07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 11, 2014

‘மாலை மாற்று’ பாடல்


முதலிலிருந்து படித்தாலும் கடைசியிலிருந்து முதல் எழுத்துவரை தலைகீழாகப் படித்தாலும் ஒன்றாக இருப்பது ‘மாலை மாற்று’ என்ற பாடல் வகை! தேருவருதே, மோருபோருமோ எல்லாம் அந்த வகைதான்!

திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரத்தில் உள்ள ஒரு ‘மாலை மாற்று’ப் பாடல் இதோ கீழே!

“தாவா மூவா தாசகாழி நாதா நீ யாமாமா மாமாயா நீ தாநாழி  காச தாவா மூவாதா”

இதன்பொருள்:
யாம்- ஆன்மாக்கள் ஆகிய யாமே கடவுள் என்று கூறினால்,
ஆமா- அது சரியாகுமா?;
நீ- நீ தான் கடவுள் என்றால் அது,
ஆம்ஆம்- அது சரியாகும் ஆம்;
மாயாழீ- பேரியாழை வாசிப்பவனே, (மாயாழ் என்பது பேரியாழ் ஆகும்)
காமா- யாவரும் விரும்பும் கட்டழகா;
காண்- யாவரும் காணும்படியாக,
நாகா- நாகங்களையே(பாம்புகளை) அணிகலனாகப்பூண்டவனே, நாகா.
காணா-எவரும் காணாதபடி,
காமா- காமனைச் செய்தவனே (அதாவது, எரித்து அழித்தவனே)
காழீயா- சீகாழீப்பதியில் எழுந்தருளியுள்ளவனே,
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
நீ- நீ,
மா-கருமையாக உள்ள (அறியாமையைச் செய்கின்ற),
மாயா- மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக.

மேலும் அறிய ஆர்வம் உள்ளவர்கள் இங்கே செல்லவும்:
(அம்மாடியோ – நான் அம்பேல்)

10 comments:

 1. வணக்கம்

  அருமையான பாடலும் சிறப்பான விளக்கமும் கண்டு மகிழ்ந்தேன் தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. தேவாரப்பாடலின் விளக்கம் அருமை

  ReplyDelete
 3. இனியதொரு மாலை மாற்றுப் பாடலைப் பதிவிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. உங்களின் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். இனி தொடர்கிறேன். வலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //“தாவா மூவா தாசகாழி நாதா நீ யாமாமா மாமாயா நீ தாநாழி காச தாவா மூவாதா”//

  ஆச்சர்யம் அளிக்கும் இந்தப் பாடலை அறிமுகம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 6. மோருபோருமோ அறிவோம் ஆனால் மிகவும் அற்புதமாக திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் அதிசயமாக...மாலமாற்று எப்படி அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது! அருமையான பகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி!
  தங்கள் வலையில் சிக்கி விட்டோம்.... தொடர்கின்றோம்.

  ReplyDelete
 7. புதியதாய் ஒரு தகவல் அறிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி! விளக்கம் மிக அருமை!

  ReplyDelete
 8. ஒரு திருமண அழைப்பிதழில் இதைப் பார்த்தவுடன் என் மாமனாரிடம் இது குறித்து கேட்டு அறிந்து கொண்டது நினைவுக்கு வந்தது! அருமையான பகிர்வு! அசத்துங்கள்! நன்றி!

  ReplyDelete
 9. இந்த மாலைமாற்றுப் பாடலைப் பற்றி எப்போதோ படித்தது. இப்போது நினைவு படுத்தியமைக்கு நன்றி!
  த.ம.1

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது