07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 17, 2014

வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!!


வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு எனது இனிய காலை வணக்கங்கள. கடந்த ஆறு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
            உண்மையில் இந்த ஆறு நாட்களாக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அதிகம்!  கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பிற்காக ஆசிரியருக்கும், வாத்தியாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
      இன்றைய அறிமுகங்களுக்கு/பதிவுகளுக்கு செல்வோமா?
1.கொஞ்சம் சிரியுங்க பாஸ் பகுதி-13: “மற்ற ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு!” என்ற NSK அவர்களின் பாடல்வரிகளுக்கொப்ப சிரிப்பைப்பற்றிய ஒரு வலைப்பூவை அறிமுகம் செய்யும் விருப்பம் ஏற்பட்டதால் இந்த அறிமுகம்!  தளிர் சுரேஷ் அவர்களின் வலைப்பூவிற்குப்போய் சிரிச்சிட்டு வாங்க!
2.அவல் உருண்டை: செவிக்கும் கண்ணுக்கும் மட்டுமே உணவிட்டால் வயிற்றுக்கு ஈவது எப்போது? அப்பப்ப எதாவது உள்ளாற தள்ள வேண்டாமா? சீசனுக்கு தகுந்தமாதிரி கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் உருண்டை சாப்பிட என் சமையல் அறையில் – கீதா ஆச்சாள் அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று வாருங்கள்!
3.”கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி”:
தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தில் சித்தப்பா மகளுடன் இணைந்து பாடும்  பாசம் பொங்கும் பாடல்! நாகேஷ் எத்தகைய குணச்சித்திர நடிகர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு! பாசக்காரப் பொண்ணுங்களப் பெத்தவங்களுக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்பவே புடிச்சிடும்னு நம்புறேன்! கேட்கும்போதெல்லாம் எனது அண்ணன் மகள்களின் பாசத்தை நினைவுபடுத்தி என்னை சிலிர்க்கச் செய்யும் உன்னதப் பாடல். கவிஞர் வாலியின் வைர வரிகளில் உருவான மயிலிறகால் வருடும் பாடலை வாசிக்கவும் சுவாசிக்கவும் ‘கிணற்றுத் தவளை’யின் வலைப்பூவிற்கு தாவிக்குதித்துச் செல்லுங்கள்!
4.மனிதன் மனிதனிடம் : நான் எனது முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தபடி ஒரு பாடலையோ கவிதையையோ தமிழ்ப்படுத்துவது என்பது அவரவர் கற்பனைத்திறனையும் சொல்லாடும் திறனையும் பொறுத்தே அமைகிறது! அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த ரெகே பாடகரான பாப் மார்லேயின் பாடலை இங்கே தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார் ஷாஜி! ஒன்றிரண்டு அப்பட்ட வார்த்தைகளை தவிர மிகவும் ரசிக்கும் வண்ணமே பிரவாகம் அமைந்துள்ளது! ஷாஜியின் வலைப்பூவிற்குள் சென்று பாப் மார்லேயின் கவித்துவத்தையும் ஷாஜியின் சொற்களின் பிரவாகத்தை  ரசியுங்கள்
5.துண்டிப்பு – ராஜ சுந்தர்ராஜன்: எல்லாவற்றிலிருந்தும் வேறாகிப்போன நிலை எவ்வாறிருக்கும் என்பதனை உணர்த்தும் பாமரத்தனமான வார்த்தைகளாலமைந்த கவிதை. காணக்கிடைத்த வலைப்பூ “அரியவை”!
6.மொழம்: ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பொதிந்திருக்கும் ஈரம் தோய்ந்த தாயுள்ளத்தை - சற்றே உரைநடை பாணியில் இருந்தாலும் ஒரு முழுமையான சிறுகதையையே கவிதையாய் வடித்ததைப்போல் கொடுத்திருக்கிறார்! படித்து முடிக்கையில் கண்ணோரம் லேசாய் கண்ணீர் குளம் கட்டுகிறது! ‘ஈர’த்தை உணர மாட்டிக்கொள்ளுங்கள் சகோதரி ராமலட்சுமியின் வலைப்பூவிற்குள்!
7. VGK – 31 முதிர்ந்த பார்வை: அன்பிற்குரிய வாத்தியார் வைகோ அவர்களின் இந்த வாரத்திற்கான சிறுகதை விமர்சனப்போட்டி கதைக்கான தலைப்புதான் இது! ரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும்!  அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்! போட்டின்னா உண்மையான போட்டி இதுதான்! மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க! வெற்றியாளர்கள் மாறி மாறி வந்து கிட்டே இருக்காங்க!  போன வாரம் நம்ப வலைச்சர ஆசிரியர் அன்பின் சீனா ஐயாவும் வாங்கியிருக்காரு!’ஆசிரியர்’ வந்து ‘ஸ்டூடன்ட’ நாக் அவுட் பண்ணிட்டாரு! அவரும் முழு மூச்சா இறங்குனாருன்னா? போட்டி பலமாகிகிட்டே போகுதுங்கோ! யார் வேண்ணாலும் இதுல கலந்துகுட்டு பரிச தட்டிகிட்டு பொயிடலாம்! விடா முயற்சியும் ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம்! வெற்றியாளரோட விமர்சனத்த பாத்தா உங்களுக்கே அது புரியும்!  நான் இன்னைக்கு இந்த இடுகைகள போட்டுற பொறுப்புக்கு வந்து இருக்கேன்னா அதுக்கு நம்ப வாத்தியார் வைகோஉடைய இந்த போட்டிதான் காரணம்னு அடிச்சு சொல்லுவேன்! (பசியில் உணவாய், பகையில் துணையாய் இருந்தால் ஊருக்கு லாபம்! அது அவருக்கு மிகவும் பொருந்தும்) நீங்களும் வாங்க கீழ இருக்குற வாத்யாரோட வலைப்பூவுக்கு! வெற்றிகளும் அதன் மூலமா பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு!

இது என்னுடைய படை(டி)ப்பிற்கான நேரம்!
பி()ண பா(போ)தை
பிணம் தின்னி
கழுகும் - கூட
உயிர் பிரிய -
காத்து நிற்கும்!
பிரியம் ஏதுமின்றி
பணமே அளவாகி
மனம் கொத்தும்
பா(போ)தையில்-
மூட மனிதர்கள்?!
MGR

அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன்  காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள் கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா  இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன் சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
 “வாழ்க்கை அழகானது!”- ஹெலன் கெல்லர்
கண் தெரியாத, காதுகேளாத, வாய்பேச முடியாதவராக (பின்னாளில் இதை மட்டும் தனது விடா முயற்சி மூலமாக மீட்டெடுத்தார்) இருந்த  இவருக்கே வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை இவ்வாறு இருந்திருக்க்கிறதென்றால்?!  நாம் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய உறுதிகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொண்டு எனக்கு பேராதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றிகூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்! ஏதோ எனக்கு தெரிந்தவரை, இட்ட பணியை செய்திருப்பதாகவே நம்புகிறேன்! சரியா என நீங்கள்தான் சொல்லவேண்டும்! நேரக்குறைவு மற்றும் அனுபவக்குறைவு காரணமாக மிக நல்ல பல வலைப்பூக்களை நான் விட்டிருக்கக்கூடும்! அவர்களுக்கு எனது வருத்தத்தைத்தெரிவித்துக்கொள்கிறேன்! வலை சொந்தங்கள் என்றும் தொடர்கதைதான்! இடங்கள் மாறும்! உறவுக்கதை – தொடர்கதையாய் – என்றும் தொடரும்!
நன்றி! நன்றி! நன்றி! வணக்கம்! ஜெய் ஹிந்த்!
உங்களிடம் பிரிய(யா) விடைபெறும்
உங்கள்
MGR


14 comments:

 1. ஏழாம் நாளையும் வெகு அழகாக முடிச்சு ஒருவழியா ஒப்பேத்திட்டீங்க வாத்யாரே ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  கடைசியா ஏழாம் நாளில் ஏழாவதாக சொல்லியுள்ள அறிமுகமும் தகவல்களும் பலருக்கும் பயனளிக்கலாம்.

  அந்த அறிமுகத்தை ஆழ்ந்து படிப்பவர்கள் நரி முகத்தில் விழித்தவர்களாக்கும். ;)))))

  அதற்காக என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 2. // நாம் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய உறுதிகொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொண்டு எனக்கு பேராதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றிகூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்!//

  வலைச்சர ஆசிரியர் பதவி என்ற வடையிலிருந்து தான் விடைபெறுகிறீர்கள். இருப்பினும் சற்றே வருத்தம் தான்.

  ஆனால் இனி வாத்யார் பேரெழுச்சியுடன் நம் பக்கப் போட்டிகளில் வழக்கம்போலக் கலந்துகொண்டு பரிசுகளையும் வழக்கம்போலத் தட்டிச்செல்ல வேண்டும். இன்னும் 10 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

  தங்களை வலைச்சர ஆசிரியராக இங்கு பணியில் அமர்த்திவிட்டு, வலைச்சர தலைமை ஆசிரியர் [அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்] உங்கள் வேலையை அங்கு செவ்வனே பார்த்து பரிசினையும் தட்டிச்சென்று விட்டார்கள். ;)))))

  இதோ அதற்கான இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29-03-03-third-prize-winner.html

  ReplyDelete
 3. பி(ப)ண பா(போ)தை யும்
  அப்பாவின் அம்மாவும் அருமை.

  படங்களெல்லாம் அதைவிட அருமை.

  பாராட்டுக்கள் வாத்யாரே !

  ReplyDelete
 4. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  பிண போதை நச்! நெற்றிப் பொட்டில் பொளேர் என்ற அடி மனிதர்களுக்கு! ஆனால் அடி புரியுமா போதை மனிதர்களுக்கு?!

  அப்பாவின் அம்மா.....மிகவும் ரசித்தோம்...ஐயா......அற்புதமான கவித்துவமான கவிதை...!!!

  ReplyDelete
 5. இவற்றையெல்லாம் வாசிக்கும் போது நாங்கள் எழுதுவதெல்லாம் சும்மா வெத்து வேட்டு, ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகின்றது!

  ReplyDelete
 6. //தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தில் சித்தப்பா மகளுடன் இணைந்து பாடும் பாசம் பொங்கும் பாடல்!.. நாகேஷ் எத்தகைய குணச்சித்திர நடிகர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!.. பாசக்காரப் பொண்ணுங்களப் பெத்தவங்களுக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்பவே புடிச்சிடும்னு நம்புறேன்!..//

  உண்மை .. முக்காலும் உண்மை!..

  ReplyDelete
 7. வலைச்சர அறிமுகங்களுக்கு
  வாழ்த்துக்கள்!

  மனம் கொத்திப்பறவைகள்..!
  ஆக்கம் ஆழமானது..!

  தங்களின் சிறப்பான பணிகளுக்கு
  மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. கவிதைகள் அருமை! வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
 9. அன்பின் ரவிஜி - இறுதி நாள் பதிவுகள் அருமை - தமிழ் மணத்தில் இணைக்க மறந்து விட்டீர்கள் - நான் இணைத்து விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. கவிதைகள் அருமை! என் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! மற்ற தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. ஏழாம் நாளையும் வெற்றிகரமாக கடந்த மாயவரத்தாருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அப்பா + மகள் பாசப் பிணைப்பை விளக்கும் 'அப்பாவின் - 'அம்மா' ' கவிதை, உணர்வுப்பூர்வமாய் இருந்தது.

  ReplyDelete
 13. இந்த 7 தினங்களும் மிகப் பயனுள்ள பல தளங்களை சிறப்பாய் அறிமுகப்படுத்தினீர்கள்.

  எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவையும் அறிமுகப்படுத்தினீர்கள்.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 14. வாழ்த்துகள்...என்னை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது