07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இரண்டாம் நாள். Show all posts
Showing posts with label இரண்டாம் நாள். Show all posts

Tuesday, August 26, 2014

தல .....




வணக்கம் நண்பர்களே ,

 இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பவர்கள் இந்த பதிவுலகில் நன்கு அறிமுகமான , பிரபலமான பெரிய தலைகள் .(அப்பாடி தலைப்பு ஓகே ஆகிட்டு )


சீனு - திடங்கொண்டு போராடு 

               கண்ணாடி மச்சான் என நண்பர்களால் அன்புடன்(!!) அழைக்கப்படும் சீனுவின் வலைத்தளம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது . சென்ற பதிவர் சந்திப்பில் இவரின் உபசரிப்பில் திக்குமுக்காடி போனேன் . விதவிதமான விஷயங்களை எழுதுவதில் கில்லாடி .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

பாலகணேஷ் -வாத்தியார்

             பதிவுலகில் வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் என்றும் இளைஞ்சர் , பதிவுல மார்கண்டேயன் பாலகணேஷ் அய்யா அவர்களின் வலைபூ மிகவும் பிரபலமானது .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சிவகாசிகாரன்


பெரிய விஷயங்களை மிக அசால்டாக எழுதுவதில் வல்லவர் இவர் . எனக்கு மிகவும் பிடித்தது இவரின் எழுத்து நடைதான் . சாதாரண பாமரனும் புரியும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் . ஊரின் புகழ் போல இவரின் எழுத்திலும் சரவெடி வெடிக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

===============================================

அரசன் - கரைசேரா அலைகள்

ராஜா என்ற நல்லபெயரை (!!!!) வைத்தால் என்னமோ நல்ல புள்ளையாக இருக்கும் நண்பர் அரசன் அவர்களின் வலைபூ இது . ஆளு பார்க்க ஹீரோ போல இருந்தாலும் பேச்சு குழந்தைபோல தான் இருக்கும் . அடுத்தவருடம் பிரமரசாரியத்தில் இருந்துவிடுதலை அடைவார் என நினைக்கிறன் .

வலைபூ செல்ல : CLICK HERE

=============================================


சதீஷ் - தம்பி

எங்களால் செல்லமாக தீவிரவாதி என அழைக்கபடுபவர் . சமுக அவலங்களை கண்டு பொங்கி எழுதுபவர் . ஆளுதான் கருப்பு , ஆனா மனசு தங்கம் . பதிவர் சந்திப்பில்  கலந்துகொண்டு இவர் செய்த உதவிகள் ஏராளம் . எல்லையில் சப்பாத்தி சுடுவதாக உளவுத்துறை சொல்கிறது ஆனால் இவர் எதிரியை சுடுவதாக சொல்கிறார். எது உண்மையென தெரியவில்லை .

வலைபூ செல்ல : CLICK HERE 

================================================

பிரபாகரன் 


பிலாசபி பிரபா என அறியப்படும் நண்பர் பிரபாகரின் வலைபூ இது . அவரிடம் அதிகம் பேசியதில்லை ஆனால் நல்ல நண்பர் . சொன்ன உடன் பல புத்தகங்களை வாங்கி அனுப்பிய நல்ல மனதுக்காரர் .

வலைபூ செல்ல : CLICK HERE 

======================================================================

சிவகுமார் ஜில்மோர்


எப்பொழுதும் ஜில் என கூலாக இருப்பதால்தான் ஜில் மோர் என பேர் வைத்துள்ளார் போல . எல்லா படத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துமேய்கிறார். பழக அருமையான நண்பர் .

வலைபூ செல்ல : CLICK HERE

JILLMORE.TAMIL க்கு 

=======================================================================

நாஞ்சில் மனோ

இவரை தெரியாத பதிவுலக நண்பர்கள் குறைவு. இப்போது  அதிகம் எழுதவில்லை ஆனாலும் பலரின் பதிவுகளை படித்து கருத்து சொலுவார் . அயல்நாட்டில் இருந்தாலும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் நல்ல நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE

===========================================================================
விக்கியுலம் வெங்கட்  


இவர் பலா பழம் போல . ஆளு கொஞ்சம் கரடுமுராடக தெரிந்தாலும் அருமையான நண்பர். சென்ற பதிவர் சந்திப்பில் தான் நேரில் பார்த்த்தேன் . பல முறை பேசியுள்ளேன் . குழந்தை குரல் கொண்டவர் . முகநூலில் இவர்
அட்டகாசம் தொடர்கிறது .

வலைபூ செல்ல : CLICK HERE
==================================================


திண்டுக்கல் தனபாலன்


புதிய பதிவர்களுக்கு உற்ச்சாகம் ஊட்டுவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை . பல தளங்களில் இவரின் பின்னுட்டம் தான் முதல் பின்னுட்டமாக இருக்கும் . வலைசரத்தில் யாரை அறிமிகம் செய்தாலும் அவருக்கு பாராட்டுதெரிவித்து அவர்களிடம் தகவல் சொல்லும் நல்ல நண்பர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சரவணன் - குடந்தையூரன்


சமிபத்தில் நேரில் சந்தித்த பதிவர் இவர்தான் . பழக இனிமையான நபர். அதுபோல இவரது வலைபூவும் எளிமையான , அழகான பதிவுகளை கொண்டிருக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

ஸ்கூல் பையன்


பல நூறு வயசானாலும் இன்னும் ஸ்கூல் பையன்னு சொல்லி ஊரை ஏமாற்றும் நல்ல நண்பர் இவர் . ஆளு பார்க்க , பழக செம அமைதியான ஆளு . ஆனால் பதிவுகள் பட்டையை கிளப்பும் . அதுபோலமுகநூலில் கலக்கிக்கொண்டு இருப்பவர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

===================================================================
செங்கோவி

பெயரை பார்த்து எதோ வயசான ஆளுன்னு நினைத்தேன் . ஆனால் என்னை போல (!!!!) அவரும் அழகா ஹீரோ போல தான் இருக்கார் . இவரின் பதிவுகள் தனித்துவம் வாய்ந்தவை . திரைகதை பற்றி இவரின் தொடர் பதிவு அருமையாக இருக்கும் . பெரும்பாலும் இவரின் விமர்சனம் பார்த்தே படம் பார்க்கபோகிறேன் .

வலைபூ செல்ல : CLICK HERE
============================================

ஆவி

ஆவி எனபயத்துடன் அழைக்கப்படும் நண்பர் ஆனந்த் விஜயராகவன் அவர்களின் வலைபூ இது . என் தளத்தில் ஒருமுறை பின்னுட்டம் இட்டார் . அன்றே அவர் விபத்தில் கையில் அடிப்பட்டுகொண்டார் . பதிவர் சந்திப்பில் அறிமுகமான அருமையான பதிவர், நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE 
==============================================

காணாமல் போன கனவுகள் ராஜி


சமைக்கவே தெரியாட்டியும் பல சமையல் குறிப்புகளை புகைப்படத்துடன் போட்டு கலக்கும் அன்பு அக்கா ராஜி ஆர்களின் வலைபூ இது . என் மகன் பிறந்த பொழுது முதல் வாழ்த்து இவரிடம் இருந்துதான் வந்தது . நல்ல பாசமான பதிவர்.

வலைபூ செல்ல : CLICK HERE
==========================================
ஹாரி

 




எனது வலைதளத்தை அழகுபடுத்தி தந்த நல்ல நண்பர் இவர். ஆனால் முகத்தை காட்டமாடுறார் .(பயந்துடுவாங்கனு பார்கிராரோ ?). கிண்டலாக எழுதுவதில் வல்லவர் . எல்லா பதிவர்களும் இவருக்கு நண்பர்களே . எல்லாரையும் கலாய்க்கும் ஜாலி பதிவர் இவர். 

வலைபூ செல்ல : CLICK HERE

============================================

உணவு உலகம் : சங்கரலிங்கம் 


உணவு பொருள் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் இவரின் வலையில் நமக்கு பயனுள்ள பல பதிவுகள் கிடைகிறது. இவருக்கு பேரனே இருக்கார் ஆனால் என்னை போல உள்ள யூத்துடன் சேர்ந்து கொண்டு தானும் யூத் என மாறி ஜாலியாக பழகூடியவர் .


 
வலைபூ செல்ல : CLICK HERE

மேலும் வாசிக்க...

Tuesday, October 11, 2011

சிந்தனை செவ்வாய்


நேற்று ஆரம்பித்த இந்த வலைச்சர வாரத்தில் இன்று முதல் நான் ரசிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி எழுதப் போகிறேன்.  அதற்கு முன் இந்த செவ்வாய்க் கிழமையை ஒரு நல்ல சிந்தனையுடன் ஆரம்பிப்போமா?

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது இதயத்தின் இசை
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுக்குங்கள்
  அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுக்குங்கள்
  அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
  அது மகிழ்ச்சிக்கு வழி
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்
  அது வெற்றியின் விலை.


வலைப்பூ எழுதும் நம்மில் தக்குடு வலைப்பூவினை நுகர்ந்து ரசிக்காதவர் உண்டோ? நான் சொல்லப்போவது அதைப் பற்றி அல்ல.  அவரது உம்மாச்சி காப்பாத்து என்ற வலைப்பூவில் சில பதிவுகளே எழுதி இருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறார்.  நம்மைக் காப்பாற்ற உம்மாச்சியை விட்டா யார் இருக்கா?

நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காதுஆனால் நாரத்தங்காய்நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்?”  இதை நான் கேட்க வில்லை.  இப்படி கேட்பது கீதா சாம்பசிவம் அவர்கள்.  கேட்டது அவரின் சாப்பிடலாம் வாங்க  பக்கத்தில்.  போய் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

நவராத்திரி முடிந்து விட்டது.  நிறைய வீடுகளில் கொலுவைப் பார்த்து விட்டு வந்த சிலர் அவர்களது வீட்டிலும் வைக்க ஆசைப்படுவார்கள்.  ஆனால் எப்படி வைப்பது என்று தெரியாமல் இருக்கலாம்.  அவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் சீக்கிரமா போய் படிக்க வேண்டியது சிமுலேஷன் படைப்புகள் பக்கத்தினை. ”கொலு வைப்பது எப்படி? என்று பகுதி பிரித்து எழுதி இருக்கிறார்.  அடுத்த வருடம் கொலு வைத்து அசத்துங்க!  மறக்காம சுண்டல் வாங்கிக்க என்னையும் கூப்பிடுங்க!

திலகாஷ்ட மகிஷபந்தனம் அப்படின்னு ஒரு நூல் உங்களுக்குத் தெரியுமா?  அதைப்பற்றித் தெரிந்து கொள்ள ருக்மணி சேஷசாயி அவர்களின் பாட்டி சொல்லும் கதைகள் பக்கத்திற்கு உங்களை அழைக்கிறேன்.  உங்கள் சுட்டிகளுக்குக் கதை சொல்லித்  தூங்க வைக்க தினம் தினம் நீங்கள் அல்லாட வேண்டாம்.  நிறைய கதைகள் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.

”மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்: என்று தன் பக்கத்தில் சொல்லும் மாதேவி தனது அனுபவங்கள், சுற்றுலா என்று பல பக்கங்களில் ரம்யமாய் உலா வருகிறார். அவரின் ’நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடு’ பகிர்வில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் கண்ணைக் கொள்ளை கொள்கிறது.

இந்த வருட மே மாதத்தில் தன் வலைப்பூ பயணத்தினை தொடங்கி இருக்கும் சீனுவாசன். கு. தனது வலைப்பக்கத்தில் நிறைய குறுஞ்செய்திகள், மெட்டுப் பாடல்கள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள் என இது வரை 231 பதிவுகள் எழுதி இருக்கிறார். இவரின் இந்த “ல” வரிசைப் பாட்டு லவ்லியாக [அட ‘ல’-னாவுக்கு ‘ல’-னா] இருந்தது.


இன்னிக்கு இது போதும். நாளை எங்க ஏரியாவுக்கு உங்களை அழைத்துப் போகிறேன். அதுவரை இன்று தந்த சுட்டிகளைச் சென்று பார்த்து படித்து ரசியுங்களேன்.

நாளை மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

பின்குறிப்பு: ”இந்த பகிர்வுக்கும் டோராவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்பவர்களுக்கு, இதற்கு விடை உங்களுக்கு ஞாயிறன்று கிடைக்கும். பொறுத்திருங்கள்…


மேலும் வாசிக்க...

Tuesday, September 27, 2011

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது... ஆம், இன்று நிலவும் புதியது! (New moon's day!).

இன்று மஹாளய அமாவாசை. இதற்கு முந்தைய 14 நாட்களை மஹாளய பட்சம் என்றும் சொல்கின்றனர். 'கர்ண' பரம்பரை(செவிவழி)க் கதையாக, கொடைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய கர்ணர், இறந்து சொர்க்கத்துக்குப் போன போது, அவருக்கு பொன்னும் பொருளும் நிறையக் கொடுக்கப்பட்டதே தவிர அன்னமோ நீரோ கிடைக்கவில்லையாம். காரணம் கேட்ட போது, அவர் அதற்கு முன் உணவைத் தானமாகக் கொடுத்ததில்லை எனத் தெரிய வந்ததாம். உடனே, மேலிடத்தில் கேட்டுக் கொண்டு, 14 நாட்கள் பூவுலகம் வந்து, உணவையும் நீரையும் தானமாகக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் முன்னோரை நினைத்து வழிபடுதல் நல்லது எனவும் பல்வேறு தானங்கள் (முக்கியமாக அன்னதானம்) கொடுத்தால் பற்பல நற்பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் 14 நாட்களில் செய்யாததை, நிறைவு நாளான அமாவாசை நாளன்று செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். பயத்தின் மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் நம் முன்னோர்கள் நம்மை நல்ல காரியங்கள் செய்ய வைக்கிறார்கள்!!
முக்கியமாக வரவிருக்கும் நவராத்திரிக்காக இன்று கொலு பொம்மைகளை எடுத்து அடுக்கும் நாள். பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அவரவர் கற்பனை வளத்துக்கு உருக்கொடுக்கும் நாள். நீங்கள் கொலு வைக்க ரெடியா? என்ன, வேலை செய்ய சோம்பலா? இந்தப் பாட்டைக் கேளுங்கள்:


எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராமல் சக்தி கொடுக்க நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது!
வலைச்சரத்தில் என் கொலு இன்றே ஆரம்பம். இதோ, கொலுவில் வீற்றிருப்பவர்கள் - இந்தப் பதிவர்களை வரிசைப்படுத்துவது என் ஞாபகத்தில் தான் - இந்த வரிசையில் ஏறுமுகமோ, இறங்குமுகமோ இல்லை.
ஆரம்பத்தில் நான் எனக்குப் பிடித்த பதிவர்களாகச் சொல்லப் போகிறவர்களை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் பிரபலப் பதிவர்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன? தொடர்ந்து மற்றப் பதிவர்களையும் பார்க்கலாம்

அவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் பரிசல்காரன்- ரசிப்போர் விழி தேடி அவர் தரும் இடுகைகளில் எனக்கு சமீபத்தில் பிடித்தது ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை. இன்னொரு பதிவான எமகிங்கரர்களில் பைக்கில் போகும் போது சந்திக்கும் பல்வேறு வகையானவர்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் பாருங்கள்!!

ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை - இந்த வலைப்பூவில் அரசியல் நெடி அதிகம். அதற்குள் நான் இங்கு போகப் போவதில்லை (நெடி அலர்ஜி!) ஆனாலும் அதில் மஞ்சள் கமெண்ட்ஸ் ரசிககும்படி இருக்கும்! கிண்டல் பதிவுகளும் இருக்கும் - என்னங்க்ண்ணாவைப் பாருங்களேன்!

நம்பிக்கை இருக்கும்வரை தோல்விகள் வருவதில்லை என தன்னம்பிக்கை டானிக் கொடுக்கும் பனித்துளி சங்கர் - பயனுள்ள தகவல்கள், ஜோக்ஸ், கவிதைகள் என்று அவர் பதிவுகள் களைகட்டும். சிரிப்பைப் பற்றி அவர் எழுதியதை ரசிக்கலாம்! கடிகாரத்தைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்!

கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... எனத் தன்னடக்கமாய்ச் சொல்லிக் கொள்ளும் மாணவன் எழுதும் எல்லா இடுகைகளுமே நன்றாக இருக்கும். குறிப்பாக, வரலாற்று நாயகர்கள் என்று சாதனை சரித்திரம் படைத்த சாதனையாளர்களைப் பற்றி எழுதுபவை சரித்திரப் பாடத்தில் வைக்குமளவுக்குச் சிறந்தவை. இந்தச் சுட்டியில் முதல் பாகத்தைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்! 25 பேரின் சரித்திரத்தைச் சொல்லும் இதனை நான் பதிவிறக்கம் செய்து என் மகன்களைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன்! சமீபத்திய பதிவு மைக்கேல் ஃபாரடே குறித்து.

சில தொழில் நுட்ப வலைப்பூக்களைப் பார்ப்போமா?
தெரிந்து கொளளலாம் வாங்க-வில் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த, ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப என்று பல விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2011ல் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் M.R. ன் இரண்டு வலைப்பூக்களை சமீபத்தில் ரசித்தேன். அன்பு உலகம் என்ற வலைப்பூவில் பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் மற்றக் குற்ப்புகளையும் இவர் தருகிறார், இங்கே - யோகா கற்றுக் கொள்ளுங்கள்! ஒரே கிளிக்கில் அன்-இன்ஸ்டால் செய்யவும் சொல்லித் தருகிறார்!

இவரே பங்கு மார்க்கெட் என்று மற்றொரு வலைப்பூவிலும் தற்போது எழுதத் தொடங்கியுள்ளார்! பாராட்டுகள்.

சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது என்று சொல்லி சட்டப்பார்வை என்னும் வலைப்பூவில் எழுதும் அட்வகேட் P.R.ஜெயராஜன், சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை...... நேரம் வரும்.... காத்திருக்கிறேன் ... என்கிறார்! பேருந்து நடத்தனருக்குத் தேவையா என்று அவர் சட்டப் பார்வையில் கேட்கிறார்.


இன்று என் பார்வையில் சில பதிவர்களைச் சொன்னேன். மற்றவர்களைப் பின்வரும் நாட்களில் பார்ப்போம். வானவில்லும் வர்ணங்களும் எங்கே என்று கேட்பது காதில் விழுகிறது. மேலே உள்ள பல கண்ணோட்டங்களில் எழுதும் பதிவர்களே வானவில்! போதவில்லையென்றால், இந்த வரிகளின் வண்ணங்களைப் பாருங்கள்!

சொல்ல மறந்துட்டேனே, வானவில்லின் இண்டிகோ கலர் அறிவையும் தன்னம்பிக்கையையும் குறிக்கிறதாம்! மேலும் இது முதலுக்கும் முடிவுக்கும் முடிச்சுப் போடும் தன்மையுடையதாம்!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது