07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 27, 2011

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது... ஆம், இன்று நிலவும் புதியது! (New moon's day!).

இன்று மஹாளய அமாவாசை. இதற்கு முந்தைய 14 நாட்களை மஹாளய பட்சம் என்றும் சொல்கின்றனர். 'கர்ண' பரம்பரை(செவிவழி)க் கதையாக, கொடைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய கர்ணர், இறந்து சொர்க்கத்துக்குப் போன போது, அவருக்கு பொன்னும் பொருளும் நிறையக் கொடுக்கப்பட்டதே தவிர அன்னமோ நீரோ கிடைக்கவில்லையாம். காரணம் கேட்ட போது, அவர் அதற்கு முன் உணவைத் தானமாகக் கொடுத்ததில்லை எனத் தெரிய வந்ததாம். உடனே, மேலிடத்தில் கேட்டுக் கொண்டு, 14 நாட்கள் பூவுலகம் வந்து, உணவையும் நீரையும் தானமாகக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் முன்னோரை நினைத்து வழிபடுதல் நல்லது எனவும் பல்வேறு தானங்கள் (முக்கியமாக அன்னதானம்) கொடுத்தால் பற்பல நற்பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் 14 நாட்களில் செய்யாததை, நிறைவு நாளான அமாவாசை நாளன்று செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். பயத்தின் மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் நம் முன்னோர்கள் நம்மை நல்ல காரியங்கள் செய்ய வைக்கிறார்கள்!!
முக்கியமாக வரவிருக்கும் நவராத்திரிக்காக இன்று கொலு பொம்மைகளை எடுத்து அடுக்கும் நாள். பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அவரவர் கற்பனை வளத்துக்கு உருக்கொடுக்கும் நாள். நீங்கள் கொலு வைக்க ரெடியா? என்ன, வேலை செய்ய சோம்பலா? இந்தப் பாட்டைக் கேளுங்கள்:


எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராமல் சக்தி கொடுக்க நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது!
வலைச்சரத்தில் என் கொலு இன்றே ஆரம்பம். இதோ, கொலுவில் வீற்றிருப்பவர்கள் - இந்தப் பதிவர்களை வரிசைப்படுத்துவது என் ஞாபகத்தில் தான் - இந்த வரிசையில் ஏறுமுகமோ, இறங்குமுகமோ இல்லை.
ஆரம்பத்தில் நான் எனக்குப் பிடித்த பதிவர்களாகச் சொல்லப் போகிறவர்களை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் பிரபலப் பதிவர்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன? தொடர்ந்து மற்றப் பதிவர்களையும் பார்க்கலாம்

அவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் பரிசல்காரன்- ரசிப்போர் விழி தேடி அவர் தரும் இடுகைகளில் எனக்கு சமீபத்தில் பிடித்தது ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை. இன்னொரு பதிவான எமகிங்கரர்களில் பைக்கில் போகும் போது சந்திக்கும் பல்வேறு வகையானவர்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் பாருங்கள்!!

ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை - இந்த வலைப்பூவில் அரசியல் நெடி அதிகம். அதற்குள் நான் இங்கு போகப் போவதில்லை (நெடி அலர்ஜி!) ஆனாலும் அதில் மஞ்சள் கமெண்ட்ஸ் ரசிககும்படி இருக்கும்! கிண்டல் பதிவுகளும் இருக்கும் - என்னங்க்ண்ணாவைப் பாருங்களேன்!

நம்பிக்கை இருக்கும்வரை தோல்விகள் வருவதில்லை என தன்னம்பிக்கை டானிக் கொடுக்கும் பனித்துளி சங்கர் - பயனுள்ள தகவல்கள், ஜோக்ஸ், கவிதைகள் என்று அவர் பதிவுகள் களைகட்டும். சிரிப்பைப் பற்றி அவர் எழுதியதை ரசிக்கலாம்! கடிகாரத்தைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்!

கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... எனத் தன்னடக்கமாய்ச் சொல்லிக் கொள்ளும் மாணவன் எழுதும் எல்லா இடுகைகளுமே நன்றாக இருக்கும். குறிப்பாக, வரலாற்று நாயகர்கள் என்று சாதனை சரித்திரம் படைத்த சாதனையாளர்களைப் பற்றி எழுதுபவை சரித்திரப் பாடத்தில் வைக்குமளவுக்குச் சிறந்தவை. இந்தச் சுட்டியில் முதல் பாகத்தைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்! 25 பேரின் சரித்திரத்தைச் சொல்லும் இதனை நான் பதிவிறக்கம் செய்து என் மகன்களைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன்! சமீபத்திய பதிவு மைக்கேல் ஃபாரடே குறித்து.

சில தொழில் நுட்ப வலைப்பூக்களைப் பார்ப்போமா?
தெரிந்து கொளளலாம் வாங்க-வில் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த, ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப என்று பல விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2011ல் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் M.R. ன் இரண்டு வலைப்பூக்களை சமீபத்தில் ரசித்தேன். அன்பு உலகம் என்ற வலைப்பூவில் பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் மற்றக் குற்ப்புகளையும் இவர் தருகிறார், இங்கே - யோகா கற்றுக் கொள்ளுங்கள்! ஒரே கிளிக்கில் அன்-இன்ஸ்டால் செய்யவும் சொல்லித் தருகிறார்!

இவரே பங்கு மார்க்கெட் என்று மற்றொரு வலைப்பூவிலும் தற்போது எழுதத் தொடங்கியுள்ளார்! பாராட்டுகள்.

சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது என்று சொல்லி சட்டப்பார்வை என்னும் வலைப்பூவில் எழுதும் அட்வகேட் P.R.ஜெயராஜன், சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை...... நேரம் வரும்.... காத்திருக்கிறேன் ... என்கிறார்! பேருந்து நடத்தனருக்குத் தேவையா என்று அவர் சட்டப் பார்வையில் கேட்கிறார்.


இன்று என் பார்வையில் சில பதிவர்களைச் சொன்னேன். மற்றவர்களைப் பின்வரும் நாட்களில் பார்ப்போம். வானவில்லும் வர்ணங்களும் எங்கே என்று கேட்பது காதில் விழுகிறது. மேலே உள்ள பல கண்ணோட்டங்களில் எழுதும் பதிவர்களே வானவில்! போதவில்லையென்றால், இந்த வரிகளின் வண்ணங்களைப் பாருங்கள்!

சொல்ல மறந்துட்டேனே, வானவில்லின் இண்டிகோ கலர் அறிவையும் தன்னம்பிக்கையையும் குறிக்கிறதாம்! மேலும் இது முதலுக்கும் முடிவுக்கும் முடிச்சுப் போடும் தன்மையுடையதாம்!

44 comments:

 1. அருமையான பாடல்
  அருமையான அறிமுகம்
  மிக நல்ல துவக்கம்
  ஏழுபடி கொலுவில் முதல் படி அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அருமையான பகிர்வுகள். எம். எஸ் அம்மாவின் பாட்டை கேட்க இனிமையாக உள்ளது

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அருமை வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நல்ல பல அறிமுகங்கள், புத்தம் புதிய பொம்மைகள் போல கொலுப்படியில் ஏற்ற்ப்பட்டுள்ளன.

  கொலுப்படியில் இன்று ஏறியுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  அவர்களை கொலுப்படியில் ஏற்றிய திருமதி மி.கி.மாதவி அவர்களுக்கும் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

  தொடரட்டும் தங்கள் பணி. சூடான சுவையான, காரசாரமான சுண்டலுக்காக தினமும் காத்திருப்போம்.

  vgk

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி மாதவி.

  //அவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது//

  என்னெ வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்லியே? :))

  ரசிச்சேன் அந்த வரிகளை..!

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள் அக்கா...
  தொடரட்டும் வானவில்லின் ஜாலங்கள்.

  ReplyDelete
 7. முதலில் வலைச்சரப்பணிக்கு வாழ்துக்கள் மேம்!

  ReplyDelete
 8. வலைப்பூக்களின் அறிமுகங்களை சிறப்பாக அறிமுகபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேம்,

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள் மென்மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்...

  ReplyDelete
 9. எனது வலைத்தளத்தையும் சிறப்பாக அறிமுகபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு சிறப்பு நன்றிகள் பல!

  தொடரட்டும் தங்களின் மகத்தான பணி!
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. அருமையான அறிமுகங்கள் ..

  ReplyDelete
 11. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ

  எம்மை மற்றவர் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி சகோ

  அறிமுகம் செய்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தங்களுக்கும் அறிமுகமான பதிவர்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 13. @ Ramani - 7 படி கொலுவில் நேற்று என் சுய அறிமுகத்துடன் இன்று 2 படி முடிஞ்சுடுச்சு! :-)

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 14. @ மோகன் குமார் - கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 15. எம்.எஸ் அம்மாவின் பாடலை பகிர்ந்ததற்கு நன்றி.

  நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. @ வை. கோபாலகிருஷ்ணன் - //சூடான சுவையான, காரசாரமான சுண்டலுக்காக தினமும் காத்திருப்போம்.// ஸ்வீட் பிடிக்காதா?! :-)

  ReplyDelete
 17. @ பரிசல்காரன் - நன்றி
  //என்னெ வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்லியே? :))//
  உங்க profileல் ஆங்கிலத்தில் இருந்ததைத் தான் தமிழ்ப்படுத்திப் போட்டிருக்கேன்!! :-))

  ReplyDelete
 18. @ இந்திரா - நன்றீஸ்

  ReplyDelete
 19. @ வெளங்காதவன் - :-))

  ReplyDelete
 20. @ சே. குமார் - நன்றி உங்கள் கருத்துக்கும் விளிப்புக்கும் (எனக்கு கூடப் பிறந்த தம்பி இல்லையேன்னு குறை இருந்தது!! :-)) )

  ReplyDelete
 21. @ மாணவன் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி * 3 :-))

  ReplyDelete
 22. @ "என் ராஜபாட்டை" ராஜா - நன்றிகள் பல!

  ReplyDelete
 23. @ M.R. - ரொம்ப நன்றி! தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 24. @ thirumathi bs sridhar - மிக்க நன்றிகள் வாழ்த்துகளுக்கு!

  ReplyDelete
 25. @ கோவை2தில்லி - மிக்க் நன்றி

  ReplyDelete
 26. வித்தியாசமான தொடக்கம்பா....

  புதுமை புதுமை புதுமை இதை நேற்றே பார்த்ததும் தெரிந்துவிட்டது.. வித்தியாசங்கள் படைக்க வந்தாச்சு ஆசிரியர் என்று....

  கர்ணனின் இந்த கதை நான் இதுவரை அறியாதது.. அறியப்பெற்றேன் உங்கள் பகிர்வால்.....

  அருமையான டைமிங் அறிமுக படலம்...

  உண்மையே.. மணம் மிக்க பூவுக்கு விளம்பரம் தேவையா??

  அருமையான அறிமுகங்கள்...

  அன்பு வாழ்த்துகள் மாதவி பகிர்வுக்கு...

  பாரதி மனைவிக்கு சம அந்தஸ்து கொடுத்து தானும் நின்றே போட்டோ எடுத்ததை நீங்க இன்று சொல்லி பார்த்தேன்பா... இந்த கம்பீரம் தான் அழகு பாரதிக்கு....

  அன்பு வாழ்த்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும்...

  மாணவனின் நேற்றைய ஒரு பகிர்வு படித்தேன் நேற்று.. மிக அருமை....

  ReplyDelete
 27. இன்றைய அறிமுங்களுக்கு நன்றி..,
  வாழ்த்துக்கள் அறிமுக பதிவாளர்களுக்கு..
  பாராட்டுக்கள் உங்களுக்கு....

  ReplyDelete
 28. தெரிந்த பதிவர்கள் சிலர், தெரியாதவர்கள் சிலர். தொடருங்கள்.

  ReplyDelete
 29. @ NIZAMUDEEN - நன்றிகள்

  ReplyDelete
 30. @ மஞ்சுபாஷினி - உங்கள் அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
  நேரில் சொல்வது போலவே உணர்கிறேன் - மறுபடி நன்றி

  ReplyDelete
 31. அருமையான பாடலுடன் கூடிய உங்கள் அறிமுகங்கள் மிக மிக அருமை.... எம்.எஸ். அம்மா குரலில் இந்த பாடல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனின்பம்..... பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 32. @ ஸ்ரீராம் - //தெரிந்த பதிவர்கள் சிலர், தெரியாதவர்கள் சிலர்// அதான் ஐடியா, சரியாப் பிடிச்சிட்டீங்க, நன்றி :-))

  ReplyDelete
 33. @ வெங்கட் நாகராஜ் - சுடச்சுட நன்றி! எம்.எஸ்.அம்மாவுக்கும் நன்றி! எல்லாரையும் குரலால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்களே, காலம் பல கடந்தும்!

  ReplyDelete
 34. முதல் தொடக்கம் அருமை... அழகான பாடலுடன்...இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பு பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. அருமையான பாடல்
  அருமையான அறிமுகம்
  நல்ல துவக்கம்
  அறிமுக பதிவாளர்களுக்கு..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. முதல் நாள் கொலுவில் இடம் பெற்றோர் அனைவரும் அசதல்கள் தான்!அனைவுர்க்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. @ மாய உலகம்4u -
  @ மகேந்திரன் -
  @ கோகுல் -

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 38. வானவில்லின் வர்ண ஜாலத்தை கொலுப்படியில் ஏற்றிவைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. கொஞ்சம் லேட..இன்றுஇதான் இதைப்பார்த்தேன். நவராத்திரி களை கட்டுகிறது. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 40. Dear Mrs. Madhavi,

  The story behind "Mahalaya Amavasi' is pretty interesting.

  Thanks for introducing my blog in your blog.

  ReplyDelete
 41. முதல் படி அறிமுகங்கள் அருமை.அவ்ர்களுக்கு என் வாழ்த்துக்கள்.லேட்டா வந்துட்டேன்.

  ReplyDelete
 42. வந்து கருத்திட்டு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது