07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 26, 2014

தல .....
வணக்கம் நண்பர்களே ,

 இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பவர்கள் இந்த பதிவுலகில் நன்கு அறிமுகமான , பிரபலமான பெரிய தலைகள் .(அப்பாடி தலைப்பு ஓகே ஆகிட்டு )


சீனு - திடங்கொண்டு போராடு 

               கண்ணாடி மச்சான் என நண்பர்களால் அன்புடன்(!!) அழைக்கப்படும் சீனுவின் வலைத்தளம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது . சென்ற பதிவர் சந்திப்பில் இவரின் உபசரிப்பில் திக்குமுக்காடி போனேன் . விதவிதமான விஷயங்களை எழுதுவதில் கில்லாடி .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

பாலகணேஷ் -வாத்தியார்

             பதிவுலகில் வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் என்றும் இளைஞ்சர் , பதிவுல மார்கண்டேயன் பாலகணேஷ் அய்யா அவர்களின் வலைபூ மிகவும் பிரபலமானது .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சிவகாசிகாரன்


பெரிய விஷயங்களை மிக அசால்டாக எழுதுவதில் வல்லவர் இவர் . எனக்கு மிகவும் பிடித்தது இவரின் எழுத்து நடைதான் . சாதாரண பாமரனும் புரியும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் . ஊரின் புகழ் போல இவரின் எழுத்திலும் சரவெடி வெடிக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

===============================================

அரசன் - கரைசேரா அலைகள்

ராஜா என்ற நல்லபெயரை (!!!!) வைத்தால் என்னமோ நல்ல புள்ளையாக இருக்கும் நண்பர் அரசன் அவர்களின் வலைபூ இது . ஆளு பார்க்க ஹீரோ போல இருந்தாலும் பேச்சு குழந்தைபோல தான் இருக்கும் . அடுத்தவருடம் பிரமரசாரியத்தில் இருந்துவிடுதலை அடைவார் என நினைக்கிறன் .

வலைபூ செல்ல : CLICK HERE

=============================================


சதீஷ் - தம்பி

எங்களால் செல்லமாக தீவிரவாதி என அழைக்கபடுபவர் . சமுக அவலங்களை கண்டு பொங்கி எழுதுபவர் . ஆளுதான் கருப்பு , ஆனா மனசு தங்கம் . பதிவர் சந்திப்பில்  கலந்துகொண்டு இவர் செய்த உதவிகள் ஏராளம் . எல்லையில் சப்பாத்தி சுடுவதாக உளவுத்துறை சொல்கிறது ஆனால் இவர் எதிரியை சுடுவதாக சொல்கிறார். எது உண்மையென தெரியவில்லை .

வலைபூ செல்ல : CLICK HERE 

================================================

பிரபாகரன் 


பிலாசபி பிரபா என அறியப்படும் நண்பர் பிரபாகரின் வலைபூ இது . அவரிடம் அதிகம் பேசியதில்லை ஆனால் நல்ல நண்பர் . சொன்ன உடன் பல புத்தகங்களை வாங்கி அனுப்பிய நல்ல மனதுக்காரர் .

வலைபூ செல்ல : CLICK HERE 

======================================================================

சிவகுமார் ஜில்மோர்


எப்பொழுதும் ஜில் என கூலாக இருப்பதால்தான் ஜில் மோர் என பேர் வைத்துள்ளார் போல . எல்லா படத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துமேய்கிறார். பழக அருமையான நண்பர் .

வலைபூ செல்ல : CLICK HERE

JILLMORE.TAMIL க்கு 

=======================================================================

நாஞ்சில் மனோ

இவரை தெரியாத பதிவுலக நண்பர்கள் குறைவு. இப்போது  அதிகம் எழுதவில்லை ஆனாலும் பலரின் பதிவுகளை படித்து கருத்து சொலுவார் . அயல்நாட்டில் இருந்தாலும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் நல்ல நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE

===========================================================================
விக்கியுலம் வெங்கட்  


இவர் பலா பழம் போல . ஆளு கொஞ்சம் கரடுமுராடக தெரிந்தாலும் அருமையான நண்பர். சென்ற பதிவர் சந்திப்பில் தான் நேரில் பார்த்த்தேன் . பல முறை பேசியுள்ளேன் . குழந்தை குரல் கொண்டவர் . முகநூலில் இவர்
அட்டகாசம் தொடர்கிறது .

வலைபூ செல்ல : CLICK HERE
==================================================


திண்டுக்கல் தனபாலன்


புதிய பதிவர்களுக்கு உற்ச்சாகம் ஊட்டுவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை . பல தளங்களில் இவரின் பின்னுட்டம் தான் முதல் பின்னுட்டமாக இருக்கும் . வலைசரத்தில் யாரை அறிமிகம் செய்தாலும் அவருக்கு பாராட்டுதெரிவித்து அவர்களிடம் தகவல் சொல்லும் நல்ல நண்பர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சரவணன் - குடந்தையூரன்


சமிபத்தில் நேரில் சந்தித்த பதிவர் இவர்தான் . பழக இனிமையான நபர். அதுபோல இவரது வலைபூவும் எளிமையான , அழகான பதிவுகளை கொண்டிருக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

ஸ்கூல் பையன்


பல நூறு வயசானாலும் இன்னும் ஸ்கூல் பையன்னு சொல்லி ஊரை ஏமாற்றும் நல்ல நண்பர் இவர் . ஆளு பார்க்க , பழக செம அமைதியான ஆளு . ஆனால் பதிவுகள் பட்டையை கிளப்பும் . அதுபோலமுகநூலில் கலக்கிக்கொண்டு இருப்பவர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

===================================================================
செங்கோவி

பெயரை பார்த்து எதோ வயசான ஆளுன்னு நினைத்தேன் . ஆனால் என்னை போல (!!!!) அவரும் அழகா ஹீரோ போல தான் இருக்கார் . இவரின் பதிவுகள் தனித்துவம் வாய்ந்தவை . திரைகதை பற்றி இவரின் தொடர் பதிவு அருமையாக இருக்கும் . பெரும்பாலும் இவரின் விமர்சனம் பார்த்தே படம் பார்க்கபோகிறேன் .

வலைபூ செல்ல : CLICK HERE
============================================

ஆவி

ஆவி எனபயத்துடன் அழைக்கப்படும் நண்பர் ஆனந்த் விஜயராகவன் அவர்களின் வலைபூ இது . என் தளத்தில் ஒருமுறை பின்னுட்டம் இட்டார் . அன்றே அவர் விபத்தில் கையில் அடிப்பட்டுகொண்டார் . பதிவர் சந்திப்பில் அறிமுகமான அருமையான பதிவர், நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE 
==============================================

காணாமல் போன கனவுகள் ராஜி


சமைக்கவே தெரியாட்டியும் பல சமையல் குறிப்புகளை புகைப்படத்துடன் போட்டு கலக்கும் அன்பு அக்கா ராஜி ஆர்களின் வலைபூ இது . என் மகன் பிறந்த பொழுது முதல் வாழ்த்து இவரிடம் இருந்துதான் வந்தது . நல்ல பாசமான பதிவர்.

வலைபூ செல்ல : CLICK HERE
==========================================
ஹாரி

 
எனது வலைதளத்தை அழகுபடுத்தி தந்த நல்ல நண்பர் இவர். ஆனால் முகத்தை காட்டமாடுறார் .(பயந்துடுவாங்கனு பார்கிராரோ ?). கிண்டலாக எழுதுவதில் வல்லவர் . எல்லா பதிவர்களும் இவருக்கு நண்பர்களே . எல்லாரையும் கலாய்க்கும் ஜாலி பதிவர் இவர். 

வலைபூ செல்ல : CLICK HERE

============================================

உணவு உலகம் : சங்கரலிங்கம் 


உணவு பொருள் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் இவரின் வலையில் நமக்கு பயனுள்ள பல பதிவுகள் கிடைகிறது. இவருக்கு பேரனே இருக்கார் ஆனால் என்னை போல உள்ள யூத்துடன் சேர்ந்து கொண்டு தானும் யூத் என மாறி ஜாலியாக பழகூடியவர் .


 
வலைபூ செல்ல : CLICK HERE

44 comments:

 1. நன்றி... நன்றி... நன்றி தல...

  நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. என்னாச்சு டிடி, ஆளையே பாக்க முடியலையே!

   Delete
  2. நன்றி தனபாலன் சார்

   Delete
 2. //ராஜா என்ற நல்லபெயரை (!!!!) வைத்தால் என்னமோ நல்ல புள்ளையாக இருக்கும் நண்பர் // ம்க்கும்.... பழகிப் பாத்தா தானே தெரியும்?

  //என் தளத்தில் ஒருமுறை பின்னுட்டம் இட்டார் . அன்றே அவர் விபத்தில் கையில் அடிப்பட்டுகொண்டார்//

  இது தெரியாம ஒரு முப்பது நாப்பது பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுட்டேனே!!!

  ReplyDelete
  Replies
  1. அடிபட்ட பின்தான் அகில உலக பேமஸ் ஆனார் ஆவி

   Delete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  தனபாலனையும் பிலாசபியையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு இந்திய பயணத்திலும் முடியாமல் போனது. அவர்கள் படத்தையாவது பார்க்க முடிந்ததே. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 4. மிகச் சிறப்பான அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 5. இனிய தொகுப்பு..
  அறிமுகமாகியுள்ள அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 6. பதிவுலக ஜாம்பவான்களோடு எம்மையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி ராஜா. வலைச்சர வாரம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் உண்மையான ஜாம்பவான் பாஸ்

   Delete
 7. இன்றைய பிரபல அறிமுக தல - தளபதி பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் விஜய் ரசிகரோ ??? வருகைக்கு நன்றி சகோ

   Delete
  2. ஒரு ரைமிங்க்.....

   Delete
 8. நன்றி நண்பரே

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்..பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. அன்பின் ராஜபாட்டை ராஜா - அறிமுகங்கள் அனைத்துமே அரிமையானவை தான் - ஆனால் பெரும்பாலான அறிமுகங்கள் தளத்திற்குச் செல்ல வழி காட்டுகின்றனவே தவிர குறிப்பிட்ட பதிவிற்குச் செல்ல வழி காட்ட வில்லை. இது குறிக்கோளை நிறைவேற்ற வில்லை. அடுத்த பதிவுகளில் அறிமுகப் படுத்தும் போது தளத்தினை விட்டு விட்டு குறிப்பிட்ட பதிவுகளை அறிமுகப் படுத்துங்கள்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா


  ReplyDelete
  Replies
  1. இவர்கள் அனைவரும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் எனவே அவர்களின் தளங்களின் முகவரியை மட்டும் குறிப்பிட்டேன் . ஆனால் நாளை முதல் வரும் அனைவருக்கும் அவர்கள் பதிவின் முகவரியுடன் வரும் . நன்றி அய்யா ..

   Delete
 11. நன்றிலேய் மக்கா வாத்தி...நீங்க அறிமுகபடுத்திய எல்லாருமே நம்ம செல்லங்கள் வாழ்க வாழ்க...பணி கஷ்டம் இருக்குய்யா ஸாரிப்பா...

  ReplyDelete
 12. பெரிய தலைகளோடு என்னையும் இணைத்த ஆசிரயர் மகான் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள் ...

  ReplyDelete
 13. ம்க்கும்.... பழகிப் பாத்தா தானே தெரியும்?// ஸ் பை அண்ணே எதுவா இருந்தாலும் ரூமு போட்டு பேசிக்கலாம் ... தம்பி பாவம் ...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா எதோ மேட்டர் இருக்கு போல இருக்கே ?

   Delete
 14. ராஜா என்ற நல்லபெயரை (!!!!) வைத்தால் என்னமோ நல்ல புள்ளையாக இருக்கும் நண்பர் // இராஜாக்கள் எப்போதுமே நல்லவர்கள் தானே சாரே

  ReplyDelete
 15. நன்றி தலைவரே.. உங்கள் மேலான அறிமுகத்திற்கு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல /... வருகைக்கு நன்றி

   Delete
 16. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 17. ஆஹா ...இந்த வாரம் முழுவதும் உங்களது வாரமா ! வாழ்த்துக்கள் சகோதரா
  கலக்குங்கள் .இங்கே அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ... வருகைக்கு நன்றி

   Delete
 18. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. நன்றி வாத்தீ..

  //என் தளத்தில் ஒருமுறை பின்னுட்டம் இட்டார் . அன்றே அவர் விபத்தில் கையில் அடிப்பட்டுகொண்டார் //

  நல்லவேளை சொன்னீங்க..எச்சரிக்கைக்கும் நன்றி.

  ReplyDelete
 20. அனைவரும் மிகப் பிரபலங்கள் - அறிமுகங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 21. இன்றைய அறிமுகங்கள் அருமை ராஜா சார்.. பிரபலமான பெரிய தலைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். .

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 22. ராஜபாட்டை "சரியான ராஜ பாட்டையத்தான்" போட்டுருக்கீங்க!!!

  அனைத்து வலைத்தளங்களும் அறிவோம்...பலரும் நல்ல நண்பர்கள்!!!

  வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!

  ReplyDelete
 23. நண்பர்கள் புடைசூழ இங்கே என்னையும் நான் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராஜா...

  பல நூறு வயசானாலும் இன்னும் ஸ்கூல் பையன்னு சொல்லி ஊரை ஏமாற்றும் நல்ல நண்பர்/// மிஸ்டர் ஸ்.பை.யின் இளமை ரகசியம் என்னான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ ராசா...

  ReplyDelete
 24. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. இந்த மாதிரி பெரிய தலைகளுடன் என்னையும் குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றிகள் சார்.. :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது