிசு பெற்ற சமையல் குறிப்பு
கடவுள் இருக்கிறாரா இல்லையா தொடரின் ஆரம்பம் - மொத்தம் 3 பகுதிகள்.
ஜயந்தி வரட்டும் - ஜயம் தரட்டும் - சிறப்பு ஆன்மிகத்தொடர் - ஆரம்பம் - மொத்தம் 108 பகுதிகள் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவர் பற்றிய வியப்பளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் [ Miracles ] பற்றி மெகா தொடர்.
ஆரம்பப் பகுதி: http://gopu1949.blogspot.in/2013/05/1.html
நிறைவுப்பகுதி: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html
 
இன்றைய எனது இடுகை!

 
எ()ன் காதலே…?!
நீ வெட்கம் கொண்டால்
புது ரோஜாக்களும் – நாணி
தடுமாறித் தன் தலை குனியும்.
உன் புன்னகை மிளிர்ந்திட்டால்
மொட்டவிழும் முல்லைகளும்
புறமுதுகிட்டுத் தோற்றோடும்!
உன் கண்கள் தாம் அசைந்தால்
வண்டுகளும் தன் இனமென்று
அருகே வந்து சுற்றி மொய்க்கும்.
உன் துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும் அயர்ந்துபோய்
படுக்கையில் ஓய்ந்து வீழும்.
நீ தளிர் நடை நடந்தாலோ
அன்னப் பறவையும் சற்றே
அசந்து அசைவற்று நிற்கும்.
உன் விரலழகைக் கண்டால்
காந்தள் மலர்களும் தன்
பொறாமையில் காந்தலாகும்.
தினமும் எனக்குக் கனா தரும்
என் கனவுலகில் உலாவரும்
ஆசை ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும் முகமறியா
மாங்குயி(ர)ல் ஆனவளே-
எங்கே பிறந்திருக்கிறாய் நீ?
ரவிஜி…@ மாயவரத்தான் எம்ஜிஆர்
(புகைப்படம் – நன்றி கூகிள்)

இன்றைய பகிர்வுகள்/இடுகை எப்படியென்று உங்களின் மேலான கருத்துக்களை அள்ளியிடுங்கள்! மீண்டும் நாளை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து நன்றியும் வணக்கமும் கூறிவிடை பெறுவது.
உங்கள் MGR

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது