07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 22, 2014

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

வலைச்சரத்தில் நான்காம் நாளில் வருகை புரிந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சரி இன்று என்ன செய்யலாம்?
கவிஞர்களைத்தேடி கௌரவிப்போமா?
’மெல்லத் தமிழினிச் சாகும்’ என்றான் முண்டாசுக்கவி பாரதி. 

அவன் சொல்லை பொய்யாக்கிக் கவிதைகளை அவனுக்கே காணிக்கையாக்குவோம் என்று புறப்பட்டுள்ள இது போன்ற அருமையான கவிஞர்கள் இருக்கும் வரை எப்படி தமிழ் மெல்லச் சாகும்.  சாகவே சாகாது.  நீடூழி வாழும்.

பாரதியார்:

கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!
தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - !
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இனி இந்த கவிஞர்களின் வலைப்பூக்களை பார்ப்போமா?

அம்பாளடியாள்
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? இவர் வலைப்பூவுக்கு அறிமுகம் தேவையா? அதுவும் இங்கே.   இருந்தாலும் பரவாயில்லை.  இவர் வலைப்பூவுக்குச் சென்று இவரது அருமையான கவிதைகளை படித்து ரசியுங்கள்.


தேனம்மை லக்‌ஷ்மணன்
இவங்களும் இன்னொரு பூக்கடை.  வாசமுள்ள பூக்கடை.  இவங்களுக்கும் விளம்பரம் தேவையில்லை.  இவரை நேரில் சந்தித்திருக்கிறேன்.  அழகான சிரிப்புக்கு சொந்தக்காரி. முதல் சந்திப்பிலேயே என்னமோ ரொம்ப நாள் பழகியது போல், நெருங்கிய சொந்தம் போல் பேசத் தொடங்கி விட்டார்.
’பண்புடன்’ குழு நடத்திய சிறுகதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும், கடிதப் போட்டியில் சிறப்புப் பரிசு கிடைத்ததற்கும் இவர் தான் காரணம்.  இவர் வலைப்பூவைப் பார்த்துத்தான் நான் இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.


அரவிந்த் ராமசாமி
முகப்புத்தகத் தோழர்.   நல்ல சிந்தனைகள், நல்ல கொள்கைகள் உள்ள ஒரு உயர்ந்த மனிதர் (உருவத்தில் மட்டும் அல்ல,).   இவர் எழுத்துக்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.  ஆனால் இவர் ஒரு ‘குடத்தில் இட்ட விளக்கு’.மரியா சிவானந்தம்
அருமையான ஒரு தோழி.  நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் (BSNL) பணியாற்றினோம்.  என்னைப்போல் அருமையான ஒரு குடும்பத்திற்கு சொந்தக்காரி.   2010 ம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறார்.   எளிமையான தமிழில் இவர் எழுதியுள்ள கவிதைகளை படித்துத்தான் பாருங்களேன்.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்
இவள் பாரதி கண்ட புதுமைப் பெண்.  பொது நல எண்ணம் அதிகம் உள்ளவள்.    (BSNL) நிறுவனத்தில் பணி புரிகிறார்.   அருமையான கருத்துக்கள் பொதிந்த இவர் கவிதைகளை படிக்க இவர் வலைப்பூவிற்கு செல்வோமா?இரா. பூபாலன்
மிக இளம் வயது கவிஞர்.  இவர் கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி இதழ், குமுதம் தீரா நதி, இன்னும் பல பத்திரிகைகளில் இவர் கவிதைகள் வெளி வந்துள்ளன.  இவர் வலைப்பூ விலாசம்:பிரேமலதா
இவரது கவிதைகளையும் முகப்புத்தகத்தில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.  நீங்களும் படித்து மகிழுங்கள்.


நீங்கள் இந்த கவிதைகளைப் படித்துக் கொண்டிருங்கள்.

நாளை சந்திப்போம்


25 comments:

 1. வாசமுள்ள பூக்கடைகளின் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. திருமதி இராஜராஜேஸ்வரி

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 2. தமிழ் என்றும் நின்று தழைப்பது!..
  இன்று அறிமுகம் ஆகியுள்ள தளங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. திரு துரை செல்வராஜூ

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 3. மிக்க நன்றி அம்மா என்னையும் இங்கே அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு !
  காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் என்னால் அதிக
  நேரம் உட்கார்த்து இருந்து எதையும் செய்ய முடிவதில்லை ஆதலால் தான்
  தங்களின் வலைச்சர வாரத்தையே காணத் தவறி விட்டேன் மன்னிக்கவும் .
  உங்களுக்கும் இங்கே அறிமுகமாகியுள்ள என் வலைத்தள சொந்தங்கள்
  அனைவருக்கும் இத் தகவலை எனக்குத் தந்த தோழி இராஜேஸ்வரி அவர்களுக்கும்
  என் நன்றி கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .வாழ்த்துக்கள்
  அம்மா பணி மேலும் சிறந்து விளங்கட்டும் .

  ReplyDelete
  Replies
  1. அம்பாடியாள்

   வருகைக்கு நன்றி.
   எல்லாருக்குமே மற்றவர் வலைத்தளங்களில் வலம் வர, பின்னூட்டம் இட ஆசை தான். அவரவர் வேலை, இயலாமை இவை தான் வருகை தராமைக்குக் காரணம். முதலில் உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

   முடிந்த போது வருகை தாருங்கள்.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 4. மிக்க நன்றி ஜெயந்தி .ராஜி . & வலைச்சரம் :)

  ReplyDelete
  Replies
  1. தேனம்மை

   வருகைக்கு நன்றி.
   வாழ்க வளமுடன்.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 5. அனைத்து கவிஞர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி

   வருக்கைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 6. அன்புள்ள ஜயா,

  வணக்கம்மா .....

  தங்களின் ஐந்தாம் நாள்
  வாசமுள்ள பூக்கடைகளின் அறிமுகத்திற்குப்
  பாராட்டுக்கள் + வாழ்த்துகள்..

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா

   வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 7. இன்றைய அறிமுகங்களில் திருமதி அம்பாளடியாள் அவர்களும், திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களும் எனக்கு பரிச்சயமானவர்கள்.

  அவர்கள் இருவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  அவர்களைப் பாராட்டி அடையாளம் காட்டியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபு அண்ணா

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 8. Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
   அன்புடன்
   ஜே மாமி

   Delete
 9. Replies
  1. உங்கள் நன்றியை வரவேற்கிறேன் செல்வி
   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர் - இன்றே இணைந்து விடுங்கள் மேலும் விவரங்களுக்கு <a href='http://tamilheadmaster.blogspot.in/2014/08/blog-post_22.html</a>

  ReplyDelete
 12. அட என் கிறுக்கல்களையும் அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி தோழமைகளே...!

  ReplyDelete
  Replies
  1. கிறுக்கல்கள் அருமை பிரேமலதா

   வாழ்த்துக்கள்.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 13. வாசமான (வலைப்)பூக்கள்!
  நல் அறிமுகங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. திரு முகமது நிஜாமுதீன்

   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 14. அறிந்திராத அறிமுகங்கள் அருமை்வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது