07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 3, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  தியானா.     இவரது  வலைத்தளம்   : பூந்தளிர் ( dheekshu.blogspot.com ) )- தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் வலைச்சர விதி முறைகளின் படியும் சில பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 035
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 174
பெற்ற மறுமொழிகள்                            : 177
வருகை தந்தவர்கள்                              : 1247
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 012

தியானா பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

தியானாவினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ராஜலக்‌ஷ்மி பரமசிவம் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

இவர் 2012 இறுதியில் இருந்து அரட்டை என்கிற வலைத் தளத்தில் எழுதி வருகிறார். இவர் ஆசிரியப் பணியிலிருந்து  விருப்ப ஓய்வு பெற்றவர் . மகள், மகனுக்குத்  திருமணம் செய்து வைத்து கடமையை முடித்த பிறகே  இவரது  எழுத்து ஆசை வலைப்பூ வடிவம் பெற ஆரம்பித்திருக்கிறது.

இவர் கணவரின் வங்கிப் பணியின் காரணமாக வேறு மாநிலங்களிலும் வசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. பணி ஓய்வில் தற்பொழுது சிங்கார சென்னையில்  வசித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது  அனுபவங்கள் இவரது எழுத்துகளில் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடியாது.  

இவரது தளத்தின் பெயர்   : அரட்டை 

இவரது தளத்தின் முகவரி :: http://rajalakshmiparamasivam.blogspot.com/

 இவரைப் பாராட்டி,  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் இராஜலக்‌ஷ்மி பரம்சிவம். 

நல்வாழ்த்துகள் தியானா  
நட்புடன் சீனா 

19 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

   Delete
 2. நல்வாழ்த்துக்கள் தியானா.

  ReplyDelete
 3. வருக... சகோதரி நல்ல பதிவினை தருக...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவேற்பிற்கு நன்றி Killergee. என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய முயல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

   Delete
 4. விடை பெற்றுச் செல்லும் பூந்தளிர் தியானா அவர்களுக்கு நன்றி! வலைச்சரம் பொறுப்பேற்க வந்திருக்கும் ஆசிரியை ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் சார்.

   Delete
 5. நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு சார்.

   Delete
 6. பாராட்டுகள் தியானா....

  வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியர் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்ஜி.

   Delete
 7. தியானா அவர்களின் சீரிய பணிக்கு நன்றி! நல்வாழ்த்துக்கள் புதிய ஆசிரியராக பொறுப்பேற்கும் ஆசிரியை ராஜலட்சுமிபரமசிவம் அவர்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஷ்.

   Delete
 8. சிறப்பாக பணிபுரிந்த தியானா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
  வலைச்சரத்தில் - பணியேற்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நல்வரவு!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி துரை சார்.

   Delete
 9. வாழ்த்துக்கள் தியானா மேடம், வருக வருக ராஜலக்ஷ்மி மேடம்....

  ReplyDelete
  Replies
  1. வரவேற்பிற்கு நன்றி ஸ்பை.

   Delete
 10. பணியை சிறப்பாக நிறைவு செய்த தியானாவுக்கு வாழ்த்துக்கள் !
  பணியேற்கும் ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 11. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது